search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட்டி விகிதம்"

    • ரெப்போ வட்டி விகிதம் 6.5 ஆக தொடர்ந்து நீடிக்கும்.
    • 2024-ம் ஆண்டு உலகளாவிய வளர்ச்சி நிலையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டம் இன்று மும்பையில் நடந்தது. பின்னர் கவர்னர் சக்தி காந்த தாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. ரெப்போ வட்டி விகிதம் 6.5 ஆக தொடர்ந்து நீடிக்கும். நாட்டின் பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. வர்த்தகம் பலவீனமாக இருந்தாலும் அது மீட்சிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. பணவீக்கம் இலக்கை நெருங்கி வருகிறது. எதிர்பார்த்ததை விட வளர்ச்சி சிறப்பானதாக இருக்கும். 2024-ம் ஆண்டு உலகளாவிய வளர்ச்சி நிலையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரெப்போ வட்டி விகிதம் 6-வது முறையாக மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக வீடு, வாகனம். மற்றும் தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர வாய்ப்பு இல்லை.

    • வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை.
    • பணவீக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலக வர்த்தகம் நல்ல வளர்ச்சியை கண்டு வருகிறது. குறுகியகால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கும். வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை. பணவீக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    நடப்பு நிதியாண்டில் 4-வது முறையாக ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகிதம் எந்தவித மாற்றம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பண்டிகை காலங்கள் தொடங்கி உள்ளதால் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    • சேமிப்பு கணக்கு தொடங்குவதன் மூலம் ஏ.டி.எம். கார்டு பெறலாம்.
    • வாடிக்கையாளர்களின் முதலீடு 115 மாதங்களில் இரட்டிப்பாகும்.

    ஈரோடு:

    ஈரோடு அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணி ப்பாளர் கருணா கரபாபு வெளியிட்டுள்ள செய்தி க்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    மத்திய அரசு சார்பில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொ டரில் அஞ்சலக சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்துள்ளது.

    இதன்படி பெண்களுக்கான மகிளா சம்மான் சேமிப்பு பத்திரம் என்ற புதிய 2 ஆண்டு சேமிப்பு திட்டம் 7.5 சதவீத வட்டி விகிதத்தில் அறிமுகம் செய்துள்ளது.

    மாதாந்திர வட்டி திட்டமான எம்.ஐ.எஸ். கணக்கின் முதலீட்டு தொகைக்கான உச்சவரம்பு தனி நபருக்கு 9 லட்சம் ரூபாயாகவும், கூட்டு கணக்குக்கு 15 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    மூத்த குடிமக்களு க்கான சேமிப்பு திட்டத்து க்கான முதலீட்டு தொகை உச்ச வரம்பானது 30 லட்சம் ரூபாயாக உயர்ந்துள்ளது. வாடிக்கையாளர்களின் நீண்ட கால எதிர்ப்பார்ப்பாக இருந்த அஞ்சல் சிறு சேமிப்பு திட்டங்களின் வட்டி விகித உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

    அஞ்சலகத்தில் 500 ரூபாய் சேமிப்பு கணக்கு தொடங்குவதன் மூலம் ஏ.டி.எம். கார்டு பெறலாம். காசோலை புத்தகம், இணைய வங்கி சேவை, பரிவர்த்தனைகள் மேற்கொள்ளலாம்.

    கிசான் விகாஸ் பத்திரத்தின் வட்டி 7.5 சதவீதமாக உயர்ந்ததால் வாடிக்கையாளர்களின் முதலீடு 115 மாதங்களில் இரட்டிப்பாகும். மூத்த குடிமக்களின் வட்டி விகிதம் 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளதால் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு காலாண்டு வட்டியாக 2,050 ரூபாயாக கிடைக்கும்.

    பிறந்த குழந்தை முதல் 10 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதம் 8 சதவீதமாக அதிகரித்துள்ளது.

    ஆண் குழந்தைகள் உட்பட அனைவருக்குமான பொன்மகன் பொது வருங்கால வைப்பு கணக்குகளை தொடங்கி நெடுங்கால சேமிப்பை செயல்படுத்த லாம்.

    கூடுதல் விபரத்துக்கு அருகே உள்ள அஞ்சலகங்களையும், அந்தந்த பகுதி தபால்காரரையும் அணுகலாம்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டியை 0.3 சதவீதம் வரை மத்திய அரசு உயர்த்தியது.
    • விவசாயிகள் கடன் அட்டைக்கான காலவரம்பும், வட்டி விகிதமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    அஞ்சலகங்களில் நடைமுறையில் உள்ள பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு (3 மாதங்கள்) ஒரு தடவை மத்திய அரசு வட்டி விகிதங்களை மாற்றி அமைத்து வருகிறது.

    இந்நிலையில், நடப்பு நிதியாண்டின் 3-வது காலாண்டான அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான 3 மாதங்களுக்கு வட்டி விகிதத்தை மத்திய நிதி அமைச்சகம் நேற்று மாற்றி அமைத்தது.

    அதன்படி, 3 ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 5.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 0.3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

    மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்துக்கான வட்டி 7.4 சதவீதத்தில் இருந்து 7.6 சதவீதமாக உயருகிறது. இது, 0.2 சதவீத உயர்வு ஆகும்.

    விவசாயிகள் கடன் அட்டைக்கான காலவரம்பும், வட்டி விகிதமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

    கடந்த மே மாதத்தில் இருந்து பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி 1.4 சதவீதம் உயர்த்தியுள்ளது. 3 தவணைகளாக இவை உயர்த்தப்பட்டன. அதற்கேற்ப முதலீட்டுக்கான வட்டி விகிதங்களையும் மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

    ×