search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    அந்த தொல்லை இருக்காது.. கூடவே சக்திவாய்ந்த பிராசஸர்.. மிரட்டும் புது ஸ்மார்ட்போன்
    X

    அந்த தொல்லை இருக்காது.. கூடவே சக்திவாய்ந்த பிராசஸர்.. மிரட்டும் புது ஸ்மார்ட்போன்

    • ஃபன்டச் ஒ.எஸ். 14 சிறப்பான அனுபவத்தை வழங்கும்.
    • இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

    ஐகூ நிறுவனத்தின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஐகூ 12 பெயரில் அறிமுகமாகும் புதிய ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. இத்துடன் ஐகூ 12 ப்ரோ மாடலும் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகமாகும் நிலையில், இந்த மாடலில் புளோட்வேர் எனப்படும் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலிகள் எதுவும் இடம்பெற்றிருக்காது என தெரியவந்துள்ளது. இந்த தகவலை ஐகூ இந்தியா தலைமை செயல் அதிகாரி நிபுன் மர்யா தெரிவித்து இருக்கிறார். இத்துடன் புதிய ஸ்மார்ட்போனில் ஃபன்டச் ஒ.எஸ். 14 சிறப்பான அனுபவத்தை வழங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதுதவிர புதிய ஐகூ 12 ஸ்மார்ட்போனுக்கு மூன்று ஆண்டுகள் ஆண்ட்ராய்டு அப்டேட்கள், நான்கு ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி பேட்ச்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆண்ட்ராய்டு 14 ஒ.எஸ். கொண்ட பிக்சல் அல்லாத முதல் ஸ்மார்ட்போன் இது ஆகும். இத்துடன் இந்தியாவில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸருடன் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போனும் இது ஆகும்.

    ஐகூ 12 அம்சங்கள்:

    6.78 இன்ச் 1.5K LTPO OLED டிஸ்ப்ளே, 144 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட்

    குவால்காம் ஸ்னாப்டராகன் 8 ஜென் 3 பிராசஸர்

    அட்ரினோ GPU

    அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம்

    1 டி.பி. வரையிலான மெமரி

    ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ஒரிஜின் ஒ.எஸ். 4

    இன்-ஸ்கிரீன் செல்ஃபி கேமரா

    50MP பிரைமரி கேமரா, OIS

    50MP அல்ட்ரா வைடு லென்ஸ்

    64MP பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா

    16MP செல்ஃபி கேமரா

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    120வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

    Next Story
    ×