search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    லெய்கா லென்ஸ், 90W சார்ஜிங் வசதியுடன் சியோமி 14 இந்தியாவில் அறிமுகம்

    • சியோமி 14 ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒ.எஸ். உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போனில் 90 வாட் வயர்டு சார்ஜிங் வசதி உள்ளது.

    சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் சியோமி 14 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.36 இன்ச் 1.5K OLED ஃபிளாட் TCL C8 LTPO பேனல், 120Hz ரிப்ரெஷ் ரேட், டால்பி விஷன் சப்போர்ட், டி.சி. டிம்மிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹைப்பர் ஒ.எஸ். கொண்டிருக்கிறது.

    இத்துடன் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 50MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. 4610 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் சியோமி 14 ஸ்மார்ட்போன் 90 வாட் வயர்டு சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங், 10 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது.


    சியோமி 14 அம்சங்கள்:

    6.36 இன்ச் 2670x1200 பிக்சல் 1.5K OLED டிஸ்ப்ளே

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர்

    அட்ரினோ 750 GPU

    12 ஜி.பி. ரேம்

    512 ஜி.பி. மெமரி

    டூயல் சிம் ஸ்லாட்

    சியோமி ஹைப்பர் ஒ.எஸ்.

    50MP பிரைமரி கேமரா, OIS, எல்.இ.டி. ஃபிளாஷ்

    50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் (லெய்கா)

    50MP டெலிபோட்டோ லென்ஸ் (லெய்கா)

    32MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஹைரெஸ் ஆடியோ

    டஸ்ட் மற்றும் வாட்டர் ப்ரூஃப்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4

    4610 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    90 வாட் வயர்டு சார்ஜிங்

    50 வாட் வயர்லெஸ் சார்ஜிங்

    10 வாட் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

    புதிய சியோமி 14 ஸ்மார்ட்போன் ஜேட் கிரீன், மேட் பிளாக் மற்றும் கிளாசிக் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 69 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை Mi, ப்ளிபாகார்ட், அமேசான் வலைதளங்கள் மற்றும் சியோமி ரிடெயில் ஸ்டோர்களில் மார்ச் 11-ம் தேதி துவங்குகிறது.

    Next Story
    ×