search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    நத்திங் நிறுவனத்தின் குறைந்தவிலை ஸ்மார்ட்போன்.. லீக் ஆன அம்சங்கள்..
    X

    கோப்புப்படம் 

    நத்திங் நிறுவனத்தின் குறைந்தவிலை ஸ்மார்ட்போன்.. லீக் ஆன அம்சங்கள்..

    • நத்திங் போன் 2a அம்சங்களும் இடம்பெற்று இருந்தன.
    • முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட நாடுகளில் மட்டும் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

    நத்திங் நிறுவனத்தின் போன் 2a மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது நத்திங் நிறுவனத்தின் மூன்றாவது ஸ்மார்ட்போன் மாடல் ஆகும். புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் சில வாரங்களுக்கு முன்பு வெளியாகின. இத்துடன் நத்திங் போன் 2a அம்சங்களும் இடம்பெற்று இருந்தன.

    அதன்படி புதிய நத்திங் போன் 2a மாடலில் 6.7 இன்ச் AMOLED பேனல், 1084x2412 பிக்சல் ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ், 32MP சென்சார் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதில் உள்ள டிஸ்ப்ளேவை BOE மற்றும் Visionox உற்பத்தி செய்யும் என்று கூறப்படுகிறது.


    மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இதன் பிளாக் நிற வேரியண்ட் ரூப்ரேன் பிளாக் என்றும் வைட் நிற வேரியண்ட் அசுனிம் வைட் வால்பேப்பர்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    முதற்கட்டமாக நத்திங் போன் 2a மாடல் இந்தியா, ஜப்பான், ஐரோப்பா மற்றும் சர்வதேச சந்தைகளில் விற்பனை செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    அடுத்த ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் "நத்திங் டு சீ" என்ற நிகழ்வுக்கு நத்திங் தயாராகி வருகிறது. எனினும், இந்த நிகழ்வில் என்னென்ன அறிவிப்புகள் வெளியாகும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

    Next Story
    ×