search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    பிரகாசமான ஸ்கிரீன்.. பயங்கர அம்சங்கள்.. மிரட்டும் ரியல்மி GT 5 ப்ரோ
    X

    பிரகாசமான ஸ்கிரீன்.. பயங்கர அம்சங்கள்.. மிரட்டும் ரியல்மி GT 5 ப்ரோ

    • இந்த ஸ்மார்ட்போன் BOE வழங்கிய ஸ்கிரீனை பயன்படுத்துகிறது.
    • இதில் உள்ள ஸ்கிரீன் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கும்.

    சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்ட ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை தொடர்ச்சியாக அறிமுகம் செய்து வருகின்றன. அந்த வரிசையில், ரியல்மி GT 5 ப்ரோ மாடல் டிசம்பர் 7-ம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில், ரியல்மி GT 5 ப்ரோ மாடலின் பேஸ் வேரியண்ட் அம்சங்கள் மற்றும் டிஸ்ப்ளே பற்றிய விவரங்களை ரியல்மி நிறுவனத்தின் மூத்த விளம்பர அதிகாரியான சு குயி வெளியிட்டு உள்ளார். அதன்படி ரியல்மி GT 5 ப்ரோ பேஸ் வேரியண்டில் அதிகபட்சம் 12 ஜி.பி. வரையிலான ரேம், 256 ஜி.பி. வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.

    முன்னதாக TENAA வலைதளத்தில் வெளியான தகவல்களில் ரியல்மி GT 5 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் OLED கர்வ்டு-எட்ஜ் டிஸ்ப்ளே, 1.5K ரெசல்யூஷன், 2780x1264 பிக்சல்கள் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. தற்போது ரியல்மி நிறுவன மூத்த அதிகாரி வெளியிட்டுள்ள போஸ்டரில் GT 5 ப்ரோ ஸ்மார்ட்போன் BOE வழங்கிய ஸ்கிரீனை பயன்படுத்தும் என்று தெரியவந்துள்ளது.

    ரியல்மி GT 5 ப்ரோ மாடலில் உள்ள TUV சான்று பெற்ற டிஸ்ப்ளேவில் 8T LTPO தொழில்நுட்பம், 0.5Hz முதல் 144Hz வரையிலான அடாப்டிவ் ரிப்ரெஷ் ரேட், ப்ரோ XDR HDR தொழில்நுட்பம், அதிகபட்சம் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டிருக்கும். இத்துடன் 2160Hz PWM டிம்மிங், 2160Hz டச் சாம்ப்ளிங் ரேட், டி.சி. டிம்மிங் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படுகிறது. இவை தலைசிறந்த டிஸ்ப்ளே அனுபவத்தை வழங்கும்.

    புதிய GT 5 ப்ரோ மாடலில் அதிகபட்சம் 24 ஜி.பி. வரையிலான LPDDR5x ரேம், 1 டி.பி. வரையிலான UFS 4.0 ஸ்டோரேஜ், 5400 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 100 வாட் வயர்டு, 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 32MP செல்ஃபி கேமரா, 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 50MP பெரிஸ்கோப் சென்சார் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×