search icon
என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    விரைவில் இந்தியா வரும் என்ட்ரி லெவல் மோட்டோ G சீரிஸ் ஸ்மார்ட்போன்
    X

    விரைவில் இந்தியா வரும் என்ட்ரி லெவல் மோட்டோ G சீரிஸ் ஸ்மார்ட்போன்

    • ப்ளிப்கார்ட் வலைதளத்தில் மைக்ரோசைட் உருவாக்கப்பட்டுள்ளது.
    • உலகின் சில நாடுகளில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    மோட்டோரோலா நிறுவனத்தின் முற்றிலும் புதிய மோட்டோ G04 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 15-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. மேலும், இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருப்பதும் உறுதியாகி இருக்கிறது. இதற்காக ப்ளிப்கார்ட் வலைதளத்தில் மைக்ரோசைட் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

    ப்ளிப்கார்ட் வலைதளத்தில் புதிய ஸ்மார்ட்போனின் விவரங்களும் இடம்பெற்றுள்ளன. அதன்படி புதிய மோட்டோ G04 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி, 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இரண்டு வெர்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக மோட்டோ G04 ஸ்மார்ட்போன் உலகின் சில நாடுகளில் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


    புதிய மோட்டோ G04 மாடலில் 6.6 இன்ச் 90Hz டிஸ்ப்ளே, யுனிசாக் T606 ஆக்டா கோர் பிராசஸர், 16MP ஏ.ஐ. கமரா, போர்டிரெயிட் மோட், 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மற்றும் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என இரண்டு வெர்ஷன்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என்றும் 10 வாட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஆண்ட்ராய்டு 14 ஒ.எஸ். கொண்டிருக்கும் மோட்டோ G04 மாடலில் 3.5mm ஆடியோ ஜாக், டால்பி அட்மோஸ் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

    Next Story
    ×