என் மலர்
மொபைல்ஸ்

ஆப்பிள் வரிசையில் சாம்சங்.. S24 அல்ட்ரா டிசைன் குறித்து லீக் ஆன சூப்பர் தகவல்
- சாம்சங் ஃபிளாக்ஷிப் மாடல்கள் அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்வில் அறிமுகமாகின்றன.
- சியோமி நிறுவனம் சியோமி 14 ப்ரோ டைட்டானியம் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்தது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S24 சீரிஸ் மாடல்களை ஜனவரி 17-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 2024 ஆண்டுக்கான சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவலில் கேலக்ஸி S24 சீரிசின் ஒரு மாடல் குறித்த மிகமுக்கிய தகவல் தெரியவந்துள்ளது. தென் கொரியாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலில் டைட்டானியம் ஃபிரேம் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் ஆப்பிள் அறிமுகம் செய்த ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் டைட்டானியம் ஃபிரேம் முதல் முறையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிறகு, இதே பானியில் சியோமி நிறுவனமும் சியோமி 14 ப்ரோ மாடலின் டைட்டானியம் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் சாம்சங் நிறுவனமும் இணைய இருப்பதாக தற்போதைய தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி கேலக்ஸி S24 அல்ட்ரா மாடல் டைட்டானியம் ஃபிரேம் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என்று கூறப்படுகிறது. இதற்காக சாம்சங் நிறுவனம் 15 மில்லியன் டைட்டானியம் ஃபிரேம்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S24 சீரிசின் அனைத்து மாடல்களிலும் டைட்டானியம் ஃபிரேம் வழங்க இருப்பதாக கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.






