என் மலர்
புதிய கேஜெட்டுகள்
- மிவி டுயோபாட்ஸ் K6 மாடலின் சார்ஜிங் கேஸ் 380 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.
- இதன் ஸ்விஃப்ட் சார்ஜ் தொழில்நுட்பம் கொண்டு பத்து நிமிடம் சார்ஜ் செய்தால் 500 நிமிட பிளேடைம் கிடைக்கிறது.
மிவி நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய டுயோபாட்ஸ் K6 இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. புதிய டுயோபாட்ஸ் K6 மாடலில் பெபில் வடிவம், மேட் பினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மெல்லிய இயர்பட்ஸ், கிளாசி பினிஷ் செய்யப்பட்டுள்ளது. இந்த இயர்பட்ஸ்-இல் 13mm எலெக்ட்ரோபிலேட் செய்யப்பட்ட டீப் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் AI-ENC வசதி அழைப்புகளின் போது வெளிப்புற சத்தத்தை தடுத்து, தெளிவான தகவல் பரிமாற்றத்தை உறுதிப்படுத்துகிறது. டூயோபாட்ஸ் K6 மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் 50 மணி நேரத்திற்கு பிளேடைம் கிடைக்கிறது. இத்துடன் ஸ்விஃப்ட் சார்ஜ் தொழில்நுட்பம் கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 500 நிமிடங்களுக்கு பிளேடைம் கிடைக்கிறது.

மேலும் யுஎஸ்பி டைப் சி போர்ட், 50ms அல்ட்ரா லோ லேடன்சி கேமிங் மோட், டூயல் கனெக்ஷன் மோட், IPX4 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்படுகிறது.
மிவி டுயோபாட்ஸ் K6 அம்சங்கள்:
13mm டிரைவர்கள்
AI-ENC சிப்
AI என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன்
டூயல் கனெக்ஷன்
ப்ளூடூத் 5.3
லோ லேடன்சி கேமிங் மோட்
AAC, SBC கோடெக் சப்போர்ட்
பேட்டரி: 380 எம்ஏஹெச் (கேஸ்), 40 எம்ஏஹெச் (இயர்பட்ஸ்)
ஸ்விப்ட் சார்ஜ் தொழில்நுட்பம்
IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய மிவி டுயோபாட்ஸ் K6 மாடல்: புளூ, பிளாக், கிரீன் மற்றும் வைட் என நான்கு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 999 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை மிவி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெறுகிறது.
- சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ரிங் மேம்பட்ட உடல்நல டிராக் செய்யும் அம்சங்களை கொண்டிருக்கும்.
- புதிய ஸ்மார்ட் ரிங் உருவாக்குவதற்கான ஆரம்பக்கட்ட பணிகளே துவங்கி நடைபெற்று வருகின்றன.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ரிங் பெயரில், புதிய அணியக்கூடிய சாதனத்தை உருவாக்கி வருகிறது. இது உடல்நலம் டிராக் செய்வதற்காக மேம்பட்ட அம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட் ரிங் மாடல் ஆகும். புதிய அணியக்கூடிய சாதனம் பற்றிய தகவல்கள் தென் கொரியாவை சேர்ந்த தி எலெக் வெளியிட்டு உள்ளது. சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி ரிங் மாடலுக்கான காப்புரிமை பெற்று இருக்கிறது.
புதிய சாதனத்தை உருவாக்குவதற்காக சாம்சங் நிறுவனம் ஜப்பானை சேர்ந்த மெய்கோவுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. புதிய கேலக்ஸி ரிங் மாடல், கேலக்ஸி வாட்ச் மாடலை விட உடல்நல விவரங்களை டிராக் செய்யும் வகையில் மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. எனினும், புதிய கேலக்ஸி வாட்ச் உற்பத்தி எப்போது துவங்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

ஸ்மார்ட் ரிங் சாதனத்தை மோதிரம் போன்று அணிந்து கொள்ள வேண்டும். இதில் உள்ள ஏராளமான சென்சார்கள் உடல்நலம் பற்றிய விவரங்களை சேகரிக்கும் திறன் கொண்டிருக்கின்றன. பயனர்கள் இவற்றை ஸ்மார்ட்போன் ஆப் மூலம் பார்க்க முடியும். புதிய ஸ்மார்ட் ரிங், ஸ்மார்ட்வாட்ச் சாதனங்களை விட அதிக துல்லியமாக உடல்நல விவரங்களை வழங்கும் திறன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
இது மட்டுமின்றி எக்ஸ்டென்டட் ரியாலிட்டி சாதனங்களுடன் இணைந்து செயல்படும் திறன் கொண்ட ஸ்மார்ட் ரிங்-க்கு காப்புரிமை பெறுவதற்கான பணிகளில் சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்மார்ட் ரிங் தவிர, சாம்சங் தனது முற்றிலும் புதிய மடிக்கக்கூடிய சாதனங்களை இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஜூலை 26-ம் தேதி நடைபெற இருக்கும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் சாம்சங் கேலக்ஸி Z போல்டு 5, கேலக்ஸி Z ப்ளிப் 5 சீரிஸ் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இத்துடன் மேலும் சில சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
- போட் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் ரிங் சாதனம் வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டிருக்கிறது.
- புதிய ஸ்மார்ட் ரிங் பயனர் உடல்நலன் சார்ந்து பல்வேறு அம்சங்களை கொண்டிருக்கிறது.
போட் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் ரிங் சாதனத்தை அறிமுகம் செய்தது. இது போட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஹெல்த் மற்றும் பிட்னஸ் டிராக்கர் ஆகும். மெல்லிய டிசைன், செராமிக் மற்றும் மெட்டல் வடிவமைப்பு கொண்டிருக்கும் போட் ஸ்மார்ட் ரிங் குறைந்த எடை, அதிக சவுகரியம் கொண்டிருக்கிறது.
பயனர் உடல்நல விவரங்களை மிக துல்லியமாக டிராக் செய்வதற்கு ஏற்ற ஏராளமான அதிநவீன அம்சங்களை இந்த ஸ்மார்ட் ரிங் கொண்டிருக்கிறது. இத்துடன் 5ATM தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது. புதிய போட் ஸ்மார்ட் ரிங் மாடல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட அல்ட்ரா-ஹியுமன் ரிங் ஏர் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.
போட் ஸ்மார்ட் ரிங் அம்சங்கள்:
அன்றாட உடல்நல அசைவுகளை டிராக் செய்யும் வசதி
ஹார்ட் ரேட் மானிட்டரிங்
பாடி ரிக்கவரி டிராக்கிங்
டெம்பரேச்சர் மானிட்டரிங்
SpO2 மானிட்டரிங்
ஸ்லீப் மானிட்டரிங்
மென்ஸ்டுரல் டிராக்கர்
ஸ்மார்ட் டச் கன்ட்ரோல்
போட் ரிங் ஆப் சப்போர்ட்
புதிய போட் ஸ்மார்ட் ரிங் விரைவில் போட் அதிகாரப்பூர்வ வலைதளம், அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் விலை விவரங்கள் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
- டெக்னோ போவா 5 4ஜி மாடலில் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
- புதிய ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
டெக்னோ பிரான்டு இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. டெக்னோ போவா 5 சீரிசில் இடம்பெற்று இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில், புதிய ஸ்மார்ட்போன் டீசர் அமேசான் வலைதளத்தில் வெளியாகி உள்ளது.
கடந்த மாதம் தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் மட்டும் டெக்னோ போவா 5 4ஜி மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் 6.78 இன்ச் Full HD+ பன்ச் ஹோல் ரக டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய டெக்னோ போவை 5 சீரிசில்- டெக்னோ போவா 5 மற்றும் டெக்னோ போவா 5 ப்ரோ என இரு மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய டெக்னோ போவா 5 சீரிஸ் டீசர்களில், புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் ஆர்ஜிபி எல்இடி லைட்கள் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன் டிசைன் நத்திங் போன் 1 மற்றும் நத்திங் போன் 2 மாடல்களில் உள்ளதை போன்றே க்ளிம்ப் இன்டர்பேஸ்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போனின் வலது புறத்தில் பவர் மற்றும் வால்யூம் பட்டன் வழங்கப்பட்டு உள்ளது.
டெக்னோ போவா 5 4ஜி மாடலில் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 10 வாட் ரிவர்ஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் டூயல் 50MP பிரைமரி கேமரா மற்றும் டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதன் முன்புறம் 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. மேலும் டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.
- ஹானர் பேட் X9 மாடலில் 11.5 இன்ச் 120Hz 2K ஹானர் ஃபுல்வியூ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.
- ஹானர் பேட் X9 மாடலில் 3 ஜிபி விர்ச்சுவல் ரேம் உள்பட மொத்தம் 7 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் ஹானர் பிரான்டின் புதிய ஹானர் பேட் X9 மாடலுக்கான டீசர் வெளியாகி உள்ளது. புதிய ஹானர் டேப்லெட் இந்திய சந்தையில் அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
டீசரில் புதிய ஹானர் பேட் X9 வாங்குவோருக்கு ஹானர் ப்ளிப் கவர் இலவசமாக வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. எனினும், இது குறுகிய காலக்கட்டத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஹானர் பேட் X9 மாடலில் 11.5 இன்ச் 120Hz 2K ஹானர் ஃபுல்வியூ டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது.

இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 685 பிராசஸர், 4 ஜிபி ரேம், 3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு 13 சார்ந்த மேஜிக் ஒஎஸ் 7.1 ஒஎஸ் கொண்டிருக்கும் புதிய ஹானர் பேட் X9 மாடலில் 5MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீக்கர் டிசைன் வழங்கப்படுகிறது.
ஹானர் பேட் X9 மாடலில் 7250 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இது முழு சார்ஜ் செய்தால் 13 மணி நேரத்தற்கு வீடியோ பிளேபேக் வழங்குகிறது. சர்வதேச சந்தையில் இதன் விலை 199.90 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 18 ஆயிரத்து 450 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- எல்ஜி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் நான்கு வித அளவுகளில் கிடைக்கின்றன.
- புதிய எல்ஜி டிவிக்களில் 20 வாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
எல்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்தது. எல்ஜி UR7500 சீரிஸ் பெயரில் கிடைக்கும் புதிய ஸ்மார்ட் டிவி நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. எனினும், இவற்றில் ஒரே மாதிரியான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளது. எல்ஜி UR7500- 40 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது.
நான்கு மாடல்களிலும் 4K ரெசல்யூஷன் மற்றும் 60Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கிறது. இத்துடன் HDR10 ப்ரோ மற்றும் டைனமிக் டோன் மேப்பிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த டிவி-க்களில் ஏஐ சூப்பர் ஸ்கேலிங் 4K, 20 வாட் ஸ்பீக்கர்கள், 2.0 சேனல் உள்ளது. எல்ஜி UR7500 சீரிசில் உள்ள ஏஐ பிராசஸர் 4K ஜென் 6 சிறப்பான வியூவிங் அனுபவத்தை வழங்குகிறது.

இந்த டிவி மாடல்களில் HGiG மோட், ALLM மற்றும் கேம் ஆப்டிமைசர் உள்ளது. இவை கேமிங்கின் போது சிறப்பான அனுபவத்தை வழங்குகிறது. மென்பொருளை பொருத்தவரை வெப் ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் நெட்ப்ளிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஆப்பிள் டிவி மற்றும் பல்வேறு ஒடிடி ஆப்கள் வழங்கப்படுகின்றன.
கனெக்டிவிட்டியை பொருத்தவரை மூன்று HDMI போர்ட்கள், இரண்டு USB போர்ட்கள், ஈத்தர்நெட் போர்ட், ப்ளூடூத் மற்றும் வைபை வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் இதன் 43 இன்ச் வேரியண்ட் விலை ரூ. 32 ஆயிரத்து 490 என்றும் 50, 55 மற்றும் 65 இன்ச் மாடல்களின் விலை முறையே ரூ. 43 ஆயிரத்து 990, ரூ. 47 ஆயிரத்து 990 மற்றும் ரூ. 69 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ப்ளிப்கார்ட் மற்றும் எல்ஜி வலைதளங்களில் நடைபெறுகிறது.
- ப்ளிப்கார்ட்-இன் மைக்ரோசைட்-இல் புதிய ரியல்மி பேட் 2 அம்சங்கள் இடம்பெற்று உள்ளது.
- ரியல்மி பேட் 2 மாடலில் குலோயிங் ஸ்பைஸ் டிசைன் உள்ளது.
ரியல்மி நிறுவனம் தனது அடுத்த டேப்லெட் மாடல், ரியல்மி பேட் 2 இந்திய சந்தையில் ஜூலை 19-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. இதே நாளில் ரியல்மி C53 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய ரியல்மி பேட் 2 மாடலுக்காக பிரத்யேக மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ப்ளிப்கார்ட் வலைதளத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் மைக்ரோசைட்-இல் புதிய ரியல்மி பேட் 2 அம்சங்கள் பற்றிய தகவல்களும் இடம்பெற்று உள்ளது. அதன்படி ரியல்மி பேட் 2 மாடலில் 11.5 இன்ச் LCD டிஸ்ப்ளே, 2K ரெசல்யூஷன், 2000x1200 பிக்சல் ரெசல்யூஷன், 40Hz / 60Hz / 120Hz ரிப்ரெஷ் ரேட், 10-பிட் கலர் உள்ளது.

முந்தைய ரியல்மி பேட் மாடலில் 10.4 இன்ச் LCD ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. புதிய டேப்லெட்-இன் டிஸ்ப்ளே புளூ லைட் பாதுகாப்பு, டிசி டிம்மிங் கொண்டிருக்கிறது. இவை நீண்ட நேர பயன்பாடுகளின் போதும், கண்களுக்கு சோர்வு ஏற்படுவதை ஓரளவுக்கு தவிர்க்க செய்கிறது. ரியல்மி பேட் 2 மாடலில் 85.2 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ மூலம் தலைசிறந்த கேமிங் அனுபவம் கிடைக்கும் என்று தெரிகிறது.
ரியல்மி பேட் 2 மாடலில் O1 அல்ட்ரா விஷன் தொழில்நுட்பம் உள்ளது. இது தலைசிறந்த இமேஜ்-ஐ பிரதிபலிக்கிறது. ஆடியோவுக்காக இந்த மாடலில் குவாட் ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு உள்ளன. ரியல்மி பேட் 2 மாடலில் குலோயிங் ஸ்பைஸ் டிசைன் உள்ளது. அதிகாரப்பூர்வ புகைப்படங்களின் படி இந்த டேப்லெட் டூயல் டோன் டிசைன் கொண்டிருக்கிறது. இத்துடன் கிரீன் மற்றும் பிளாக் நிறங்களில் உருவாகி இருக்கிறது.
ஏற்கனவே வெளியான தகவல்களின் படி ரியல்மி பேட் 2 மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், 8360 எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என்ற கூறப்பட்டது. இத்துடன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, 20MP பிரைமரி கேமரா, ஆன்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0 போன்ற அம்சங்களும் வழங்கப்படும் என்று கூறப்பட்டது.
- லெனோவோ டேப் M10 5ஜி மாடலில் முக அங்கீகார வசதி வழங்கப்பட்டு உள்ளது.
- புதிய லெனோவோ டேப் M10 மாடலில் 7700 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது.
லெனோவோ டேப் M10 5ஜி மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டேப் M10 5ஜி மாடலில் 10.61 இன்ச் 2K ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 695 ஆக்டா கோர் பிராசஸர், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் கைரேகை சென்சார் வழங்கப்படவில்லை. மாறாக முக அங்கீகார தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், 7700 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள பேட்டரி அதிகபட்சம் 12 மணி நேரத்திற்கு வீடியோ ஸ்டிரீமிங் பேக்கப் வழங்குகிறது.

லெனோவோ டேப் M10 5ஜி அம்சங்கள்:
10.61 இன்ச் 2000x1200 பிக்சல் 2K எல்சிடி ஸ்கிரீன்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
அட்ரினோ 619 GPU
4ஜிபி, 6 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13
13MP பிரைமரி கேமரா
8MP செல்ஃபி கேமரா, ToF சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், டூயல் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், மைக்ரோபோன்
5ஜி, 4ஜி எல்டிஇ, ப்ளூடூத் 5.1
யுஎஸ்பி 2.0 டைப் சி
7700 எம்ஏஹெச் பேட்டரி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
லெனோவோ டேப் M10 5ஜி டேப்லெட் அபைஸ் புளூ நிறத்தில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 24 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் இந்த டேப்லெட் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
- ஸ்மார்ட்போன் ரென்டர் இன்பினிக்ஸ் கம்யுனிட்டி எக்ஸ் கிளப்-இல் பதிவிடப்பட்டு இருக்கிறது.
- ரென்டர்களின் படி ஸ்மார்ட்போனின் பின்புற டிசைன் எப்படி இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
இன்பினிக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போன் சீரிசை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், இது தோற்றத்தில் நத்திங் போன் 2 போன்றே காட்சியளிக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் கேமிங் சார்ந்த சாதனமாக இருக்கும் என்றும் இதன் டிசைன், தற்போது பிரபலமாக உள்ள நத்திங் போன் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
டிப்ஸ்டரான முகுல் ஷர்மா தனது டுவிட்டரில் வெளியிட்ட தகவல்களின் படி புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் "GT" என்று அழைக்கப்படும் என அவர் தெரிவித்து இருந்தார். புதிய ஸ்மார்ட்போன் ரென்டர் இன்பினிக்ஸ் கம்யுனிட்டி எக்ஸ் கிளப்-இல் பதிவிடப்பட்டு இருக்கிறது. ரென்டர்களின் படி ஸ்மார்ட்போனின் பின்புற டிசைன் எப்படி இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
ரென்டரில் இந்த ஸ்மார்ட்போன் இடதுபுறத்தில் டூயல் கேமரா சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கிறது. இதோடு நத்திங் போன் 2 மாடலில் இருக்கும் எல்இடி ஸ்ட்ரிப்களை போன்றே இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனிலும் டிசைன் அவுட்லைன் இடம்பெற்று இருக்கிறது. இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போனில் இது எல்இடி லைட்களாக இருக்குமா அல்லது வெறும் டிசைன் மட்டும் இப்படி காட்சியளிக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இன்பினிக்ஸ்-இன் புதிய ஸ்மார்ட்போன் விவரங்களை டுவிட்டரில் பார்த்த நத்திங் நிறுவன தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய், டிப்ஸ்டர் முகுல் ஷர்மாவின் பதிவுக்கு பதில் அளித்துள்ளார். அதில், "வழக்கறிஞர்களை தயார் நிலையில் வைப்பதற்கான நேரம்" என்று கூறி மகிழ்ச்சியில் சிரிக்கும் எமோஜியை பதிவிட்டுள்ளார்.
புதிய ஸ்மார்ட்போன் பற்றி இன்பினிக்ஸ் சார்பில் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனினும், இந்த ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று டிப்ஸ்டர் தெரிவித்து இருக்கிறார். அந்த வகையில், புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.
முன்னதாக நத்திங் போன் 1 போன்றே காட்சியளிக்கும் சாதனம் பார்சிலோனாவில் இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் காணப்பட்டது. இந்த மாடலில் நத்திங் போனில் வழங்கப்பட்டு இருப்பதை போன்ற எல்இடி மெக்கானிசமும் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- நத்திங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியாகுமா என்ற கேள்விக்கு விடை கிடைத்தது.
- நத்திங் நிறுவனம் சமீபத்தில் தான் தனது நத்திங் போன் 2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
ஸ்மார்ட்போன் சந்தையில் ஏராளமான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல்கள் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. சாம்சங், ஒப்போ, மோட்டோரோலா மற்றும் பல்வேறு நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் கவனம் செலுத்த துவங்கிவிட்டன.
இந்த நிலையில், நத்திங் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யுமா என்ற கேள்விக்கு, அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய் பதில் அளித்துள்ளார்.

அதன்படி நத்திங் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடல் தற்போதைக்கு அறிமுகமாகாது என நத்திங் தலைமை செயல் அதிகாரி கார்ல் பெய் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்த கார்ல் பெய் கூறும் போது,
"இப்போதைக்கு வாய்ப்பில்லை. தற்போது யாரும் வந்து, எனது போனில் மடிக்கக்கூடிய வசதி வேண்டும் என்று கூறுவதில்லை. உற்பத்தியாளர்கள் பயனர்களிடம் புகுத்த நினைக்கும் கண்டுபிடிப்பகாவே, நான் அவற்றை பார்க்கின்றேன்," என்று தெரிவித்தார்.
சில நிறுவனங்கள் இதனை உற்பத்தி செய்து வருகின்றன. கிட்டத்தட்ட இவை அனைத்தும் ஒரே மாதிரியே காட்சியளிக்கின்றன. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் ஒரே மாதிரியான டிசைன் கொண்டிருப்பதை கார்ல் பெய் எடுத்துரைத்து இருக்கிறார்.
- அசுஸ் ரோக் Ally இந்திய விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.
- புதிய ரோக் Ally மாடலுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிப்பு.
அசுஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய கையடக்க கேமிங் கன்சோலை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் வின்டோஸ் 11 ஒஎஸ் உடன் அறிமுகம் செய்யப்பட்ட முதல் கேமிங் கன்சோல் இது ஆகும்.
அறிமுக நிகழ்வை தொடர்ந்து, அசுஸ் ரோக் Ally மாடலின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
அசுஸ் ரோக் Ally மாடலின் Z1 எக்ஸ்டிரீம் வெர்ஷன் விலை ரூ. 69 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அசுஸ் ஸ்டோர், இ-ஷாப் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் இந்த கன்சோலுக்கான ஃபிளாஷ் விற்பனை நடைபெற்றது.

அறிமுக சலுகைகள்:
- அசுஸ் ரோக் Ally மாடலை அசுஸ் இஷாப் அல்லது அசுஸ் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர்களில் ஜூலை 12 முதல் ஜூலௌ 15 ஆம் தேதிக்குள் வாங்கும் முதல் 200 வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள ரோக் Ally கேஸ்-ஐ ரூ. 1 மட்டும் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். இதனை பெறுவதற்கு asuspromo.in வலைதளம் செல்ல வேண்டும்.
- இத்துடன் ரூ. 1 லட்சத்து 42 ஆயிரத்து 990 மதிப்புள்ள XG மொபைலினை ரூ. 87 ஆயிரத்து 990 விலையில் வாங்கிட முடியும்.
- வங்கி சார்ந்த கேஷ்பேக் மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி சேவையில் மாத தவணை முறையை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

அசுஸ் ரோக் Ally அம்சங்கள்:
7 இன்ச் IPS டிஸ்ப்ளே, Full HD, 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன்
120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
AMD ரைசன் Z1 எக்ஸ்டிரீம் APU
16 ஜிபி LPDDR5 6400MHz ரேம்
512 ஜிபி PCIe 4.0 NVMe M.2 SSD ஸ்டோரேஜ்
விண்டோஸ் 11 ஒஎஸ்
ஸ்டீம், EA ஆப்ஸ், எபிக் கேம்ஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் சப்போர்ட்
டூயல் ஸ்பீக்கர்
அசுஸ் ஸ்மார்ட் ஆம்ப்லிஃபயர் தொழில்நுட்பம்
3.5mm ஹெட்போன் ஜாக்
யுஎஸ்பி 3.2 ஜென் 2 டைப் சி போர்ட்
ரோக் XG மொபைல் இன்டர்ஃபேஸ், UHS-II மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர் சப்போர்ட்
40 வாட் ஹவர் பேட்டரி
65 வாட் சார்ஜிங் வசதி
- காப்புரிமையில் தற்போது இருக்கும் ஐபேட் மாடல், வடிவம் மாறும் ஷெல் கொண்டிருக்கிறது.
- இரு சாதனங்கள் ஷெல் அருகில் இருக்கும் போது, அவை ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும்.
ஆப்பிள் நிறுவனம் தனது எதிர்கால சாதனங்களுக்காக ஏராளமான காப்புரிமை மற்றும் டிரேட்மார்க்-களை பெற்று வருகிறது. அந்த வரிசையில், தற்போது பெற்றிருக்கும் புதிய காப்புரிமை பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி ஆப்பிள் நிறுவனம் 2-இன்-1 டிசைன் கொண்ட ஐபேட் மாடலை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
அமெரிக்க டிரேட்மார்க் மற்றும் காப்புரிமை அலுவலகம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் இதுவரை 53 காப்புரிமைகளை பெற்று இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி புதிய காப்புரிமையில் தற்போது இருக்கும் ஐபேட் மாடல், வடிவம் மாறும் ஷெல் கொண்டிருக்கிறது. இதனுடன் வெளியாகி இருக்கும் புகைப்படத்தின் படி ஐபேட் மேல்புறம் உறுதியாக இணைக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இதன் மூலம் பயனர்கள் ஐபேட்-ஐ எளிதில் கழற்ற முடியும். இதில் உள்ள ஷெல் பல்வேறு வழிகளில் ஸ்டான்ட் போன்று பயன்படுத்த வழி செய்கிறது. காப்புரிமை விவரங்களின் படி இந்த ஐபேட் ஷெல் அசெம்ப்லி வைபை, ப்ளூடூத் மற்றும் அல்ட்ரா வைடுபேன்ட் உள்ளிட்டவைகளை சப்போர்ட் செய்கிறது. இரு சாதனங்கள் ஷெல் அருகில் இருக்கும் போது, அவை ஒன்றோடு ஒன்று தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளும்.
இதுதவிர, ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் இதர ஐபேட் டிசைன் பற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளன. அதன்படி புதிய ஐபேட் டிசைன்களில், விர்ச்சுவல் கீபோர்டு மற்றும் ஜெஸ்ட்யூர் டிடெக்ஷன் சப்போர்ட் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. ஐபேட் டிசைன் பற்றிய காப்புரிமை விவரங்கள், ஆப்பிள் நிறுவனம் தொடர்ச்சியாக புதுமைகளை புகுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவது உறுதியாகி இருக்கிறது.






