search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ரேம் மட்டுமே 24 ஜி.பி. - வேற லெவலில் ரெடியாகும் புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்
    X

    ரேம் மட்டுமே 24 ஜி.பி. - வேற லெவலில் ரெடியாகும் புது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்

    • ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என தகவல்.
    • ஒன்பிளஸ் நிறுவனம் அபார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது 10-வது ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்வு டிசம்பர் 4-ம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. மேலும் இதே நாளில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படுகிறது. ஒன்பிளஸ் 12 தவிர ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 12R என்ற பெயரில் இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம். ஒன்பிளஸ் நிறுவனத்தை பீட் லௌ மற்றும் கார்ல் பெய் இணைந்து டிசம்பர் 16, 2013-ம் ஆண்டு துவங்கினர். கடந்த ஆண்டுகளில் ஒன்பிளஸ் நிறுவனம் அபார வளர்ச்சியை பதிவு செய்து, சந்தையில் தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்று இருக்கிறது.

    அந்த வகையில் ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் பத்து ஆண்டுகளை கொண்டாட இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை ஒன்பிளஸ் நிறுவனம் தனது வெய்போ அக்கவுண்டில் வெளியிட்டு உள்ளது. அதன்படி கொண்டாட்ட நிகழ்வு இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு துவங்க இருக்கிறது.

    ஒன்பிளஸ் 12 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 12 மாடலில் 6.82 இன்ச் LTPO AMOLED பேனல், 2K ப்ரோ எக்ஸ்.டி.ஆர். ரெசல்யூஷன், பன்ச் ஹோல் கட்-அவுட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், அட்ரினோ GPU வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் அதிகபட்சம் 24 ஜி.பி. ரேம், 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ், 5400 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 100 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.

    புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 50MP அல்ட்ரா வைடு சென்சார், 64MP 3x டெலிஃபோட்டோ ஜூம், OIS வழங்கப்படும் என்று தெரிகிறது.

    Next Story
    ×