என் மலர்
மொபைல்ஸ்
- இந்த மாடலில் மேம்பட்ட லுக், பெரிய ஸ்கிரீன் வழங்கப்படலாம்.
- ஐபோன் SE 4 எடை 6 கிராம்கள் வரை குறைவாக இருக்கும்.
ஆப்பிள் நிறுவனம் 2020 ஆண்டில் தனது ஐபோன் SE சீரிசை அறிமுகம் செய்தது. பிறகு இதன் மேம்பட்ட வெர்ஷனாக ஐபோன் SE 3 கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு ஐபோன் SE மாடல் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை. எனினும், புதிய ஐபோன் SE மாடல் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் SE 4 டிசைன் ஐபோன் 14-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், புதிய ஐபோன் SE 4 அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த மாடலாக அமையும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஐபோன் 14 சார்ந்த டிசைன் கொண்டிருக்கும் பட்சத்தில் இந்த மாடலில் மேம்பட்ட லுக், பெரிய ஸ்கிரீன் வழங்கப்படலாம்.

கோப்புப் படம்
அதன்படி ஐபோன் SE 4 மாடலில் ஃபிளாட் எட்ஜ் இன்றி, ஐபோன் 14-ஐ விட அளவில் சற்றே குறைந்திருக்கும் என்று தெரிகிறது. இத்துடன் டச் ஐ.டி. பட்டன் ஒன்றும் ஐபோன் SE 4 மாடலில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுதவிர யு.எஸ்.பி. சி போர்ட் மற்றும் ஆக்ஷன் பட்டன் வழங்கப்படுகிறது. இவை இரண்டும் ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டவை ஆகும்.
ஐபோன் 14-ஐ விட ஐபோன் SE 4 எடை 6 கிராம்கள் வரை குறைவாக இருக்கும் என்று தெரிகிறது. ஐபோன் SE 4 எடை 172 கிராம்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐபோன் SE 4 மாடலில் ஒற்றை கேமரா செட்டப் வழங்கப்படுவதே இதற்கு காரணம் என்று தெரிகிறது. ஐபோன் 14 மாடலில் டூயல் கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சாம்சங் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
- மடிக்கக்கூடிய சாதனங்களின் விலை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறங்கிய முதல் முன்னணி நிறுவனங்களில் ஒன்று சாம்சங். தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் இதுவரை ஐந்து தலைமுறை கேலக்ஸி Z ஃபோல்டு ஃபிளாக்ஷிப் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. அந்த வகையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சாம்சங் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இதுவரை சாம்சங் அறிமுகம் செய்திருக்கும் மடிக்கக்கூடிய சாதனங்களின் விலை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அடுத்த ஆண்டு முதல் சாம்சங் நிறுவனம் சற்றே குறைந்த விலையில் மடிக்கக்கூடிய சாதனங்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதேபோன்று சாம்சங் மட்டுமின்றி ஹூவாய் நிறுவனமும் குறைந்த விலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டிரென்ட்ஃபோர்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி சாம்சங் மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் ஃபேன் எடிஷனை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக கூறப்பட்டது. கேலக்ஸி Z ஃபோல்டு 6 மற்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 6 மாடல்களின் ஃபேன் எடிஷன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.
- புதிய மாடல் ரெட்மி 12C ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
- புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அமேசானில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.
சியோமி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ரெட்மி 13C 4ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியது. மேலும் இதன் டிசைன் மற்றும் எந்தெந்த நிறங்களில் கிடைக்கும் என்ற தகவல்களும் வெளியாகி இருந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 12C ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. மேலும் இதன் அம்சங்கள் முந்தைய வெர்ஷனில் இருந்ததை விட மேம்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. ரெட்மி 13C வெளியீட்டு தேதி குறித்து சியோமி நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

இந்த நிலையில், ரெட்மி 13C ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. மேலும் ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்கள் மற்றும் விலை என அனைத்து விவரங்களும் இடம்பெற்று இருக்கிறது. அமேசான் வலைதள விவரங்களின் படி ரெட்மி 13C 4ஜி ஸ்மார்ட்போன் பிளாக் நிறத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.74 இன்ச் HD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14, 4ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி 13C 16 வாட் வயர்டு சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் 3.5mm ஆடியோ ஜாக், கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. விலையை பொருத்தவரை ரெட்மி 13C மாடலின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 140.54 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 11 ஆயிரத்து 700 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் உருவாகி இருக்கிறது.
- ரெட்மி 13C ஸ்மார்ட்போன் நான்கு நிறங்களில் கிடைக்கும் என்று கூறப்பட்டது.
சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி 13C ஸ்மார்ட்போன் அடுத்த சில நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டுக்கு முன் இந்த ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இதில் புதிய ஸ்மார்ட்போனின் விலை, ரெண்டர்கள் மற்றும் அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன.
அமேசான் வலைதள விவரங்களின் படி ரெட்மி 13C ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை 130 யூரோக்கள் மற்றும் 150 யூரோக்கள் என்று நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் நேவி புளூ என இரண்டு நிறங்களில் உருவாகி இருக்கிறது.
சமீபத்தில் வெளியான தகவல்களில் புதிய ரெட்மி 13C ஸ்மார்ட்போன் பிளாக், புளூ, லைட் கிரீன் மற்றும் லைட் புளூ என நான்குவிதமான நிறங்களில் கிடைக்கும் என்று கூறப்பட்டது.
ரெட்மி 13C எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
6.74 இன்ச் LCD ஸ்கிரீன், 720x1600 பிக்சல் HD+ ரெசல்யூஷன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர்
அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14
50MP பிரைமரி கேமர
2MP டெப்த் மற்றும் மேக்ரோ லென்ஸ்
8MP செல்ஃபி கேமரா
4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
யு.எஸ்.பி. சி போர்ட்
3.5mm ஆடியோ ஜாக்
புதிய ரெட்மி 13C ஸ்மார்ட்போன் சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ C65 மாடலின் ரிபிராண்டெட் வெர்ஷன் ஆகும்.
- ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போனிற்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிப்பு.
- தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தினால் 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி.
ஒப்போ நிறுவனம் பிப்ரவரி மாத வாக்கில் இந்திய சந்தையில் தனது ரெனோ 8T ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது 120Hz டிஸ்ப்ளே, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கு தற்போது 50 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
க்ரோமா வலைதளத்தில் ஒப்போ ரெனோ 8T ஸ்மார்ட்போனிற்கு 67.27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ. 38 ஆயிரத்து 999 விலையில் அறிமுகமான ஒப்போ ரெனோ 8T ஸ்மார்ட்போன் ஆன்லைனில் ரூ. 29 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ. 12 ஆயிரத்து 765 விலையில் கிடைக்கிறது.

இந்த விலை தவிர ஐ.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது 10 சதவீதம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒப்போ ரெனோ 8T ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரியுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சன்ரைஸ் கோல்டு மற்றும் மிட்நைட் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
ஒப்போ ரெனோ 8T அம்சங்கள்:
6.7 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
8 ஜி.பி. ரேம்
128 ஜி.பி. மெமரி
108MP பிரைமரி கேமரா
2MP டெப்த் கேமரா
2MP ஜூம் கேமரா
32MP செல்ஃபி கேமரா
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒ.எஸ். 13
4800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்
- சாம்சங் ஃபிளாக்ஷிப் மாடல்கள் அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்வில் அறிமுகமாகின்றன.
- சியோமி நிறுவனம் சியோமி 14 ப்ரோ டைட்டானியம் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்தது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S24 சீரிஸ் மாடல்களை ஜனவரி 17-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 2024 ஆண்டுக்கான சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவலில் கேலக்ஸி S24 சீரிசின் ஒரு மாடல் குறித்த மிகமுக்கிய தகவல் தெரியவந்துள்ளது. தென் கொரியாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலில் டைட்டானியம் ஃபிரேம் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் ஆப்பிள் அறிமுகம் செய்த ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் டைட்டானியம் ஃபிரேம் முதல் முறையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிறகு, இதே பானியில் சியோமி நிறுவனமும் சியோமி 14 ப்ரோ மாடலின் டைட்டானியம் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் சாம்சங் நிறுவனமும் இணைய இருப்பதாக தற்போதைய தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி கேலக்ஸி S24 அல்ட்ரா மாடல் டைட்டானியம் ஃபிரேம் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என்று கூறப்படுகிறது. இதற்காக சாம்சங் நிறுவனம் 15 மில்லியன் டைட்டானியம் ஃபிரேம்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S24 சீரிசின் அனைத்து மாடல்களிலும் டைட்டானியம் ஃபிரேம் வழங்க இருப்பதாக கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
- புதிய ஸ்மார்ட்போனில் 6 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
- புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
லாவா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போனினை மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த லாவா பிளேஸ் 5ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். லாவா பிளேஸ் 2 5ஜி பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 6 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ரிங் லைட் நோட்டிஃபிகேஷன் லைட் போன்று செயல்படுகிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் லாவா பிளேஸ் 2 5ஜி மாடலில் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

லாவா பிளேஸ் 2 5ஜி அம்சங்கள்:
6.56 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர்
மாலி G57 MC2 GPU
4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஏ.ஐ. கேமரா
8MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை
ப்ளூடூத் 5.1
யு.எஸ்.பி. டைப் சி
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
புதிய லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் கிளாஸ் பிளாக், கிளாஸ் புளூ மற்றும் கிளாஸ் லாவென்டர் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம் கொண்ட மாடலின் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்றும் 6 ஜி.பி. ரேம் கொண்ட மாடலின் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் லாவா இந்தியா வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நவம்பர் 9-ம் தேதி துவங்குகிறது.
- ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன.
- ப்ளிப்கார்ட் வலைதளத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.
ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பண்டிகை காலத்தை ஒட்டி மொபைல் போன் மாடல்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாளை (நவம்பர் 2) துவங்க இருக்கும் பிக் தீபாவளி சேல்-இல் ஐபோன் மாடல்களுக்கு விசேஷ சலுகைகளை வழங்குகிறது.
அதன்படி ஐபோன் 14 மாடல் ரூ. 49 ஆயிரத்து 999 விலையில் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில் வங்கி சலுகைகள் மற்றும் இதர தள்ளுபடி உள்ளிட்டவை அடங்கும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஃபார் அவுட் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. இதில் ஐபோன் 14 பேஸ் வேரியண்ட் விலை ரூ. 79 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

ப்ளிப்கார்ட் சலுகை விவரம்:
தீபாவளி விற்பனையை ஒட்டி ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இடம்பெற்று இருந்த டீசர் வலைபக்கத்தில் ஐபோன் 14 (128 ஜி.பி.) மாடல் ரூ. 50 ஆயிரத்திற்கும் குறைவாக கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதில் ஐபோன் 14 குறைந்தபட்ச சலுகை விலை ரூ. 54 ஆயிரத்து 999 ஆகும். இத்துடன் வங்கி சலுகையாக ரூ. 4 ஆயிரமும், எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 1000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இவற்றை சேர்த்தால், ஐபோன் 14 (128 ஜி.பி.) மாடல் ரூ. 49 ஆயிரத்து 999 விலையிலேயே கிடைக்கும்.
மாத தவணையில் வாங்க விரும்பும் பயனர்கள் முதலில் ரூ. 19 ஆயிரத்து 999 மட்டும் செலுத்தி, மீதமுள்ள ரூ. 35 ஆயிரத்தை வட்டியில்லா மாத தவணை முறையில் திருப்பி செலுத்திக் கொள்ளலாம். இந்த சிறப்பு தள்ளுபடி விலை நவம்பர் 2-ம் தேதி அமலுக்கு வருகிறது. ப்ளிப்கார்ட் வலைதளத்தில் சிறப்பு விற்பனை நவம்பர் 11-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
- ஜியோவின் முற்றிலும் புதிய ஃபீச்சர் போன் அழகிய தோற்றம் கொண்டிருக்கிறது.
- ஜியோபோன் பிரைமா மாடலில் 4ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பிராண்டு இந்திய சந்தையில் புதிய ஜியோபோன் பிரைமா 4ஜி மாடலை அறிமுகம் செய்தது. இது ஃபீச்சர் போன் என்ற நிலையிலும், இதில் யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு உள்ளன. இத்துடன் 4ஜி எல்.டி.இ. கனெக்டிவிட்டி மற்றும் 23 மொழிகளில் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

ஜியோபோன் பிரைமா 4ஜி அம்சங்கள்:
2.4 இன்ச் டி.எஃப்.டி. 320x240 பிக்சல் டிஸ்ப்ளே
ARM கார்டெக்ஸ் A53 பிராசஸர்
512 எம்.பி. ரேம்
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
23 மொழிகளில் இயக்கும் வசதி
கை ஒ.எஸ்.
1200-க்கும் அதிக செயலிகளை பயன்படுத்தும் வசதி
எஃப்.எம். ரேடியோ
சிங்கில் சிம் ஸ்லாட்
3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
ப்ளூடூத் 5.0
1800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
கேமரா சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ்
ஜியோபோன் பிரைமா 4ஜி மாடல் புளூ மற்றும் எல்லோ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 599 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஜியோமார்ட் மூலம் நடைபெறுகிறது.
- புதிய நோக்கியா 105 கிளாசிக் மாடல் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
- இந்த மொபைலுடன் ஒரு வருடத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஃபீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்தது. நோக்கியா 105 கிளாசிக் என்று அழைக்கப்படும் புதிய ஃபீச்சர் போன் மாடலில் இன்-பில்ட் யு.பி.ஐ. செயலி உள்ளது. இத்துடன் 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி, வயர்லெஸ் எப்.எம். ரேடியோ மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.
இந்த மொபைலில் உள்ள பட்டன்கள் ஒவ்வொன்றுக்கும் இடையில் அதிக இடைவெளி இருக்கிறது. இவற்றை கொண்டு இருள் சூழ்ந்த பகுதிகளிலும் மொபைலை எவ்வித சிரமமும் இன்றி பயன்படுத்த முடியும். இது எர்கோனமிக் டிசைன் மற்றும் கச்சிதமான வடிவம் கொண்டிருக்கிறது.

புதிய நோக்கியா 105 கிளாசிக் மாடல் சார்கோல் மற்றும் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த மொபைல் போன் சிங்கில் சிம், டூயல் சிம் மற்றும் சார்ஜர் உடன் ஒரு வேரியண்ட் மற்றும் சார்ஜர் இன்றி மற்றொரு வேரியண்ட் என மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 999 ஆகும்.
இந்த மொபைல் போன் நோக்கியா வலைதளம், ஆஃப்லைன் ஸ்டோர் மற்றும் இதர சில்லறை விற்பனை மையங்களில் நடைபெறுகிறது. இந்த மொபைலுடன் ஒரு வருடத்திற்கான வாரண்டியும் வழங்கப்படுகிறது.
- ஐகூ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் வெளியீடு.
- ஐகூ 12 ஸ்மார்ட்போனில் அதிநவீன பிராசஸர் வழங்கப்படுகிறது.
ஐகூ நிறுவனத்தின் புதிய ஐகூ 12 ஸ்மார்ட்போன் நவம்பர் 7-ம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் இது என ஐகூ பிராண்டு தெரிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி, சார்ஜிங் வேகம் பற்றிய தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. ஐகூ 12 சீன வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், இதன் இந்திய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஐகூ 12 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் E7 AMOLED ஸ்கிரீன், 1.5K ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 24 ஜி.பி. ரேம், 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ், 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 64MP 3x டெலிஃபோட்டோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
- புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்பட்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் 4800 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த Y100 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் Y200 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 6.67 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 13 கொண்டிருக்கும் விவோ Y200 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை எக்ஸ்டென்ட் ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS, 2MP டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4800 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

விவோ Y200 அம்சங்கள்:
6.67 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர்
அட்ரினோ GPU
8 ஜி.பி. ரேம்
128 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 13
64MP பிரைமரி கேமரா, OIS
2MP போர்டிரெயிட் கேமரா
16MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
4800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விவோ Y200 ஸ்மார்ட்போன் ஜங்கில் கிரீன் மற்றும் டெசர்ட் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரையிலான தள்ளுபடி, 24 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.






