என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    • ஆப்பிள் வாட்ச் மாடல்களுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
    • ஐபோன் 14 மாடலின் 128 ஜி.பி. வேரியண்டிற்கானது ஆகும்.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி ஐபோன் 15 மாடலுக்கு ரூ. 8 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஐபோன் 15 தவிர ஐபோன் 14 மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடல்களுக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    பிளாக் ஃபிரைடே சேல் பெயரில் ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனையாளரான இன்வென்ட் ஸ்டோர் ஐபோன் 15 மாடலுக்கு ரூ. 3 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி வழங்குகிறது. இத்துடன் ரூ. 5 ஆயிரம் ரையிலான கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதை சேர்க்கும் போது ஐபோன் 15 மாடலின் விலை ரூ. 8 ஆயிரம் வரை குறைந்துவிடும்.

    அந்த வகையில், ஐபோன் 15 விலை ரூ. 79 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 71 ஆயிரத்து 900 ஆக குறைந்துவிடும். ஐபோன் 14 மாடலுக்கு ரூ. 9 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் ரூ. 5 ஆயிரம் உடனடி தள்ளுபடியாகவும், ரூ. 4 ஆயிரம் கேஷ்பேக் வடிவிலும் வழங்கப்படுகிறது. இது ஐபோன் 14 மாடலின் 128 ஜி.பி. வேரியண்டிற்கானது ஆகும்.

    அந்த வகையில், ஐபோன் 14 மாடலின் விலை ரூ. 69 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 60 ஆயிரத்து 900 என குறைந்து இருக்கிறது. ஐபோன் 14 ஸ்மார்ட்போன் 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. என மொத்தம் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடலுக்கு ரூ. 2 ஆயிரத்து 500 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    அதன்படி ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 விலை ரூ. 39 ஆயிரத்து 400-க்கே கிடைக்கிறது. இதன் உண்மையான விலை ரூ. 41 ஆயிரத்து 900 ஆகும். ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 மாடல் ஜி.பி.எஸ். மற்றும் செல்லுலார் வேரியண்ட்களில் கிடைக்கிறது. இத்துடன் அலுமினியம் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என இருவித ஃபினிஷ்களில் கிடைக்கிறது.

    • விவோ V30 ஸ்மார்ட்போனுடன் விவோ V30 லைட் மாடலும் அறிமுகம்.
    • V29e ஸ்மார்ட்போனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தகவல்.

    விவோ நிறுவனம் தனது அடுத்த தலைமுறை V சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் தான் விவோ V30 ஸ்மார்ட்போனின் விவரங்கள் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது. தற்போது வெளியாகி இருக்கும் புதிய தகவல்களில் விவோ V30 ஸ்மார்ட்போனுடன் விவோ V30 லைட் மாடலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரியவந்துள்ளது.

    இதில் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களும் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி விவோ V30 லைட் மாடலில் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஒ.எஸ்., 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மற்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இத்துடன் 4700 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    கனெக்டிவிட்டிக்கு டூயல் பேண்ட் வைபை, என்.எஃப்.சி., ப்ளூடூத் மற்றும் யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. விவோ V30 லைட் மாடல் V29e ஸ்மார்ட்போனை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. எனினும், இதன் ஹார்டுவேரில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கலாம்.

    சர்வதேச சந்தையில் விவோ V29e மாடல் கடந்த அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், புதிய விவோ V30 மற்றும் விவோ V30 லைட் மாடல்கள் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. 

    • ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என தகவல்.
    • ஒன்பிளஸ் நிறுவனம் அபார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது 10-வது ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்வு டிசம்பர் 4-ம் தேதி நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. மேலும் இதே நாளில் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படுகிறது. ஒன்பிளஸ் 12 தவிர ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 12R என்ற பெயரில் இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்யப்படலாம். ஒன்பிளஸ் நிறுவனத்தை பீட் லௌ மற்றும் கார்ல் பெய் இணைந்து டிசம்பர் 16, 2013-ம் ஆண்டு துவங்கினர். கடந்த ஆண்டுகளில் ஒன்பிளஸ் நிறுவனம் அபார வளர்ச்சியை பதிவு செய்து, சந்தையில் தனக்கென தனி அங்கீகாரத்தை பெற்று இருக்கிறது.

    அந்த வகையில் ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் பத்து ஆண்டுகளை கொண்டாட இருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பை ஒன்பிளஸ் நிறுவனம் தனது வெய்போ அக்கவுண்டில் வெளியிட்டு உள்ளது. அதன்படி கொண்டாட்ட நிகழ்வு இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு துவங்க இருக்கிறது.

    ஒன்பிளஸ் 12 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் 12 மாடலில் 6.82 இன்ச் LTPO AMOLED பேனல், 2K ப்ரோ எக்ஸ்.டி.ஆர். ரெசல்யூஷன், பன்ச் ஹோல் கட்-அவுட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், அட்ரினோ GPU வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் அதிகபட்சம் 24 ஜி.பி. ரேம், 1 டி.பி. வரையிலான ஸ்டோரேஜ், 5400 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 100 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம்.

    புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். வழங்கப்படுகிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 50MP அல்ட்ரா வைடு சென்சார், 64MP 3x டெலிஃபோட்டோ ஜூம், OIS வழங்கப்படும் என்று தெரிகிறது. 

    • ஏர்டெல் மொபைல் ரிசார்ஜ் செய்யும் போது தள்ளுபடி.
    • ஏர்டெல் தேங்ஸ் செயலியில் இடம்பெற்று இருக்கும்.

    ஆப்பிள் ஐபோன் 15 வாங்க நினைக்கும் ஏர்டெல் வாடிக்கையாளரா நீங்கள்? அப்படியெனில் இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள். ஐபோன் 15 வாங்கும் ஏர்டெல் பயனர்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் வங்கி சார்ந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஏர்டெல் மொபைல் ரிசார்ஜ் செய்யும் போது தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    புதிய ஐபோன் 15 வாங்கிய 60 நாட்களுக்குள் ஏர்டெல் போஸ்ட்பெயிட் சிம் ஆக்டிவேட் செய்தால் ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகை நவம்பர் 10-ம் தேதி துவங்கி டிசம்பர் 30-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படுகிறது. பயனர் ஐபோனினை அமேசான் வலைதளத்தில் இருந்து வாங்கி இருந்தால், இந்த சலுகை நீட்டிக்கப்படும்.

    அதன்படி ஏர்டெல் போஸ்ட்பெயிட் சிம் கார்டை ஆக்டிவேட் செய்ததும், ஏதேனும் ஒரு போஸ்ட்பெயிட் திட்டத்தில் ரிசார்ஜ் செய்ய வேண்டும். பிறகு ரூ. 200 மதிப்புள்ள பத்து கூப்பன்கள் பயனர்களுக்கு வழங்கப்படும். இதற்கான தகவல் ஏர்டெல் தேங்ஸ் செயலியில் இடம்பெற்று இருக்கும். இந்த சலுகை ஏர்டெல் கார்ப்பரேட் சிம் கார்டுகளுக்கு பொருந்தாதது.

    ஆனால், ஏர்டெல் போஸ்ட்பெயிட் சிம் 60 நாட்களுக்குள் ஆக்டிவேட் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இவ்வாறு செய்யும் போது பயனர் மேற்கொள்ளும் ரிசார்ஜ் ஒன்றுக்கு ஒரு கூப்பன் வரை பயன்படுத்த முடியும். இதுதவிர பயனர்கள் விதிகளை பின்பற்றும் போது ரூ. 5 ஆயிரம் வரையிலான கேஷ்பேக்-ஐ அமேசானிடம் இருந்து பெற முடியும். 

    • ரெட்மி நோட் 13 சீரிஸ் மாடல்கள் சீனாவில் விற்பனை செய்யப்படுகின்றன.
    • புதிய ரெட்மி நோட் சீரிஸ் விவரங்கள் லீக் ஆகி இருக்கிறது.

    சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 13 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த செப்டம்பர் மாதம் சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இத்துடன் ரெட்மி நோட் 13 ப்ரோ சீரிஸ் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நிலையில், ரெட்மி நோட் 13 ப்ரோ சீரிசின் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 13R ப்ரோ எனும் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்று சீன டெலிகாம் வலைதளத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இத்துடன் ரெட்மி நோட் 13R ப்ரோ மாடலின் டிசைன் மற்றும் அம்சங்கள் பற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளன. அதன்படி இந்த மாடலில் 6.67 இன்ச் FHD+ ஸ்கிரீன் MT6833 பிராசஸர் வழங்கப்படும் என தகவல்.

    ரெட்மி நோட் 13R ப்ரோ அம்சங்கள்:

    6.67 இன்ச் FHD+ 1080x2400 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு

    ஆக்டா கோர் மீடியாடெக் 6080 பிராசஸர்

    மாலி G57 MC2 GPU

    12 ஜி.பி. ரேம்

    256 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14

    டூயல் சிம் ஸ்லாட்

    108MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ரெட்மி நோட் 13R ப்ரோ 5ஜி மாடல் மிட்நைட் பிளாக், டைம் புளூ மற்றும் டான் கோல்டு போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 1999 யுவான்கள் இந்திய மதிப்பில் ரூ. 23 ஆயிரத்து 525 என்று நிர்ணயம் செய்யப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் நவம்பர் 20-ம் தேதி அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

    • என்ட்ரி லெவல் ஃபோல்டபில் ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறங்க இருப்பதாக தகவல்.
    • மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அதிக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும்.

    சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. சாம்சங் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் மிட் ரேன்ஜ் பிரிவில் நிர்ணயம் செய்யப்படும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், சாம்சங் சார்பில் இந்த தகவலுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.

    கேலக்ஸி ஃபோல்டு சீரிஸ் மூலம் சாம்சங் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் களமிறங்கியது. பிறகு கேலக்ஸி Z ஃபோல்டு மற்றும் Z ஃப்ளிப் சீரிஸ் வரை தொடர்ந்து புதிய மாடல்களை அறிமுகம் செய்தது. முதல் தலைமுறை கேலக்ஸி ஃபோல்டு மாடலின் விலை 1980 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

    பிறகு, இதன் தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி Z ஃபோல்டு 3 விலை சற்றே குறைக்கப்பட்டு 1799 டாலர்கள் என்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 3 விலை 999 டாலர்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது. சமீபத்திய கேலக்ஸி Z ஃபோல்டு 5 மற்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 5 மாடல்களின் விலை அதன் முந்தைய வெர்ஷனை போன்றே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

    2024 ஆண்டு துவக்கத்தில் சாம்சங் நிறுவனம் என்ட்ரி லெவல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் இதன் விலை 800 டாலர்கள் வரை நிர்ணயம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டது. இதன் மூலம் சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை அதிக வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்று கூறப்பட்டது.

    எனினும், சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவன செய்தி தொடர்பாளர் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார். "மிட் ரேன்ஜ் பிரிவில் நிலை நிறுத்தக்கூடிய அளவுக்கு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்வது தொடர்பாக எந்த திட்டமும் இல்லை, சமீபத்திய தகவல்களில் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை," என்று அவர் தெரிவித்தார்.

    • ஐகூ 12 ஸ்மார்ட்போன் பி.எம்.டபிள்யூ. எடிஷனில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது.
    • ஐகூ 12 ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    ஐகூ பிராண்டு தனது ஐகூ 12 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை ஏற்கனவே அறிவித்துவிட்டது. எனினும், இதன் சரியான வெளியீட்டு தேதி ரகசியமாகவே வைக்கப்பட்டு இருந்தது. தற்போது ஐகூ வெளியிட்டு இருக்கும் புதிய அறிவிப்பில் ஐகூ 12 ஸ்மார்ட்போன் இந்தியாவில் டிசம்பர் 12-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய ஐகூ 12 ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டு இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஐகூ 12 பெறும் என்று ஐகூ தெரிவித்து இருக்கிறது. இதுகுறித்த டீசரில் ஐகூ 12 ஸ்மார்ட்போன் பி.எம்.டபிள்யூ. எடிஷனில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இதுதவிர பிளாக் நிறத்திலும் கிடைக்கலாம்.

     

    ஐகூ 12 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    6.78 இன்ச் 2800x1260 பிக்சல் 1.5K LTPO AMOLED, 144Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட்

    ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர்

    அட்ரினோ 750 GPU

    12 ஜி.பி., 16 ஜி.பி. ரேம்

    256 ஜி.பி., 512 ஜி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா, ஆம்னிவிஷன், OIS

    50MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா

    64MP டெலிபோட்டோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ

    ஸ்டீரியோ ஸ்பீக்கர், ஹை-ஃபை ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.4

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    120 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் ஃபிளாஷ் சார்ஜிங்

    50 வாட் வயர்லெஸ் சார்ஜிங், ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

    • இந்த மாடலில் மேம்பட்ட லுக், பெரிய ஸ்கிரீன் வழங்கப்படலாம்.
    • ஐபோன் SE 4 எடை 6 கிராம்கள் வரை குறைவாக இருக்கும்.

    ஆப்பிள் நிறுவனம் 2020 ஆண்டில் தனது ஐபோன் SE சீரிசை அறிமுகம் செய்தது. பிறகு இதன் மேம்பட்ட வெர்ஷனாக ஐபோன் SE 3 கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு ஐபோன் SE மாடல் எதுவும் அறிமுகம் செய்யப்படவில்லை. எனினும், புதிய ஐபோன் SE மாடல் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

    அந்த வகையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஐபோன் SE 4 டிசைன் ஐபோன் 14-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், புதிய ஐபோன் SE 4 அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த மாடலாக அமையும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஐபோன் 14 சார்ந்த டிசைன் கொண்டிருக்கும் பட்சத்தில் இந்த மாடலில் மேம்பட்ட லுக், பெரிய ஸ்கிரீன் வழங்கப்படலாம்.

    கோப்புப் படம் 

    கோப்புப் படம் 

    அதன்படி ஐபோன் SE 4 மாடலில் ஃபிளாட் எட்ஜ் இன்றி, ஐபோன் 14-ஐ விட அளவில் சற்றே குறைந்திருக்கும் என்று தெரிகிறது. இத்துடன் டச் ஐ.டி. பட்டன் ஒன்றும் ஐபோன் SE 4 மாடலில் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதுதவிர யு.எஸ்.பி. சி போர்ட் மற்றும் ஆக்ஷன் பட்டன் வழங்கப்படுகிறது. இவை இரண்டும் ஐபோன் 15 ப்ரோ மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டவை ஆகும்.

    ஐபோன் 14-ஐ விட ஐபோன் SE 4 எடை 6 கிராம்கள் வரை குறைவாக இருக்கும் என்று தெரிகிறது. ஐபோன் SE 4 எடை 172 கிராம்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஐபோன் SE 4 மாடலில் ஒற்றை கேமரா செட்டப் வழங்கப்படுவதே இதற்கு காரணம் என்று தெரிகிறது. ஐபோன் 14 மாடலில் டூயல் கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சாம்சங் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
    • மடிக்கக்கூடிய சாதனங்களின் விலை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.

    மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் களமிறங்கிய முதல் முன்னணி நிறுவனங்களில் ஒன்று சாம்சங். தென் கொரியாவை சேர்ந்த சாம்சங் நிறுவனம் இதுவரை ஐந்து தலைமுறை கேலக்ஸி Z ஃபோல்டு ஃபிளாக்ஷிப் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. அந்த வகையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சாம்சங் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    இதுவரை சாம்சங் அறிமுகம் செய்திருக்கும் மடிக்கக்கூடிய சாதனங்களின் விலை அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அடுத்த ஆண்டு முதல் சாம்சங் நிறுவனம் சற்றே குறைந்த விலையில் மடிக்கக்கூடிய சாதனங்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

    இதேபோன்று சாம்சங் மட்டுமின்றி ஹூவாய் நிறுவனமும் குறைந்த விலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டிரென்ட்ஃபோர்ஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி சாம்சங் மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகம் செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    முன்னதாக வெளியான தகவல்களில் சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் ஃபேன் எடிஷனை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக கூறப்பட்டது. கேலக்ஸி Z ஃபோல்டு 6 மற்றும் கேலக்ஸி Z ஃப்ளிப் 6 மாடல்களின் ஃபேன் எடிஷன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

    • புதிய மாடல் ரெட்மி 12C ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
    • புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அமேசானில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.

    சியோமி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ரெட்மி 13C 4ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த ஸ்மார்ட்போனின் வெளியீட்டை அந்நிறுவனம் உறுதிப்படுத்தியது. மேலும் இதன் டிசைன் மற்றும் எந்தெந்த நிறங்களில் கிடைக்கும் என்ற தகவல்களும் வெளியாகி இருந்தது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 12C ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது. மேலும் இதன் அம்சங்கள் முந்தைய வெர்ஷனில் இருந்ததை விட மேம்பட்டு இருக்கும் என்று தெரிகிறது. ரெட்மி 13C வெளியீட்டு தேதி குறித்து சியோமி நிறுவனம் இதுவரை எந்த தகவலும் வழங்கவில்லை.

    இந்த நிலையில், ரெட்மி 13C ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. மேலும் ஸ்மார்ட்போனின் முழு சிறப்பம்சங்கள் மற்றும் விலை என அனைத்து விவரங்களும் இடம்பெற்று இருக்கிறது. அமேசான் வலைதள விவரங்களின் படி ரெட்மி 13C 4ஜி ஸ்மார்ட்போன் பிளாக் நிறத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது.

    அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.74 இன்ச் HD+ டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14, 4ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ரெட்மி 13C 16 வாட் வயர்டு சார்ஜிங் வசதி, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படுகிறது. இத்துடன் 3.5mm ஆடியோ ஜாக், கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. விலையை பொருத்தவரை ரெட்மி 13C மாடலின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 140.54 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 11 ஆயிரத்து 700 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் உருவாகி இருக்கிறது.
    • ரெட்மி 13C ஸ்மார்ட்போன் நான்கு நிறங்களில் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

    சியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி 13C ஸ்மார்ட்போன் அடுத்த சில நாட்களில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டுக்கு முன் இந்த ஸ்மார்ட்போன் அமேசான் வலைதளத்தில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இதில் புதிய ஸ்மார்ட்போனின் விலை, ரெண்டர்கள் மற்றும் அம்சங்கள் இடம்பெற்று இருக்கின்றன.

    அமேசான் வலைதள விவரங்களின் படி ரெட்மி 13C ஸ்மார்ட்போன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை 130 யூரோக்கள் மற்றும் 150 யூரோக்கள் என்று நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் மற்றும் நேவி புளூ என இரண்டு நிறங்களில் உருவாகி இருக்கிறது.

    சமீபத்தில் வெளியான தகவல்களில் புதிய ரெட்மி 13C ஸ்மார்ட்போன் பிளாக், புளூ, லைட் கிரீன் மற்றும் லைட் புளூ என நான்குவிதமான நிறங்களில் கிடைக்கும் என்று கூறப்பட்டது.

    ரெட்மி 13C எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    6.74 இன்ச் LCD ஸ்கிரீன், 720x1600 பிக்சல் HD+ ரெசல்யூஷன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர்

    அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14

    50MP பிரைமரி கேமர

    2MP டெப்த் மற்றும் மேக்ரோ லென்ஸ்

    8MP செல்ஃபி கேமரா

    4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1

    யு.எஸ்.பி. சி போர்ட்

    3.5mm ஆடியோ ஜாக்

    புதிய ரெட்மி 13C ஸ்மார்ட்போன் சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட போக்கோ C65 மாடலின் ரிபிராண்டெட் வெர்ஷன் ஆகும்.

    • ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போனிற்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி அறிவிப்பு.
    • தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டு பயன்படுத்தினால் 10 சதவீதம் கூடுதல் தள்ளுபடி.

    ஒப்போ நிறுவனம் பிப்ரவரி மாத வாக்கில் இந்திய சந்தையில் தனது ரெனோ 8T ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது 120Hz டிஸ்ப்ளே, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கு தற்போது 50 சதவீதம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    க்ரோமா வலைதளத்தில் ஒப்போ ரெனோ 8T ஸ்மார்ட்போனிற்கு 67.27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரூ. 38 ஆயிரத்து 999 விலையில் அறிமுகமான ஒப்போ ரெனோ 8T ஸ்மார்ட்போன் ஆன்லைனில் ரூ. 29 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ. 12 ஆயிரத்து 765 விலையில் கிடைக்கிறது.

     

    இந்த விலை தவிர ஐ.டி.எஃப்.சி. வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது 10 சதவீதம் வரை கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஒப்போ ரெனோ 8T ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரியுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சன்ரைஸ் கோல்டு மற்றும் மிட்நைட் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    ஒப்போ ரெனோ 8T அம்சங்கள்:

    6.7 இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

    குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

    8 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி. மெமரி

    108MP பிரைமரி கேமரா

    2MP டெப்த் கேமரா

    2MP ஜூம் கேமரா

    32MP செல்ஃபி கேமரா

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த கலர் ஒ.எஸ். 13

    4800 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ×