search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    50MP கேமரா கொண்ட புது ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா?
    X

    50MP கேமரா கொண்ட புது ரியல்மி ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா?

    • ரியல்மி C சீரிஸ் ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கிறது.
    • இதில் 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    ரியல்மி நிறுவனம் தனது C67 5ஜி ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. 5ஜி கனெக்டிவிட்டியுடன் அறிமுகமாகி இருக்கும் புதிய C சீரிஸ் ஸ்மார்ட்போன் இது ஆகும். இதில் 6.72 இன்ச் FHD+ 120Hz டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 6100+ பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 6 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம், 50MP பிரைமரி கேமரா, 2MP போர்டிரெயிட் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

    7.89mm அளவில் உருவாகி இருக்கும் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் IP54 சான்று பெற்ற ஸ்பிலாஷ் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.


    ரியல்மி C67 5ஜி அம்சங்கள்:

    6.72 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ ஸ்கிரீன்

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6100+ பிராசஸர்

    Arm மாலி - G57 MC2 GPU

    4 ஜி.பி., 6 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யு.ஐ. 4.0

    50MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

    2MP போர்டிரெயிட் கேமரா

    8MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ

    டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டகி

    33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ரியல்மி C67 5ஜி ஸ்மார்ட்போன் சன்னி ஒயாசிஸ் மற்றும் டார்க் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 999 என்றும், 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    Next Story
    ×