என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரியல்மி யு.ஐ. 5.0 வழங்கப்பட்டுள்ளது.
    • மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது.

    ரியல்மி நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது ரியல்மி 12 ப்ரோ மற்றும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. இவற்றில் 6.7 இன்ச் FHD+ 120Hz கர்வ்டு AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. ரியல்மி 12 ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸரும், ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸரும் வழங்கப்பட்டுள்ளது.

    முந்தைய ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை போன்றே புதிய மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரியல்மி யு.ஐ. 5.0 வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 2 ஆண்ட்ராய்டு ஒ.எஸ். அப்டேட்களும், மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்களும் வழங்கப்படுகிறது.



    ரியல்மி 12 ப்ரோ மற்றும் 12 ப்ரோ பிளஸ் அம்சங்கள்:

    6.7 இன்ச் 2412x1080 பிக்சல் FHD+ வளைந்த AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

    ரியல்மி 12 ப்ரோ - ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸர்

    ரியல்மி 12 ப்ரோ பிளஸ் - ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸர்

    அட்ரினோ 710 GPU

    8 ஜி.பி./12 ஜி.பி. ரேம்

    128 ஜி.பி. / 256 ஜி.பி. மெமரி

    டூயல் சிம் ஸ்லாட்

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரியல்மி யு.ஐ. 6

    ரியல்மி 12 ப்ரோ - 50MP பிரைமரி கேமரா

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    32MP டெலிபோட்டோ லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்

    32MP செல்ஃபி கேமரா

    ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 50MP பிரைமரி கேமரா

    8MP அல்ட்ரா வைடு கேமரா

    64MP ஆம்னிவிஷன் பெரிஸ்கோப் டெலிபோட்டோ லென்ஸ், எல்.இ.டி. ஃபிளாஷ்

    32MP செல்ஃபி கேமரா

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    யு.எஸ்.பி. சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், ஹை-ரெஸ் ஆடியோ

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.2

    யு.எஸ்.பி. டைப் சி

    5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    67 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங்

    ரியல்மி 12 ப்ரோ மற்றும் ரியல்மி 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்கள் சப்மரைன் புளூ மற்றும் நேவிகேட்டர் பெய்க் நிறங்களில் கிடைக்கிறது. ரியல்மி 12 ப்ரோ பிளஸ் மாடல் இந்தியாவில் மட்டும் எக்ஸ்ப்ளோரர் ரெட் வெர்ஷனில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    ரியல்மி 12 ப்ரோ மாடலின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 25 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 26 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ரியல்மி 12 ப்ரோ பிளஸ் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 31 ஆயிரத்து 999 என்றும் டாப் என்ட் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    புதிய ரியல்மி ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை ரியல்மி, ப்ளிப்கார்ட் வலைதளங்கள் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் பிப்ரவரி 6-ம் தேதி துவங்குகிறது. அறிமுக சலுகையாக புதிய ப்ரோ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வாங்குவோர் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை தள்ளுபடி பெற முடியும்.

    • சந்தாவின் கீழ் இலவசமாகவே பயன்படுத்த முடியும்.
    • பிரீபெயிம் சலுகையை பெற விரும்புவோர் ரூ. 999 செலுத்த வேண்டும்.

    ஒ.டி.டி. சந்தாவுடன் கூடிய பிரீபெயிட் சலுகைகளை வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கி வருகிறது. அந்த வகையில், சோனி லிவ் உடன் வி நிறுவனம் இணைந்து இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் விளையாட்டு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்களை கண்டுகளிக்க முடியும்.

    வி நிறுவனம் கூட்டணி அமைத்து இருப்பதன் மூலம் பயனர்கள் சோனிலிவ் மொபைல் சந்தாவின் கீழ் இவற்றை இலவசமாகவே பயன்படுத்த முடியும். இதே சேவைகளை ஒரு வருடத்திற்கு பெற விரும்புவோர் ரூ. 599 மற்றும் பிரீபெயிம் சலுகையை பெற விரும்புவோர் ரூ. 999 செலுத்த வேண்டும்.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    அந்த வகையில் இந்த பலன்களுக்கு தனியே செலவழிக்க விரும்பாதவர்கள் வி நிறுவனத்தின் ரூ. 698 சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம். வி ரூ. 698 சலுகையில் 10 ஜி.பி. வரையிலான டேட்டா, 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. டேட்டா பலன்களை பயன்படுத்துவதற்கு பயனர்கள் வேறு ஏதேனும் பிரீபெயிட் சலுகையை ரிசார்ஜ் செய்திருப்பது அவசியம் ஆகும்.

    ஏற்கனவே குறிப்பிட்டதை போன்றே இந்த சலுகையுடன் ஒரு வருடத்திற்கான சோனிலிவ் மொபைல் சந்தா வழங்கப்படுகிறது. இதில் ஒ.டி.டி. சந்தா மட்டுமின்றி 28 நாட்களுக்கு 10 ஜி.பி. வரையிலான டேட்டாவும் வழங்கப்படுகிறது. இதை கொண்டு நிகழ்ச்சிகளை அதிக தரத்தில் கண்டுகளிக்க முடியும்.

    • ஹானர் மேஜிக் V2 தற்போது ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • இதில் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த மேஜிக் யு.ஐ. 6.1 ஒ.எஸ். உள்ளது.

    ஹானர் பிரான்டு ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ச்சியாக புது சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், ஐரோப்பாவில் ஹானர் மேஜிக் V2 மாடல் இணைந்துள்ளது.

    கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலான மேஜிக் V2 தற்போது ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

     


    அம்சங்களை பொருத்தவரை ஹானர் மேஜிக் V2 மாடலில் 7.9 இன்ச் OLED, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட மெயின் டிஸ்ப்ளே, 5.45 இன்ச் OLED கவர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் பிராசஸர், 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், 50MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த மேஜிக் யு.ஐ. 6.1 ஒ.எஸ். கொண்டிருக்கிறது. இத்துடன் 4610 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஹானர் மேஜிக் V2 மாடல் பர்பில் மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

    ஐரோப்பிய சந்தையில் ஹானர் மேஜிக் V2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பர்பில் மற்றும் பிளாக் நிற வேரியன்ட்களின் விலை முறையே 1 ஆயிரத்து 699.99 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 79 ஆயிரத்து 585 மற்றும் 1 ஆயிரத்து 999 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து 172 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • அசுஸ் ரோக் போன் 8 ப்ரோ இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது.
    • டாப் என்ட் மாடலில் 1 டி.பி. மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    அசுஸ் நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் - ரோக் போன் 8 ப்ரோ மாடலை இம்மாத துவக்கத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் விற்பனை ஒருவழியாக துவங்கிவிட்டது.

    புதிய அசுஸ் ரோக் போன் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் ஃபேன்டம் பிளாக் எனும் ஒற்றை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மற்றும் 24 ஜி.பி. ரேம், 1 டி.பி. மெமரி என இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 94 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     


    அசுஸ் ரோக் போன் 8 ப்ரோ அம்சங்கள்:

    6.78 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ டிஸ்ப்ளே

    கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்பு

    ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர்

    அட்ரினோ 750 GPU

    அதிகபட்சம் 24 ஜி.பி. ரேம்

    1 டி.பி. மெமரி

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ரோக் யு.ஐ.

    டூயல் சிம் ஸ்லாட்

    50MP பிரைமரி கேமரா

    13MP அல்ட்ரா வைடு கேமரா

    32MP டெலிபோட்டோ கேமரா

    32MP செல்ஃபி கேமரா

    3.5mm ஆடியோ ஜாக், டூயல் ஸ்பீக்கர்கள்

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

    5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4

    யு.எஸ்.பி. டைப் சி

    டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் IP68

    5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    65 வாட் ஹைப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங்

    • பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
    • கேமிங் பிரிவில் இருந்து 8 சதவீதம் பேர் வேலையிழக்க உள்ளனர்.

    மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது ஆக்டிவிஷன் ப்லிசர்ட் மற்றும் எக்ஸ்பாக்ஸ்-இல் பணியாற்றி வருவோரில் சுமார் 1900 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. தொழில்நுட்ப துறையில் பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், மைக்ரோசாப்ட் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

    தற்போதைய அறிவிப்பின் மூலம் மைக்ரோசாப்ட் கேமிங் பிரிவில் இருந்து 8 சதவீதம் பேர் வேலையிழக்க உள்ளனர். இதில் பாதிக்கப்படுவதில் பெரும்பாலானோர் ஆக்டிவிஷன் ப்லிசர்ட்-இல் பணியாற்றுவோர் ஆவர்.

     


    ப்லிசர்ட் தலைவர் மைக் யபரா மற்றும் டிசைன் பிரிவின் மூத்த அலுவலர் ஆலென் ஆதெம் ஆகியோரும் நிறுவனத்தை விட்டு வெளியேறுகின்றனர். இதோடு ப்லிசர்ட் ஏற்கனவே அறிவித்து இருந்த கேம் ஒன்றும் நிறுத்தப்படுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்து இருக்கிறது.

    சமீபத்தில் தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் 5 லட்சத்து 73 ஆயிரத்து 621 கோடி ரூபாய்க்கு ஆக்டிவிஷன் ப்லிசர்ட் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. இதன் மூலம் மைக்ரோசாப்ட் நிறுவனம் கேமிங் பிரிவில் அதிக கவனம் செலுத்தவும், கேமிங்கில் முன்னணியில் உள்ள சோனியை எதிர்கொள்ளவும் திட்டமிட்டது.

    • பிக்சல் 8 ஸ்மார்ட்போன் மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்பட்டது.
    • பிக்சல் ஸ்மார்ட்போன்கள் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் கிடைக்கிறது.

    கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 8 சீரிஸ்- பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்தது. பிக்சல் 8 ஸ்மார்ட்போன் அப்சிடியன், ஹசல் மற்றும் ரோஸ் போன்ற நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பிக்சல் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் அப்சிடியன், பே மற்றும் போர்சிலைன் நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    இந்த நிலையில், பிக்சல் 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் முற்றிலும் புதிய மின்ட் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக பிக்சல் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் லெமன்கிராஸ் நிறத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இவைதவிர இந்த ஸ்மார்ட்போன் கிளாஸ் பாடி மற்றும் கிளாசி ஃபினிஷ் கொண்டிருக்கிறது.

     


    புதிய பிக்சல் 8 சீரிஸ் மின்ட் நிற வேரியன்ட் கூகுள் ஸ்டோரில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிற வேரியன்ட் 128 ஜி.பி. வடிவில் மட்டுமே கிடைக்கிறது. இந்தியாவில் கூகுள் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் இருக்கும் பட்சத்திலும், கூகுள் தனது பிக்சல் ஸ்மார்ட்போன்களை ப்ளிப்கார்ட் வலைதளத்தில் மட்டுமே விற்பனை செய்கிறது. 

    • என்ட்ரி லெவல் கேலக்ஸி Z ஃபோல்டு உருவாக்கி வருவதாக தகவல்.
    • சாம்சங் நிறுவனம் மூன்றாவது இடம் பிடித்தது.

    சாம்சங் நிறுவனம் குறைந்த விலையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி வந்தன. உண்மையில் இது நடைபெறுமா என்பது கேள்விக்குறியாவே உள்ளது. எனினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் சாம்சங் நிறுவனம் என்ட்ரி லெவல் கேலக்ஸி Z ஃபோல்டு 6 ஸ்மார்ட்போனை உருவாக்கி வருவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    என்ட்ரி லெவல் கேலக்ஸி Z ஃபோல்டு 6 மாடல் இந்த ஆண்டின் இரண்டாவது அரையிறுதி காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் தனது பங்குகளை அதிகப்படுத்தும் முயற்சியில் சாம்சங் நிறுவனம் புதிய என்ட்ரி லெவல் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிடுவதாக தெரிகிறது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டு வாக்கில் சீனாவின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் சாம்சங் நிறுவனம் 19 சதவீத புள்ளிகளுடன் மூன்றாவது இடம் பிடித்தது. அதன்படி என்ட்ரி லெவல் கேலக்ஸி Z ஃபோல்டு 6 மூலம் இந்த நிலையில் மாற்றம் செய்ய சாம்சங் முயற்சிக்கலாம் என கூறப்படுகிறது.

    குறைந்த விலை கேலக்ஸி Z ஃபோல்டு 6 மாடல் இந்த ஆண்டு ஜூலை - ஆகஸ்ட் மாதத்திற்குள் நடைபெறும் அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம். அந்த வகையில், இந்த ஆண்டு கேலக்ஸி Z ஃபோல்டு 6, கேலக்ஸி Z ஃப்ளிப் 6 மாடல்களுடன் குறைந்த விலை மாடலையும் சேர்த்து மொத்தத்தில் மூன்று மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை சாம்சங் அறிமுகம் செய்யும் என தெரிகிறது. 

    • வாட்ஸ்அப்-இல் ஒருங்கிணைந்து வேலை செய்ய அனுமதிக்கும்.
    • வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷனில் அம்சம் இடம்பெற்றுள்ளது.

    வாட்ஸ்அப் செயலியில் மூன்றாம் தரப்பு சாட்களுக்கான வசதி விரைவில் வழங்கப்படும் என தெரிகிறது. ஐரோப்பிய யூனியனின் டிஜிட்டல் மார்கெட்ஸ் விதியை ஏற்கும் வகையில் இந்த வசதி வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் மூன்றாம் தரப்பு செயலிகள் வாட்ஸ்அப்-இல் ஒருங்கிணைந்து வேலை செய்ய அனுமதிக்கும்.

    புதிய வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா வெர்ஷனில் இதற்கான வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இதே அம்சம் வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷனில் வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் ஐ.ஒ.எஸ். பீட்டா 24.2.10.72 வெர்ஷனில் இந்த அம்சம் இடம்பெற்று இருக்கிறது. இதனை wabetainfo கண்டறிந்து தெரிவித்து இருக்கிறது.

     


    இது தொடர்பாக வெளியிடப்பட்டு இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களில் "Third-Party Chats" (மூன்றாம் தரப்பு சாட்கள்) பெயரில் தனி ஃபோல்டர் இடம்பெற்று இருக்கிறது. இந்த ஃபோல்டரில் மற்ற செயலிகளின் சாட்களை பார்க்க முடியும் என்று தெரிகிறது. இந்த அம்சம் எவ்வாறு இயங்கும் என்பது பற்றி அதிக தகவல்கள் இல்லை. மேலும், இதில் எந்தெந்த செயலிகள் இயங்கும் என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது.

    இந்த அம்சம் வழங்கப்பட்டதும், வாட்ஸ்அப் பயனர்கள் மற்ற குறுந்தகவல் செயலிகளை பயன்படுத்துவோரிடமும் சாட் செய்ய அனுமதிக்கும். வாட்ஸ்அப்-இல் மற்ற கான்டாக்ட்களுக்கு சாட் செய்வதை போன்றே, இதர செயலிகளை பயன்படுத்துவோரிடமும் சாட் செய்ய முடியும்.

    புதிய அம்சம் பற்றி அதிக தகவல்கள் இடம்பெறவில்லை. எனினும், வாட்ஸ்அப் இதனை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். வெர்ஷன்களில் வழங்குவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவது மட்டும் தற்போதைக்கு உறுதியாகி இருக்கிறது.

    • நத்திங் நிறுவனம் புதிய நெக்பேன்ட் இயர்போனை உருவாக்கி வருவதாக தகவல்.
    • இந்த மாடல் விவரங்கள் வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

    ஐக்கிய அரபு அமீரகத்தின் TDRA வலைதளத்தில் நத்திங் (2a) ஸ்மார்ட்போன் விவரங்கள் சமீபத்தில் இடம்பெற்று இருந்தது. இதே வலைதளத்தில் தற்போது நத்திங் நெக்பேன்ட் ப்ரோ விவரங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    மேலும் இதே சாதனம் பற்றிய தகவல்கள் இந்தியாவின் BIS வலைதளத்திலும் இடம்பெற்றுள்ளது. நத்திங் நெக்பேன்ட் ப்ரோ மாடல் சி.எம்.எஃப். பிரான்டிங்கில் அறிமுகம் செய்யப்படும் என BIS வலைதளத்தில் தெரியவந்துள்ளது. அந்த வகையில், புதிய நெக்பேன்ட் இயர்போன் நத்திங் நிறுவத்தின் சி.எம்.எஃப். பிரான்டு அறிமுகப்படுத்தும் இரண்டாவது ஆடியோ சாதனமாக இருக்கும்.

    முன்னதாக சி.எம்.எஃப். பட்ஸ் ப்ரோ மாடல் ஏற்கனவே அறிமுகமாகி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நத்திங் நெக்பேன்ட் ப்ரோ மாடல் B164 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என TDRA வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும், இது நத்திங் நிறுவனத்தின் ஆடியோ சாதனம் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய இயர்போன் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கும் நிலையில், இந்த இயர்போன் எப்போது அறிமுகம் செய்யப்படும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • பிக்சல் 9 மாடலில் ஃபிளாட் எட்ஜ் டிசைன் வழங்கப்படுகிறது.
    • அக்டோபர் மாத வாக்கில் அறிமுகமாகலாம்.

    கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8 ஸ்மார்ட்போன் அறிமுகமாகி சில மாதங்களே ஆகியுள்ளது. இந்த நிலையில், பிக்சல் 9 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கிவிட்டன. அதில், புதிய பிக்சல் 9 ஸ்மார்ட்போன் எப்படி காட்சியளிக்கும் என தெரியவந்துள்ளது.

    தற்போது லீக் ஆகி இருக்கும் ரெண்டர்களின் படி கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன் புளூ நிறத்தில் கிடைக்கும் என்றும் இதன் பின்புறம் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது. புதிய மாடலில் கேமரா மாட்யுல் டிசைனை கூகுள் மாற்றலாம் என்று கூறப்படுகிறது. இத்துடன் பிக்சல் 9 மாடலில் ஃபிளாட் எட்ஜ் டிசைன், பன்ச் ஹோல் செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.


     

    புதிய ரெண்டர்களின் படி பிக்சல் 9 மாடலின் டிசைன் ஐபோன் 15 போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இந்த மாடலில் ரிடிசைன் செய்யப்பட்ட கேமரா மாட்யுல், மூன்று சென்சார்கள் மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுகிறது. கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யும் என தெரிகிறது.

    புதிய பிக்சல் 9 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஒ.எஸ். மற்றும் கூகுள் நிறுவத்தின் டென்சார் G4 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. பிக்சல் 9 ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    • மேம்பட்ட வெர்ஷன் 2024 ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தது.
    • ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 பிராசஸர் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    அசுஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்ஃபோன் 10 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இது சென்ஃபோன் சீரிசில் கடைசி மாடலாக இருக்கும் என கூறப்பட்டது. எனினும், இந்த தகவல்களை மறுத்த அசுஸ் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் 2024 ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தது.

    அந்த வகையில், அசுஸ் சென்ஃபோன் 11 விவரங்கள் கூகுள் பிளே கன்சோலில் இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இதில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 பிராசஸர் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில், அசுஸ் சென்ஃபோன் 11 ஸ்மார்ட்போனின் விவரங்கள் இடம்பெற்றுள்ளது.

     


    அதில், பிராசஸரின் பெயர் சரியாக இடம்பெறவில்லை என்ற போதிலும், அது ஆக்டா கோர் குவால்காம் சிப்செட் மற்றும் அட்ரினோ 830 GPU கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 4 ஆக இருக்கலாம் என்றே தெரிகிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சென்ஃபோன் 10 மாடலில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் வழங்கப்பட்டது.

    அந்த வகையில், இதன் மேம்பட்ட வெர்ஷனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 பிராசஸர் வழங்கப்படும் என கூறப்பட்டது. தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி சென்ஃபோன் 11 மாடலில் அதிகபட்சம் 16 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 14 ஒ.எஸ். வழங்கப்படும் என கூறப்படுகிறது. மேலும் இதன் பவர் பட்டன் மற்றும் வால்யூம் பட்டன்கள் ஸ்மார்ட்போனின் வலதுபுறம் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது.

    • புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.
    • இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

    மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ G24 பவர் ஸ்மார்ட்போன் ஜனவரி 30-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது மோட்டோ நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் ஆகும்.

    புதிய மோட்டோ G24 பவர் மாடலில் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. சமீபத்தில் மோட்டோ G24 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அந்த மாடல் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 15 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருந்தது. மோட்டோ G24 பவர் மாடலில் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

     


    இவை தவிர மற்ற அம்சங்கள் பெரும்பாலும் G24 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது. அந்த வகையில், மோட்டோ G24 பவர் மாடலில் 6.56 இன்ச் 90Hz HD+ ஸ்கிரீன், ஹீலியோ G85 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஒ.எஸ்., IP52 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய மோட்டோ G24 பவர் கிளேசியர் புளூ மற்றும் இன்க் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இதன் விலை ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

    புதிய மோட்டோ G24 பவர் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட், மோட்டோரோலா வலைதளங்கள் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விலை மற்றும் இதர விவரங்கள் அடுத்த வாரம் முழுமையாக தெரியவரும்.



    ×