search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    ஜனவரியில் புது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்.. ஒன்பிளஸ் 12R வெளியீட்டு தேதி அறிவிப்பு
    X

    ஜனவரியில் புது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்.. ஒன்பிளஸ் 12R வெளியீட்டு தேதி அறிவிப்பு

    • ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன்.
    • ஒன்பிளஸ் 12R இரண்டு நிறங்களில் கிடைக்கும்.

    ஒன்பிளஸ் நிறுவனம் ஒருவழியாக தனது ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதியை அறிவித்துவிட்டது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள போஸ்டரில் ஒன்பிளஸ் 12 மற்றும் ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன்கள் ஜனவரி 23-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஒன்பிளஸ் 12R மாடல் அந்நிறுவனம் ஜனவரி 4-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யவிருக்கும் ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன் ஐயன் கிரே மற்றும் கூல் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் இடதுபுறத்தில் அலர்ட் ஸ்லைடர் வழங்கப்படுகிறது.


    சீனாவை தொடர்ந்து ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன் இந்தியா, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முன்னதாக R பிராண்டிங் கொண்ட ஸ்மார்ட்போன்களை ஒன்பிளஸ் இந்தியாவில் மட்டுமே விற்பனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 3 ஸ்மார்ட்போன் சேன்ட் கோல்டு நிறத்தில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 8 ஜி.பி. / 16 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 100 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    ஒன்பிளஸ் 12R ல்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஒ.எஸ். 14 கொண்டிருக்கலாம். இத்துடன் 6.78 இன்ச் OLED பேனல், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ சென்சார், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    Next Story
    ×