என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    • பிக்சல் 8a ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்.
    • வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 8 ஆயிரம் வரை தள்ளுபடி.

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் தான் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டன. பிக்சல் மற்றும் பிக்சல் 8 ப்ரோ என இரண்டு மாடல்கள் பிக்சல் 8 சீரிசில் இடம்பெற்று இருக்கின்றன. வரும் மாதங்களில் பிக்சல் 8a ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்த நிலையில், பிக்சல் 8 சீரிஸ் மாடல்களின் இந்திய விற்பனை துவங்கி இருக்கிறது. இந்திய சந்தையில் பிக்சல் 8 விலை ரூ. 75 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 82 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. பிக்சல் 8 ப்ரோ மாடலின் விலை ரூ. 1 லட்சத்து 06 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    கூகுள் பிக்சல் 8 மாடல் பயனர்கள் ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்சிஸ் மற்றும் கோடக் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 8 ஆயிரம் வரையிலான தள்ளுபடி பெற முடியும். இத்துடன் பிக்சல் 8 ப்ரோ வாங்கும் போது ரூ. 9 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. பிக்சல் 8 சீரிஸ் வாங்குவோர் கூகுள் பிக்சல் வாட்ச் 2 மாடலை ரூ. 19 ஆயரத்து 990 என்றும் கூகுள் பிக்சல் பட்ஸ் ப்ரோ மாடலை ரூ. 8 ஆயிரத்து 990 விலையில் வாங்கிட முடியும். 

    • விவோ நிறுவனம் விவோ எக்ஸ் ஃபோல்டு 2 மாடலை அறிமுகம் செய்தது.
    • ரோலபில் ஸ்மார்ட்போன் பிரிவில் விவோ களமிறங்குவதாக தகவல்.

    விவோ நிறுவனம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் விவோ எக்ஸ் ஃபோல்டு மாடலை அறிமுகம் செய்து மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறங்கியது. இதை தொடர்ந்து விவோ நிறுவனம் விவோ எக்ஸ் ஃபோல்டு 2 மாடலை அறிமுகம் செய்தது. இதில் மேம்பட்ட கேமரா மற்றும் புதிய பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து விவோ நிறுவனம் ரோலபில் ஸ்மார்ட்போன் பிரிவில் களமிறங்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. விவோ மற்றும் டிரான்சிஷன் ஹோல்டிங்ஸ் நிறுவனங்கள் இணைந்து இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும் விவோ நிறுவனத்தின் முதல் ரோலபில் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    சாம்சங் நிறுவனமும் ரோலபில் போனினை உருவாக்கி வருவதாக கூறப்படும் நிலையில், விவோ மற்றும் டிரான்சிஷன் நிறுவனங்கள் இணைந்து உலகின் முதல் ரோலபில் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரோலபில் போனில் உள்ள ஸ்கிரீன் ஒருபுறமாக நீண்டு மீண்டும் சுருண்டு கொள்ளும் என்று தெரிகிறது.

    ஐடெல், டெக்னோ மற்றும் இன்ஃபினிக்ஸ் போன்ற பிராண்டுகளை வைத்திருக்கும் டிரான்சிஷன் ஹோல்டிங்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஃபேண்டம் அல்டிமேட் ப்ரோடோடைப் மாடலை காட்சிப்படுத்தியது. இந்த மாடல் 6.55 இன்ச் டிஸ்ப்ளேவில் இருந்து 7.11 இன்ச் வரை நீண்டது. இதன் டிஸ்ப்ளே 1596x2296 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது.

    • சாம்சங் கேலக்ஸி S23 FE மாடல் நான்கு விதமான நிறங்களில் கிடைக்கிறது.
    • கேலக்ஸி S23 FE மாடல் 50MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி S23 FE ஸ்மார்ட்போனினை ஒருவழியாக அறிமுகம் செய்தது. இதில் 6.4 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் அல்லது எக்சைனோஸ் 2200 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யுஐ 5.1 வழங்கப்பட்டுள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனிற்கு நான்கு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட், ஐந்து ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக சாம்சங் அறிவித்து இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 8MP டெலிபோட்டோ கேமரா, 10MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    சாம்சங் கேலக்ஸி S23 FE அம்சங்கள்:

    6.4 இன்ச் 2340x1080 பிக்சல் FHD+ இன்ஃபினிட்டி ஒ டைனமிக் AMOLED டிஸ்ப்ளே

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

    ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர்

    அட்ரினோ 730 GPU

    ஆக்டா கோர் சாம்சங் எக்சைனோஸ் 2200 பிராசஸர்

    சாம்சங் எக்ஸ்-க்லிப்ஸ் 920 GPU

    8 ஜி.பி. ரேம்

    128 ஜிபி., 256 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒன் யு.ஐ. 5

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS

    12MP அல்ட்ரா வைடு சென்சார்

    8MP டெலிபோட்டோ கேமரா, OIS

    10MP செல்ஃபி கேமரா

    வாட்டர் ரெசிஸ்டண்ட் IP68

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    5ஜி, 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.3

    4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    சாம்சங் கேலக்ஸி S23 FE மாடல் மின்ட், கிரீம், கிராஃபைட் மற்றும் பர்பில நிறங்களில் கிடைக்கிறது.

    • ஐபோன் 15 சீரிசில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் உள்ளது.
    • ஐபோன் 15 ப்ரோ மாடல்களுடன் யு.எஸ்.பி. டைப் 2 கேபிள் வழங்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் வொண்டர்லஸ்ட் நிகழ்வில் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை செப்டம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்தது. புதிய ஐபோன் 15 சீரிசில் ஆப்பிள் நிறுவனம் முதல் முறையாக யு.எஸ்.பி. டைப் சி சார்ஜிங் போர்ட் வழங்கி இருக்கிறது. எனினும், ஆண்ட்ராய்டு யு.எஸ்.பி. டைப் சி கேபிள் மூலம் ஐபோன் 15 சீரிசை சார்ஜ் செய்யும் போது, சிக்கல் ஏற்படும் என்று ஆப்பிள் விற்பனையாளர் தெரிவித்து இருக்கிறார்.

    ஐபோன் 15 சீரிசில்- ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் என நான்கு மாடல்கள் உள்ளன. இவை அனைத்திலும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு உள்ளன. எனினும், ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை ஆண்ட்ராய்டு யு.எஸ்.பி. டைப் சி கேபிள் மூலம் சார்ஜ் செய்தால், ஐபோன் தீப்பிடிக்கும் வாய்ப்புகள் இருப்பதாக சீனாவை சேர்ந்த விற்பனையாளர் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்த தகவலில் உண்மையில்லை என்றும், இதுபோன்ற தகவல்களை வெளியிட்டு ஆப்பிள் நிறுவனம் தனது யு.எஸ்.பி. டைப் சி கேபிள்களின் விற்பனையை அதிகப்படுத்த நினைப்பதாக கூறப்படுகிறது. ஆனால், ஆப்பிள் நிறுவன வலைதளத்தில் புதிய ஐபோன் மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி ஸ்டாண்டர்டு கேபிள் மூலம் சார்ஜ் செய்யலாம் என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ஐபோன் 15 சீரிசில் உள்ள யு.எஸ்.பி. டைப் சி போர்ட், லைட்னிங் போர்ட்-ஐ விட 15 மடங்கு அதிவேக திறன் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மாடல்களை வாங்குவோருக்கு யு.எஸ்.பி. டைப் 2 கேபிள் வழங்கப்படுகிறது. இதைவிட அதிவேக அனுபவம் பெற நினைப்பவர்கள் ஆப்பிள் நிறுவனத்தின் யு.எஸ்.பி. டைப் 3 கேபிளை வாங்கிட முடியும்.

    • லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி மாடல் மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கிறது.
    • புதிய லாவா ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    லாவா நிறுவனத்தின் புதிய பிளேஸ் ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி மாடலில் 6.78 இன்ச் FHD+LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர், 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, ஏ.ஐ. லென்ஸ், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

     

    லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி அம்சங்கள்:

    6.78 இன்ச் 1080x2460 பிக்சல் FHD+LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர்

    மாலி G57 MC2 GPU

    8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    ஏ.ஐ. லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்

    8MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    புதிய லாவா பிளேஸ் ப்ரோ 5ஜி மாடல் ஸ்டேரி நைட் மற்றும் ரேடியண்ட் பியல் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 12 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அக்டோபர் 3-ம் தேதி துவங்குகிறது.

    • வெளியீட்டு தேதி அந்நிறுவனத்தின் அர்ஜென்டினா வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.
    • சாம்சங் நிறுவனம் அடுத்த வாரம் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக கேலக்ஸி S23 FE இருக்கிறது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வரும் ஸ்மார்ட்போனாக இருக்கும் நிலையில், இதன் வெளியீடு சமீபத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், புதிய கேலக்ஸி S23 FE மாடலின் வெளியீட்டு தேதி அந்நிறுவனத்தின் அர்ஜென்டினா வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    சில நாட்களுக்கு முன்பு தான் கேலக்ஸி S23 FE ஸ்மார்ட்போனிற்கான டீசரை சாம்சங் இந்தியா வெளியிட்டு இருந்தது. டீசரில் அக்டோபர் வெளியீடு மட்டும் உறுதிப்படுத்தப்பட்டது. எனினும், சரியான வெளியீட்டு தேதி தொடர்ந்து ரகசியமாக உள்ளது. அந்த வகையில் தான் சாம்சங் அர்ஜென்டினா வலைதளத்தில் கேலக்ஸி S23 FE வெளியீட்டு தேதி லீக் ஆகி உள்ளது.

    அதன்படி கேலக்ஸி S23 FE மற்றும் கேலக்ஸி பட்ஸ் FE, கேலக்ஸி டேப் S9 FE போன்ற சாதனங்கள் அக்டோபர் 4-ம் தேதி அறிமுகமாகும் என்று தெரியவந்துள்ளது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் சாம்சங் அடுத்த வாரம் பல்வேறு புதிய சாதனங்களை அறிமுகம் செய்யும்.

    புதிய கேலக்ஸி சாதனங்கள் வெளியீடு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது லீக் ஆகி இருக்கும் தேதி சர்வதேச வெளியீட்டை உணர்த்தும் என்றே தெரிகிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி S23 FE மாடலில் 6.4 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, FHD+ 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 அல்லது எக்சைனோஸ் 2200 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, 50MP பிரைமரி கேமரா, 10MP செல்ஃபி கேமரா, 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    • விவோ T2 ப்ரோ ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • விவோ T2 ப்ரோ மாடல் 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய T சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய விவோ T2 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் FHD+ 120Hz 3D Curved AMOLED டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS, 2MP இரண்டாவது கேமரா, ரிங் எல்.இ.டி., 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஏ.ஜி. கிளாஸ் பேக் கொண்டிருக்கும் விவோ T2 ப்ரோ 5ஜி மாடல் 4600 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

     

    விவோ T2 ப்ரோ 5ஜி அம்சங்கள்:

    6.78 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர்

    மாலி G610 MC4 GPU

    8 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி., 256 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 13

    டூயல் சிம் ஸ்லாட்

    64MP பிரைமரி கேமரா, OIS

    2MP டெப்த் கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ

    டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6

    ப்ளூடூத் 5.3, யு.எஸ்.பி. டைப் சி

    4600 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ T2 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் நியூ மூன் பிளாக் மற்றும் டியூன் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஃப்ளிப்கார்ட் மற்றும் விவோ வலைதளங்களில் செப்டம்பர் 29-ம் தேதி துவங்குகிறது.

    • மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 40 நியோ மாடலில் Curved ஸ்கிரீன் உள்ளது.
    • புதிய மோட்டோ எட்ஜ் ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனம் தனது எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மாடலில் 6.55 இன்ச் 144Hz 10-பிட் pOLED Curved ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மீடியாடெக் டிமென்சிட்டி 7030 பிராசஸர் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும்.

    புதிய மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். கொண்டிருக்கும் மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ இரண்டு ஆண்ட்ராய்டு அப்டேட்கள், மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களை பெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

     

    மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ அம்சங்கள்:

    6.55 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ pOLED டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 7030 பிராசஸர்

    மாலி G610 MC3 GPU

    8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி

    12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, OIS

    13MP அல்ட்ரா வைடு கேமரா, மேக்ரோ மற்றும் டெப்த் ஆப்ஷன்கள்

    32MP செல்ஃபி கேமரா

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    யு.எஸ்.பி. டைப் சி போர்ட்

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    68 வாட் டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங்

    புதிய மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ ஸ்மார்ட்போன் சூதிங் சீ மற்றும் கனீல் பே மற்றும் வீகன் லெதர் பிளாக் மற்றும் பிளாக் பியூட்டி மற்றும் கிளாஸ் பேக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 23 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 25 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக இவை முறையே ரூ. 20 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 22 ஆயிரத்து 999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

    • ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களை கடந்த வாரம் அறிமுகம் செய்தது.
    • ஐபோன் 15 சீரிஸ் மாடல்களில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் ஐபோன் 15 சீரிஸ் முன்பதிவுகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 15-ம் தேதி முன்பதிவு துவங்கிய நிலையில், ஐபோன் 15 ப்ரோ மாடல்களை முன்பதிவு துவங்கிய சில மணி நேரங்களுக்குள் முன்பதிவு செய்யாதவர்கள், அதன் டெலிவரிக்கு பல நாட்கள் வரை காத்திருக்க வேண்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் அறிமுகம் செய்திருக்கும் புதிய ஐபோன்களில் டாப் எண்ட் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு அதிக தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் நேச்சுரல் டைட்டானியம் மற்றும் வைட் டைட்டானியம் நிற வேரியண்ட்களுக்கான டெலிவரி நவம்ர் 2-ம் தேதி என்று காண்பிப்பதாக தெரிகிறது.

     

    ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலின் டைட்டானியம் புளூ மற்றும் டைட்டானியம் பிளாக் நிற வேரியண்ட்கள் அக்டோபர் மாத மத்தியில் டெலிவரி செய்யப்படுகிறது. ஐபோன் 15 ப்ரோ மாடலின் வினியோகம் அடுத்த வாரம் துவங்குகிறது. சில நிற வேரியண்ட்கள் மட்டும் அக்டோபர் மாதம் வினியோகம் செய்யப்படுகிறது.

    விலையை பொருத்தவரை ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களின் இந்திய விலை முறையே ரூ. 79 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 89 ஆயிரத்து 900 என்று துவங்குகின்றன. ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களின் இந்திய விலை முறையே ரூ. 1 லட்சத்து 34 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 1 லட்சத்து 59 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது. இந்த விலை இவற்றின் 128 ஜி.பி. மாடலுக்கானது ஆகும்.

    • ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்கள் விற்பனையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • பழைய ஐபோன் மாடல்கள் விலை குறைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களின் உற்பத்தியை சீனாவில் இருந்து இந்தியாவுக்கு மெல்ல மாற்றும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ஆப்பிள் சமீபத்தில் அறிமுகம் செய்த ஐபோன் 15 சீரிஸ் மாடல்களின் உற்பத்தி இந்தியாவில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 15 பிளஸ் மாடல்களின் உற்பத்தியை அடுத்த காலாண்டு (அக்டோபர் முதல் டிசம்பர்) வாக்கில் துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஐபோன் 15 பிளஸ் மாடல்களின் உற்பத்தி தமிழ் நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் நடைபெற இருக்கிறது. ஐபோன் 15-ஐ தொடர்ந்து ஐபோன் 15 பிளஸ் உற்பத்தி தமிழ்நாட்டில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

     

    அடுத்த காலாண்டில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்கள் விற்பனையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், புதிய ஐபோன்கள் அறிமுகத்தை தொடர்ந்து பழைய மாடல்கள் விலை குறைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுவிர அடுத்த காலாண்டில் ஆப்பிள் ஐபோன்கள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டு இருக்கிறது.

    பண்டிகை காலத்தில் அதிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஆப்பிள் நிறுவனம் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்களையும் இங்கு விற்பனைக்கு கொண்டுவரும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் ஐபோன்கள் உற்பத்தி மிகவும் குறைவாக இருப்பதும் இதற்கு காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இந்தியாவில் ஐபோன்களின் உற்பத்தி குறைவாக இருக்கும் போதிலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது கணிசமான அளவு அதிகம் ஆகும்.

    • ஹானர் 90 ஸ்மார்ட்போன் 2 ஆண்டுகளுக்கு மென்பொருள் அப்டேட் பெற இருக்கிறது.
    • ஹானர் 90 ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    ஹானர் 90 ஸ்மார்ட்போனுடன் ஹெச்டெக் இந்திய சந்தையில் மீண்டும் களமிறங்கி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் குவாட் கர்வ்டு OLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், டைனமிக் டிம்மிங் அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே வெளிப்புற வெளிச்சத்திற்கு ஏற்ப பிரைட்னசை மாற்றிக் கொள்ளும் திறன் கொண்டுள்ளது.

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த மேஜிக் ஒ.எஸ். 7.1 கொண்டிருக்கும் ஹானர் 90 ஸ்மார்ட்போன் 2 ஆண்டுகளுக்கு மென்பொருள் அப்டேட், மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களை பெறும் என்று ஹெச்டெக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 அக்செல்லரேடெட் எடிஷன் பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 7 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 200MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP டெப்த் கேமரா மற்றும் 50MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் முன்புற மற்றும் பிரைமரி கேமரா சென்சார்களிலும் EIS வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

     

    ஹானர் 90 அம்சங்கள்:

    6.7 இன்ச் 2664x1200 பிக்சல் FHD+OLED 120Hz ஸ்கிரீன்

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 அக்செல்லரேடெட் எடிஷன் பிராசஸர்

    அட்ரினோ 644 GPU

    8 ஜி.பி., 12 ஜி.பி. ரேம்

    256 ஜி.பி., 512 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த மேஜிக் ஒ.எஸ். 7.1

    டூயல் சிம் ஸ்லாட்

    200MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

    12MP அல்ட்ரா வைடு கேமரா

    2MP டெப்த் சென்சார்

    50MP செல்ஃபி கேமரா

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    66 வாட் சூப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

    புதிய ஹானர் 90 ஸ்மார்ட்போன் டைமண்ட் சில்வர், மிட்நைட் பிளாக் மற்றும் எமரால்டு கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 37 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை செப்டம்பர் 18-ம் தேதி துவங்குகிறது.

    • நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு அறிவிப்பு.
    • நோக்கியா X30 5ஜி மாடல் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி கொண்டிருக்கிறது.

    ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தது. நோக்கியா X30 5ஜி மாடல் விலை ரூ. 50 ஆயிரத்திற்கு சற்றே குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

    இந்த மாடலின் அம்சங்கள் மற்றும் அதன் விலை காரணமாக பலரும் இந்த மாடலை விமர்சித்து வந்தனர். இந்த நிலையில், நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போனின் விலை தற்போது ரூ. 12 ஆயிரம் குறைந்து இருக்கிறது.

     

    முன்னதாக ரூ. 48 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போனின் விலை தற்போது ரூ. 36 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெரி என ஒற்றை வேரியண்டிலேயே கிடைக்கிறது.

    விலை குறைப்பு நோக்கியா மற்றும் அமேசான் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் மாற்றப்பட்டு விட்டது. நோக்கியா X30 5ஜி ஸ்மார்ட்போன் ஐஸ் வைட் மற்றும் கிளவுடி புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 

     

    நோக்கியா X30 5ஜி அம்சங்கள்:

    6.43 இன்ச் 1080x2400 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    அட்ரினோ 619L GPU

    8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 12

    50MP பிரைமரி கேமரா, OIS, எல்.இ.டி. ஃபிளாஷ்

    13MP அல்ட்ரா வைடு கேமரா, கார்னிங் கொரில்லா கிளாஸ் DX+ கேமரா கிளாஸ் பாதுகாப்பு

    16MP செல்ஃபி கேமரா

    இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    வாட்டர் ரெசிஸ்டண்ட் IP67

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்

    யு.எஸ்.பி. டைப் சி

    4200 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ×