search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    குறைந்த விலை ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்.. சாம்சங் அதிகாரியின் சூப்பர் விளக்கம்
    X

    குறைந்த விலை ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்.. சாம்சங் அதிகாரியின் சூப்பர் விளக்கம்

    • என்ட்ரி லெவல் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறங்க இருப்பதாக தகவல்.
    • மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அதிக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.

    சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மிட் ரேன்ஜ் பிரிவில் நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், சாம்சங் சார்பில் இந்த தகவலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

    கேலக்ஸி ஃபோல்டு சீரிஸ் மூலம் சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் களமிறங்கியது. பிறகு கேலக்ஸி Z ஃபோல்டு மற்றும் Z ஃப்ளிப் சீரிஸ் வரை தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகம் செய்தது. முதல் தலைமுறை கேலக்ஸி ஃபோல்டு மாடலின் விலை 1980 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

    பிறகு, இதன் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி Z ஃபோல்டு 3 விலை சற்றே குறைக்கப்பட்டு 1799 டாலர்கள் என்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 விலை 999 டாலர்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது. சமீபத்திய கேலக்ஸி Z ஃபோல்டு 5 மற்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடல்களின் விலை அதன் முந்தைய வெர்ஷனை போன்றே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    2024 ஆண்டு துவக்கத்தில் சாம்சங் நிறுவனம் என்ட்ரி லெவல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் இதன் விலை 800 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. இதன் மூலம் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அதிக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்று கூறப்பட்டது.

    எனினும், சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவன செய்தி தொடர்பாளர் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார். "மிட் ரேன்ஜ் பிரிவில் நிலை நிறுத்தக்கூடிய அளவுக்கு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்வது தொடர்பாக எந்த திட்டமும் இல்லை, சமீபத்திய தகவல்களில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை," என்று அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×