search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதம மந்திரி"

    • கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து எழுத்துத் தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற்றுப் பயன் பெறலாம்.
    • முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்ப தாவது:-

    கல்வி உதவிதொகை

    மத்திய அரசின் இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தகுதியான மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து எழுத்துத் தேர்வின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை பெற்றுப் பயன் பெறலாம்.

    2023-24 நிதி யாண்டில், நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

    9-ம் வகுப்பு

    தமிழ்நாட்டைச் சேர்ந்த 3,093 மாணவ, மாணவிகளுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இத்திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் (மாணவ, மாணவியர்கள்) பெற்றோர், அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும். பள்ளிகளில் 9 அல்லது 11 - ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்க வேண்டும்.

    10-ந்தேதிக்குள்...

    9 மற்றும் 10 -ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும் 11 மற்றும் 12 -ம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசியத் தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில் (YASASVI Entrance Test) தேர்ச்சி பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இத்தேர்விற்கு 10.08.2023 க்குள் https://yet.nta.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் 12.08.2023 முதல் 16.08.2023 தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.

    எழுத்துத் தேர்வு

    எழுத்துத் தேர்வு 29.09.2023 -ம் தேதி நடைபெறும். விண்ணப்பத்துடன் கைப்பேசி எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • திருப்பூர் மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டு ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யப்படுகிறது.
    • தற்போது அவர்களின் விருப்பத்தின் பேரில் பதிவு செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியி ட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டு ராபி பருவ பயிர்களுக்கு விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யப்படுகிறது. விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதி உதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நு ட்பங்களை கடைபிடிப்பதை ஊக்குவிக்கவும், தமிழ்நாட்டின் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் காரீப் 2016 முதல் சென்னை நீங்கலாக தமிழ்நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசு 2022-ம் ஆண்டு முதல் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கியமாக இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகளை கட்டாயமாக பதிவு செய்து, வந்த நிலையில் தற்போது அவர்களின் விருப்பத்தின் பேரில் பதிவு செய்திட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட வாரியான பயிர் வாரியான சராசரி மகசூலின் அடிப்படையில் காப்பீடு தொகை நிர்ணயிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்திற்கு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் ராபி, 2022-2023-ல் செயல்படுத்த அரசாணையின்படி காப்பீடு நிறுவனம் அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ராபி பருவத்தில் நெல், மக்காசோளம், பாசிப்பயறு, கொண்டைக்கடலை, நிலக்கடைலை, சோளம் மற்றும் பருத்தி போன்ற அறிவிக்கை செய்யப்பட்டு, விவசாயிகள் காப்பீடு கட்டணம் செலுத்து வதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே ராபி பருவத்தில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் தங்கள் பயிர் கடன்பெறும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலமாக அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ தங்கள் விருப்பத்தின் பேரில் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்துகொள்ளலாம். இதற்காக விவசாயிகள் நடப்பு ஆண்டுக்கான அடங்கல் கிராம நிர்வாக அதிகாரியிடம் பெற்று, அதனுடன் வங்கி கணக்கு புத்தகத்தில் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலோ அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ சென்று பதிவு செய்துகொள்ளலாம். திருப்பூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடு பிரீமியம் தொகை நெல் ஏக்கருக்கு ரூ.559, பாசிப்பயறு ஏக்கருக்கு ரூ.253.94 ஏக்கருக்கு செலுத்தி வருகிற 15-11-2022-க்குள் காப்பீடு செய்ய வேண்டும். மக்காச்சோளம் ஏக்கருக்கு ரூ.486.75, கொண்டைக்கடலை ரூ.269.25, பருத்தி ஏக்கருக்கு ரூ.693.60 பிரீமியம் தொகையாக செலுத்தி 30-11-2022-க்குள் காப்பீடு செய்ய வேண்டும். சோளம் ஏக்கருக்கு ரூ.38.61 வருகிற 15-12-2022-க்குள்ளும், நிலக்கடலை ஏக்கருக்கு ரூ.470.25 பிரீமியம் தொகையாக செலுத்தி 31-12-2022-க்குள் காப்பீடு செய்ய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான விவரங்களை உழவன் செயலி மூலமும், வட்டார அளவில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர்களை தொடர்புகொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அறிக்கை
    • வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு பிப்ரவரி 28 - ந் தேதி வரை பிரீமியம் செலுத்தலாம்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    கன்னியாகுமரி மாவட் டத்தில் முக்கிய தோட்டக் கலை பயிர்களான வாழை மற்றும் மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள முக்கிய பயிர்களான வாழை மற்றும் மரவள்ளி போன்ற பயிர்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    சுமார் 5063 ஹெக்டர் பரப்பளவில் வாழை மற்றும் 1437 ஹெக்டர் பரப்பளவில் மரவள்ளி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பயிர்கள் சாகுபடி செய்யும்போது ஏற்படும் இடர்பாடுகளான நடவு செய்ய இயலாமை, மழை பொய்த்தல் , வெள்ளம், கடும் வறட்சி, தொடர் வறண்ட நிலவரம், நிலச்சரிவு, ஆலங்கட்டி மழை, புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் இழப்பு ஏற்படும் போது காப்பீடு செய்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படு கிறது.

    பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகளுக்கு ஒரே வகையான காலக்கெடு வழங்கப்படுகிறது. குத்தகை விவசாயிகளும் இத்திட்டத்தின் மூலம் காப்பீடு செய்து பயன் பெற லாம். வாழை விவ சாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.4,182 பிரீமியமாக செலுத்தி ரூ. 83,650 இழப்பீடாகவும், மரவள்ளி விவசாயிகள் ஏக்கருக்கு பிரிமியமாக ரூ.1420 செலுத்தி ரூ.28,400 இழப்பீடா கவும் பெறலாம்.

    கடன் பெறும் விவ சாயிகளுக்கு பிரீமியம் தொகையை அந்தந்த கடன் வழங்கும் வங்கிகள் மூலம் பிடித்தம் செய்து காப்பீட்டு நிறுவ னங்களுக்கு செலுத்தலாம். கடன் பெறாத விவசாயிகள் தங்களது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலம் பிரீமியம் செலுத்தலாம். அருகாமையிலுள்ள தேவையான ஆவணங்கள் நிலத்தீர்வை ரசீது மற்றும் அடங்கல், வங்கி புத்தக நகல், ஆதார் அட்டை, புகைப்படம், காப்பீடு செய்வதற்கான காலக்கெடு விபரம், வாழை மற்றும் மரவள்ளி பயிருக்கு பிப்ரவரி 28 - ந் தேதி வரை பிரீமியம் செலுத்தலாம்.

    மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு தங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலு வலகங்களை அணுகி பயிர் காப்பீடு செய்து பயன் பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப் பட்டு உள்ளது.

    • பிரதம மந்திரி கிசான் கவுரவ நிதி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் நிலமுள்ள தகுதியுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ 2 ஆயிரம் வீதம், ஆண்டிற்கு ரூ. 6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் மற்றும் செலவினங்களை மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
    • வரும் 31-ம் தேதிக்குள் கைவிரல் பதிவேற்றம் செய்து புதுப்பித்தால் மட்டுமே விவசாயிகளுக்கு தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும்.

    பரமத்தி வேலூர்:

    கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    பிரதம மந்திரி கிசான் கவுரவ நிதி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் நிலமுள்ள தகுதியுள்ள விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ 2 ஆயிரம் வீதம், ஆண்டிற்கு ரூ. 6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் மற்றும் செலவினங்களை மேற்கொள்ள மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தில் விவசாயிகள் இணைந்த தேதியின் அடிப்படையில் 11 தவணைகள் தொகை விடுவிக்கப்பட்டு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    12-வது தவணை தொகை விடுவிப்பிற்கு ஆதார் விபரங்கள் சரிபார்ப்பு அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிரதம மந்திரி கிசான் கவுரவ ஊக்கத்தொகை பெறுகின்ற கபிலர்மலை வட்டார விவசாயிகள் அருகிலுள்ள இ- சேவை மையங்களையோ, தபால் அலுவலகங்களையோ அணுகி வரும் 31-ம் தேதிக்குள் ஆதார் அட்டை கொண்டு தங்களுடைய இருப்பை கைவிரல் ரேகையை பதிவு செய்வதன் வழியாக புதுப்பித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு வரும் 31-ம் தேதிக்குள் கைவிரல் பதிவேற்றம் செய்து புதுப்பித்தால் மட்டுமே விவசாயிகளுக்கு தொடர்ந்து ஊக்கத்தொகை கிடைக்கும். எனவே கபிலர்மலை வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் உடனடியாக ஆதார் அட்டை மூலம் புதுப்பித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம் வருகிற 11-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.
    • முகாமில் நேரடியாக பங்கேற்று தொழிற்பழகுநர்களை தேர்வு செய்து பயன்பெறலாம்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளி–யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்புத் திட்டம் மற்றும் தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக, நாமக்கல் மாவட்ட அளவில் பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் நாமக்கல் வளாகத்தில் வருகிற 11-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

    அரசு, தனியார் தொழிற்– பயிற்சி நிலை–யங்க–ளில் ஐ.டி.ஐ பயின்று வெற்றிகரமாக பயிற்சியினை நிறைவு செய்து இதுநாள் வரை தொழிற்–பழகுநர் பயிற்சியினை மேற்கொள்ளாத பயிற்சியா–ளர்கள் மற்றும் பட்டய படிப்பு , பொறியியல் படிப்பு, பட்டப் படிப்பு பயின்ற–வர்கள் தங்களது கல்வி சான்றிதழ், சாதி சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு போட்டோ –-2 , ஆதார் அட்டை, தேசிய, மாநில தொழிற் சான்றிதழ் (COE தொழிற்பிரிவு சான்றிதழ்கள் உட்பட) ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களுடன் தொழிற்பழகுநர் சேர்க்கை முகாமில் பங்கேற்று தொழிற்பழகுநர்களாக சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    தொழிற்பழகுநர் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழிற்–நிறுவனங்கள் தங்களது நிறுவனத்தில் காலியாக உள்ள தொழிற்பழகு–நர்களின் எண்ணிக்கையை நிறைவு செய்திடும் பொருட்டு உரிய நிறுவன பதாகைகளுடன் இம்முகாமில் நேரடியாக பங்கேற்று தொழிற்பழகு நர்களை தேர்வு செய்து பயன்பெறலாம்.

    மேலும் விபரங்களை அறியும் பொருட்டு நாமக்கல் மாவட்டம் பெரியப்பட்டி அஞ்சல் கொண்டி–செட்டிப்பட்டியில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் உதவி இயக்குநரை நேரிலும் மற்றும் தொலைபேசி 04286 - 290297 வாயிலாகவும் தொடர்பு கொண்டு அறிந்துக் கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளுக்கு விழிப்புணர்வு கையேடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நாமக்கல்:

    நாட்டில் உள்ள அனைத்து ஏழை மக்களும் கான்கிரீட் வீடுகள் கட்டுதல் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் பாரத பிரதமரின் வீடுகள் வழங்கும் திட்டம் 2016 -2017-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதம மந்திரி வீடுகள் வழங்கும் திட்டம் 2021 - 2022 -ன் கீழ் வீடுகள் கட்டி வரும் பயனாளிகளிடம் அவர்கள் வீட்டிற்காக அரசினால் வழங்கப்படும். தொகை ரூ.2.277,290- குறித்தும் வீடுகள் அளவீடுகள் துறை மூலம் வழங்கப்படும் சிமெண்ட் மூட்டைகள். இரும்பு கம்பிகள் குறித்தும் பயனாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரசிடமிருந்து 2021 2022ஆம் ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கிட 3213 கையேடுகள் வரப்பெற்றுள்ளது.

    பயனாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கையேடுகள் வழங்கும் பணியினை தொடங்கி வைக்கும் விதமாக நாமக்கல் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த காதப்பள்ளி, எர்ணாபுரம், மாரப்பநாயக்கன்பட்டி ஊராட்சிகளை சேர்ந்த பயனாளிகளுக்கு கையேடுகளை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வழங்கினார்.

    வரப்பெற்ற கையேடுகள் ஒன்றியங்களில் வட்டாரங்களுக்கு உள்ள பிரித்து ஊராட்சிகளுக்கே வழங்கப்பட்டுள்ளது. இக்கையேட்டின் மூலம் பயனாளிகள் தங்கள் வீடு கட்டுவது குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ள இயலும் பயனாளிகளுக்கும் இக்கையேடு இத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதில் மிகவும் பயனள்ளதாக இருக்கும்.

    ×