search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    வெறித்தனமான பிராசஸர்.. பெரிஸ்கோப் கேமரா.. சம்பவத்திற்கு தயாரான ரியல்மி..
    X

    வெறித்தனமான பிராசஸர்.. பெரிஸ்கோப் கேமரா.. சம்பவத்திற்கு தயாரான ரியல்மி..

    • ரியல்மி GT 5 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்பட்டது.
    • டெலிபோட்டோ கேமரா சென்சார் கொண்டிருக்கும் என்று தகவல்.

    ரியல்மி நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் GT 5 ப்ரோ வெளியீட்டு தேதி ஒருவழியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது அந்நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி GT 5 சீரிசில் இணையும் என்று தெரிகிறது. ரியல்மி GT 5 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்பட்ட நிலையில், புதிய மாடலில் மேம்பட்ட பிராசஸர் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    புதிய GT ஸ்மார்ட்போனிற்காக பல்வேறு டீசர்களை ரியல்மி நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஸ்மார்ட்போனின் ஏராளமான அம்சங்கள் ஏற்கனவே அறிந்ததே. தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் டீசர்களில் புதிய ரியல்மி GT 5 ப்ரோ ஸ்மாரட்போன் டிசம்பர் 7-ம் தேதி சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. முதற்கட்டமாக இந்த மாடல் சீன சந்தையில் மட்டும் அறிமுகம் செய்யப்படுகிறது.

    கோப்புப்படம்

    இத்துடன் வெளியான மற்றொரு டீசரில், புதிய ரியல்மி GT 5 ப்ரோ ஸ்மார்ட்போன் டெலிபோட்டோ கேமரா சென்சார் கொண்டிருக்கும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் ரியல்மி GT 5 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 50MP பிரைமரி கேமரா, OIS, EIS வசதிகள் வழங்கப்படலாம்.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை ரியல்மி GT 5 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் 1264x2780 பிக்சல் AMOLED டிஸ்ப்ளே, மூன்று சென்சார்கள் கொண்ட கேமரா யூனிட், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 5400 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 100 வாட் வயர்டு, 50 வாட் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது.

    முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி GT 5 மாடலில் 150 வாட் மற்றும் 240 வாட் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இவற்றில் முறையே 5240 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 4600 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×