என் மலர்
தொழில்நுட்பம்
- நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட Samsung Galaxy Ring வருகிற ஆகஸ்டு மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது
- வருங்காலங்களில் உடல் நலனைக் கண்காணிக்கும் வசதிகள் இதில் சேர்க்கப்பட உள்ளன
கொரியன் நிறுவனமான 'சாம்சங்' செல்போன் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முன்னணி வகித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது புதிதாக சாம்சங் 'கேலக்ஸி ரிங்' என்ற மிக இலகுவான கை விரல்களில் அணிய வசதியாக உள்ள மோதிர வடிவில் புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும், இந்த மோதிரத்தில் மேம்பட்ட ஆரோக்கியம், செயல்பாடு மற்றும் தூக்கத்தை கண்காணிக்கும் வசதிகள் அமைந்து உள்ளன.

நவீன ஸ்மார்ட் வாட்சுகளை விட, கேலக்ஸி ரிங் ஒரு ஆரோக்கிய சாதனம் என்று அழைக்கப்படும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 10 நாட்கள் வரை நீடிக்கும். புதிய ஆரோக்கிய சாதனமாக அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த மோதிரத்தின் விலை ரூ.25,000 முதல் ரூ.42,000 வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீண்ட பேட்டரி ஆயுள் கொண்ட Samsung Galaxy Ring வருகிற ஆகஸ்டு மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வருங்காலங்களில் உடல் நலனைக் கண்காணிக்கும் வசதிகள் இதில் சேர்க்கப்பட உள்ளன.
- ஐகூ Z9 5ஜி ஸ்மார்ட்போனிற்கு 2 ஆண்டுகள் ஒ.எஸ். அப்டேட்கள் வழங்கப்படுகிறது.
- புதிய ஐகூ ஸ்மார்ட்போன் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.
ஐகூ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Z9 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு அறிமுகமான ஐகூ Z7 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய Z9 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.67 இன்ச் FHD+ AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், அதிகபட்சம் 1800 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. நீட்டிக்கப்பட்ட ரேம், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு இரண்டு ஆண்டுகள் ஒ.எஸ். அப்டேட்கள், மூன்று ஆண்டுகளுக்கு மாதாந்திர அப்டேட்கள் வழங்கப்படும் என ஐகூ தெரிவித்துள்ளது.

ஐகூ Z9 5ஜி அம்சங்கள்:
6.67 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED ஸ்கிரீன்
மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர்
மாலி G610 MC4 GPU
8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஒ.எஸ். 14
50MP பிரைமரி கேமரா, OIS, EIS
2MP டெப்த் சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ்
16MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, ப்ளூடூத் 5.3
யு.எஸ்.பி. டைப் சி
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
ஐகூ Z9 5ஜி ஸ்மார்ட்போன் கிராஃபீன் புளூ மற்றும் பிரஷ்டு கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 21 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை நாளை (மார்ச் 13) துவங்குகிறது.
அறிமுக சலுகையாக புதிய ஐகூ ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி மற்றும் மூன்று மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது.
- ஜியோ டிஜிட்டல் வங்கித் துறையில் காலடி எடுத்து வைக்கிறது. ஜியோ' UPI என்ற பெயரில் பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது
- இதன் மூலம் Paytm, PhonePe, Google Pay ஆகியவற்றுக்கு கடும் போட்டியை கொடுக்க முகேஷ் அம்பானி தயாராகி வருகிறார்
பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ, தற்போது டிஜிட்டல் வங்கித் துறையில் காலடி எடுத்து வைக்கிறது. ஜியோ' UPI என்ற பெயரில் புதிய டிஜிட்டல் வங்கி வணிக பணப் பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளது ரிலையன்ஸ். Paytm, போன்று 'ஜியோ' சில்லரை விற்பனை கடைகளில் பணம் செலுத்தும் சேவையை வெற்றிகரமாக நடத்த திட்டமிட்டுள்ளது.
தற்போது 'ஜியோ பே' செயலி தொழில்நுட்பம் மூலம் இந்த விரிவாக்கத்திற்கான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது 'ஜியோ' நிறுவனம் இதனை சோதனை அடிப்படையில் செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் சில்லறை விற்பனைக் கடைகளில் உடனடி பணப் பரிமாற்றங்கள் செய்ய முடியும்.
மேலும் Paytm, PhonePe, Google Pay போன்ற நிறுவனங்களுக்கு சவால் விடும் வகையில் 'ஜியோ' இதனை அமைத்துள்ளது. விரைவில் ஜியோ UPI செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதன் மூலம் Paytm, PhonePe, Google Pay ஆகியவற்றுக்கு கடும் போட்டியை கொடுக்க முகேஷ் அம்பானி தயாராகி வருகிறார்.
டிஜிட்டல் வங்கித் துறையில் போட்டியை உருவாக்கும் ஜியோவின் நடவடிக்கை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
- ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
- இந்த ஸ்மார்ட்போனில் 108MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.
போக்கோ நிறுவனத்தின் புதிய X6 நியோ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் டீசர்கள் இணையததில் வெளியிடப்பட்டு வந்த நிலையில், புதிய ஸ்மார்ட்போன் மார்ச் 13-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக போக்கோ இந்தியா அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் பதிவிடப்பட்டு இருக்கிறது. அதில் புதிய ஸ்மார்ட்போன் மார்ச் 13-ம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை வெளியாகி இருக்கும் டீசர்களின் படி போக்கோ X6 நியோ மாடலில் பெசல் லெஸ் டிசைன், 7.69mm அளவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 120Hz AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, அதிகபட்சம் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 108MP பிரைமரி கேமரா, 3x லாஸ்லெஸ் இன்-சென்சார் ஜூம் வசதி வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 16MP செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
- இதன் ஃபிளாஷ் யூனிட் கேமராவின் கீழ் வழங்கப்பட்டு இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு CE4 ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நார்டு CE3 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக உருவாகி இருக்கும் புதிய நார்டு CE4 இந்திய சந்தையில் ஏப்ரல் 1-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இது தொடர்பான டீசர்களில் புதிய ஸ்மார்ட்போன் அதன் முந்தைய வெர்ஷன்களில் இருந்த டிசைனை கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும் இதன் ஃபிளாஷ் யூனிட் கேமராவின் கீழ் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதன் மேல்புறத்தில் ஐ.ஆர். பிளாஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படுவதை ஒன்பிளஸ் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் நார்டு CE4 மாடலில் 6.7 இன்ச் AMOLED ஸ்கிரீன், 50MP பிரைமரி கேமரா, 8MP லென்ஸ் மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்பட்டது.

புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை ஒட்டி ஒன்பிளஸ் நிறுவனம் சிறப்பு போட்டியை அறிவித்து இருக்கிறது. இதில் கலந்து கொண்டு வெற்றி பெறுவோருக்கு ஒன்பிளஸ் நார்டு CE4 மற்றும் நார்டு CE4 கேஸ் பரிசாக வழங்கப்படும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. மற்ற ஒன்பிளஸ் மாடல்களை போன்றே புதிய ஸ்மார்ட்போனும் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிகிறது.
- வலைதளத்தில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
- இவை தவிர எக்சேன்ஜ் சலுகையும் வழங்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவன ஐபோன் மாடலை வாங்க நீண்ட காலம் திட்டமிடுவோர் தற்போது அதனை வாங்கும் நிலை உருவாகி இருக்கிறது. அதன்படி ஆப்பிளின் ஐபோன் 15 மாடலுக்கு ப்ளிப்கார்ட் வலைதளத்தில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
அதன்படி ஐபோன் 15 என்ட்ரி லெவல் மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 16 ஆயிரம் வரை தள்ளுபடி கிடக்கிறது. இந்த மாடல் ஐபோன் 14-க்கு மேம்பட்ட வெர்ஷனாக அறிமுகம் செய்யப்படது. இந்திய சந்தையில் ரூ. 79 ஆயிரதது 900 விலையில் அறிமுகம் செய்யப்ட்ட ஐபோன் 15 விலை ரூ. 66 ஆயிரத்து 499 என மாறியுள்ளது.
வங்கி சலுகைகளாக ஐபோன் 15 மாடலுக்கு ரூ. 9 ஆயிரத்து 901 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் வங்கி சலுகைகளின் கீழ் ரூ. 3 ஆயிரத்து 325 வரை குறைந்துள்ளது. இவை தவிர பயனர்கள் எக்சேன்ஜ் சலுகையின் கீழ் ரூ. 50 ஆயிரம் வரை அதிகபட்ச தள்ளுபடி பெறலாம்.
- இத்துடன் 50 ஜி.பி. டேட்டாவும் வழங்கப்பட்டது.
- புதிய ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
போக்கோ நிறுவனம் இந்திய சந்தையில் போக்கோ M6 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த டிசம்பர் மாதம் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் வயர்டு சார்ஜிங் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருந்தது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று வித மெமரி மற்றும் மூன்று நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் தற்போது ஏர்டெல் சேவையை மட்டும் பயன்படுத்தும் வகையில் சிறப்பு சலுகையுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. முன்னதாக கடந்த ஜூலை மாதம் போக்கோ C51 ஸ்மார்ட்போன் ஏர்டெல் பிரத்யேக எடிஷனாக ரூ. 5 ஆயிரத்து 999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் 50 ஜி.பி. டேட்டாவும் வழங்கப்பட்டது.

தற்போது போக்கோ அறிவித்து இருக்கும் போக்கோ M6 5ஜி ஸ்மார்ட்போனின் ஏர்டெல் எடிஷன் மாடல் மார்ச் 10-ம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இத்துடன் 50 ஜி.பி. டேட்டாவும் வழங்கப்படுகிறது. ஏர்டெல் சேவையை பயன்படுத்தாதவர்களுக்கு சிம் கார்டு வீட்டிலேயே டெலிவரி செய்யும் வசதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை போக்கோ M6 5ஜி மாடலில் 6.74 இன்ச் HD+ 1600x720 பிக்சல் டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர், மாலி G57 MC2 GPU, அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI14 வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 50MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 5MP செல்ஃபி கேமரா, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் வயர்டு சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்டிக் பிளாக், ஒரியன் புளூ மற்றும் போலாரிஸ் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
புதிய போக்கோ M6 5ஜி ஏர்டெல் எடிஷனின் விலை ரூ. 8 ஆயிரத்து 799 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில், இது இந்திய சந்தையில் கிடைக்கும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்று இருக்கிறது.
- ஆப்பிள் மீமோஜி மற்றும் ஸ்னாப்சாட்-இன் பிட்மோஜி போன்றதாகும்.
- ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் டெஸ்டிங் செய்யப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலியில் பயனர்கள் தங்களை நகைப்பூட்டும் வகையில் வெளிப்படுத்திக் கொள்ள செய்யும் விதமாக கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட அம்சம் தான் அவதார்ஸ். இதை கொண்டு பயனர்கள் தங்களை வெளிப்படுத்தும் உருவங்களை வாட்ஸ்அப் செயலியிலேயே உருவாக்கிக் கொள்ளலாம். இந்த வசதி ஆப்பிள் மீமோஜி மற்றும் ஸ்னாப்சாட்-இன் பிட்மோஜி போன்றதாகும்.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் உள்ள அவதார்ஸ்-ஐ யார் யார் பார்க்க வேண்டும் என்பதை தேர்வு செய்யும் வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா 2.24.6.8 வெர்ஷனில் டெஸ்டிங் செய்யப்படுகிறது.

இந்த அம்சத்தின் படி பயனர்கள் தங்களின் அவதார்ஸ்-ஐ யார் யார் பார்க்க வேண்டும் என்பதை- காண்டாக்ட் (My Contacts), தேர்ந்தெடுக்கப்பட்ட காண்டாக்ட்கள் (Selected Contacts) அல்லது யாருக்கும் வேண்டாம் (Nobody) என மூன்று ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம்.
நீங்களும், நீங்கள் தேர்வு செய்யும் காண்டாக்ட்-ம் இந்த அம்சத்தை ஒருவருக்கொருவர் தேர்வு செய்யும் பட்சத்தில் இருவரின் ஸ்டிக்கர்களும் அவரவர் சாட்களில் காணப்படும். புதிய அம்சம் மூலம் பயனர்களின் தனியுரிமை பாதுகாக்கப்படும்.
இது ஒருவரின் ஸ்டிக்கர்களை அவர்களுக்கு அறிமுகமில்லாதவர்கள் பார்ப்பதையும், பயன்படுத்துவதையும் தவிர்க்க செய்கிறது. இந்த அம்சம் தற்போது டெஸ்டிங்கில் உள்ள நிலையில், அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனில் எப்போது வழங்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
- இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹைப்பர் ஒ.எஸ். கொண்டிருக்கிறது.
சியோமி 14 ஸ்மார்ட்போனுடன் சியோமி நிறுவனம் சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இரண்டும் சியோமி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆகும். முன்னதாக இந்த மாடல்கள் சீனா மற்றும் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவில் அறிமுகமாகி இருக்கின்றன.
புதிய சியோமி 14 அல்ட்ரா மாடலில் 6.78 இன்ச் 2K கஸ்டம் C8 AMOLED LTPO ஸ்கிரீன், 1-120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட், HDR 10+ மற்றும் டால்பி விஷன் சப்போர்ட் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹைப்பர் ஒ.எஸ். கொண்டிருக்கிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டு உள்ளது.

சியோமி 14 அல்ட்ரா அம்சங்கள்:
6.73 இன்ச் 3200x1440 பிக்சல் 2K OLED LTPO டிஸ்ப்ளே
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர்
அட்ரினோ 750 GPU
16 ஜி.பி. ரேம்
512 ஜி.பி. மெமரி
டூயல் சிம் ஸ்லாட்
சியோமி ஹைப்பர் ஒ.எஸ்.
50MP பிரைமரி கேமரா, OIS, எல்.இ.டி. ஃபிளாஷ் (லெய்கா)
50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ்
50MP டெலிபோட்டோ லென்ஸ், OIS
32MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஹைரெஸ் ஆடியோ
டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4
5300 எம்.ஏ.ஹெச். பேட்டரி
90 வாட் வயர்டு சார்ஜிங்
80 வாட் வயர்லெஸ் சார்ஜிங்
10 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
சியோமி 14 அல்ட்ரா ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் வீகன் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 99 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் விற்பனை ஏப்ரல் 12-ம் தேதி துவங்குகிறது.
- சியோமி 14 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒ.எஸ். உள்ளது.
- இந்த ஸ்மார்ட்போனில் 90 வாட் வயர்டு சார்ஜிங் வசதி உள்ளது.
சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் சியோமி 14 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.36 இன்ச் 1.5K OLED ஃபிளாட் TCL C8 LTPO பேனல், 120Hz ரிப்ரெஷ் ரேட், டால்பி விஷன் சப்போர்ட், டி.சி. டிம்மிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹைப்பர் ஒ.எஸ். கொண்டிருக்கிறது.
இத்துடன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 50MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 4610 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் சியோமி 14 ஸ்மார்ட்போன் 90 வாட் வயர்டு சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங், 10 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது.

சியோமி 14 அம்சங்கள்:
6.36 இன்ச் 2670x1200 பிக்சல் 1.5K OLED டிஸ்ப்ளே
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர்
அட்ரினோ 750 GPU
12 ஜி.பி. ரேம்
512 ஜி.பி. மெமரி
டூயல் சிம் ஸ்லாட்
சியோமி ஹைப்பர் ஒ.எஸ்.
50MP பிரைமரி கேமரா, OIS, எல்.இ.டி. ஃபிளாஷ்
50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் (லெய்கா)
50MP டெலிபோட்டோ லென்ஸ் (லெய்கா)
32MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஹைரெஸ் ஆடியோ
டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4
4610 எம்.ஏ.ஹெச். பேட்டரி
90 வாட் வயர்டு சார்ஜிங்
50 வாட் வயர்லெஸ் சார்ஜிங்
10 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்
புதிய சியோமி 14 ஸ்மார்ட்போன் ஜேட் கிரீன், மேட் பிளாக் மற்றும் கிளாசிக் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 69 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை Mi, ப்ளிபாகார்ட், அமேசான் வலைதளங்கள் மற்றும் சியோமி ரிடெயில் ஸ்டோர்களில் மார்ச் 11-ம் தேதி துவங்குகிறது.
- புதிய ரியல்மி ஸ்மார்ட்போனிற்கு டீசர்கள் வெளியாகி வருகின்றன.
- இந்த ஸ்மார்ட்போனில் 50MP கேமரா வழங்கப்படுகிறது.
ரியல்மி நிறுவனம் தனது நார்சோ 70 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கும் நார்சோ 70 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன.
புதிய ஸ்மார்ட்போனிற்காக மைக்ரோசைட் ஒன்றும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதில் வெளியாகி இருக்கும் புதிய டீசர்களில் ரியல்மி நார்சோ 70 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா மற்றும் இதர அம்சங்கள் பற்றிய விவரங்கள் இடம்பெற்று இருக்கிறது. அதன்படி நார்சோ 70 ப்ரோ மாடலில் சோனி IMX890 சென்சார் மற்றும் OIS வசதிகள் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது.

இந்த மாடலில் 50MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என்றும் ஏர் ஜெஸ்ட்யூர் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏர் ஜெஸ்ட்யூர் வசதி மூலம் பயனர்கள் ஸ்மார்ட்போன் அம்சங்களை திரையில் நேரடியாக தொடாமல், சற்று தூரத்திலேயே செய்கைகள் மூலம் இயக்க முடியும். முதற்கட்டமாக இந்த வசதியின் கீழ் பத்து வெவ்வேறு ஜெஸ்ட்யூர்கள் வழங்கப்படுகிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை ரியல்மி நார்சோ 70 ப்ரோ மாடலில் ஹோல்-பன்ச் டிஸ்ப்ளே டிசைன், ஃபிளாட் ஸ்கிரீன், மெல்லிய பெசல்கள் வழங்கப்படுகிறது. இதன் வலதுபுறத்தில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் வழங்கப்படுகிறது. பின்புறத்தில் வட்ட வடிவம் கொண்ட கேமரா பம்ப் வழங்கப்படுகிறது.
- பேட்டரிகளில் இருந்து அதிக நச்சுக்கள் காற்றில் கலக்கிறது
- பெட்ரோல் காரை விட 400 மடங்கு அதிகம்
பெட்ரோல், டீசல், மின்சார கார்களின் காற்று மாசு குறித்து 'எமிஷன் அனலைடிக்ஸ்' (Emission Analytics)என்ற அமைப்பு ஆய்வு நடத்தியது. ஆய்வு முடிவில் மின்சார கார்களில் அதிக காற்று மாசு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல், கார்களை விட மின்சார வாகனங்கள் அதிக காற்று மாசு துகள்களை வெளியிடுகிறது. அதன் டயர்களில் பயன்படுத்தப்படும் ரப்பர் மற்றும் பேட்டரிகளில் இருந்து அதிக நச்சுக்கள் காற்றில் கலக்கிறது. அரை டன் பேட்டரி மின்சார வாகனத்தில் இருந்து வெளியாகும் மாசு, பெட்ரோல் காரை விட 400 மடங்கு அதிகம் என்கிறது ஆய்வு.
மின்சார வாகனங்கள் காற்றுமாசை குறைக்கும் என்று பலர் நம்புகிறார்கள். ஆனால், பெட்ரோல், டீசல் வாகனங்களிலிருந்து வெளியேறும் காற்று மாசை விட, எலெக்ட்ரிக் வாகனங்களில் இருந்து தான் அதிக காற்று மாசு வெளியேறுகிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது. உலக வெப்பமயமாதல் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது.
எனவே, கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், காற்று மாசை கட்டுப்படுத்தவும் உலக நாடுகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்கள் தற்போது உபயோகப்படுத்தப்படுகின்றன.
பெட்ரோல், டீசல் வாகனங்கள் அதிக மாசை வெளியேற்றுவதாக கூறி மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால், தற்போது வெளியான இந்த ஆய்வு முடிவால் வாகன ஓட்டிகள், நுகர்வோர்கள் கடும் குழப்பம் அடைந்து உள்ளனர்.






