search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன்கடை"

    • தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11.86 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது
    • நீலகிரி எம்.பி., ஆ.ராசா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே வெள்ளியங்காடு ஊராட்சிக்குட்பட்ட சுண்டக்கரை பகுதியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. 240க்கும் மேற்பட்ட ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளனர். சுண்டக்கரை பகுதியில் உள்ள ரேஷன் கடை, வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. எனவே அதற்கு சொந்த கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    நீலகிரி எம்.பி ஆ.ராசாவின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.11.86 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. இதற்கான திறப்பு விழா நடந்தது. நீலகிரி எம்.பி., ஆ.ராசா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, தலைமைச்செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆர்.சண்முகசுந்தரம், அஷ்ரப்அலி, ஒன்றிய செயலாளர்கள் சுரேந்திரன், எஸ்.எம்.டி.கல்யாண சுந்தரம், மாவட்ட விவசாய அணி தலைவர் பத்திரசாமி, கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு, மாவட்ட பிரதிநிதி மேடூர் கணேசன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், ராமமூர்த்தி, வட்ட வழங்கல் அலுவலர் சங்கர்லால் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • புதிய ரேசன் கடை கட்டிடத்துக்கு பூமிபூஜை நடந்தது.
    • இதனை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள விளத்தூர் ஊராட்சியில் பழமையான ரேசன் கடை இயங்கி வந்தது. இந்த ரேசன்கடையை விளத்தூர் மற்றும் அதன் அருகே உள்ள கிள்ளுக்குடி மற்றும் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் மிகவும் மோசமான நிலையில் ரேஷன்கடை கட்டிடம் இருந்ததால் அதை அகற்றி விட்டு புதிய ரேசன் கடை கட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி தனது உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.9 லட்சத்து 18 ஆயிரத்தை ஒதுக்கினார். இதையடுத்து ரேசன் கடை புதிய கட்டிட பூமி பூஜை நடந்தது. இதனை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    இந்தவிழாவில் ஊராட்சி மன்ற தலைவர் வாலகுருநாதன் துணைத்தலைவர் சந்திரா பாஸ்கரன், தி.மு.க. கிளை செயலாளர் மருதுபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து அந்தபகுதியில் இருந்த அங்கன்வாடி மையத்தில் தமிழரசி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

    • சிவகங்கை மாவட்டத்தில் புதிய நியாய விலைக்கடைகளை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார்.
    • கரிசல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

    சிவகங்கை

    ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட உலகம்பட்டி, கரிசல்பட்டி மற்றும் மு.சுண்டபட்டி ஆகிய அரசு மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களுக்கு விலை யில்லா மிதிவண்டிகளை வழங்கியும் மற்றும் மின்னமலைபட்டி, கல்லங்காளபட்டி ஆகிய ஊராட்சிப்பகுதிகளில் புதிய நியாய விலைக்கடைகளை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து அமைச்சர் பெரியகருப்பன் பேசினார்.

    அவர் பேசும் போது கூறியதாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மாணவர்கள் தரமான கல்வி பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார். முந்தைய காலங்களில் கல்வி கற்பதற்கு இதுபோன்ற வசதிகள் கிடைக்கப் பெறவில்லை.

    பெற்றோர்களின் கனவை நனவாக்கும் வகையிலும், தங்களுக்கு குருவாக விளங்கி வரும் ஆசிரியர்களின் உழைப்பிற்கும், எண்ணத்தை பூர்த்தி செய்கின்ற பொறுப்பும் மாணவர்களுக்கு உள்ளது. எனவே, கல்வியில் வல்லமை மிக்கவர்களாகவும், அறிவு திறன் மிக்கவர்களாகவும் சிறந்து விளங்கி, திட்டங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சிகளில் வட்டாட்சியர் சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் பத்மநாதன், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா, எஸ்.புதூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராம்,நெற்குப்பை நகர செயலாளர் கே பி எஸ் பழனியப்பன், உலகம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சியாமளா கருப்பையா, கரிசல்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஷாஜகான், முசுண்டம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அடைக்கலசாமி, மின்னமலைபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அழகம்மாள் ஆண்டிச்சாமி,கூட்டுறவு சங்க தலைவர் மென்னன், சங்க செயலாளர் செல்வம், வாராப்பூர் வி என் ஆர் நாகராஜன், கரிசல்பட்டி தலைமை ஆசிரியர் பால கணேசன், மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் பங்கேற்றனர்.

    • ரேசன்கடை விற்பனையாளர்கள், கட்டுநர்கள் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவு இணைப்பதிவாளர் தெரிவித்தார்.
    • இணையதளம் மூலம் மட்டும் அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந் தேதி மாலை 5.45 மணி வரை வரவேற்கப்படுகிறது

    மதுரை

    மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பா ட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக்கடைகளில் காலி பணியிடங்களாக உள்ள 148 விற்பனையாளர்கள் (சேல்ஸ்மேன்) மற்றும் 15 கட்டுநர்கள் (பேக்கர்) பணியிடங்களை நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த விண்ணப்ப தாரர்களிடம் இருந்து https://drbmadurai.net என்ற இணையதளம் மூலம் மட்டும் அடுத்த மாதம் (நவம்பர்)

    14-ந் தேதி மாலை 5.45 மணி வரை வரவேற்கப்படுகிறது.

    விண்ணப்பதாரர்க ளுக்கான அறிவுரைகள் மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி? போன்ற விவரங்கள் மேற்கண்ட இணையதள முகவரியிலும், https://youtube/G6c5e2ELJDB என்ற யு-டியூப் சேனலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் மற்றும் அதன் கிளைகளில் விண்ணப்ப கட்டணங்கள் செலுத்த தேவையான செலான்கள் மேற்கண்ட இணைய வழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    மேலும் தங்கள் பகுதியில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் உள்ள பொது இ-சேவை மையங்கள் மூலமாக மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பிக்கும் முறை குறித்து எழும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் https://drbmadurai2022@gmail.com என்ற இ-மெயில் மூலமும், உதவி மைய தொலைபேசி எண் 0452-2531286 வாயிலாகவும், மதுரை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தை அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரேசன் கடையில் கலெக்டர் சோதனை நடத்தினார்.
    • இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன் மற்றும் வட்டாட்சியர் உடன் இருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூரில் ராம்கோ கூட்டுறவு சங்கம் மூலம் செயல்பட்டு வரும் நியாயவிலை கடையை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் திடீர் ஆய்வு செய்தார். நியாயவிலைக் கடையில் உள்ள உணவுப் பொருட்களின் தரம் குறித்து பார்வையிட்டார். குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவுப் பொருட்கள் வரப்பெற்றுள்ளதா? என பதிவேடுகளை பார்வையிட்டு பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் கூறுகையில், ஒவ்வொரு நியாய விலைக்கடைகளில் அங்குள்ள குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பொருட்கள் இருப்பதை கொண்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும். அதே போல் வழங்கும் உணவுப் பொருட்களின் அளவு சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்கள் காலதாமதமின்றி வழங்குவதை கூட்டுறவுத் துறை அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என்றார்.

    இந்த ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன் மற்றும் வட்டாட்சியர் உடன் இருந்தனர்.

    • சங்ககிரி ஒன்றியத்தில் ரேசன்கடைகளில் ஆர்.டி.ஓ. திடீர் ஆய்வு செய்தார்.
    • அங்கன்வாடி பணியாளர்களிடம் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்தும் ஆர்.டி.ஓ. கேட்டறிந்தார்.

    சங்ககிரி:

    சங்ககிரி ஊராட்சி ஒன்றியம் தேவண்ணக்கவுண்டனூர் ஊராட்சி, எம்ஜிஆர் நகரில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஆர்.டி.ஓ. சௌம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், அங்கன்வாடி பணியாளர்களிடம் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், குழந்தைகளின் வருகை எண்ணிக்கை குறித்தும் கேட்ட றிந்தார். பின்னர், அங்கன்வாடி மையத்தில் உள்ள சமையல் கூடத்தில் வழங்கப்பட்டு வரும் உணவுகள் விவரங்கள் கேட்டறிந்து, உணவை சாப்பிட்டு பார்த்தார்.

    அதனையடுத்து அங்கு குடிநீர் வசதி உடனடியாக செய்து தருவதாக அங்கன்வாடி பணியாளர்களிடம் ஆர்டிஓ கூறினார். இதனைத் தொடர்ந்து கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிட பள்ளியில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பள்ளியில் குழந்தைகள் தங்கும் வசதிகள், பராமரிப்புகள் குறித்து கேட்டு அறிந்தார்.

    புதூர் பகுதியில் உள்ள பகுதிநேர ரேஷன் கடையில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் இருப்புகள் குறித்து ஆய்வு செய்தார். அனைத்து பொருட்களும் சரியான முறையில் விநியோகிக்கப்படுகிறதா? என பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின்போது சங்ககிரி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜகணேஷ், பி.டி.ஓ. முத்து, கிழக்கு ஆர்.ஐ .,ராஜு, வி.ஏ.ஓ., முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கூட்டுறவுதுறை ஆய்வுக் கூட்டத்தை ரேசன்கடை ஊழியர்கள் புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளார்கள்.
    • வருகிற 13-ந்தேதி அன்று மாநிலம் முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

    மதுரை

    தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் "ரேசன் கடை ஊழியர்களுக்கான முடக்கி வைக்கப்பட்டு உள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மேலும் கூட்டுறவுத்துறை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வது இல்லை என்று சங்க நிர்வாகிகள் முடிவு செய்து இருந்தனர். மதுரை மாவட்டத்தில் இன்று நடந்த கூட்டுறவு வங்கி ஆய்வுக்கூட்டத்தில் ரேசன் கடை ஊழியர்கள் பங்கேற்கவில்லை.

    இதுகுறித்து தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆசிரியதேவன் கூறுகையில், கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்டமாக போராட்டம் நடத்த உள்ளோம்.

    இன்றுமுதல் கூட்டுறவு துறை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆய்வு கூட்டங்களை புறக்கணிப்பது என்று முடிவு செய்து உள்ளோம். அடுத்து வருகிற 13-ந்தேதி அன்று மாநிலம் முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து வருகிற 27-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தப்படும் என்றார். 

    ×