என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    அறிமுகமாகி ஒரு மாசம் முழுசா முடியல.. வேற லெவல் சலுகையில் ரியல்மி போன்
    X

    அறிமுகமாகி ஒரு மாசம் முழுசா முடியல.. வேற லெவல் சலுகையில் ரியல்மி போன்

    • ஸ்மார்ட்போனிற்கு ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
    • வங்கி சார்ந்த கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    ரியல்மி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரியல்மி C67 5ஜி ஸ்மார்ட்போனிற்கு அசத்தல் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் அதிவேகமான 33 வாட் சூப்பர் வூக் சார்ஜிங் வசதி, 4 ஜி.பி. ரேம், 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் கொண்ட டைனமிக் டிஸ்ப்ளே போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

    இந்திய சந்தையில் ரூ. 13 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி C67 5ஜி மாடல் தற்போது விசேஷ சலுகைகள் மற்றும் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. அந்த வகையில், இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 1000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் வங்கி சார்ந்த கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    பயனர்கள் ஜனவரி 1-ம் தேதியில் இருந்து ஜனவரி 31-ம் தேதிக்குள் ரியல்மி C67 5ஜி ஸ்மார்ட்போன் வாங்கும் போது ரூ. 1000 தள்ளுபடியுடன், தேர்வு செய்யப்பட்ட வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என்று மாறிவிடும்.


    ரியல்மி C67 5ஜி அம்சங்கள்:

    6.72 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ ஸ்கிரீன்

    ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6100+ பிராசஸர்

    Arm மாலி - G57 MC2 GPU

    4 ஜி.பி., 6 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யு.ஐ. 4.0

    50MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

    2MP போர்டிரெயிட் கேமரா

    8MP செல்ஃபி கேமரா

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    3.5mm ஆடியோ ஜாக், ஹை-ரெஸ் ஆடியோ

    டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டகி

    33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    Next Story
    ×