என் மலர்
தொழில்நுட்பம்
- ப்ளிப்கார்ட் வலைதளத்தில் மைக்ரோசைட் உருவாக்கப்பட்டுள்ளது.
- உலகின் சில நாடுகளில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் முற்றிலும் புதிய மோட்டோ G04 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 15-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. இதற்காக ப்ளிப்கார்ட் வலைதளத்தில் மைக்ரோசைட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ப்ளிப்கார்ட் வலைதளத்தில் புதிய ஸ்மார்ட்போனின் விவரங்களும் இடம்பெற்றுள்ளன. அதன்படி புதிய மோட்டோ G04 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இரண்டு வெர்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக மோட்டோ G04 ஸ்மார்ட்போன் உலகின் சில நாடுகளில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய மோட்டோ G04 மாடலில் 6.6 இன்ச் 90Hz டிஸ்ப்ளே, யுனிசாக் T606 ஆக்டா கோர் பிராசஸர், 16MP ஏ.ஐ. கமரா, போர்டிரெயிட் மோட், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இரண்டு வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என்றும் 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 14 ஒ.எஸ். கொண்டிருக்கும் மோட்டோ G04 மாடலில் 3.5mm ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
- கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
- மடிக்கக்கூடிய ஐபேட்-ஐ உருவாக்கி வருவதாக தகவல்.
ஸ்மார்ட்போன் சந்தையில் மடிக்கக்கூடிய போன்கள் பொறியாளர்களுக்கு அதிக சவால் நிறைந்த சாதனமாக இருக்கின்றன. ஆப்பிள் நிறுவனமும் மடிக்கக்கூடிய சாதனத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் இரண்டு ஃப்ளிப்-ஸ்டைல் ஐபோன் மாடல்களை சோதனை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஐபோன் மட்டுமின்றி மடிக்கக்கூடிய ஐபேட் மாடலையும் ஆப்பிள் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆப்பிள் மடிக்கக்கூடிய சாதனம் என கூறி ஏராளமான காப்புரிமைகள் வெளியாகி இருக்கின்றன. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் உருவாக்கி இருக்கும் இரண்டு ப்ரோடோடைப் மாடல்களும் அதன் ஆரம்பகட்ட நிலையிலேயே இருப்பதாக தெரிகிறது.
இவற்றின் உற்பத்தி அடுத்த ஆண்டு வரையிலும் துவங்குவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவுதான். ஆப்பிள் வல்லுனரான மிங் சி கியோ ஆப்பிள் ஃப்ளிப் போன் மாடலின் உற்பத்தி 2026 வாக்கில் துவங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
எனினும், புதிய சாதனத்தின் டிசைன் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை எனில், இந்த திட்டத்தையே ஆப்பிள் நிறுவனம் முழுமையாக ரத்து செய்யலாம் என்று கூறப்படுகிறது. ப்ளிப் ஐபோன் மட்டுமின்றி ஆப்பிள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஐபேட் மாடலையும் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ரியல்மி 12 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸர் உள்ளது.
- ரியல்மி 12 ப்ரோ பிளஸ் மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.
ரியல்மி நிறுவனம் சமீபத்தில் தான் ரியல்மி 12 ப்ரோ 5ஜி மற்றும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 5ஜி என இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ரியல்மி 12 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸரும், ரியல்மி 12 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸரும் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் மாட்ல்களில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரியல்மி யுஐ 5.0 ஒ.எஸ். மற்றும் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. ரியல்மி 12 ப்ரோ பிளஸ் மாடல் மூன்றுவித நிறங்களில் கிடைக்கின்றன. இந்த நிலையில், ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் டிரான்ஸ்பேரன்ட் பேக் பேனல் கொண்ட மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தெரியவந்துள்ளது.

ஐரோப்பாவுக்கான ரியல்மி தலைமை செயல் அதிகாரி பிரான்சிஸ் வாங் இது தொடர்பான புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். புகைப்படத்தின் படி புதிய ஸ்மார்ட்போனின் பின்புறம் கேமரா பாகங்கள் தெளிவாக காட்சியளிக்கின்றன. புதிய வெர்ஷனுக்கான டீசர் வெளியிடப்பட்டு இருக்கும் நிலையில், இது எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
இந்திய சந்தையில் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் நேவிகேட்டர் பெய்க், சப்மரைன் புளூ மற்றும் எக்ஸ்புளோரர் ரெட் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என துவங்கி அதிகபட்சம் ரூ. 33 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- புதிய சியோமி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- சியோமி 14 சீரிஸ் மாடல்கள் தலைசிறந்த கேமரா சிஸ்டம் கொண்டிருக்கும்.
சியோமி நிறுவனம் தனது சியோமி 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் 2024 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து இருக்கிறது. வரும் பிப்ரவரி 25-ம் தேதி பார்சிலோனாவில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் முற்றிலும் புதிய சியோமி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
புதிய ஸ்மார்ட்போனிற்காக சியோமி நிறுவனம் லெய்காவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. இதன் மூலம் சியோமி 14 சீரிஸ் மாடல்கள் தலைசிறந்த கேமரா சிஸ்டம் கொண்டிருக்கும் என தெரிகிறது.
"இந்த போன் மனிதர்கள் புரிந்து கொள்ளும் வகையை மிஞ்சும் அளவுக்கு புகைப்படங்களை வெளிப்படுத்துகிறது. லெய்காவுடன் இணைந்து மொபைல் புகைப்பட கலையில் முற்றிலும் புதிய அத்தியாயத்தை துவங்குகிறோம்," என சியோமி தெரிவித்துள்ளது.

சியோமி 14 மற்றும் சியோமி 14 ப்ரோ மாடல்கள் ஏற்கனவே சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் சியோமி 14 அல்ட்ரா மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இதுபற்றிய அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
சர்வதேச வெளியீட்டுடன் சியோமி நிறுவனம் புதிய சியோமி 14 சீரிஸ் இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசர்களையும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், சியோமி 14 சீரிஸ் மாடல்கள் அதன் சர்வதேச வெளியீட்டின் போதே இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம்.
சர்வதேச மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் சியோமி நிறுவனம் தனது சியோமி 14 சீரிஸ் மாடல்களை பிப்ரவரி 25-ம் தேதி (இந்திய நேரப்படி இரவு 7.30 மணி) அறிமுகம் செய்ய இருக்கிறது.
- திறம்பட செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- தகவல் பரிமாற்றத்தின போது இடையூறுகளை தவிர்க்கும் திறன் உள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ரக்கட் ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. மேலும், இது என்டர்பிரைஸ் பயன்பாடுகளுக்காக அறிமுகம் செய்யப்பட்ட முதல் சாம்சங் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. இது மிக கடினமான காலநிலைகளிலும் திறம்பட செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
அதிவேக கனெக்டிவிட்டி, வெளிப்புற இடர்பாடுகளால் கனெக்டிவிட்டியில் ஏற்படும் இடையூறுகளை தவிர்க்கும் திறன் உள்ளிட்டவை இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களாக சாம்சங் குறிப்பிட்டுள்ளது. புதிய கேலக்ஸி எக்ஸ்கவர் 7 ரக்கட் ஸ்மார்ட்போன் MIL-STD-810H3 சான்று, IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 அம்சங்கள்:
6.6 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ 120Hz LCD ஸ்கிரீன்
குளோவ் மோட், கார்னிங் கொரல்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் பாதுகாப்பு
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 6100 பிளஸ் பிராசஸர்
ARM மாலி G57 MC2 GPU
6 ஜி.பி. ரேம்
128 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 14 சார்ந்த சாம்சங் ஒன் யுஐ 6
டூயல் சிம் ஸ்லாட்
சாம்சங் நாக்ஸ் மற்றும் சாம்சங் நாக்ஸ் வால்ட்
எக்ஸ் கவர் கீ கஸ்டமைசேஷன் வசதி
50MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
5MP செல்ஃபி கேமரா
வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்
MIL-STD-810H
3.5mm ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
யு.எஸ்.பி. டைப் சி 3.2
4050 எம்.ஏ.ஹெச். பேட்டரி
இந்திய சந்தையில் புதிய சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 மாடலின் ஸ்டான்டர்டு எடிஷன் விலை ரூ. 27 ஆயிரத்து 208 என்றும் என்டர்பிரைஸ் எடிஷன் விலை ரூ. 27 ஆயிரத்து 530 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் ஸ்டான்டர்டு எடிஷன் வாங்குவோருக்கு ஒரு வருட வாரண்டியும், என்டர்பிரைஸ் எடிஷன் வாங்குவோருக்கு இரண்டு ஆண்டுகள் வாரண்டியும் வழங்கப்படுகிறது. இத்துடன் கேலக்ஸி எக்ஸ்கவர் 7 என்டர்பிரைஸ் எடிஷன் வாங்கும் போது ஒரு வருடத்திற்கான நாக்ஸ் சூட் சந்தா வழங்கப்படுகிறது.
- சாம்சங் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் டைட்டானியம் பயன்படுத்தியது.
- ஐபோன் 15 ப்ரோ சீரிசில் டைட்டானியம் பயன்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலில் அலுமினியத்திற்கு மாற்றாக டைட்டானியம் பயன்படுத்தி இருப்பதாக அறிவித்து இருந்தது. முன்னதாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 15 ப்ரோ சீரிசில் ஆப்பிள் நிறுவனம் டைட்டானியம் பயன்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக சாம்சங் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் டைட்டானியம் பயன்படுத்தி இருந்தது.
இந்த நிலையில், முன்னணி யூடியூபரான ஜாக் நெல்சன் கேலக்ஸி S24 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் ஒவ்வொரு பாகங்களையும் தனித்தனியாக பிரித்து, அதன் உறுதித்தன்மையை சோதனைக்கு உட்படுத்தினார். அதில், கேலக்ஸி S24 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனம் குறைந்த தரம் கொண்ட டைட்டானியம் பயன்படுத்தி இருப்பது அம்பலமாகி இருக்கிறது.

ஆப்பிள் தனது ஐபோன் 15 ப்ரோ சீரிசில் அதிக தரமுள்ள டைட்டானியம் பயன்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலின் டியர் டவுன் வீடியோ யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வீடியோவில் ஸ்மார்ட்போனின் ஃபிரேம் XRF ஸ்கேன் செய்யப்பட்டதும், அதில் சாம்சங் நிறுவனம் இரண்டாம் தர டைட்டானியத்தை பயன்படுத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது.
ஆப்பிள் தனது ஐபோன்களில் பயன்படுத்தி இருக்கும் டைட்டானியத்தின் விலை இந்திய மதிப்பில் ரூ. 800-இல் துவங்கி ரூ. 1200 வரை இருக்கலாம். சாம்சங் தனது கேலக்ஸி S24 அல்ட்ரா மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் டைட்டானியத்தின் விலை ரூ. 250-இல் துவங்கி ரூ. 400 வரை இருக்கலாம் என்று நெல்சன் தெரிவித்து இருக்கிறார்.
- வெளிப்புற சத்தத்தை தடுத்து, சிறப்பான தகவல் பரிமாற்றத்திற்கு வழி செய்கிறது.
- பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 40 மணி நேரத்திற்கு பிளேடைம் கிடைக்கும்.
ஐடெல் நிறுவனம் தனது முற்றிலும் புதிய குறைந்த விலை இயர்பட்ஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. ஐடெல் S9 ப்ரோ என அழைக்கப்படும் புதிய இயர்பட்ஸ் அந்நிறுவனத்தின் ரோர் 75 ஓபன் இயர்பட்ஸ் வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
புதிய ஐடெல் S9 ப்ரோ மாடலில் இன்-இயர் டிசைன் உள்ளது. இதில் 10mm பாஸ் பூஸ்ட் டிரைவர்கள், என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த அம்சம் அழைப்புகளின் போது வெளிப்புற சத்தத்தை தடுத்து, சிறப்பான தகவல் பரிமாற்றத்திற்கு வழி செய்கிறது.
இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 40 மணி நேரத்திற்கு பிளேடைம் கிடைக்கும். இத்துடன் ப்ளூடூத் 5.3, 45ms அல்ட்ரா லோ லேடன்சி மோட், டச் கண்ட்ரோல்கள், டைப் சி போர்ட் போன்ற வசதிகள் உள்ளன.

ஐடெல் S9 ப்ரோ அம்சங்கள்:
10mm பாஸ் பூஸ்ட் டிரைவர்கள்
டூயல் மைக் என்விரான்மென்டல் நாய்ஸ் கேன்சலேஷன்
45ms லோ லேடன்சி கேமிங் மோட்
ப்ளூடூத் 5.3
இயர்பட் (40 எம்.ஏ.ஹெச். பேட்டரி)
கேஸ் (400 எம்.ஏ.ஹெச். பேட்டரி)
40 மணி நேர பிளேடைம்
ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி 10 நிமிட சார்ஜில் 100 நிமிடங்கள் பிளேபேக்
டைப் சி சார்ஜிங்
IOX5 ஸ்பிலாஷ் ப்ரூஃப் வசதி
இன்-இயர் டிடெக்ஷன்
இந்திய சந்தையில் புதிய ஐடெல் S9 ப்ரோ இயர்பட்ஸ் டார்க் புளூ மற்றும் நெபுளா பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 799 ஆகும். விற்பனை நாடு முழுக்க சில்லறை விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.
- ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான முன்பதிவும் துவங்கியது.
- ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு ஏராளமான சலுகைகள் அறிவிப்பு.
ரியல்மி நிறுவனம் தனது ரியல்மி 12 ப்ரோ மற்றும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. மேலும், அறிமுகத்தின் போதே, புதிய ஸ்மார்ட்போன் மாடல்களுக்கான முன்பதிவும் துவங்கியது. இந்த வரிசையில், ரியல்மி 12 ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை துவங்கியுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரியல்மி 12 ப்ரோ மற்றும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சப்மரைன் புளூ மற்றும் நேவிகேட்டர் பெய்க் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

விலையை பொருத்தவரை ரியல்மி 12 ப்ரோ 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 25 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 26 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
ரியல்மி 12 ப்ரோ பிளஸ் மாடலின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மாடல் விலை ரூ. 31 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அறிமுக சலுகைகள்:
ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் ரியல்மி, ப்ளிப்கார்ட் வலைதளத்தில் வாங்குவோருக்கு 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 2 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகிறது.
ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் வாங்குவோருக்கு ரூ. 2 ஆயிரம் வரை கேஷ்பேக், எக்சேன்ஜ் சலுகையின் கீழ் ரூ. 4 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் வாங்கும் போது ரூ. 2 ஆயிரம் வரையிலான சலுகையும், 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகையும் வழங்கப்படுகிறது.
- ஹானர் பிரான்டின் புதிய சாதனங்கள் உருவாகி இருக்கின்றன.
- பல்வேறு பிரிவுகளில் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
ஹெச் டெக் நிறுவனம் தனது ஹானர் X9b ஸ்மார்ட்போனுடன் ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் X5 மற்றும் ஹானர் சாய்ஸ் வாட்ச் மாடல்களையும் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. அந்த வகையில், புதிய சாதனங்கள் பிப்ரவரி 15-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
புதிய X சீரிஸ் அறிமுகத்தின் மூலம் ஹானர் நிறுவனம் பல்வேறு பிரிவுகளில் அதிக வாடிக்கையாளர்களை கவர முடியும் என்று தெரிவித்து இருக்கிறது. ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் X5 மாடலில் சிறப்பான ஆடியோ அனுபவம் வழங்கும். இன்-இயர் டிசைன் கொண்டிருக்கும் சாய்ஸ் இயர்பட்ஸ் X5 30db வரை ANC, 35 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிகிறது.

இந்த இயர்பட்ஸ்-ஐ ஹானர் ஏ.ஐ. ஸ்பேஸ் செயலி மூலம் கட்டுப்படுத்த முடியும். இது ஹானர் சாதனங்களிடையே ஒருமித்த கனெக்டிவிட்டியை வழங்கும் என்றும் நம்பத்தகுந்த அனுபவத்தை கொடுக்கும் என்றும் ஹானர் தெரிவித்துள்ளது. இந்த இயர்பட்ஸ் IP54 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டிருக்கும் என்றும் குறைந்த எடை மற்றும் லோ லேடன்சி வசதிகளை கொண்டிருக்கிறது.
ஹானர் சாய்ஸ் வாட்ச் 1.95 இன்ச் AMOLED மிக மெல்லிய டிஸ்ப்ளே, பில்ட்-இன் ஜி.பி.எஸ்., ஒற்றை க்ளிக் மூலம் SOS காலிங், நீண்ட நேர பேட்டரி பேக்கப் போன்ற வசதிகளை வழங்குகிறது. இத்துடன் ஹானர் ஹெல்த் ஆப் மூலம் உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்கும் வசதி வழங்கப்படுகிறது. இதில் 5 ATM தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி உள்ளது.
ஹானர் X9b போன்றே ஹானர் சாய்ஸ் இயர்பட்ஸ் X5 மற்றும் ஹானர் சாய்ஸ் வாட்ச் உள்ளிட்டவை அமேசான் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
- ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். கொண்டிருக்கும் என தகவல்.
- விர்ச்சுவல் ரேம் வசதி வழங்கப்படலாம்.
ரெட்மி A2 வரிசையில் சியோமி நிறுவனம் தனது அடுத்த பட்ஜெட் ரக ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ரெட்மி A3 பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 13MP பிரைமரி கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.
புதிய ரெட்மி A3 ஸ்மார்ட்போன் பல்வேறு ஆப்பிரிக்கா வலைதளங்களில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்களில் இந்த ஸ்மார்ட்போன் பிளாக், புளூ மற்றும் ஃபாரஸ்ட் கிரீன் நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இத்துடன் வாட்டர் டிராப் ஸ்டைல் கொன்ட நாட்ச் வழங்கப்படுகிறது.
இது தொடர்பான வலைதள விவரங்களில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். கொண்டிருக்கும் என்றும் இதில் 6.71 இன்ச் HD+ 1600x720 பிக்சல் எல்.சி.டி. ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், மீடியாடெக் பிராசஸர், 4 ஜி.பி. ரேம், விர்ச்சுவல் ரேம் வசதி உள்ளிட்டவை வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 4ஜி, வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட், 3.5mm ஆடியோ ஜாக், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.
- இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர் கொண்டிருக்கலாம்.
- இதில் ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
நத்திங் நிறுவனம் தனது புதிய போன் 2a ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடபட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய போன் 2a ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுவது உறுதியாகி இருக்கிறது.
இதுதவிர புதிய ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. அதன்படி நத்திங் போன் 2a மாடல் பிளாக் நிறத்தில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது. இத்துடன் ஸ்கிரீனின் மத்தியில் செல்ஃபி கேமராவுக்கான பன்ச் ஹோல் கட்-அவுட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

புதிய நத்திங் ஸ்மார்ட்போனிற்காக ப்ளிப்கார்ட் வலைதளத்தில் பிரத்யேக மைக்ரோசைட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் நத்திங் போன் 2a மாடலுக்கான டீசர்கள் இடம்பெற்றுள்ளன. ஸ்மார்ட்போனின் அம்சங்கள் அல்லது வெளியீட்டு தேதி என எந்த தகவலும் இடம்பெறவில்லை.
எனினும், நத்திங் போன் 2a ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் அம்சங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. அதன்படி, நத்திங் போன் 2a மாடலின் டிசைன் அதன் முந்தைய வெர்ஷன்களை போன்றே காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனை சுற்றி பிரைவசி கவர் வழங்கப்பட்டு இருக்கிறது. இருந்தபோதிலும், இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என தெரிகிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி நத்திங் போன் 2a மாடலில் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர், ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ்., 50MP பிரைமரி கேமரா, 50MP சென்சார், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது.
- 2 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர்.
- அசாத்திய கம்ப்யூட்டிங் அனுபவத்தை வழங்குகிறது.
ஆப்பிள் நிறுவனத்தன் விஷன் ப்ரோ ஹெட்செட் ஒருவழியாக விற்பனைக்கு வந்தது. முதற்கட்டமாக அமெரிக்காவில் இதன் விற்பனை துவங்கியுள்ளது. ஏற்கனவே இந்த ஹெட்செட்-க்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வந்தது. முன்பதிவின் போதே, இந்த ஹெட்செட்-ஐ வாங்க 2 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்திருந்தனர்.
புதிய ஹெட்செட் பயனர்கள் தொழில்நுட்பத்துடன் எப்படி உரையாடுகின்றனர் என்பதை மாற்றியமைக்கும் வகையில் பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டிருக்கிறது. ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் முப்பரிமாண டிஜிட்டல் சூழலை நம் கண் முன்னே கொண்டுவருகிறது. இது தனித்துவம் மிக்க, அசாத்திய கம்ப்யூட்டிங் அனுபவத்தை வழங்குகிறது.

ஆப் ஸ்டோரில் பத்து லட்சத்திற்கும் அதிக செயலிகள் உள்ள நிலையில், புதிய ஏ.ஆர். / வி.ஆர். ஹெட்செட்-இல் பயன்படுத்துவதற்கென பிரத்யேகமாக 600 புதிய செயலிகள் மற்றும் கேம்கள் உருவாக்கப்பட்டுள்ளன. புதிய செயலிகள் ஆப்பிள் விஷன் ப்ரோ அம்சங்களை முழுமையாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்-இன் விலை 3499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 90 ஆயிரத்து 415 என துவங்குகிறது. முதற்கட்டமாக அமெரிக்காவில் இதன் விற்பனை துவங்கியுள்ள நிலையில், மற்ற நாடுகளில் எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.






