என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் நேதன்யாகு"

    • இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
    • அப்போது இஸ்ரேலைப் போல் இந்தியாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

    ஜெருசலேம்:

    பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக இன்று இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றார். சிறப்பு விமானம் மூலம் இஸ்ரேல் சென்ற அவருக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு நேரில் சென்று உற்சாக வரவேற்பு அளித்தார்.

    இதையடுத்து, பிரதமர் மோடி இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு சிறப்பு விருந்தினராகச் சென்று உரையாற்றினார். இதனால் அங்கு இந்திய தேசிய கொடியின் மூவர்ணங்களில் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

    கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் படைகளின் கொடூரத் தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவரின் குடும்பத்திற்கும் இந்திய மக்களின் இரங்கல் செய்தியை கொண்டு வந்துள்ளேன்.

    நாங்கள் உங்கள் வலியை உணர்கிறோம். பயங்கரவாதத்துக்கு எதிரான உறுதிப்பாட்டில் இஸ்ரேலுடன் இந்தியா இன்றும் என்றும் துணை நிற்கும். பயங்கரவாதத்தை எந்தவொரு காரணமும் நியாயப்படுத்த முடியாது.

    இந்தியாவும் பயங்கரவாதத்தால் ஏற்படும் வலியை நீண்ட காலமாக உணர்ந்துள்ளது. இஸ்ரேலியர்கள் உள்பட ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் நினைவு கூர்கிறோம்.

    உங்களைப் போலவே எங்களுக்கும் பயங்கரவாதத்திற்கு எதிரான இரட்டை நிலைப்பாடு இல்லாத பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொண்ட கொள்கையுள்ளது.

    காசா அமைதித்திட்டத்திற்கு இந்தியா ஆதரவளிக்கிறது. இந்தியாவின் வளர்ச்சியில் யூதர்களின் பங்கு மிகவும் முக்கியமானது என தெரிவித்தார்.

    பிரதமர் மோடி இஸ்ரேல் செல்வது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு இன்று அமெரிக்கா சென்றுள்ளார்.
    • பிரதமர் நேதன்யாகு அந்நாட்டு அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகை சென்று சந்தித்தார்.

    வாஷிங்டன்:

    ஈரான் உடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளை விரிவுபடுத்துமாறு அதிபர் டிரம்ப்பை வலியுறுத்தும் நோக்கில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இன்று அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டார்.

    இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நேதன்யாகு இன்று அந்நாட்டு அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகைக்குச் சென்று சந்தித்தார். வரை அதிபர் டிரம்ப் உற்சாகமாக வரவேற்றார்.

    அப்போது, ஈரானின் யுரேனியம் வளங்களை நிறுத்தவேண்டும், அதன் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் மற்றும் கிளர்ச்சிப் படைகளுடனான உறவுகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் வலியுறுத்தினார்.

    ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் பல அதிரடி நடவடிக்கைகளுக்கு இஸ்ரேல் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றது.

    • இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, பிரதமர் மோடியுடன் பேசினார்.
    • பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2018-ம் ஆண்டு இந்தியா வந்திருந்தார்.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடியை சந்திக்கத் திட்டமிட்டிருந்தார்.

    ஆனால் தலைநகர் டெல்லியில் நடைபெற்ற குண்டு வெடிப்புக்குப் பிறகு பாதுகாப்பு கவலை காரணமாக தனது பயணத்தை ஒத்தி வைத்தார் பிரதமர் நேதன்யாகு. நேதன்யாகு இந்தியா வரும் திட்டத்தை ரத்து செய்வது இது 3-வது முறையாகும்.

    கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் செப்டம்பர் 9-ந்தேதி மற்றும் ஏப்ரல் மாதமும் தேர்தல் காரணமாக இந்திய பயணத்தை ரத்து செய்திருந்தார்.

    பெஞ்சமின் நேதன்யாகு கடந்த 2018-ம் ஆண்டு இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினார். இரு தலைவர்களும் மிக விரைவில் சந்திக்க ஒப்புக்கொண்டனர் என அந்நாட்டு வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சி மற்றும் மனிதாபிமான உதவி குறித்து இருவரும் விவாதித்தனர்.
    • பாலஸ்தீன மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது

    ஜெருசலேம்:

    இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 4 மாதங்களுக்கு மேல் நீடித்துக் கொண்டிருக்கிறது.

    இதில் காசாவில் குழந்தைகள் பெண்கள் உள்பட 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். காசாவில் உணவு, தண்ணீர், மருந்து உள்ளிட்டவை கிடைக்காமல் மக்கள் தவித்து வருகிறார்கள்.

    காசாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி வருகிறது.

    இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசினார். அப்போது பிணைக் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சி மற்றும் மனிதாபிமான உதவி குறித்து இருவரும் விவாதித்தனர்.

    இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு-இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காசா போரில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து அஜித் தோவலிடம் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார் என்று கூறியுள்ளது.

    நேதன்யாகுவுடனான சந்திப்பின்போது உடனிருந்த இஸ்ரேலின் பாதுகாப்பு ஆலோசகர் ஜாக்கி ஹளக்பியையும் சந்தித்து பேசினார்.

    காசாவில் உள்ள பாலஸ்தீன மக்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்கும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளித்துள்ளது. மேலும் காசா போர் தொடர்பாக பிரதமர் மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், சவுதி அரேபியா, எகிப்து மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளார். மேலும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான விவாதங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை பிரான்ஸ் நிறுத்தி உள்ளது.
    • மற்ற நாடுகளும் ஆயுத விநியோகத்தை நிறுத்தவேண்டும் என்றார்.

    டெல் அவிவ்:

    பிரான்ஸ் வெளியுறவுத்துறை மந்திரி ஜீன் நோயல் பாரட் 4 நாள் அரசுமுறை பயணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றுள்ளார். நாளை அவர் இஸ்ரேல் சென்று தனது பயணத்தை முடிக்க உள்ளார்.

    இதற்கிடையே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் கூறுகையில், இஸ்ரேல் காசாமீது தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அரசியல் ரீதியாக இதற்கு தீர்வு காண்பதற்காக இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தி உள்ளோம். போரை நிறுத்த மற்ற நாடுகளும் இதனை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

    இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பிரான்ஸ் அதிபர் மேக்ரானுக்கு பதில் அளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், அதிபர் மேக்ரானும், மற்ற மேற்கத்திய தலைவர்களும் தற்போது இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதத் தடைக்கு அழைப்பு விடுக்கின்றனர். ஈரான் அதன் பினாமிகள் மீது ஆயுதத் தடையை விதிக்கிறதா? நிச்சயமாக இல்லை.

    பயங்கரவாதத்தின் இந்த அச்சு ஒன்றாக நிற்கிறது. ஆனால் இந்த பயங்கரவாத அச்சை எதிர்க்கும் நாடுகள் இஸ்ரேல்மீது ஆயுதத் தடை விதிக்கவேண்டும். என்ன அவமானம்? அவர்களின் ஆதரவு இருந்தாலும் சரி, அல்லது இல்லாவிட்டாலும் சரி, இஸ்ரேல் வெற்றி பெறும் என உறுதிபட தெரிவித்துள்ளார்.

    • தலைநகர் டமாஸ்கஸ் நேற்று கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.
    • அதிபர் ஆசாத் நாட்டை விட்டு விமானம் மூலம் தப்பியோடியதாக தகவல் வெளியானது.

    டெல் அவிவ்:

    சிரியா நாட்டில் 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. ஆசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டு வருகின்றனர். சில ஆண்டாக வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில், கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி வெடித்தது.

    சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளைக் கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர். இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

    இதற்கிடையே, தலைநகர் டமாஸ்கஸ் நேற்று கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. ஆசாத்துக்கு ஆதரவாக செயல்படும் ரஷியாவின் கடற்படை விமான தளங்கள் அமைத்துள்ள கடலோர பகுதிகளுடன் டமாஸ்கஸ் தொடர்பைக் கிளர்ச்சியாளர்கள் துண்டித்துள்ளனர். அதிபர் ஆசாத் நாட்டை விட்டு விமானம் மூலம் தப்பியோடியதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில்,மத்திய கிழக்கில் ஒரு வரலாற்று நாள். ஆசாத்தின் ஆட்சி, டமாஸ்கஸின் கொடுங்கோல் ஆட்சி சரிந்தது. ஒரு பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், பெரிய அளவிலான ஆபத்துகளும் உள்ளன. எங்களுடைய எல்லையைக் கடந்து சிரியாவில் உள்ள அனைவருக்கும் நாங்கள் அமைதிக்கரம் நீட்டுகிறோம். ட்ரூஜ், குர்த், கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம் என இஸ்ரேலில் அமைதியாக வாழ விரும்பும் அனைவருக்கும் ஆதரவு கரம் நீட்டுகிறோம் என பதிவிட்டுள்ளார்.

    ×