என் மலர்tooltip icon

    கணினி

    டி.சி.எல். நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த புதுவித தொழில்நுட்பத்தை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 #TCL



    டி.சி.எல். கம்யூனிகேஷன் நிறுவனம் காப்புரிமை பெற்ற தனது டிராகன்ஹின்ஜ் தொழில்நுட்பத்தை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது.

    இத்துடன் அந்நிறுவனம் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட சாதனத்தையும் அறிமுகம் செய்தது. டி.சி.எல். மடிக்கக்கூடிய மொபைல் சாதனங்களில் மடிக்கக்கூடிய AMOLED டிஸ்ப்ளேக்களை பயன்படுத்த இருக்கிறது. இந்த டிஸ்ப்ளேக்களை சிசாட் எனும் நிறுவனம் வழங்குகிறது.



    இந்நிறுவனம் டி.சி.எல். கம்யூனிகேஷன் நிறுவன குழுமத்தை சேர்ந்தது. சிசாட் தற்சமயம் உருவாக்கி இருக்கும் டிராகன் ஹின்ஜ் தொழில்நுட்பம் சாதனங்களை பல்வேறு விதங்களில் பயன்படுத்துவதற்கு ஏற்ப மடிக்கவும், வளைக்கவும் முடியும். இது எதிர்கால மடிக்கக்கூடிய சாதனங்களை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இருக்கும் என தெரிகிறது.

    டி.சி.எல். கம்யூனிகேஷன் நிறுவனம் தனது முதல் டிராகன் ஹின்ஜ் கான்செப்ட் கொண்ட சாதனங்களை வரும் நாட்களில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதைத்தொடர்ந்து நுகர்வோர் பயன்படுத்தக்கூடிய மடிக்கக்கூடிய சாதனங்களை 2020 ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்ய டி.சி.எல். திட்டமிட்டுள்ளது.
    ஹூவாய் நிறுவனம் 2019 மேட்புக் எக்ஸ் ப்ரோ லேப்டாப் மாடலை சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்துள்ளது. #MWC2019 #MateBookXPro



    ஹூவாய் நிறுவனம் சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2019 விழாவில் புதிய மேட்புக் எக்ஸ் ப்ரோ லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த லேப்டாப்பின் மேம்பட்ட மாடல் ஆகும். 

    புதிய மேட்புக் எக்ஸ் ப்ரோ 2019 மாடலில் 13.9 இன்ச் 3K LTPS ஃபுல்வியூ டிஸ்ப்ளே, 14.6 அளவில் மெல்லிய மெட்டல் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் 8 ஆம் தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர்கள் மற்றும் NVIDIA GeForce MX250 GPU கிராஃபிக்ஸ் வசதியுடன் வருகின்றது.

    புதிய லேப்டாப்பின் பவர் பட்டனில் ஹூவாய் கைரேகை சென்சார் வழங்கியிருக்கிறது. இத்துடன் இந்த லேப்டாப்பில் அதிவேக வைபை வசதி, ஹூவாய் ஷேர் 3.0 தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் கொண்டு ஹூவாய் ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்களிடையே புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் டாக்யூமென்ட்களை அதிவேகமாகவும், மிக எளிமையாகவும் பரிமாற்றம் செய்ய முடியும். 



    ஹூவாய் மேட்புக் எக்ஸ் ப்ரோ 2019 சிறப்பம்சங்கள்:

    - 13.9 இன்ச் 3000x2000 பிக்சல் டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ்
    - 8 ஆம் தலைமுறை இன்டெல் கோர் i5-8265U / i7-8565U பிராசஸர்
    - 2 ஜி.பி. GDDR5 NVIDIA GeForce MX250 GPU 
    - இன்டெல் UHD கிராஃபிக்ஸ் 620
    - 8 ஜி.பி. / 16 ஜி.பி. LPDDR3 2133MHz ரேம்
    - 512 ஜி.பி. / 1000 ஜி.பி. NVMe PCIe எஸ்.எஸ்.டி.
    - விண்டோஸ் 10 ஹோம்
    - 1 எம்.பி. ஹெச்.டி. வெப்கேமரா
    - பவர் பட்டனில் கைரேகை சென்சார்
    - வைபை 802.11ac 2.4 GHz 300 Mbps, 5 GHz 1733 Mbps, 2 x 2 MIMO
    - ப்ளூடூத் 5.0, யு.எஸ்.பி. 3.0 போர்ட், ஹெச்.டி.எம்.ஐ., 2 x யு.எஸ்.பி. டைப்-சி
    - குவாட் டிஜிட்டல் மைக்ரோபோன்கள்
    - குவாட் ஸ்பீக்கர்கள், டால்பி அட்மாஸ்
    - 57.4 Wh பேட்டரி

    ஹூவாய் மேட்புக் எக்ஸ் ப்ரோ 2019 லேப்டாப் மிஸ்டிக் சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை 1599 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,28,820) என்றும் டாப் எண்ட் வேரியண்ட் விலை 1999 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,61,050) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஃபேஸ்புக்குடன் இணைந்து செயல்படும் பல்வேறு செயலிகள் பயனரின் தனிப்பட்ட தகவல்களை ஃபேஸ்புக்கிற்கு வழங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. #Facebook #Apps



    தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வெளியிட்டிருக்கும் சமீபத்திய தகவல்களில் ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு பல்வேறு செயலிகள் பயனரின் விவரங்களை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் அக்கவுண்ட் இல்லாதவர்களின் விவரங்களையும் ஃபேஸ்புக் பெற்று வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பயனரின் போன் மற்றும் இணைய நடவடிக்கைகளை சேகரிக்க வழி செய்யும் செயலியை இன்ஸ்டால் செய்ய ஃபேஸ்புக் இளம் பயனர்களுக்கு பணம் கொடுத்திருந்தது. இதனால் ஆப்பிள் நிறுவனம் ஃபேஸ்புக்கிற்கு வழங்கியிருந்த சிறப்பு அனுமதிகளில் சிலவற்றை திரும்ப பெற்றது. 

    வெளியீட்டு முன் பணியாளர்களின் மத்தியல் சோதனை செய்யப்பட வேண்டிய அம்சம் மூலம் செயலியை இடையூறு செய்து ஃபேஸ்புக் ஆப்பிள் நிறுவன விதிகளை மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆப்பிள் தெரிவித்தது. ஆப்பிள் இயங்குதளத்தில் உடல்நலம் மற்றும் ரியல் எஸ்டேட் செயலிகள் ஃபேஸ்புக்கிற்கு பயனர் விவரங்களை அனுப்பியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.



    இந்த செயலிகள் ஃபேஸ்புக்கின் மென்பொருள் வளர்ச்சி முணையத்தின் (எஸ்.டி.கே.) வழியே பயனர் விவரங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த முணையம் செயலிகளில் ஒருங்கிணைக்கப்பட்டிருக்கிறது. ஃபேஸ்புக்கின் எஸ்.டி.கே.வில் ஆப் டெவலப்பர்களை பயனர் டிரெண்ட்களை அறிந்து கொள்ள உதவுகிறது. 

    இவைதவிர ஃபேஸ்புக்கிற்கு மிகமுக்கிய விவரங்களை வழங்கிய செயலிகள் அனைத்தும் கஸ்டம் ஆப் ஈவென்ட்களை பயன்படுத்தி இருப்பது தெரியவந்துள்ளது. 

    வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ஃபேஸ்புக் மீது விசாரணை செய்ய நியூ யார்க் நகர நிதி துறைக்கு அரசு சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோக்ரூப்டாக் எனும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. #RelianceJio #JioGroupTalk



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது சேவையை மிகவும் குறைந்த விலையில் வழங்கி, டெலிகாம் சந்தையில் பல்வேறு மாற்றங்களுக்கு வித்திட்டது. டெலிகாம் சேவையை தவிர பல்வேறு இலவச செயலிகளையும் ஜியோ வழங்கி வருகிறது.

    ஜியோ தனது பயனர்களுக்கு ஜியோ சினிமா மற்றும் ஜியோ டி.வி. உள்ளிட்டவற்றை வழங்கியதை தொடர்ந்து தற்சமயம் ஜியோக்ரூப்டாக் எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியை கொண்டு ஜியோ பயனர்கள் க்ரூப் கான்ஃபெரன்ஸ் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.

    ஏற்கனவே கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் இந்த செயலியை பயனர்கள் தங்களது ஜியோ நம்பர் கொண்டு பயன்படுத்த முடியும். சில நாட்களுக்கு மட்டும் ஜியோக்ரூப்டாக் செயலி சோதனை செய்யப்படுகிறது. இந்த செயலியை கொண்டு ஜியோ சேவையை பயன்படுத்தாதவர்களுடனும் பேச முடியும்.



    கான்ஃபெரன்ஸ் அழைப்புகளை மேற்கொள்ளும் போது பயனர்கள் எப்போது மற்றவர்களை சேர்க்க வேண்டும் என்றும், எப்போது தனியாக மியூட் செய்ய வேண்டும் என்றும் க்ரூப் மியூட் அல்லது மீண்டும் அவர்களை இணைப்பது போன்றவற்றை மேற்கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது.

    இந்த செயலியில் லெக்ச்சர் எனும் மோட் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோட் பயன்படுத்தி, பயனர்கள் இதர க்ரூப் கான்ஃபெரன்ஸ் அழைப்புகளில் இருப்பவர்களை மியூட் செய்ய வேண்டும். தற்சமயம் இந்த செயலியை கொண்டு ஆடியோ அழைப்புகளை மட்டும் மேற்கொள்ள முடியும். விரைவில் இந்த செயலியை கொண்டு வீடியோ கால் அல்லது க்ரூப் சாட் செய்ய முடியும்.

    ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 28 கோடியாக இருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் ஜியோ நிறுவனம் சுமார் 5.56 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதாக மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஃபிட் சாதனம் பல்வேறு அதிநவீன உடல்நலன் சார்ந்த அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #GalaxyFit



    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் தவிர, கேலக்ஸி ஃபிட் மற்றும் ஃபிட் இ சாதனங்களையும் அறிமுகம் செய்துள்ளது. புதிய சாதனம் அனைத்து தரப்பிலான உடல்நல ஆர்வலர்களுக்குமானது என சாம்சங் அறிவித்துள்ளது. இந்த சாதனம் இதனை அணிந்திருப்பவர் நடப்பது, ஓடுவது, பைக்கில் செல்வது போன்ற நடவடிக்கைகளை தானாக கண்டறிந்து அதற்கான விவரங்களை சேகரிக்கும்.

    இத்துடன் 90 வெவ்வேறு நடவடிக்கைகளை சாம்சங் ஹெல்த் செயலியில் இருந்து தானாகவும் தேர்வு செய்து கொள்ளலாம். பயனர் தேர்வு செய்ததை வைத்து கேலக்ஸி ஃபிட் தானாக உடற்பயிற்சியை டிராக் செய்ய துவங்கிடும். இத்துடன் மேம்பட்ட உறக்க கண்காணிப்பு வசதியும், மன அழுத்தத்தை கண்காணிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    கேலக்ஸி ஃபிட் டிராக்கர் மிக எளிய மற்றும் பயன்தரும் யு.எக்ஸ். கொண்டிருக்கிறது. டிராக்கர் சேகரிக்கும் விவரங்களை மிக துல்லியமாக ஸ்மார்ட்போனில் பெறும் வசதி வழங்கப்பட்டுள்ளது. பயண சமயங்களில் வெளியூர்களுக்கு ஏற்ற நேரத்தை வழங்க இரு கடிகார வசதி வழங்கப்பட்டுள்ளது.



    கேலக்ஸி ஃபிட் 0.95 இன்ச் 120x240 பிக்சல் ரெசல்யூஷன் ஃபுல் கலர் AMOLED டிஸ்ப்ளே, 512 கே.பி. ரேம், 32 எம்.பி. ரோம் வழங்கப்பட்டுள்ளது.  இதன் கனெக்டிவிட்டி அம்சங்களை பொருத்தவரை ப்ளூடூத், ஹெச்.ஆர்.எம்., அக்செல்லோமீட்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

    70 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்பட்டிருக்கும் கேலக்ஸி ஃபிட் 5 ATM வாட்டர் ரெசிஸ்டண்ட், MIL-STD 810G ராணுவ தரம் கொண்டிருக்கிறது. இரு ஆக்டிவிட்டி டிராக்கர்களும் ஆண்ட்ராய்டு 5.0 மற்றும் அதற்கும் அதிக இயங்குதளங்களில் இணைந்து வேலை செய்யும். 

    கேலக்ஸி ஃபிட் பிளாக் மற்றும் சில்வர் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 99.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.7,108) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை மே 31 ஆம் தேதி துவங்குகிறது. கேலக்ஸி ஃபிட் இ மாடல் கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை மற்றும் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் கேலக்ஸி பட்ஸ் என்ற பெயரில் வயர்லெஸ் இயர்பட்களை அறிமுகம் செய்துள்ளது. #GalaxyBuds



    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பட்ஸ் வயர்லெஸ் இயர்பட்ஸ் கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மற்றும் கேலக்ஸி ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களுடன் புதிய வயர்லெஸ் பட்ஸ்-ம் அறிமுகமாகி இருக்கிறது.

    புதிய கேலக்ஸி பட்ஸ் இயர்போன்கள் அடுத்த தலைமுறை வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலாக இருக்கிறது. இது 2016 ஆம் ஆண்டு சாம்சங் அறிமுகம் செய்த கியர் ஐகான் எக்ஸ் மாடலின் மேம்பட்ட மாடலாக அறிமுகமாகி இருக்கிறது. இது முந்தைய மாடலை விட 30 சதவிகிதம் சிறியதாக உருவாக்கப்பட்டுள்ளது.



    சாம்சங் கேலக்ஸி பட்ஸ் ஆப்பிளின் ஏர்பாட்ஸ் போன்று சார்ஜிங் கேசுடன் வருகிறது. இது சாம்சங்கின் பவர்ஷேர் அம்சத்துடன் வருகிறது. இதனால் இயர்பட்களை புதிய கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனை கொண்டே சார்ஜ் செய்ய முடியும். கேலக்ஸி பட்ஸ் இயர்போன்கள் ஏ.கே.ஜி. மூலம் டியூன் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் இதில் பிக்ஸ்பி வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதியும் வழங்கப்படுகிறது.

    ஏ.கே.ஜி. தவிர புதிய கேலக்ஸி பட்ஸ் இயர்போனில் மேம்பட்ட ஆம்பியண்ட் சவுண்ட் வழங்கப்பட்டிருக்கிறது. இது பயனரின் சுற்றுப்புறத்தில் இருக்கும் ஒலியை தேவைப்படும் சூழலில் மட்டும் கேட்க வழி செய்யும். இத்துடன் அடாப்டிவ் டூயல் மைக்ரோபோன் தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்கள் எவ்வித சூழல்களில் பேசும் போதும், மறுமுனையில் இருப்போருக்கு மிக தெளிவாக கேட்கும். 

    சாம்சங் கேலக்ஸி பட்ஸ் ப்ளூடூத் 5.0 கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. இதில் 58 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 6 மணி நேரத்திற்கு தொடர்ச்சியாக பயன்படுத்த முடியும். இதன் சார்ஜிங் கேசில் 252 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இந்த கேஸ் 15 நிமிடங்களுக்கு சார்ஜ் செய்தால் 1.7 மணி நேரம் பயன்படுத்தலாம். 



    சார்ஜிங் கேஸ் யு.எஸ்.பி. டைப்-சி கனெக்டிவிட்டி கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு 5.0 அல்லது அதற்கும் அதிக வெர்ஷன்களை கொண்டு இயங்கும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் கேலக்ஸி கேலக்ஸி பட்ஸ் பயன்படுத்தலாம். 

    புதிய கேலக்ஸி பட்ஸ் விலை 129 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.9,200) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தேர்வு செய்யப்பட்ட சந்தைகளில் மட்டும் மார்ச் 8 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. கேலக்ஸி பட்ஸ் கருப்பு, வெள்ளை மற்றும் மஞ்சள் என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது.
    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது. #BSNL



    பி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.298 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.298 விலையில் அறிவிக்கப்பட்டிருக்கும் புதிய சலுகையில் வாய்ஸ் கால் மற்றும் டேட்டா பலன்கள் வழங்கப்படுகிறது. புதிய சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.297 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது.

    போட்டி நிறைந்த சந்தையில் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள பி.எஸ்.என்.எல். நிறுவனம் புதிய சலுகையை அறிவித்திருக்கிறது. முன்னதாக போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு இலவச தினசரி டேட்டா பலன்களை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டித்தது. 

    புதிய ரூ.298 சலுகை பி.எஸ்.என்.எல். சிறப்பு வவுச்சராக அறிவிக்கப்பட்டிருப்பதாக டெலிகாம் டாக் தெரிவித்திருக்கிறது. இந்த சலுகையில் 54 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 40kbps ஆக குறைக்கப்படும் இந்த சலுகையில் தினமும் 100 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது.



    புதிய ரூ.298 சலுகை ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.299 சலுகைக்கு போட்டியாக அமைந்திருக்கிறது. ரூ.299 சலுகையில் ரிலையன்ஸ் ஜியோ 28 நாட்களுக்கு 84 ஜி.பி. டேட்டா வழங்குகிறது. இதில் பயனர்களுக்கு தினமும் 3 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி வழங்கப்படுகிறது.

    ரிலையன்ஸ் ஜியோ அதிவேக 4ஜி சேவையை வழங்கி வரும் நிலையில், பி.எஸ்.என்.எல். 3ஜி மற்றும் 2ஜி சேவையை வழங்குகிறது. வோடபோன் நிறுவனம் ரூ.255 விலையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 2 ஜி.பி. டேட்டா, தினமும் 100 எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
    ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு இருப்பது சமீபத்திய காப்புரிமைகளில் தெரியவந்துள்ளது. #Apple #foldablesmartphone



    சாம்சங், சியோமி, ஹூவாய் போன்ற நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. அந்நிறுவனம் பதிவு செய்திருந்த காப்புரிமையில் இந்த தகவல் கிடைத்துள்ளது.

    2011 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு பின் 2016 ஆம் ஆண்டு அப்டேட் செய்யப்பட்ட வடிவங்களில் மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே கொண்ட ஐபோனினை ஆப்பிள் உருவாக்க இருப்பதாக தெரிகிறது. பிப்ரவரி 20 ஆம் தேதி சாம்சங் நிறுவனம் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    புதிய கேலக்ஸி எஸ்10 சீரிஸ் மாடல்களுடன் சாம்சங் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. ஆப்பிள் காப்புரிமையின் படி புதிய போன் பாதியாக மடிக்கக்கூடியதாக இருக்கும் என தெரிகிறது. முன்னதாக இதேபோன்ற வடிவமைப்பு மோட்டோரோலா பதிவு செய்திருந்த காப்புரிமையில் காணப்பட்டது.



    புகைப்படம் நன்றி: uspto

    சாம்சங் மற்றும் சியோமி நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் விரிக்கப்பட்ட நிலையில், டேப்லெட் போன்று பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் நிலையில், ஆப்பிள் வடிவமைப்பில் வளையக்கூடிய OLED டிஸ்ப்ளே போனினை வளையச் செய்யும் என தெரிகிறது. வரைபடங்களில் மடிக்கக்கூடிய ஸ்கிரீன்கள் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் மடிக்கக்கூடியதாக இருக்கிறது. 

    அந்த வகையில் புதிய சாதனத்தை மேக்புக் அல்லது ஐபேட் போன்று இருக்கும் என தெரிகிறது. ஆப்பிள் பதிவு செய்திருக்கும் காப்புரிமைகள் வெளியாகியிருப்பதால் மடிக்கக்கூடிய ஐபோன்கள் இந்த ஆண்டே அறிமுகமாகும் என எதிர்பார்க்க முடியாது. ஆப்பிள் மடிக்கக்கூடிய சாதனம் பற்றிய புதிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகலாம்.
    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்5இ மற்றும் கேலக்ஸி டேப் ஏ 10.1 டேப்லெட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #Samsung



    சாம்சங் நிறுவனம் இரண்டு புதிய ஆண்ட்ராய்டு டேப்லெட்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய டேப்லெட்கள் கேலக்ஸி டேப் ஏ 10.1 மற்றும் கேலக்ஸி டேப் எஸ்5இ என அழைக்கப்படுகின்றன. சாம்சங் தயாரிப்புகளில் மிக மெல்லிய டேப்லெட் மாடலாக கேலக்ஸி டேப் எஸ்5இ உருவாகியிருக்கிறது.

    மெல்லிய பெசல்களுடன் மெட்டாலிக் பாடி கொண்டிருக்கும் கேலக்ஸி டேப் எஸ்5இ வெறும் 5.5 எம்.எம். அளவு தடிமனாக இருக்கிறது. கேலக்ஸி டேப் எஸ்5இ டேப்லெட் AMOLED டிஸ்ப்ளே, எல்.டி.இ. கனெக்டிவிட்டி மற்றும் இன்டகிரேட்டெட் டெக்ஸ் வசதி உள்ளிட்டவை கொண்டிருக்கிறது. இதன் விற்பனை இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் துவங்குகிறது.

    சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 10.1 மாடல் தற்சமயம் ஜெர்மனியில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் மற்ற சந்தைகளில் அறிமுகமாவது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை. 



    கேலக்ஸி டேப் எஸ்5இ சிறப்பம்சங்கள்:

    - 10.5 இன்ச் WQXGA 2560x1600 பிக்சல் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஸ்னாப்டிராகன் 670 பிராசஸர்
    - அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம்
    - 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 13 எம்.பி. பிரைமரி கேமரா
    - 8 எம்.பி. செல்ஃபி கேமரா
    - டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம்
    - யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்
    - ஆண்ட்ராய்டு 9 பை
    - பிக்ஸ்பி 2.0
    - 7040 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்5இ மாடல் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இருவித மாடல்களில் கிடைக்கிறது. இதன் விலை வைபை மாடல் விலை 399.99 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.28,500) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் எல்.டி.இ. வெர்ஷன் விலை பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.



    கேலக்ஸி டேப் ஏ 10.1 சிறப்பம்சங்கள்:

    - 10.1 இன்ச் 1920x1200 பிக்சல் டிஸ்ப்ளே
    - எக்சைனோஸ் 7904 பிராசஸர்
    - 3 ஜி.பி. ரேம்
    - 32 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - 8 எம்.பி. பிரைமரி கேமரா
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
    - டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம்
    - 6150 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 10.1 டேப்லெட் வைபை மற்றும் எல்.டி.இ. மாடல்களில் கிடைக்கிறது. இதன் வைபை மாடல் விலை 210 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.17,000) என்றும் எல்.டி.இ. வேரியண்ட் விலை 270 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.22,000) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை தொடர்ந்து ஐபோன்களுக்கும் அறிமுகமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #WhatsAppBusiness



    வாட்ஸ்அப் நிறுவனம் தனது பிஸ்னஸ் செயலியை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. சிறு வியாபாரம் செய்யும் நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும் நோக்கில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் துவங்கப்பட்டது. இந்த செயலியை கொண்டு பயனர்கள் தங்களது வியாபார விவரங்களுடன் சொந்தமாக ப்ரோஃபைல்களை உருவாக்கிக் கொள்ளலாம்.

    வாட்ஸ்அப் பிஸ்னஸ் ப்ரோஃபைல்களில் வாடிக்கையாளர்கள் தங்களது வியாபாரத்தின் மின்னஞ்சல் அல்லது முகவரி மற்றும் வலைதள விவரங்களை பகிர்ந்து கொள்ளலாம். எனினும், இதுவரை இந்த செயலி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.

    தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்திலும் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து WaBetaInfo வெளியிட்டிருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஐ.ஓ.எஸ். பதிப்பின் பீட்டா வெர்ஷன் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: wabetainfo

    வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஐ.ஓ.எஸ். பீட்டா செயலி தற்சமயம் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த செயலியில் பல்வேறு முக்கிய அம்சங்கள் மற்றும் வெவ்வேறு நிறங்களை கொண்ட பின்னணி புகைப்படங்களை தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் தெரிகிறது.

    புதிய வசதிகளை பொருத்தவரை க்விக் ரிப்ளைக்கள், ஆட்டோமேட்டெட் கிரீட்டிங், அவே மெசேஜ்கள் மற்றும் ரெசிபியண்ட்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் பிஸ்னஸ் ஆப் ஐ.ஓ.எஸ். 8 மற்றும் அதற்கும் அதிக இயங்குதளங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. 

    வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியை இன்ஸ்டால் செய்ததும், வாட்ஸ்அப் பிஸ்னஸ் மூலம் வியாபார நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள எளிய, பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை வாய்ந்த ஒன்றாக இருக்கும் என்ற குறுந்தகவல் கிடைக்கிறது. இத்துடன் வாட்ஸ்அப் மெசஞ்சரில் இருக்கும் சாட் ஹிஸ்ட்ரியை வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் மைக்ரேட் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய ரக்கட் டேப்லெட் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. புதிய டேப்லெட் எஸ் பென்னுடன் கிடைக்கிறது. #GalaxyTabActive2



    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 டேப்லெட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய டேப்லெட் MIL-STD-810 தரச்சான்று பெற்றிருக்கிறது. இதில் 1.2 எம் ஆண்டி-ஷாக் இன்பாக்ஸ் ப்ரோடெக்டிவ் கவர், IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

    புதிய டேப்லெட்டில் நாக்ஸ் (Knox) பாதுகாப்பு தளம் வழங்கப்பட்டிருப்பதால், இதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள முடியும். கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 டேப்லெட்டில் கைரேகை சென்சாருடன் பயோமெட்ரிக் ஆத்தென்டிகேஷன் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

    இதனுடனஅ எஸ் பென் ஸ்டைலஸ் சப்போர்ட் வழங்கப்பட்டிருக்கிறது. வைபை மற்றும் 4ஜி என இருவித வெர்ஷன்களில் கிடைக்கும் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 டேப்லெட் 4450 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



    சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 சிறப்பம்சங்கள்:

    - 8.0 இன்ச் 1280x800 பிக்சல் WXGA TFT டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் சாம்சங் எக்சைனோஸ் 7870 பிராசஸர்
    - மாலி T830 GPU
    - 3 ஜி.பி. ரேம்
    - 16 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1 நௌக்கட்
    - 8 எம்.பி. ஆட்டோஃபோகஸ் பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா
    - IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்
    - கைரேகை சென்சார்
    - எஸ் பென்
    - 4ஜி எல்.டி.இ., வைபை., ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 4,450 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    சாம்சங் கேலக்ஸி டேப் ஆக்டிவ் 2 டேப்லெட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ.50,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ஹெச்.பி. நிறுவனம் இரண்டு புதிய கன்வெர்டிபிள் லேப்டாப் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. #Spectrex360 #Laptop



    ஹெச்.பி. நிறுவனம் ஸ்பெக்டர் X360 மற்றும் ஸ்பெக்டர் ஃபோலியோ கன்வெர்டிபிள் லேப்டாப்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

    ஹெச்.பி. ஸ்பெக்டர் X360 15 உலகின் முதல் லெதர் கன்வெர்டிபிள் கணினியாக அறிமுகம் செய்யப்பட்டது. இதேபோன்று ஸ்பெக்டர் X360 15-இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்ட உலகின் முதல் லேப்டாப் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. 



    ஹெச்.பி. ஸ்பெக்டர் ஃபோலியோ சிறப்பம்சங்கள்:

    - 13.3 இன்ச் 1920x1080 பிக்ல் FHD IPS பிரைட் வியூ WLED-பேக்லிட் மைக்ரோ-எட்ஜ்
    - மல்டி டச் எட்ஜ்-டு-எட்ஜ் கிளாஸ் ஸ்கிரீன்
    - 8ம் தலைமுறை இன்டெல் கோர் i7-8500Y பிராசஸர்
    - இன்டெல் UHD கிராஃபிக்ஸ் 615
    - 16 ஜி.பி. LPDDR3-1866 எஸ்.டி. ரேம்
    - 512 ஜி.பி. PCIe NVMe M.2 எஸ்.எஸ்.டி.
    - விண்டோஸ் 10 ப்ரோ
    - ஹெச்.பி. வைடு விஷன்  FHD IR கேமரா
    - ஹெச்.பி. ஆடியோ பூஸ்ட் 2.0, குவாட் ஸ்பீக்கர்கள்
    - டூயல்-பேண்ட் வைபை 802.11 ac (2×2), ப்ளூடூத் 4.2
    - 2 x தண்டர்போல்ட 3 போர்ட்கள், 1 x யு.எஸ்.பி. டைப்-சி 3.1
    - 1 x ஹெட்போன் / மைக்ரோபோன் காம்போ
    - 6-செல், 54.28 Wh Li-ion பாலிமர் பேட்டரி



    ஹெச்.பி. ஸ்பெக்டர் X360 சிறப்பம்சங்கள்:

    - 13.3 இன்ச் 1920x1080 பிக்ல் FHD IPS ஆண்டி-கிளேர் மைக்ரோ எட்ஜ் WLED-பேக்லிட் மைக்ரோ-எட்ஜ்
    - 13.3 இன்த் 3840x2160 பிக்சல் 4K IPS ஆண்டி-கிளேர் மைக்ரோ எட்ஜ் WLED-பேக்லிட் பேக்லிட் டச் ஸ்கிரீன்
    - 8ம் தலைமுறை இன்டெல் கோர் i5-8265U / i7-8565U பிராசஸர்
    - இன்டெல் UHD கிராஃபிக்ஸ் 620
    - 8 ஜி.பி. / 16 ஜி.பி. LPDDR3-1866 எஸ்.டி. ரேம்
    - 256 ஜி.பி. / 512 ஜி.பி. / 1000 ஜி.பி. PCIe NVMe M.2 எஸ்.எஸ்.டி.
    - விண்டோஸ் 10 ப்ரோ
    - ஹெச்.பி. வைடு விஷன்  FHD IR கேமரா
    - ஹெச்.பி. ஆடியோ பூஸ்ட் 2.0, குவாட் ஸ்பீக்கர்கள்
    - டூயல்-பேண்ட் வைபை 802.11 ac (2×2), ப்ளூடூத் 5
    - 2 x தண்டர்போல்ட 3 போர்ட்கள், 1 x யு.எஸ்.பி. டைப்-சி 3.1
    - 1 x ஹெட்போன் / மைக்ரோபோன் காம்போ
    - 4-செல், 61 Wh Li-ion பாலிமர் பேட்டரி

    ஹெச்.பி. ஸ்பெக்டர் X360 டார்க் ஆஷ் கிரே மற்றும் புளு போசிடோன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியன்ட் விலை ரூ.1,29,990 இல் துவங்கி அதிகபட்சம் ரூ.1,69,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஹெச்.பி. ஸ்பெக்டர் ஃபோலியோ காக்னாக் பிரவுன் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ.1,99,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ×