search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஸ்மார்ட்போனுக்கு ரூ. 10,000 விலை குறைப்பு.. மோட்டோரோலா அதிரடி
    X

    ஸ்மார்ட்போனுக்கு ரூ. 10,000 விலை குறைப்பு.. மோட்டோரோலா அதிரடி

    • மோட்டோ ஸ்மார்ட்போன்களுக்கு குறுகிய கால சலுகை அறிவிப்பு.
    • வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.

    மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா மற்றும் ரேசர் 40 மாடல்களுக்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், இரு மாடல்களின் விலையும் ரூ. 10 ஆயிரம் வரை குறைந்துள்ளது. மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா மாடலில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது. மோட்டோரோலா ரேசர் 40 மாடலில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படுகிறது.

    புதிய விலை விவரங்கள்:

    விலை குறைப்பின் படி மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மாடலின் தற்போது ரூ. 79 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக இதன் விலை ரூ. 89 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. மோட்டோரோலா ரேசர் 40 (8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி.) மாடலின் விலை ரூ. 49 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது.


    மோட்டோரோலா ரேசர் 40 அல்ட்ரா மாடல் இன்ஃபனைட் பிளாக் மற்றும் விவா மஜென்டா நிறங்களிலும், ரேசர் 40 மாடல் சேஜ் கிரீன், சம்மர் லிலக் மற்றும் வென்னிலா கிரீம் நிறங்களிலும் கிடைக்கிறது. குறுகிய கால சலுகையாக இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகைகள் டிசம்பர் 24-ம் தேதி வரை வழங்கப்படும்.

    இத்துடன் மோட்டோ ரேசர் 40 அல்ட்ரா மாடலை வாங்கும் போது ரூ. 7 ஆயிரம் உடனடி தள்ளுபடியும், ரேசர் 40 மாடலை வங்கும் போது ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இவைதவிர வட்டியில்லா மாத தவணை முறை சலுகையும் வழங்கப்படுகிறது.

    Next Story
    ×