search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரேசன்கடை ஊழியர்கள் புறக்கணிப்பு
    X

    ரேசன்கடை ஊழியர்கள் புறக்கணிப்பு

    • கூட்டுறவுதுறை ஆய்வுக் கூட்டத்தை ரேசன்கடை ஊழியர்கள் புறக்கணிப்பதாக முடிவு செய்துள்ளார்கள்.
    • வருகிற 13-ந்தேதி அன்று மாநிலம் முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

    மதுரை

    தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் "ரேசன் கடை ஊழியர்களுக்கான முடக்கி வைக்கப்பட்டு உள்ள அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    மேலும் கூட்டுறவுத்துறை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்வது இல்லை என்று சங்க நிர்வாகிகள் முடிவு செய்து இருந்தனர். மதுரை மாவட்டத்தில் இன்று நடந்த கூட்டுறவு வங்கி ஆய்வுக்கூட்டத்தில் ரேசன் கடை ஊழியர்கள் பங்கேற்கவில்லை.

    இதுகுறித்து தமிழ்நாடு தொடக்க கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆசிரியதேவன் கூறுகையில், கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்டமாக போராட்டம் நடத்த உள்ளோம்.

    இன்றுமுதல் கூட்டுறவு துறை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆய்வு கூட்டங்களை புறக்கணிப்பது என்று முடிவு செய்து உள்ளோம். அடுத்து வருகிற 13-ந்தேதி அன்று மாநிலம் முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து வருகிற 27-ந்தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப்போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    Next Story
    ×