என் மலர்
மொபைல்ஸ்

உடனே வாங்கிடலாம் போலயே.. சாம்சங் ஸ்மார்ட்போனிற்கு சூப்பர் கேஷ்பேக்..
- கேலக்ஸி A14 5ஜி மாடலில் எக்சைனோஸ் 1330 பிராசஸர் வழங்கப்படுகிறது.
- இந்த மாடலில் 50MP பிரைமரி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி A14 5ஜி ஸ்மார்ட்போனினை சமீபத்தில் அறிமுகம் செய்தது. ரூ. 16 ஆயிரத்து 499 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி A14 5ஜி மாடல் தற்போது ரூ. 13 ஆயிரத்து 499 விலையில் கிடைக்கிறது. இது 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடலுக்கானது ஆகும். இதில் ஆக்சிஸ் வங்கி வழங்கும் ரூ. 1000 கேஷ்பேக் தொகையும் அடங்கும்.

கேலக்ஸி A14 5ஜி மாடலின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை முறையே ரூ. 15 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 17 ஆயிரத்து 999 என்று மாறியிருக்கிறது. இதிலும் ரூ. 1000 கேஷ்பேக் சேர்க்கப்பட்டு இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி A14 5ஜி மாடலில் 6.6 இன்ச் HD+LCD ஸ்கிரீன், இன்ஃபினிட்டி வி நாட்ச், 90Hz ரிப்ரெஷ் ரேட், எக்சைனோஸ் 1330 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ லென்ஸ், 2MP டெப்த் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் சாம்சங் கேலக்ஸி A14 5ஜி மாடலில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. கேலக்ஸி A14 5ஜி மாடலில் சாம்சங்கின் வாய்ஸ் ஃபோக்கஸ் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் அழைப்புகளின் போது பின்னணியில் உள்ள சத்தத்தை தடுக்கும்.
இந்த அம்சம் வீடியோ மற்றும் வாய்ஸ் காலிங் செயலிகளான கூகுள் மீட், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ், வாட்ஸ்அப் மற்றும் ஜூம் உள்ளிட்டவைகளிலும் சீராக வேலை செய்யும். இத்துடன் கேலக்ஸி A14 5ஜி மாடலுக்கு நான்கு ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட், இரண்டு ஆண்ட்ராய்டு ஒ.எஸ். அப்டேட்களை பெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.






