search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "OnePlus Nord CE4"

    • இதன் ஃபிளாஷ் யூனிட் கேமராவின் கீழ் வழங்கப்பட்டு இருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போனில் டூயல் கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் தனது நார்டு CE4 ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நார்டு CE3 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக உருவாகி இருக்கும் புதிய நார்டு CE4 இந்திய சந்தையில் ஏப்ரல் 1-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

    இது தொடர்பான டீசர்களில் புதிய ஸ்மார்ட்போன் அதன் முந்தைய வெர்ஷன்களில் இருந்த டிசைனை கொண்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும் இதன் ஃபிளாஷ் யூனிட் கேமராவின் கீழ் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    இதன் மேல்புறத்தில் ஐ.ஆர். பிளாஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படுவதை ஒன்பிளஸ் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிளஸ் நார்டு CE4 மாடலில் 6.7 இன்ச் AMOLED ஸ்கிரீன், 50MP பிரைமரி கேமரா, 8MP லென்ஸ் மற்றும் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என கூறப்பட்டது.

     


    புது ஸ்மார்ட்போன் வெளியீட்டை ஒட்டி ஒன்பிளஸ் நிறுவனம் சிறப்பு போட்டியை அறிவித்து இருக்கிறது. இதில் கலந்து கொண்டு வெற்றி பெறுவோருக்கு ஒன்பிளஸ் நார்டு CE4 மற்றும் நார்டு CE4 கேஸ் பரிசாக வழங்கப்படும் என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது. மற்ற ஒன்பிளஸ் மாடல்களை போன்றே புதிய ஸ்மார்ட்போனும் அமேசான் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிகிறது.

    ×