search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    அசத்தல் பிராசஸருடன் அறிமுகமாகும் Z சீரிஸ் ஸ்மார்ட்போன்.. புது அப்டேட் கொடுத்த ஐகூ
    X

    அசத்தல் பிராசஸருடன் அறிமுகமாகும் Z சீரிஸ் ஸ்மார்ட்போன்.. புது அப்டேட் கொடுத்த ஐகூ

    • இதன் அறிமுக தேதி உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
    • பென்ச்மார்க் பரிசோதனைகளில் 734000 புள்ளிகளை பெற்றிருக்கிறது.

    ஐகூ நிறுவனம் தனது புதிய Z சீரிஸ் ஸ்மார்ட்போன் மார்ச் 12-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்து உள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் டீசர்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இதன் அறிமுக தேதி உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐகூ Z9 ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்திய ஐகூ Z7 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இதுவரை வெளியிடப்பட்ட டீசர்களில் இந்த ஸ்மார்ட்போன் இரட்டை கேமரா சென்சார்கள், ஸ்மார்ட்போனின் பின்புறம் பேட்டன் மற்றும் பச்சை நிறம் கொண்டிருப்பது உறுதியானது.


    இத்துடன் இந்த பிரிவில் மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை ஐகூ Z9 பெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பென்ச்மார்க் பரிசோதனைகளில் 734000 புள்ளிகளை பெற்றிருப்பதாகவும் தெரிவித்து இருந்தது.

    கீக்பென்ச் விவரங்களின் படி இந்த ஸ்மார்ட்போன் I2302 என்ற மாடல் நம்பர் கொண்டிருப்பதும், இதில் 7200 பிராசஸர், ஆண்ட்ராய்டு 14 ஒ.எஸ்., 8 ஜி.பி. ரேம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுதவிர புதிய ஐகூ Z9 ஸ்மார்ட்போன் 1.5K OLED டிஸ்ப்ளே மற்றும் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.


    இந்திய சந்தையில் புதிய ஐகூ Z9 ஸ்மார்ட்போன் அமேசான் மற்றும் ஐகூ வலைதளங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போன் பற்றி இதர விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

    Next Story
    ×