search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாடுகள் பலி"

    • திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
    • இதனைத் தொடர்ந்து மழையின் காரணமாக ஏற்பட்ட மின்னல் கணபதியின் மாடுகளை தாக்கியது.

    துறையூர்,

    திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 2 நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில் துறையூர் அருகே உள்ள மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கணபதி (55). இவர் அதே கிராமத்தில் விவசாயம் செய்வதுடன், கால்நடை வளர்ப்பும் செய்து வருகிறார். சம்பவத்தன்று தனக்கு சொந்தமான 2 பசு மாடு மற்றும் ஒரு கன்றுக்குட்டியினை தனது தோட்டத்தில் உள்ள மரத்தில் கட்டியிருந்தார்.

    இதனைத் தொடர்ந்து மழையின் காரணமாக ஏற்பட்ட மின்னல் கணபதியின் மாடுகளை தாக்கியது. இதில் காயம் அடைந்த 3 பசுமாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. இதனை அறிந்த கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • இடையன்குடி அருகே உள்ள தேரி பகுதியில் சென்றபோது அங்கு சாலையில் மின்வயர் ஒன்று அறுந்து கிடந்தது.
    • உவரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திசையன்விளை:

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடையன்குடியை சேர்ந்தவர் பால் (வயது60). விவசாயி. இவரது பேரன் இசக்கிமுத்து.

    இந்நிலையில் இன்று காலை பால் தனது பேரன் இசக்கிமுத்துவுடன் உவரி அருகே உள்ள தோட்டத்திற்கு மாட்டு வண்டியில் சென்றனர். அவர்கள் இடையன்குடி அருகே உள்ள தேரி பகுதியில் சென்றபோது அங்கு சாலையில் மின்வயர் ஒன்று அறுந்து கிடந்தது. அதில் மாடுகள் சிக்கியதால் அதன் மீது மின்சாரம் பாய்ந்தது.

    இதனால் 2 மாடுகளும் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக பால் மற்றும் இசக்கிமுத்துவிற்கு காயம் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்ததும் உவரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வடிவேல் 10 பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார்.
    • அருகில் பொதுமக்கள் யாரும் செல்லதாதல் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

    திருவள்ளூர்:

    பூண்டி, புஷ்பகிரி கோவில் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல். இவர் 10 பசு மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். நேற்று மாலை பூண்டி பகுதியில் பலத்த மழை பெய்தபோது அவரது 3 மாடுகள் வயல்வெளி பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மர் அருகே சென்றன.

    அந்த நேரத்தில் டிரான்ஸ்பார்மரில் மின்கசிவு ஏற்பட்டதால் 3 பசுமாடுகளும் மின்சாரம் பாய்ந்து இறந்தன. அருகில் பொதுமக்கள் யாரும் செல்லதாதல் பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படவில்லை.

    • விஷம் வைக்கப்பட்ட வாழைப்பழங்களை தின்று விட்டு மாடுகள் இறந்து போகும் சம்பவங்கள் இப்பகுதியில் தொடர்வதாக பொது மக்கள் கூறுகின்றனர்.
    • மாடுகளின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் மாடுகளை மேய்ச்சலுக்காக காலையில் அவிழ்த்து விடுவதும் அவை மீண்டும் மாலையில் வீடு திரும்புவதும் வழக்கம்.

    இந்த மாடுகள் ஆறுமுகநேரியின் மேற்கே அமைந்துள்ள குளக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள வயல்காடு அருகே மேய்ச்சல் இடங்களுக்கு சென்று வரும். இதன்படி நேற்று காலையில் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகளில் பல இரவு ஆன பிறகும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அவற்றின் உரிமையாளர்கள் தேடிச் சென்றனர். அப்போது மூலக்கரைக்கு செல்லும் சாலையின் இருபுறமும் ஆங்காங்கே சில மாடுகள் இறந்து கிடந்ததையும், மேலும் சில மாடுகள் உயிருக்கு போராடிய நிலையிலும் இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக ஆறுமுகநேரி அரசு கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 5 மாடுகளுக்கு அவசர சிகிச்சைகளை மேற்கொண்டார். இறந்து போன மாடுகளையும் அவர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், விஷம் கலந்த உணவை உட்கொண்டதால் தான் இந்த மாடுகள் இறந்திருக்கின்றன. உடற்கூறு ஆய்வுக்கு பிறகு தான் முழுமையான விவரம் தெரியவரும் என்றார்.

    விஷம் வைக்கப்பட்ட வாழைப்பழங்களை தின்று விட்டு மாடுகள் இறந்து போகும் சம்பவங்கள் இப்பகுதியில் தொடர்வதாக பொது மக்கள் கூறுகின்றனர்.

    பாதிக்கப்பட்ட மாடுகளின் மொத்த மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது. சம்பவம் குறித்து மாடுகளின் உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாய நிலத்தில் இரும்பு மின்கம்பம் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்தது.
    • உழுதுகொண்டு இருந்த 2 மாடுகளும் மின்சாரம் பாய்ந்து அங்கேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தன.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள புன்னப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வாசுதேவன்(வயது53) விவசாயி. இவர் பாகல்மேடு கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் 2 மாடுகளை கொண்டு உழுது கொண்டு இருந்தார்.

    அந்த விவசாய நிலத்தில் இரும்பு மின்கம்பம் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மின்கம்பத்தில் மின்கசிவு ஏற்பட்டு விளைநிலத்தில் தேங்கி இருந்த தண்ணீரில் திடீரென பாய்ந்தது.

    இதில் உழுதுகொண்டு இருந்த 2 மாடுகளும் மின்சாரம் பாய்ந்து அங்கேயே சுருண்டு விழுந்து பரிதாபமாக இறந்தன. விவசாயி வாசுதேவனும் மின்சாரம் பாய்ந்து துடிதுடித்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த மற்ற தொழிலாளர்கள் உடனடியாக அங்கிருந்த டிரான்ஸ்பாரர்மரில் மின்சப்ளையை துண்டித்தனர். இதைத்தெடர்ந்து வாசுதேவனை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் விசாரணை நடத்தி வருகிறார்.

    • வாகனம் மோதி 3 மாடுகள் பலியாகின.
    • விபத்தில் 3 மாடுகள் இறந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பத்தூர்

    திருப்புத்தூர் அருகே உள்ள புதுகாட்டாம்பூரில் சாலையில் படுத்து கிடந்த மாடுகள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது.இதில் 3 மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் ஒரு மாட்டுக்கு கொம்பு உடைந்தது.

    மற்றொரு மாட்டுக்கு காலில் காயம் ஏற்பட்டு காயங்களுடன் தப்பித்து ஓடியது. இதனைக்கண்ட அப்பகுதிமக்கள் மாட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். காயமடைந்த மாடுகளுக்கு கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த பகுதியில் சாலையில் சுற்றிதிரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது நடந்த விபத்தில் 3 மாடுகள் இறந்த சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • கேரளாவின் வயநாடு பகுதியில் புலி ஒன்று நடமாடி வருகிறது.
    • கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் வனத்துறையினர் அந்த பகுதியில் கூண்டு அமைத்து புலியை பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    கேரளாவின் வயநாடு பகுதியில் புலி ஒன்று நடமாடி வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மானந்தவாடி பகுதியில் தொழிலாளி ஒருவரை அடித்து கொன்றது. இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் 2 மாடுகளையும் புலி கொன்றது.

    இது பற்றி கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் வனத்துறையினர் அந்த பகுதியில் கூண்டு அமைத்து புலியை பிடிக்க முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

    • தீயணைப்புத் துறையினர் மாடுகளை பிணமாக மீட்டனர்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணி அருகே சிறுமூர் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு ஈசன் கால்வாய் ரெட்டியார் கொட்டகை பகுதியில் விவசாய நிலம் உள்ளன. இவருக்கு சொந்தமாக 2 மாடுகள் உள்ளது.

    நேற்று ஆரணி பகுதியில் கன மழை காரணமாக தனது விவசாய நிலத்திலேயே 2 மாடுகளை கட்டி விட்டு சென்றுள்ளார்.

    மேலும் இன்று காலையில் மாடுகளை கட்டி வைத்த இடத்திற்கு வந்து பார்த்தபோது 2 மாடுகள் மாயமானதால் பாண்டியன் அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அக்கம் பக்கம் தேடியும் கிடைக்கவில்லை இதனையடுத்து தனது நிலத்தில் உள்ள கிணற்றை பார்த்தபோது 2 கறவை மாடுகள் இறந்து கிடப்பது தெரிய வந்தன.

    பின்னர் தகவலறிந்து வந்த ஆரணி தீயணைப்புத் துறையினர் பிணமாக கிடந்த மாடுகளை மீட்டனர்.

    இதில் இறந்து கிடந்த 2 கறவு மாடுகளின் நான்கு கால்களிலும் கயிறு கட்டி கிண்றில் தள்ளப்பட்டதை கண்டு விவசாயி மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேவகோட்டை அருகே வாகனம் மோதி 2 மாடுகள்- 1 கன்று பலியாயின.
    • இந்த விபத்து குறித்து வேலாயுதபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள திருமணவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். இந்த கிராமத்தில் உள்ள பெண்கள் பசுமாடு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த கோபால் மனைவி லட்சுமி, சோனைமுத்து மனைவி சுப்புலட்சுமி, சந்திரசேகர் மனைவி பாக்கியம் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் நேற்று இரவு மேய்ச்சலுக்கு சென்று வீட்டிற்கு திரும்பிச் சென்றன.

    அப்போது சிவகங்கை-தேவகோட்டை சாலையில் திருமணவயல் பஸ் நிறுத்தம் அருகில் 3 பசுமாடுகள், 1 கன்று மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த 2 பசுமாடுகள், 1 கன்று ஆகியவை சம்பவ இடத்திலேயே பலியானது.

    இதில் காயமடைந்த ஒரு பசுமாடு சாலையில் கிடந்தது. இதனைக்கண்ட கிராம மக்கள் மாட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த பெரியகாரை கால்நடை மருத்துவர் கலா விரைந்து சென்று பொதுமக்கள் துணையுடன் காயமடைந்த மாட்டிற்கு சிகிச்சை அளித்தார்.

    இந்த விபத்து குறித்து வேலாயுதபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாடுகள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர். மேலும் அச்சாலையில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×