search icon
என் மலர்tooltip icon

    புதிய கேஜெட்டுகள்

    120Hz OLED டிஸ்ப்ளேவுடன் மோட்டோ G72 - இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு
    X

    120Hz OLED டிஸ்ப்ளேவுடன் மோட்டோ G72 - இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு

    • மோட்டோரோலா நிறுவனம் இந்திய சந்தையில் புது G சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர் மற்றும் தலைசிறந்த கேமரா கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.

    மோட்டோரோலா நிறுவனம் புதிய மோட்டோ G72 ஸ்மார்ட்போனை இந்தியாவில் அக்டோபர் 3 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர் கொண்டிருப்பதால், இது மோட்டோ G71 5ஜி ஸ்மார்ட்போனின் மேம்பட்ட மாடல் இல்லை. அந்த வகையில் மோட்டோ G72 ஸ்மார்ட்போனின் 5ஜி வேரியண்ட் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

    இந்தியாவில் 10-பிட் 120Hz pOLED ஸ்கிரீன் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை மோட்டோ G72 கொண்டிருக்கும் என மோட்டோரோலா தெரிவித்து உள்ளது. இந்த ஸ்கிரீன் 576Hz டச் சாம்ப்லிங் ரேட், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா, அல்ட்ரா வைடு கேமரா, டெப்த் ஆப்ஷன் மற்றும் மேக்ரோ கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் வசதி, ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ், 5000 எம்ஏஹெச் பேட்டரி, டர்போபவர் 30 வாட் சார்ஜிங், 33 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது.

    புதிய மோட்டோ G72 ஸ்மார்ட்போன் மெடோரைட் கிரே மற்றும் போலார் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படும் போது தெரியவரும். இதன் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெற இருக்கிறது.

    Next Story
    ×