என் மலர்
புதிய கேஜெட்டுகள்

விரைவில் இந்தியா வரும் விவோ V25 5ஜி
- விவோ நிறுவனம் தனது புது 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
- தற்போது இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
விவோ நிறுவனம் பல்வேறு டீசர்களை தொடர்ந்து தற்போது V25 5ஜி ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. அதன்படி விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் செப்டம்பர் 15 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
கடந்த மாதம் தான் விவோ நிறுவனம் V25 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. அந்த வகையில் தற்போது V25 5ஜி மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. புது ஸ்மார்ட்போனின் டீசர்களில் விவோ V25 5ஜி மாடல் நிறம் மாறும் ஃபுளோரைட் ஏஜி கிளாஸ் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதே போன்ற அம்சம் ப்ரோ மாடலிலும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புளூ மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போன் பிளாக் நிறத்திலும் கிடைக்கிறது.
விவோ V25 5ஜி மாடல் 64MP பிரைமரி கேமரா, OIS, 50MP ஆட்டோபோக்கல் செல்பி வீடியோ பொக்கோ ஃபிளேர் போர்டிரெயிட் கேமரா, 8 ஜிபி ரேம், 8 ஜிபி நீட்டிக்கப்பட்ட ரேம் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. விவோ V25 ப்ரோ வெளியீட்டை தொடர்ந்து இந்த ஸ்மார்ட்போன் பல்வேறு வெளிநாட்டு சந்தைகளில் அறிமுகம் செய்யப்பட்டது.
விவோ V25 5ஜி அம்சங்கள்:
6.44 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+AMOLED ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், HDR10+
ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 900 பிராசஸர்
மாலி G68 MC4 GPU
8 ஜிபி ரேம், அதிகபட்சம் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஃபன்டச் ஒஎஸ் 12
டூயல் சிம் ஸ்லாட்
64MP பிரைமரி கேமரா, OIS, எல்இடி பிளாஷ்
8MP அல்ட்ரா வைடு கேமரா
2MP மேக்ரோ கேமரா
50MP செல்பி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.2
யுஎஸ்பி டைப் சி
4500 எம்ஏஹெச் பேட்டரி
44 வாட் பாஸ்ட் சார்ஜிங்
இந்திய சந்தையில் விவோ V25 5ஜி ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இத்துடன் விவோ வலைதளம் மற்றும் ஆப்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என தெரிகிறது.






