என் மலர்
தொழில்நுட்பம்
- லாவா யுவா 3 ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்களை பெறுகிறது.
லாவா நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன் லாவா யுவா 3 என அழைக்கப்படுகிறது. இதில் 6.5 இன்ச் பன்ச் ஹோல் டிஸ்ப்ளே, யுனிசாக் T606 பிராசஸர், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, அதிகபட்சம் 128 ஜி.பி. மெமரி வழங்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 13 ஒ.எஸ். கொண்டிருக்கும் லாவா யுவா 3 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 14 அப்கிரேடு மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு காலாண்டு வாக்கில் செக்யுரிட்டி அப்டேட்களை வழங்குவதாக லாவா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

லாவா யுவா 3 அம்சங்கள்:
6.5 இன்ச் 1600x720 பிக்சல் HD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் யுனிசாக் T606 பிராசஸர்
மாலி G 57 MC2 650MHz GPU
4 ஜி.பி. ரேம்
64 ஜி.பி. / 128 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13
டூயல் சிம் ஸ்லாட்
13MP பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
5MP செல்ஃபி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
யு.எஸ்.பி. டைப் சி
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
18 வாட் சார்ஜிங்
லாவா யுவா 3 ஸ்மார்ட்போன் எக்லிப்ஸ் பிளாக், காஸ்மிக் லாவென்டர் மற்றும் கேலக்ஸி வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 6 ஆயிரத்து 799 என்றும் 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 7 ஆயிரத்து 299 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் வலைதளத்தில் பிப்ரவரி 7-ம் தேதி துவங்குகிறது.
- மற்றொரு மாடல் விவரங்களும் இடம்பெற்றுள்ளது.
- கேலக்ஸி Z ஃபோல்டு 6 சீரிஸ்-உடன் அறிமுகம் செய்யப்படலாம்.
சாம்சங் நிறுவனத்தின் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், இந்த கேலக்ஸி Z ஃபோல்டு 6 ஸ்மார்ட்போனின் என்ட்ரி லெவல் மாடல் விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் கேலக்ஸி Z ஃபோல்டு 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.
இதன் மூலம் சாம்சங் நிறுவனம் ஒரே ஆண்டில் இரண்டுக்கும் மேற்பட்ட கேலக்ஸி ஃபோல்டபில் சாதனத்தை அறிமுகம் செய்வது முதல் முறையாக இருக்கும். சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் இறக்குமதி / ஏற்றுமதி டேட்டாபேஸ்-இல் கேலக்ஸி Z ஃபோல்டு 6 மற்றும் Z ப்ளிப் 6 மாடல்களுடன் மற்றொரு மாடல் விவரங்களும் இடம்பெற்றுள்ளது.

கோப்புப்படம்
அதன்படி இரு மாடல்களின் குறியீட்டு பெயர் Q6 மற்றும் B6 என சூட்டப்பட்டுள்ளன. இவற்றுடன் Q6A என்ற குறியீட்டு பெயர் கொண்ட சாதனமும் இடம்பெற்று இருக்கிறது. இது சாம்சங்-இன் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஒரு ஆண்டுக்கும் மேலாக உருவாக்கப்பட்டு வரலாம் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது.
மேலும் இது சாம்சங்கின் முதல் குறைந்த விலை மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என கூறப்படுகிறது. உண்மையில் இத்தகைய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எனினும், இது பற்றிய தகவல்கள் மட்டும் அடிக்கடி இணையத்தில் வெளியாகி வருகின்றன.
- முன்னணி நிறுவனங்கள் அதிகளவில் முதலீடுகளை செய்து வருகின்றன.
- மெட்டல் மூலம் உருவக்கப்பட்ட இதர மெக்கானிக்கல் பாகங்கள் அடங்கும்.
இந்தியாவில் ஸ்மார்ட்போன் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டு இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஸ்மார்ட்போன் உற்பத்தி செய்வதற்காக முன்னணி நிறுவனங்கள் அதிகளவில் முதலீடுகளை செய்து வருகின்றன.
அந்த வரிசையில், தற்போது இறக்குமதி வரி குறைக்கப்பட்டு இருப்பதால், ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போதைய அறிவிப்பின் படி மொபைல் போன்களின் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி 15-இல் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது.

கோப்புப்படம்
இதில் மொபைல் போன்களின் பேட்டரி கவர், முன்புற கவர், மிடில் கவர், மெயின் லென்ஸ், பேக் கவர், ஜி.எஸ்.எம். ஆன்டெனா, பி.யு. கேஸ், சீலிங் கேஸ்கெட், சிம் சாக்கெட், ஸ்கிரீயூ மற்றும் பிளாஸ்டிக், மெட்டல் மூலம் உருவக்கப்பட்ட இதர மெக்கானிக்கல் பாகங்கள் என அனைத்தும் அடங்கும்.
இறக்குமதி வரியை குறைக்க மொபைல் போன் உற்பத்தியாளர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
- விவோ Y சீரிஸ், T சீரிஸ் மாடல்களின் விலை குறைப்பு.
- விலை குறைப்பு ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது.
விவோ நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலை குறைப்பு அறிவித்து இருக்கிறது. இத்துடன் விவோ Y200 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய வேரியன்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி என இரண்டு வேரியண்ட்களில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதுதவிர விவோ Y27 மற்றும் விவோ T2 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. விவோ Y200 5ஜி மாடலின் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் தற்போது ரூ. 23 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 21 ஆயிரத்து 999 என்றும் மாறி இருக்கிறது. விலை குறைப்பு அமேசான், ப்ளிப்கார்ட், விவோ இந்தியா இ ஸ்டோர் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் அமலுக்கு வந்துள்ளது.

விவோ Y27 ஸ்மார்ட்போனின் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் முன்னதாக ரூ. 14 ஆயிரத்து 999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 1000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் விவோ Y200 5ஜி மாடலை எளிய மாத தவணை முறை வசதியுடன் வாங்கிட முடியும். இத்துடன் எஸ்.பி.ஐ., ஐ.டி.எஃப்.சி. ஃபர்ஸ்ட், பேங்க் ஆஃப் பரோடா, டி.பி.எஸ். வங்கி, ஃபெடரல் வங்கி மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி வாடிக்கையாளர்கள் ரூ. 2 ஆயிரம் வரை கேஷ்பேக் பெற முடியும். விவோ ஸ்மார்ட்போன்களின் புதிய விலை ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டது.
- இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 2.9 லட்சம் ஆகும்.
- விற்பனை பிப்ரவரி 2-ம் தேதி துவங்குகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் அதிக விலை கொண்டிருக்கும் போதிலும், விற்பனையில் அசத்தி வருகிறது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 2.9 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆப்பிள் விஷன் ப்ரோ மாடலை வாங்க பத்தே நாட்களில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஹெட்செட் விற்பனை அமெரிக்காவில் பிப்ரவரி 2-ம் தேதி துவங்க இருக்கிறது. முன்னதாக இந்த ஹெட்செட் கடந்த ஆண்டு நடைபெற்ற 2023 சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் ஆப்பிள் விஷன் ப்ரோ இந்தியா உள்பட மற்ற நாடுகளில் எப்போது விற்பனைக்கு வரும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

ஜனவரி 29-ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் 2 லட்சத்திற்கும் அதிக விஷன் ப்ரோ ஹெட்செட்களை விற்பனை செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ஹெட்செட்டிற்கான முன்பதிவு ஜனவரி 19-ம் தேதி துவங்கியது.
முன்னதாக சர்வதேச வல்லுனரான மிங் சி கியோ வெளியிட்ட தகவல்களில், ஜனவரி 19 முதல் ஜனவரி 21-ம் தேதிக்குள் மட்டும் 1 லட்சத்து 60 ஆயிரத்தில் இருந்து 1 லட்சத்து 80 ஆயிரம் விஷன் ப்ரோ யூனிட்களை விற்பனை செய்திருக்கலாம் என்று தெரிவித்து இருந்தார். மேலும் 5 லட்சம் யூனிட்கள் வரை வினியோகம் செய்வதிலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு சவாலாக இருக்காது என்று அவர் தெரிவித்து இருந்தார்.
- போட் ஏர்டோப்ஸ் 91 மாடலில் ENX தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
- போட் ஏர்டோப்ஸ் 91 மாடல் அதிவேக சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.
போட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஏர்டோப்ஸ் 91 இயர்பட்ஸ் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 45 மணி நேர பேட்டரி பேக்கப், குவிக் சார்ஜ் வசதி, 10mm டிரைவர், அதிகபட்சம் 50ms லோ லேடன்சி, ENX தொழில்நுட்பம் என ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய போட் ஏர்டோப்ஸ் 91 மாடல் ஆக்டிவ் பிளாக், மிஸ்ட் கிரே மற்றும் ஸ்டாரி புளூ என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான் மற்றும் போட் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் நடைபெறுகிறது.

போட் ஏர்டோப்ஸ் 91 அம்சங்கள்:
10mm ஆடியோ டிரைவர்கள்
பீஸ்ட் மோட் மற்றும் லோ லேடன்சி வசதி
டச் கண்ட்ரோல்
டூயல் மைக் மற்றும் ENX தொழில்நுட்பம்
ப்ளூடூத் 5.3
அதிவேக கனெக்டிவிட்டிக்காக IWP (இன்ஸ்டா வேக் அன்ட் பேர்)
வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதி
IPX4 ஸ்பிலாஷ் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட்
அதிகபட்சம் 45 மணி நேர பிளேபேக்
ASAP ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
யு.எஸ்.பி. டைப் சி கனெக்டர்
10 நிமிட சார்ஜில் 120 நிமிட பிளேபேக் கிடைக்கும்
- இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஹை ஒ.எஸ். 13 கொண்டிருக்கிறது.
- இதில் 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டுள்ளது.
டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இதில் 6.56 இன்ச் HD+ டாட்-இன் 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 32MP செல்ஃபி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஹை ஒ.எஸ். 13 கொண்டிருக்கும் டெக்னோ ஸ்பார்க் 20 பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டூயல் ஸ்பீக்கர்கள், டி.டி.எஸ். ஆடியோ, மேஜிக் ஸ்கின் 2.0 போன்ற வசதிகள் உள்ளன.

டெக்னோ ஸ்பார்க் 20 அம்சங்கள்:
6.56 இன்ச் 1612x720 பிக்சல் HD+ 90Hz ரிப்ரெஷ் ரேட்
மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர்
ARM மாலி G52 GPU
8 ஜி.பி. ரேம்
256 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஹை ஒ.எஸ். 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, ஏ.ஐ. கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
32MP செல்ஃபி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ்
3.5mm ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட்
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
யு.எஸ்.பி. டைப் சி
5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
டெக்னோ ஸ்பார்க் 20 ஸ்மார்ட்போன் கிராவிட்டி பிளாக், சைபர் வைட், நியான் கோல்டு மற்றும் மேஜிக் ஸ்கின் 2.0 (புளூ) போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 10 ஆயிரத்து 499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை பிப்ரவரி 2-ம் தேதி அமேசான் வலைதளத்தில் நடைபெற இருக்கிறது.
- முன்னதாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்தது.
- ஐ.ஒ.எஸ். வெர்ஷனில் இந்த வசதி டெஸ்டிங் செய்யப்படுகிறது.
வாட்ஸ்அப் நிறுவனம் ஐ.ஒ.எஸ். வெர்ஷனில் பாஸ்கீ வசதியை வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பாஸ்கீ அம்சம் பயனர்கள் வாட்ஸ்அப்-ஐ பாஸ்வேர்டு இன்றி பயோமெட்ரிக் மூலம் லாக்-இன் செய்யும் வசதியை வழங்குகிறது. முன்னதாக இதே போன்ற வசதி ஆண்ட்ராய்டு வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில், தற்போது ஐ.ஒ.எஸ். வெர்ஷனில் பாஸ்கீ வசதி வழங்கப்படுகிறது. தற்போது டெஸ்டிங் செய்யப்படும் நிலையில், விரைவில் இந்த வசதி வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். வெர்ஷனிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா 2.24.2.73 வெர்ஷனில் பாஸ்கீ அம்சத்திற்கான வசதி டெஸ்டிங் செய்யப்படுகிறது.

பாஸ்கீ அம்சம் ஹார்டுவேர் சார்ந்து இயங்கும் அம்சம் ஆகும். இது ஃபிடோ அலையன்ஸ் மூலம் முன்னணி நிறுவனங்களான ஆப்பிள், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் உடனான கூட்டணி மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதை கொண்டு பயனர்கள் டச் ஐ.டி. அல்லது ஃபேஸ் ஐ.டி. மூலம் சைன் இன் செய்ய முடியும்.
ஆண்ட்ராய்டில் வாட்ஸ்அப் பாஸ்கீ விவரங்கள் கூகுளின் பாஸ்வேர்டு மேனேஜரில் சேமிக்கப்படுகிறது. தற்போது டெஸ்டிங் செய்யப்படும் நிலையில், வாட்ஸ்அப் பாஸ்கீ அம்சம் முதலில் தேர்வு செய்யப்பட்ட சிலருக்கு மட்டும் பீட்டா வடிவில் வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் விரைவில் மற்ற பயனர்களுக்கும் செயலியின் ஸ்டேபில் வெர்ஷனில் வழங்கப்படும்.
- புதிய சாதனத்தின் காப்புரிமை விவரங்கள் சமீபத்தில் வெளியானது.
- தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமை பெற்று இருந்தது.
சாம்சங் நிறுவனம் சதுரங்க வடிவம் கொண்ட ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் எக்ஸ்டென்ட் ஆகும் வசதி கொண்ட டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த சாதனத்தின் காப்புரிமை விவரங்கள் சமீபத்தில் வெளியானது.
அதில் புதிய சாதனம் சதுரங்க வடிவம் கொண்டிருப்பதும், தானாக நீட்டித்துக் கொள்ளும் டிஸ்ப்ளே ஒன்றும் இடம்பெற்று இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த டிஸ்ப்ளே, சாதனத்தில் இருந்து நீளும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக சாம்சங் நிறுவனம் இரண்டு தொழில்நுட்பங்களுக்கு காப்புரிமை பெற்று இருந்தது.

காப்புரிமைகளில் இரு தொழில்நுட்பங்களும்- ஃபிளெக்ஸ் மேஜிக் மற்றும் ஃபிளெக்ஸ் மேஜிக் பிக்சல் என்ற பெயர் கொண்டிருந்தன. இவை ஐரோப்பிய காப்புரிமை பதிவுக்கான தளம் மற்றும் ஐரோப்பிய யூனியன் காப்புரிமை அலுவலகத்தில் காப்புரிமை கோரி விண்ணப்பிக்கப்பட்டு இருந்தன. இந்த தொழில்நுட்பங்கள் "ஸ்மார்ட்போன்களுக்கான நீளும் ஸ்கிரீன்" என குறிப்பிடப்பட்டுள்ளன.
அமெரிக்க காப்புரிமை வலைதளத்திலும் இதே போன்ற தொழில்நுட்பம் இடம்பெற்று இருக்கிறது. எனினும், இவற்றில் இத்தகைய தகவல் எதுவும் இடம்பெறவில்லை. காப்புரிமை தகவல்களின் படி புதிய டிஸ்ப்ளே பல்வித மூலைகளில் இருந்து நீட்டித்துக் கொள்ளும் திறன் கொண்டிருக்கிறது. காப்புரிமையில் சதுரங்க வடிவம் கொண்ட ஸ்மார்ட்போன் பற்றி எங்கும் குறிப்பிடப்படவில்லை.
எனினும், அதில் உள்ள தகவல்கள் இது அத்தகைய வடிவம் கொண்ட சாதனம் தான் என்பதை உணர்த்தும் வகையில் உள்ளது. இதுதவிர இந்த தொழில்நுட்பத்தை ஸ்மார்ட் டி.வி., ஏ.ஆர். எனப்படும் செயற்கை நுண்ணறிவு சாதனங்கள், ஸ்மார்ட்வாட்ச் உள்ளிட்டவைகளிலும் பயன்படுத்த முடியும் என தெரிகிறது. புதிய சாதனம் பற்றி சாம்சங் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.
- 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
- 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ G24 பவர் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.65 இன்ச் HD+LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பன்ச் ஹோலில் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.
ஆண்ட்ராய்டு 14 ஒ.எஸ். கொண்டிருக்கும் மோட்டோ G24 பவர், மூன்று ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை பெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா உள்ளது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

மோட்டோ G24 பவர் அம்சங்கள்:
6.56 இன்ச் 1612x720 பிக்சல் HD+ IPS டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G85 பிராசஸர்
ARM- மாலி G52 2EEMC2 GPU
4 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம்
128 ஜி.பி. மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 14 சார்ந்த மை யு.எக்ஸ்.
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
2MP மேக்ரோ கேமரா
16MP செல்ஃபி கேமரா
3.5mm ஆடியோ ஜாக், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ்
எஃப்.எம். ரேடியோ
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
வாட்டர் ரெசிஸ்டன்ட் டிசைன்
டூயல் 4ஜி எல்.டி.இ., வைபை, ப்ளூடூத் 5.0
யு.எஸ்.பி. டைப் சி
6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
30 வாட் டர்போ சார்ஜிங்
புதிய மோட்டோ G24 பவர் ஸ்மார்ட்போன் கிளேசியர் புளூ மற்றும் இன்க் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம் விலை ரூ. 8 ஆயிரத்து 999 என்றும், 8 ஜி.பி. ரேம் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இத்துடன் எக்சேன்ஜ் சலுகையின் கீழ் ரூ. 750 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மோட்டோ G24 பவர் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட், மோட்டோரோலா வலைதளங்கள் மற்றும் ரிடெயில் ஸ்டோர்களில் பிப்ரவரி 7-ம் தேதி விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
- ஸ்மார்ட்போனிற்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- ஸ்மார்ட்போனை ரூ. 27 ஆயிரத்து 999-க்கு வாங்கிடலாம்.
ஐகூ நிறுவனம் கடந்த ஜூலை மாதம் நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் ஐகூ நியோ 7 ப்ரோ ஸ்மார்ட்போனிற்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இருவித நிறங்கள் மற்றும் இரண்டு ரேம், ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் கிடைக்கும் ஐகூ நியோ 7 ப்ரோ விலை ஐகூ க்வெஸ்ட் டேஸ் சிறப்பு விற்பனையில் குறைந்துள்ளது.

ஐகூ நியோ 7 ப்ரோ 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 34 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 37 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனினை ரூ. 27 ஆயிரத்து 999 விலையிலேயே வாங்கிட முடியும். அமேசான் மற்றும் ஐகூ இ ஸ்டோரில் நடைபெறும் சிறப்பு விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனிற்கு அசத்தல் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
ஜனவரி 31-ம் தேதி வரை நடைபெறும் சிறப்பு விற்பனையில் தள்ளுபடி மட்டுமின்றி வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்படுகிறது. அதன்படி பயனர்கள் ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3000 வரை உடனடி தள்ளுபடி பெறலாம். இதே போன்ற சலுகை ஐகூ Z7 ப்ரோ மற்றும் Z6 லைட் போன்ற மாடல்களுக்கும் வழங்கப்படுகிறது.

ஐகூ நியோ 7 ப்ரோ அம்சங்கள்:
6.78 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர்
அட்ரினோ 730 GPU
8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி
12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 13
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா, OIS, எல்இடி ஃபிளாஷ்
8MP அல்ட்ரா வைடு கேமரா
2MP மேக்ரோ கேமரா
16MP செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
120 வாட் அல்ட்ரா ஃபாஸ்ட் பிலாஷ் சார்ஜிங்
- புது அக்சஸரீக்களை பயன்படுத்தும் வசதி வழங்கப்படலாம்.
- மினி எல்.இ.டி. ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என தகவல்.
ஆப்பிள் நிறுவனம் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டிற்கு முன் புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அந்நிறுவனம் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், புதிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் தெரிவித்து இருக்கிறார்.
அந்த வகையில், மார்ச் மாத வாக்கில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் ப்ரோ, மேம்படுத்தப்பட்ட ஐபேட் ஏர், அளவில் பெரிய ஐபேட் ஏர் போன்ற சாதனங்களை அறிமுகம் செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார். இவற்றில் மேக்புக் ஏர் மாடல் 13 இன்ச் மற்றும் 15 இன்ச் டிஸ்ப்ளே ஆப்ஷன்களில் கிடைக்கும் என்றும் இவற்றில் M3 பிராசஸர்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

புதிய ஐபேட் ப்ரோ மற்றும் மேக்புக் ஏர் மாடல்களின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. புதிய ஐபேட் ப்ரோ மாடல்களுடன் புது அக்சஸரீக்களை பயன்படுத்தும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஐ.ஒ.எஸ். 17.4 வெர்ஷனின் முதல் பீட்டாவில் மேஜிக் கீபோர்டு, ஆப்பிள் பென்சில் உள்ளிட்டவை ஐபேட் ப்ரோவில் பயன்படுத்த முடியும் என்று தெரிகிறது. இத்துடன் ஃபேஸ் ஐ.டி. கேமராவும் வழங்கப்படுகிறது.
2024 ஐபேட் மாடலில் புதிய OLED ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என்றும் இவற்றில் அதிக பிரகாசமான டிஸ்ப்ளே மற்றும் அதிக நேர பேட்டரி பேக்கப் வழங்கும் மினி எல்.இ.டி. ஸ்கிரீன்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.






