என் மலர்
மொபைல்ஸ்
- சாம்சங் ஃபிளாக்ஷிப் மாடல்கள் அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்வில் அறிமுகமாகின்றன.
- சியோமி நிறுவனம் சியோமி 14 ப்ரோ டைட்டானியம் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்தது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S24 சீரிஸ் மாடல்களை ஜனவரி 17-ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. 2024 ஆண்டுக்கான சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அமெரிக்காவில் நடைபெறும் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன்களின் விவரங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன.
அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவலில் கேலக்ஸி S24 சீரிசின் ஒரு மாடல் குறித்த மிகமுக்கிய தகவல் தெரியவந்துள்ளது. தென் கொரியாவில் இருந்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலில் டைட்டானியம் ஃபிரேம் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் ஆப்பிள் அறிமுகம் செய்த ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் டைட்டானியம் ஃபிரேம் முதல் முறையாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிறகு, இதே பானியில் சியோமி நிறுவனமும் சியோமி 14 ப்ரோ மாடலின் டைட்டானியம் ஸ்பெஷல் எடிஷனை அறிமுகம் செய்தது. இந்த வரிசையில் சாம்சங் நிறுவனமும் இணைய இருப்பதாக தற்போதைய தகவல்களில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி கேலக்ஸி S24 அல்ட்ரா மாடல் டைட்டானியம் ஃபிரேம் கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என்று கூறப்படுகிறது. இதற்காக சாம்சங் நிறுவனம் 15 மில்லியன் டைட்டானியம் ஃபிரேம்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே வெளியான தகவல்களில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S24 சீரிசின் அனைத்து மாடல்களிலும் டைட்டானியம் ஃபிரேம் வழங்க இருப்பதாக கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
- புதிய ஸ்மார்ட்போனில் 6 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
- புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது.
லாவா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய 5ஜி ஸ்மார்ட்போனினை மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த லாவா பிளேஸ் 5ஜி மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். லாவா பிளேஸ் 2 5ஜி பெயரில் அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட எல்.சி.டி. ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 6 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள ரிங் லைட் நோட்டிஃபிகேஷன் லைட் போன்று செயல்படுகிறது. பக்கவாட்டில் கைரேகை சென்சார் உள்ளது. 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் லாவா பிளேஸ் 2 5ஜி மாடலில் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.

லாவா பிளேஸ் 2 5ஜி அம்சங்கள்:
6.56 இன்ச் 1600x720 பிக்சல் HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டாகோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6020 பிராசஸர்
மாலி G57 MC2 GPU
4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், ஏ.ஐ. கேமரா
8MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை
ப்ளூடூத் 5.1
யு.எஸ்.பி. டைப் சி
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
புதிய லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் கிளாஸ் பிளாக், கிளாஸ் புளூ மற்றும் கிளாஸ் லாவென்டர் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம் கொண்ட மாடலின் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்றும் 6 ஜி.பி. ரேம் கொண்ட மாடலின் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் மற்றும் லாவா இந்தியா வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நவம்பர் 9-ம் தேதி துவங்குகிறது.
- ஐபோன் 14 சீரிஸ் மாடல்கள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன.
- ப்ளிப்கார்ட் வலைதளத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை நடைபெறுகிறது.
ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பண்டிகை காலத்தை ஒட்டி மொபைல் போன் மாடல்களுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நாளை (நவம்பர் 2) துவங்க இருக்கும் பிக் தீபாவளி சேல்-இல் ஐபோன் மாடல்களுக்கு விசேஷ சலுகைகளை வழங்குகிறது.
அதன்படி ஐபோன் 14 மாடல் ரூ. 49 ஆயிரத்து 999 விலையில் விற்பனைக்கு வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில் வங்கி சலுகைகள் மற்றும் இதர தள்ளுபடி உள்ளிட்டவை அடங்கும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஃபார் அவுட் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 14 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. இதில் ஐபோன் 14 பேஸ் வேரியண்ட் விலை ரூ. 79 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

ப்ளிப்கார்ட் சலுகை விவரம்:
தீபாவளி விற்பனையை ஒட்டி ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இடம்பெற்று இருந்த டீசர் வலைபக்கத்தில் ஐபோன் 14 (128 ஜி.பி.) மாடல் ரூ. 50 ஆயிரத்திற்கும் குறைவாக கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதில் ஐபோன் 14 குறைந்தபட்ச சலுகை விலை ரூ. 54 ஆயிரத்து 999 ஆகும். இத்துடன் வங்கி சலுகையாக ரூ. 4 ஆயிரமும், எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 1000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இவற்றை சேர்த்தால், ஐபோன் 14 (128 ஜி.பி.) மாடல் ரூ. 49 ஆயிரத்து 999 விலையிலேயே கிடைக்கும்.
மாத தவணையில் வாங்க விரும்பும் பயனர்கள் முதலில் ரூ. 19 ஆயிரத்து 999 மட்டும் செலுத்தி, மீதமுள்ள ரூ. 35 ஆயிரத்தை வட்டியில்லா மாத தவணை முறையில் திருப்பி செலுத்திக் கொள்ளலாம். இந்த சிறப்பு தள்ளுபடி விலை நவம்பர் 2-ம் தேதி அமலுக்கு வருகிறது. ப்ளிப்கார்ட் வலைதளத்தில் சிறப்பு விற்பனை நவம்பர் 11-ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
- ஜியோவின் முற்றிலும் புதிய ஃபீச்சர் போன் அழகிய தோற்றம் கொண்டிருக்கிறது.
- ஜியோபோன் பிரைமா மாடலில் 4ஜி கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ பிராண்டு இந்திய சந்தையில் புதிய ஜியோபோன் பிரைமா 4ஜி மாடலை அறிமுகம் செய்தது. இது ஃபீச்சர் போன் என்ற நிலையிலும், இதில் யூடியூப் மற்றும் வாட்ஸ்அப் போன்ற செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு உள்ளன. இத்துடன் 4ஜி எல்.டி.இ. கனெக்டிவிட்டி மற்றும் 23 மொழிகளில் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

ஜியோபோன் பிரைமா 4ஜி அம்சங்கள்:
2.4 இன்ச் டி.எஃப்.டி. 320x240 பிக்சல் டிஸ்ப்ளே
ARM கார்டெக்ஸ் A53 பிராசஸர்
512 எம்.பி. ரேம்
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
23 மொழிகளில் இயக்கும் வசதி
கை ஒ.எஸ்.
1200-க்கும் அதிக செயலிகளை பயன்படுத்தும் வசதி
எஃப்.எம். ரேடியோ
சிங்கில் சிம் ஸ்லாட்
3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
ப்ளூடூத் 5.0
1800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
கேமரா சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ்
ஜியோபோன் பிரைமா 4ஜி மாடல் புளூ மற்றும் எல்லோ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 599 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை ஜியோமார்ட் மூலம் நடைபெறுகிறது.
- புதிய நோக்கியா 105 கிளாசிக் மாடல் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
- இந்த மொபைலுடன் ஒரு வருடத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஃபீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்தது. நோக்கியா 105 கிளாசிக் என்று அழைக்கப்படும் புதிய ஃபீச்சர் போன் மாடலில் இன்-பில்ட் யு.பி.ஐ. செயலி உள்ளது. இத்துடன் 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி, வயர்லெஸ் எப்.எம். ரேடியோ மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.
இந்த மொபைலில் உள்ள பட்டன்கள் ஒவ்வொன்றுக்கும் இடையில் அதிக இடைவெளி இருக்கிறது. இவற்றை கொண்டு இருள் சூழ்ந்த பகுதிகளிலும் மொபைலை எவ்வித சிரமமும் இன்றி பயன்படுத்த முடியும். இது எர்கோனமிக் டிசைன் மற்றும் கச்சிதமான வடிவம் கொண்டிருக்கிறது.

புதிய நோக்கியா 105 கிளாசிக் மாடல் சார்கோல் மற்றும் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த மொபைல் போன் சிங்கில் சிம், டூயல் சிம் மற்றும் சார்ஜர் உடன் ஒரு வேரியண்ட் மற்றும் சார்ஜர் இன்றி மற்றொரு வேரியண்ட் என மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 999 ஆகும்.
இந்த மொபைல் போன் நோக்கியா வலைதளம், ஆஃப்லைன் ஸ்டோர் மற்றும் இதர சில்லறை விற்பனை மையங்களில் நடைபெறுகிறது. இந்த மொபைலுடன் ஒரு வருடத்திற்கான வாரண்டியும் வழங்கப்படுகிறது.
- ஐகூ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் டீசர் வெளியீடு.
- ஐகூ 12 ஸ்மார்ட்போனில் அதிநவீன பிராசஸர் வழங்கப்படுகிறது.
ஐகூ நிறுவனத்தின் புதிய ஐகூ 12 ஸ்மார்ட்போன் நவம்பர் 7-ம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்ட இந்தியாவின் முதல் ஸ்மார்ட்போன் இது என ஐகூ பிராண்டு தெரிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் பேட்டரி, சார்ஜிங் வேகம் பற்றிய தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கின்றன. ஐகூ 12 சீன வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு விட்ட நிலையில், இதன் இந்திய வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஐகூ 12 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் E7 AMOLED ஸ்கிரீன், 1.5K ரெசல்யூஷன், 144Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 24 ஜி.பி. ரேம், 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ், 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 64MP 3x டெலிஃபோட்டோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
- புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS வழங்கப்பட்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் 4800 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த Y100 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் Y200 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதில் 6.67 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 13 கொண்டிருக்கும் விவோ Y200 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை எக்ஸ்டென்ட் ரேம் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, OIS, 2MP டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 4800 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. மேலும் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

விவோ Y200 அம்சங்கள்:
6.67 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 பிராசஸர்
அட்ரினோ GPU
8 ஜி.பி. ரேம்
128 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 13
64MP பிரைமரி கேமரா, OIS
2MP போர்டிரெயிட் கேமரா
16MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
4800 எம்.ஏ.ஹெச். பேட்டரி
44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விவோ Y200 ஸ்மார்ட்போன் ஜங்கில் கிரீன் மற்றும் டெசர்ட் கோல்டு என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரையிலான தள்ளுபடி, 24 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது.
- வங்கி சேவையை பயன்படுத்தும் போது ரூ. 10 ஆயிரம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
- அதிகபட்சம் 24 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது.
சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் உற்பத்தியாளரான விவோ இந்திய சந்தையில் தனது விவோ X90 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை கடந்த ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது இதன் விலை ரூ. 85 ஆயிரம் என்று நிர்ணம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.
விலை குறைப்பின் படி விவோ X90 ப்ரோ ஸ்மார்ட்போனின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 74 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. விலை குறைப்பு தவிர தேர்வு செய்யப்பட்ட வங்கி சேவையை பயன்படுத்தும் போது ரூ. 10 ஆயிரம் வரை கேஷ்பேக் அல்லது அதிகபட்சம் 24 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது.

கேஷிஃபை சேவையை பயன்படுத்தும் போது ரூ. 8 ஆயிரம் வரையிலான எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. விவோ வி ஷீல்டு பாதுகாப்பு திட்டங்களை பயன்படுத்தும் போது 40 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. பயனர்கள் விவோ X90 ப்ரோ மாடலை ப்ளிப்கார்ட், விவோ அதிகாரப்பூர்வ ஸ்டோர் மற்றும் ரிடெயில் ஸ்டோர்களில் புதிய விலையில் வாங்கிட முடியும்.

விவோ X90 ப்ரோ அம்சங்கள்:
6.78 இன்ச் 2800x1260 பிக்சல் FHD+ BOE Q9 OLED HDR10+ 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே
ஆக்டா கோர் டிமென்சிட்டி 9200 பிராசஸர்
இம்மோர்டலிஸ் G715 GPU
12 ஜி.பி. ரேம்
256 ஜி.பி. மெமரி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், OIS
12MP அல்ட்ரா வைடு கேமரா
50MP 50mm போர்டிரெயிட் கேமரா
32MP செல்ஃபி கேமரா
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
யு.எஸ்.பி. டைப் சி
4870 எம்.ஏ.ஹெச். பேட்டரி
120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- ஒப்போ ஃபைண்ட் N3 மாடல் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒ.எஸ். 13.2 கொண்டிருக்கிறது.
ஒப்போ நிறுவனம் தனது புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்- ஃபைண்ட் N3 மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மாடலில் 7.82 இன்ச் மடிக்கக்கூடிய 2K OLED ஸ்கிரீன், 2800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 6.3 இன்ச் FHD+ OLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஃபைண்ட் N3 மாடலில் உள்ள ஹின்ஜ் பகுதியில் மூன்றில் ஒரு பங்கு பாகங்கள் குறைக்கப்பட்டு உள்ளது. இதற்கு மாற்றாக அதிக உறுதியான ஸ்டீல் மற்றும் இண்டகிரேட் செய்யப்பட்ட சிர்கோனியம் அலாய் லிக்விட் மெட்டல் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது ஹின்ஜ் எடையை பெருமளவு குறைத்து, அதிக உறுதியாக இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒ.எஸ். 13.2 கொண்டிருக்கிறது. இத்துடன் மூன்று தலைமுறை ஆண்ட்ராய்டு ஒ.எஸ். அப்கிரேடுகளும், நான்கு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்கப்படும் என்று ஒப்போ நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. இதில் உள்ள ஆப்டிமைஸ் செய்யப்பட்ட கலர் ஒ.எஸ். குளோபல் டாஸ்க்பார் கொண்டிருக்கிறது.

ஒப்போ ஃபைண்ட் N3 அம்சங்கள்:
7.82 இன்ச் 2440x2268 பிக்சல் 2K AMOLED டிஸ்ப்ளே
6.31 இன்ச் 2484x1116 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்
அட்ரினோ 740 GPU
16 ஜி.பி. LPDDR5X ரேம், 512 ஜி.பி. UFS 4.0 மெமரி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒ.எஸ். 13.2
டூயல் சிம் ஸ்லாட்
48MP பிரைமரி கேமரா, OIS
48MP அல்ட்ரா வைடு கேமரா
64MP டெலிஃபோட்டோ கேமரா
32MP கவர் ஸ்கிரீன் கேமரா
20MP செல்ஃபி கேமரா
யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
5ஜி, 4ஜி, வைபை, ப்ளூடூத் 5.3
4085 எம்.ஏ.ஹெச். பேட்டரி
67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஒப்போ ஃபைண்ட் N3 மாடல் கிளாசிக் பிளாக் மற்றும் ஷேம்பெயின் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 2 ஆயிரத்து 399 SGD, இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 45 ஆயிரத்து 395 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்படுகிறது.
- இதன் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விவரங்களை டிப்ஸ்டர் வெளியிட்டுள்ளார்.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் ஓபன் எனும் பெயரில் நாளை (அக்டோபர் 19) நடைபெற இருக்கும் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் ஹார்டுவேர் அம்சங்கள் கிட்டத்தட்ட ஒப்போ ஃபைண்ட் N3 மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனும் அக்டோபர் 19-ம் தேதியே அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு இருக்கும் என்றும் ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இந்த மடிக்கக்கூடிய சாதனத்தின் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விவரங்களை டிப்ஸ்டர் ஒருவர் வெளியிட்டு இருக்கிறார். அதன்படி டிப்ஸ்டர் முகுல் ஷர்மா வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஒன்பிளஸ் ஓபன் மாடலில் 16 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் ஓபன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் கிரீன் நிறத்தில் கிடைக்கும் என்றும் இது எமரால்டு டஸ்க் என்று அழைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:
ஒன்பிளஸ் ஓபன் மாடலில் 7.8 இன்ச் மடிக்கக்கூடிய OLED டிஸ்ப்ளே, 6.31 இன்ச் வெளிப்புற OLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 16 ஜி.பி. வரையிலான ரேம், 256 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 48MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 64MP டெலிஃபோட்டோ கேமரா, ஹேசில்பிலாட் பிராண்டிங் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதன் முன்புறத்தில் 32MP மற்றும் 20MP செல்ஃபி கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஆக்சிஜன் ஓ.எஸ். 13.1 வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் ஓபன் மாடல் 4805 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் என்றும் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் ஓபன் மாடல் அக்டோபர் 19-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதன் விலை 1699 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 41 ஆயிரத்து 405 வரை நிர்ணயம் செய்யப்படலாம். இது சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃபோல்டு 5 மாடலை விட சற்றே குறைந்த விலையில் கிடைக்கும் என்று தெரிகிறது.
- இதன் டாப் எண்ட் 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 ஆகும்.
- இந்த ஸ்மார்ட்போனினை மாத தவணை முறையிலும் வாங்கிட முடியும்.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடலின் புதிய நிற வேரியண்ட் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய நிறம் மஞ்சள் நிறத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக நடைபெற்ற கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் சாம்சங் தனது கிளாம்ஷெல் ரக ஃப்ளிப் போன் மாடலினை கிரீம், கிராஃபைட், மிண்ட் மற்றும் லாவெண்டர் என நான்கு நிறங்களில் அறிமுகம் செய்து இருந்தது.
கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் பிரத்யேக ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 ஃபார் கேலக்ஸி பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 3.4 இன்ச் சூப்பர் AMOLED கவர் டிஸ்ப்ளே, வாட்டர் ரெசிஸ்டண்ட் IPX8 சான்று, 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடலின் எல்லோ நிற வேரியண்ட் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 99 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டாப் எண்ட் மாடல் 8 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
இத்துடன் வங்கி சலுகைகளின் கீழ் ரூ. 7 ஆயிரம் வரை தள்ளுபடியும், ரூ. 7 ஆயிரம் வரை அப்கிரேடு போனஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனினை மாதம் ரூ. 3 ஆயிரத்து 379 என்ற மாத கட்டணத்தில் மாத தவணை முறையிலும் வாங்கிட முடியும்.
- அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஜியோபாரத் B1 சீரிசின் கீழ் பட்டியலிடப்பட்டு உள்ளது.
- புதிய ஃபீச்சர் போன் மாடலில் பெரிய டிஸ்ப்ளே, ஜியோபே செயலிக்கான சப்போர்ட் உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய சந்தையில் ஜியோபாரத் B1 சீரிஸ் ஃபீச்சர் போன் மாடலினை அறிமுகம் செய்தது. புதிய ஃபீச்சர் போன் ஜியோபாரத் V2 மற்றும் K1 கார்பன் மாடல்கள் வரிசையில் இணைந்துள்ளது. இந்த ஃபீச்சர் போன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஜியோபாரத் B1 சீரிசின் கீழ் பட்டியலிடப்பட்டு உள்ளது.
அதன்படி இதே சீரிசில் மேலும் சில மாடல்கள் எதிர்காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். இந்த ஃபீச்சர் போன் மாடலில் பெரிய டிஸ்ப்ளே, ஜியோபே செயலிக்கான சப்போர்ட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை ஜியோபாரத் B1 மாடலில் 2.4 இன்ச் டிஸ்ப்ளே, மியூசிக் / வீடியோக்களை இயக்கும் வசதி, ஜியோசினிமா, ஜியோ சாவன் உள்ளிட்ட செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு உள்ளது. ஜியோ சாவன் செயலியின் மூலம் அதிகபட்சம் 8 கோடிக்கும் அதிகமான பாடல்களை கேட்க முடியும். இத்துடன் பில்ட்-இன் எஃப்.எம். ரேடியோ, 23 மொழிகளுக்கான வசதி வழங்கப்பட்டு உள்ளது.

இந்த ஃபீச்சர் போன் மாடலில் ஜியோபே செயலி கொண்டு யு.பி.ஐ. பேமண்ட்களை மேற்கொள்ள முடியும். இத்துடன் கேமரா மூலம் கியூ.ஆர். பேமண்ட்களை மேற்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. ஜியோபாரத் B1 மாடலில் பின்புறம் கேமரா சென்சார் மற்றும் டார்ச் வழங்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் போனில் 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஜியோபாரத் B1 மாடல் பிளாக் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,299 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அமேசான் வலைதளம் மற்றும் ஜியோ ஸ்டோர்களில் நடைபெறுகிறது. ஜியோபாரத் B1 மாடலில் புதிய மற்றும் பழைய ஜியோ சிம்களை பயன்படுத்த முடியும். ஜியோபாரத் மொபைலின் அனைத்து பலன்களையும் பெற பயனர்கள் ரூ. 123 அல்லது அதற்கும் அதிக தொகை செலுத்தி ரிசார்ஜ் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.






