என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம்.
    • சாதனத்தை ஒப்படைத்து அதற்கான பணத்தை திரும்ப பெறலாம்.

    ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போனின் 256 ஜி.பி. மெமரி மாடலில் UFS 3.1 ரக ஸ்டோரேஜ் வழங்கியுள்ளதாக அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகத்தின் போது, இதில் UFS 4.0 ரக ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளதாக ஒன்பிளஸ் அறிவித்து இருந்தது.

    இந்த விஷயம் அம்பலமானதைத் தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் 12R ஸ்மார்ட்போனினை வாங்கியவர்கள் மற்றும் முன்பதிவு செய்தவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு ஒன்பிளஸ் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்து இருந்தது.

     


    தற்போது, ஒன்பிளஸ் 12R மாடலின் 256 ஜி.பி. மெமரி மாடலை வாங்கியவர்கள் சாதனத்தை பயன்படுத்தியதில் திருப்தி அடையவில்லை எனில், மார்ச் 16-ம் தேதிக்குள் தங்களது சாதனத்தை ஒப்படைத்து அதற்கான பணத்தை திரும்ப பெறலாம் என்று ஒன்பிளஸ் அறிவித்து இருக்கிறது. 

    • மலேசியாவில் அறிமுகம் செய்வதாக அறிவித்து இருந்தது.
    • விரைவில் மற்றொரு தரமான மிட் ரேன்ஜர் வருகிறது.

    ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி 12 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய வெளியீடு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கான டீசரை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் மலேசியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதன் தொடர்ச்சியாகவே ரியல்மி இந்தியா அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுன்டில் புதிய ஸ்மார்ட்போனிற்கான டீசர் வெளியிடப்பட்டு உள்ளது. டீசருடன் #OneMorePlus என்ற ஹேஷ்டேக் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் மற்றொரு தரமான மிட் ரேன்ஜர் வருகிறது என்பதை கூறும் வாசகம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஆனால், ஸ்மார்ட்போனின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

     


    புதிய ஸ்மார்ட்போனிற்கான மைக்ரோசைட் ஒன்றும் ரியல்மி இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. அதில் ஸ்மார்ட்போன் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 12 அப்கிரேடுகள் வழங்குவது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் லெதர் டெக்ஸ்ச்சர் பேக் பேனல் கொண்டிருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

    இது குறித்து ஏற்கனவே வெளியான தகவல்களின் படி புதிய ரியல்மி 12 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் ஃபிளாட் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என்றும் 50MP சோனி LYT600 பிரைமரி கேமரா, கூடுதலாக இரண்டு லென்ஸ்கள், டிமென்சிட்டி 7050 பிராசஸர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    • நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.
    • புதிய ஸ்மார்ட்வாட்ச்-இல் 200-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன.

    நாய்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்வாட்ச் நாய்ஸ் கலர்ஃபிட் மேக்ரோ என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய நாய்ஸ் கலர்ஃபிட் மேக்ரோ மாடலில் 2 இன்ச் கர்வ்டு டிஸ்ப்ளே, நூற்றுக்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், உடல்நல அம்சங்கள், ப்ளூடூத் காலிங் என பல்வேறு அம்சங்கள் உள்ளன.

    இத்துடன் 200-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள், நாய்ஸ் ட்ரூ சின்க் டெக் மூலம் டயல் பேட் மற்றும் ரீசென்ட் கால் ஹிஸ்ட்ரியை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் இன்-பில்ட் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் வசதி உள்ளது. இதில் வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

     


    நாய்ஸ் கலர்ஃபிட் மேக்ரோ அம்சங்கள்:

    2.0 இன்ச் HD TFT LCD ஸ்கிரீன், 2.5D கர்வ்டு கிளாஸ் டிஸ்ப்ளே

    200-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள்

    ப்ளூடூத் காலிங் வசதி

    பில்ட்-இன் மைக்ரோபோன்

    வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதி

    ஹார்ட் ரேட், SpO2, ஸ்டிரெஸ் மானிடரிங்

    115-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

    ஏழு நாட்களுக்கு பேக்கப் வழங்கும் பேட்டரி

    நோட்டிஃபிகேஷன் டிஸ்ப்ளே

    வானிலை அப்டேட்கள்

    கேமரா மற்றும் மியூசிக் கன்ட்ரோல்

    ரிமைன்டர், அலாரம், கால்குலேட்டர்

    புதிய நாய்ஸ் கலர்ஃபிட் மேக்ரோ ஸ்மார்ட்வாட்ச் சிலிகான் ஸ்டிராப் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இது மிஸ்ட் கிரே, ஸ்பேஸ் புளூ மற்றும் ஜெட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் லெதர் ஸ்டிராப் வேரியன்ட்கள் கிளாசிக் பிளாக், கிளாசிக் பிரவுன் நிறங்களிலும், மெட்டாலிக் ஸ்டிராப் வேரியன்ட் பிளாக் லின்க் மற்றும் சில்வர் லின்க் நிறங்களிலும் கிடைக்கிறது.

    நாய்ஸ் கலர்ஃபிட் மேக்ரோ ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 1499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை பிப்ரவரி 19-ம் தேதி துவங்க இருக்கிறது. அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்வாட்ச் மிஸ்ட் கிரே, ஸ்பேஸ் புளூ மற்றும் ஜெட் பிளாக் நிற ஆப்ஷன்களின் விலை ரூ. 1399 என்றும் கிளாசிக் புளூ, கிளாசிக் பிரவுன் நிற ஆப்ஷன்களின் விலை ரூ. 1499 என்றும் பிளாக் லின்க் மற்றும் சில்வர் லின்க் விலை ரூ. 1599 என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளன.

    • எக்சேன்ஜ் சலுகையின் மூலம் இதன் விலையை மேலும் குறைக்கலாம்.
    • எப்போது வரை வழங்கப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

    அமேசான் வலைதளத்தில் ஐபோன் 13 ஸ்மார்ட்போனிற்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தள்ளுபடி எப்போது வரை வழங்கப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. ஐபோன் 13 மாடலின் பேஸ் வேரியன்டில் 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 50 ஆயிரம் பட்ஜெட்டில் வாங்கிட முடியும்.

    முன்னதாக ஐபோன் 13 மாடலின் 128 ஜி.பி. மாடல் ரூ. 59 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 51 ஆயிரத்து 790 என மாறி இருக்கிறது. இதன் 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 61 ஆயிரத்து 990 என மாறி இருக்கிறது.

    விலை குறைப்பு மட்டுமின்றி ஒன்கார்டு கிரெடிட் கார்டு மாத தவணை முறை பரிவர்த்தனைகளுக்கு ரூ. 1750 வரை உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் எக்சேன்ஜ் சலுகையின் மூலம் இதன் விலையை மேலும் குறைக்க முடியும்.

    அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 13 மாடலில் 6.1 இன்ச் OLED சூப்பர் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, 2532x1170 பிக்சல் ரெசல்யூஷன், ட்ரூ டோன், செராமிக் ஷீல்டு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட், 128 ஜி.பி., 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. மெமரி, ஐ.ஒ.எஸ். 17 வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க 12MP பிரைமரி கேமரா, OIS, ட்ரூ டோன் ஃபிளாஷ், 12MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 12MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, ஜிகாபிட் கிளாஸ் எல்.டி.இ., வைபை 6, ப்ளூடூத் 5, என்.எஃப்.சி. மற்றும் ஜி.பி.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

    • ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் பற்றிய தகவல் இணையத்தில் லீக் ஆகி உள்ளது.
    • இரண்டு நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.

    நத்திங் நிறுவனம் தனது நத்திங் போன் 2a ஸ்மார்ட்போன் மார்ச் 5-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என சமீபத்தில் தான் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், புதிய நத்திங் போன் 2a மாடலின் விலை மற்றும் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் பற்றிய தகவல்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.

    அதன்படி புதிய நத்திங் போன் 2a மாடல் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி என இரண்டு ஆப்ஷன்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் என இரண்டு நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.

     


    ஐரோப்பாவில் நத்திங் போன் 2a மாடலின் விலை 349 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 31 ஆயிரத்து 075 வரை நிர்ணயம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இது ஒரிஜினல் நத்திங் போனின் விலையை விட 50 யூரோக்கள் வரை குறைவு ஆகும். நத்திங் போன் 2a மாடலின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 399 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 35 ஆயிரத்து 529 வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நத்திங் போன் 2a மாடலில் 6.7 இன்ச் 120Hz AMOLED ஸ்கிரீன், மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர், 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என தெரிகிறது. முன்னதாக இந்தயாவில் நத்திங் போன் 2a அறிமுக நிகழ்வுக்கான டிக்கெட்டுகளின் விற்பனை துவங்கியது.

    • ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் ஆடம்பரமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளன.
    • அதிக விலை கொண்ட வெர்ஷனாக இருக்கிறது.

    ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவன சாதனங்களை ஆடம்பரமாக கஸ்டமைசேஷன் செய்வதில் புகழ் பெற்ற நிறுவனம் கேவியர். காதலர் தினத்தை ஒட்டி கேவியர் நிறுவனம் ஐபோன் 15 வேலன்டைன்ஸ் டே எடிஷன் மற்றும் இதய வடிவம் கொண்ட ஏர்டேக் என விசேஷமான சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.

    புதிய ஸ்பெஷல் எடிஷன்களை அந்நிறுவனம் "கார்டன் ஆஃப் ஈடன்" என அழைக்கிறது. இதில் ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் ஆடம்பரமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளன. இதில் பேந்தர் கோல்டு 18K மாடலின் (ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ்) விலை 60 ஆயிரத்து 350 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 50 லட்சத்து 11 ஆயிரத்து 273 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     


    அந்த வகையில், இது தற்போது கிடைப்பதிலேயே அதிக விலை கொண்ட வெர்ஷனாக இருக்கிறது. இந்த எடிஷனில் ஐபோன் முழுக்க 18K தங்கத்தால் ஆன பாடி மற்றும் 159 கருப்பு வைர கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. புதிய கார்டன் ஆஃப் ஈடன் சீரிசில் மொத்தம் ஐந்து விதமான ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

    இவை ஒவ்வொன்றிலும் ஆடம்பர பொருட்களான வைரங்கள், ரத்தின கற்கள் மற்றும் படிகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பிளாக்ஷிப் பேந்தர் கோல்டு 18K மட்டுமின்றி வொன்டர்ஃபுல் ஆர்சிட் ஐபோன் 15 ப்ரோ மாடல்களின் விலை 9 ஆயிரத்து 630 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 7 லட்சத்து 99 ஆயிரத்து 577 என துவங்குகிறது.

    கார்டன் ஆஃப் ஈடன் கலெக்ஷன் வாங்கும் போது இதய வடிவம் கொண்ட ஏர்டேக் வழங்கப்படுகிறது. இதனை தனியாகவும் வாங்கிக் கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இந்த மாடல்கள் அனைத்தும் லிமிடெட் எடிஷன் என்பதால் மொத்தத்தில் 14 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. மற்ற மாடல்கள் அனைத்தும் 99 யூனிட்கள் உள்ளன.

    • புதிய சியோமி ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் மூன்று வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    சியோமி நிறுவனம் தனது முற்றிலும் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போன்- ரெட்மி A3 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், ஆக்டா கோர் ஹீலியோ G36 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 6 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன் ஒ.எஸ்., 8MP பிரைமரி கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. லெதர் போன்ற டிசைன் கொண்டிருக்கும் ரெட்மி A3 ஆலிவ் கிரீன் மற்றும் லேக் புளூ மற்றும் கிளாஸ் பேக் டிசைன் கொண்ட மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

     


    ரெட்மி A3 அம்சங்கள்:

    6.71 இன்ச் 1650x720 பிக்சல் HD+ IPS LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட்

    கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு

    ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G36 பிராசஸர்

    IMG PowerVR GE8320 GPU

    3 ஜி.பி., 4 ஜி.பி., 6 ஜி.பி. ரேம்

    64 ஜி.பி., 128 ஜி.பி. மெமரி

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

    ஆண்ட்ராய்டு 13 கோ எடிஷன்

    டூயல் சிம் ஸ்லாட்

    8MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

    5MP செல்ஃபி கேமரா

    3.5mm ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ

    பக்கவாட்டில் கைரேகை சென்சார்

    டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி போர்ட்

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    10 வாட் சார்ஜிங்

    புதிய ரெட்மி A3 ஸ்மார்ட்போனின் 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 7 ஆயிரத்து 299 என்றும் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 8 ஆயிரத்து 299 என்றும் டாப் என்ட் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 299 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட், Mi வலைதளம் மற்றும் ஹோம் ஸ்டோர் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் பிப்ரவரி 23-ம் தேதி துவங்குகிறது.

    • 4 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட பிராசஸர் உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.

    விவோ நிறுவனத்தின் X100 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் விவோ X100 மற்றும் X100 ப்ரோ என இரண்டு மாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் மீடியாடெக் டிமென்சிட்டி 9300 4 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்ட பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்திய சந்தையில் விவோ X100 ஸ்மார்ட்போனின் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மற்றும் 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல்கள் விலை முறையே ரூ. 63 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 69 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டன. தற்போது ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 5 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

     


    எனினும், இந்த தள்ளுபடி தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது மட்டுமே கிடைக்கும். இதுதவிர வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் மூலம் விவோ X100 மாடலின் இரண்டு வேரியன்ட்களின் விலை முறையே ரூ. 58 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 64 ஆயிரத்து 999 என மாறிவிடும்.

    இந்த சலுகை பிப்ரவரி 15-ம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் விவோ X100 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. 

    • அதிக கட்டுப்பாடுகளை வழங்கும் வகையில் புதிய அப்டேட் உருவாக்கப்பட்டுள்ளது.
    • நடவடிக்கை எடுக்க செய்யும் விதமாக புதிய அம்சம் வழங்கப்படுகிறது.

    வாட்ஸ்அப் செயலியில் ஸ்பேம்-ஐ (Spam) லாக் ஸ்கிரீனில் இருந்தே பிளாக் செய்யும் புதிய வசதி வழங்கப்பட இருக்கிறது. ஸ்பேம் எனப்படும் தேவையற்ற குறுந்தகவல்கள் தொடர்ச்சியாக அதிகளவில் அனுப்பப்பட்டு வரும் நிலையில், இதனை எதிர்கொள்ளும் வகையிலும் பயனர்களுக்கு மெசேஜிங் அனுபவத்தில் அதிக கட்டுப்பாடுகளை வழங்கும் வகையிலும் இந்த அப்டேட் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    பயனர்களை ஏமாற்றும் தகவல்கள் அடங்கிய ஸ்பேம் மெசேஜ்கள் வாட்ஸ்அப்-இல் அதிகளவில் அனுப்பப்பட்டு வருவது பயனர்களிடையே கவலையை ஏற்படுத்தி வந்தது. அந்த வகையில், பயனர்கள் இவற்றுக்கு லாக் ஸ்கிரீனில் இருந்தபடியே நடவடிக்கை எடுக்க செய்யும் விதமாக புதிய அம்சம் வழங்கப்படுகிறது.

     


    இதன் மூலம் வாட்ஸ்அப் பயனர் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை அதிகப்படுத்தும் மற்றும்ஓர் முயற்சியாக புதிய அம்சம் அமைந்துள்ளது. இந்த அம்சம் கொண்டு பயனர்கள் ஸ்மார்ட்போனினை அன்லாக் செய்யாமல், நேரடியாக லாக் ஸ்கிரீனில் இருந்தபடி ஸ்பேம் மெசேஜ்களை பிளாக் செய்ய முடியும். இதற்கு ஸ்பேம் நோட்டிஃபிகேஷனை அழுத்திப்பிடித்து பிறகு திரையில் தெரியும் பல்வேறு ஆப்ஷன்களில் பிளாக் செய்யக் கோரும் ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.

    ஸ்பேம் மெசேஜ்களை பிளாக் செய்வதோடு அவற்றை ரிபோர்ட் செய்யும் ஆப்ஷனும் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. புதிய வசதி தவிர பயனர்கள் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் -- பிரைவசி -- பிளாக்டு கான்டாக்ட்ஸ் -- ஆட் போன்ற ஆப்ஷன்களுக்கு சென்று பிளாக் செய்ய வேண்டிய கான்டாக்ட்-ஐ சேர்க்க முடியும்.

    • காதலர் தினத்தை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
    • பிப்ரவரி 15-ம் தேதி வரை இந்த சலுகைகள் அமலில் இருக்கும்.

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 சீரிஸ் மாடல்கள் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டன. இவை ஐபோன் 14 சீரிசின் மேம்பட்ட மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. ஐபோன் 15 சீரிசில் டைனமிக் ஐலேண்ட், 48MP கேமரா, யு.எஸ்.பி. டைப் சி போர்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.

    இந்திய சந்தையில் ரூ. 79 ஆயிரத்து 900 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 15 மாடல் தற்போது ப்ளிப்கார்ட் வலைதளத்தில் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி காதலர் தினத்தை ஒட்டி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பிப்ரவரி 15-ம் தேதி வரை இந்த சலுகைகள் அமலில் இருக்கும்.

     


    ஐபோன் 15 மாடலின் 128 ஜி.பி. மாடல் ரூ. 79 ஆயிரத்து 900-க்கும், 256 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. மாடல்கள் விலை முறையே ரூ. 89 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டன. ப்ளிப்கார்ட் காதலர் தின சலுகையாக இதன் பேஸ் மாடல் விலை ரூ. 66 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இது அதன் முந்தைய விலையை விட ரூ. 12 ஆயிரத்து 900 குறைவு ஆகும்.

    விலை குறைப்பு மட்டுமின்றி பேங்க் ஆஃப் பரோடா, சிட்டி, டி.பி.எஸ். மற்றும் எச்.எஸ்.பி.சி. கார்டுகளை பயன்படுத்தும் போது 10 சதவீதம் அல்லது ரூ. 1500 வரையிலான தள்ளுபடி பெற முடியும். ஹெச்.டி.எஃப்.சி. கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது ஐபோன் 15 விலையை ரூ. 63 ஆயிரத்து 999 என மாற்றுகிறது.

    ப்ளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரத்து 300 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் ஐபோன் 15 மாடல் - கிரீன், புளூ, எல்லோ, பின்க் மற்றும் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. 

    • கேலக்ஸி A சீரிஸ் மாடலுக்கு திடீர் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டது.
    • இந்த ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் மாடல் விலை இந்திய சந்தயில் குறைக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி A05s ஸ்மார்ட்போனிற்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேலக்ஸி A சீரிஸ் மாடலின் விலை ரூ. 2 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட போது கேலக்ஸி A05s மாடலின் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது விலை குறைப்பின் படி கேலக்ஸி A05s விலை ரூ. 12 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக், லைட் கிரீன் மற்றும் லைட் வைலட் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

     


    கேலக்ஸி A05s அம்சங்கள்:

    சாம்சங் கேலக்ஸி A05s மாடலில் 6.7 இன்ச் FHD+ டிஸ்ப்ளே, 1080x2400 பிக்சல் ரெசல்யூஷன், ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். வழங்கப்படுகிறது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP டெப்த் சென்சார், 2MP மேக்ரோ கேமரா, 13MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    • ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • ஐபோன் 16-ஐ சார்ந்து வடிவமைக்கப்பட்டு இருக்கலாம்.

    ஆப்பிள் நிறுவனத்தின் நான்காம் தலைமுறை ஐபோன் SE மாடல் தொடர்பான தகவல்கள் கடந்த சில ஆண்டுகளாக வெளியாகி வருகின்றன. அந்த வகையில், புதிய ஐபோன் SE 4 மாடல் 2025 வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    முந்தைய தகவல்களின் படி ஐபோன் SE 4 மாடலின் டிசைன் ஐபோன் 14-ஐ தழுவி உருவாக்கப்படலாம் என கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஐபோன் SE 4 மாடலில் நாட்ச் நீக்கப்பட்டு டைனமிக் ஐலேண்ட் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. டைனமிக் ஐலேண்ட் அம்சத்தினை ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களில் அறிமுகப்படுத்தியது.

     


    பிறகு, கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 15 சீரிசின் அனைத்து மாடல்களிலும் டைனமிக் ஐலேண்ட் அம்சம் வழங்கப்பட்டது. புதிய ஐபோன் SE 4 குறித்து டிப்ஸ்டர் மஜின் பு வெளியிட்டுள்ள தகவல்களில், "புதிய ஐபோன் SE 4 மாடலின் டிசைன் தற்போது உருவாக்கப்படும் ஐபோன் 16-ஐ சார்ந்து வடிவமைக்கப்பட்டு இருக்கலாம்," என தெரிவித்தார்.

    இத்துடன் ஐபோன் SE நான்காம் தலைமுறை மாடலில் டைனமிக் ஐலேண்ட் அம்சம் வழங்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அளவீடுகளை பொருத்தவரை ஐபோன் SE 4 ஆப்பிள் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்திய ஐபோன் XR போன்றே இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை ஐபோன் SE 4 மாடலில் 6.1 இன்ச் OLED பேனல், ஆப்பிளின் 5ஜி சிப்செட், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்படலாம். முன்னதாக ஆப்பிள் நிறுவனம் 2022-ம் ஆண்டு ஐபோன் SE மாடலை அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில், இதன் விலை ரூ. 43 ஆயிரத்து 900 என துவங்கியது.

    ×