search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழுதான சாலை"

    • மழை நீர் பள்ளங்களில் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.
    • சாலையில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கீழப்பூதனூர் ஊராட்சி பெருநாட்டான்தோப்பு நடுத்தெரு பகுதியில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இப்பகுதியில் பெரு நாட்டான் தோப்பு நடுத்தெருவை இணைக்கும் சாலை உள்ளது.

    இந்த சாலை வழியாக பெருநாட்டான் தோப்பு வந்து அங்கிருந்து திருவாரூர், நாகப்பட்டினம், திருக்கண்ணபுரம், கங்களாஞ்சேரி, திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வர இந்த சாலையை பயன்படுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சாலை சேதம் அடைந்து மழை நீர் பள்ளங்களில் தேங்கி சேரும் சகதியுமாக உள்ளது.

    இதனால் அப்பகுதி மக்கள் சாலையில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளனர்.

    மேலும் மழையில் பள்ளம் இருப்பது தெரியாமல் சாலையில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு சேரும் சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி போன்ற பகுதிகளுக்கும் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டியுள்ளது.
    • சாலை வழியாக செல்லும் போது வாகனங்கள் பழுதடைந்து இடையூறுகளை சந்திக்கிறார்கள்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அருகே தில்லைவிளாகம்- அரமங்காடு சாலை உள்ளது. இங்கு தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது.

    இப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் தில்லைவிளாகம், வடகாடு முத்துப்பேட்டை போன்ற பகுதிகளுக்கு செல்ல இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டும். மேலும் முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை திருவாரூர் போன்ற பகுதிகளுக்கும் இந்த சாலை வழியாக தான் செல்ல வேண்டியுள்ளது.

    தற்போது தில்லைவிளாகம்- அரமங்காடு சாலை சேதமடைந்து குண்டும்- குழியுமாக காட்சியளிக்கின்றது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் மக்கள் மிகுந்த இடையூறுகளை சந்திக்கிறார்கள்.

    குறிப்பாக பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் இந்த சாலை வழியாக செல்லும் போது வாகனங்கள் பழுதடைந்து இடையூறுகளை சந்திக்கிறார்கள். எனவே தில்லைவிளாகம்- அரமங்காடு சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 2016- 17ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் செலவில் இந்த சாலை அமைக்கப்பட்டது
    • மயிலாடும்பாறையில் உள்ள துவக்கப் பள்ளிக்கும் இந்த வழியாகத்தான் குழந்தைகள் செல்கின்றனர் .

    உடுமலை:

    உடுமலை ஒன்றியம் ராவணாபுரம் கிராமத்தில் உள்ள இணைப்பு சாலை வழியாக பாண்டியன் கரடு , நல்லாறு, மயிலாடும்பாறை, முள்ளுப்பாடி உள்ளிட்ட இடங்களுக்கு கிராம மக்கள் சென்று வருகின்றனர்.

    கடந்த 2016- 17ம் ஆண்டு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 5 லட்சம் செலவில் இந்த சாலை அமைக்கப்பட்டது .அதற்கு பிறகு புதுப்பிக்கப்படவில்லை. இதனால் சாலை பழுது அடைந்து ஜல்லிக்கற்கள் வெளியே தெரிகிறது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள தோட்டத்து சாலைகளுக்கு இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். மயிலாடும்பாறையில் உள்ள துவக்கப் பள்ளிக்கும் இந்த வழியாகத்தான் குழந்தைகள் செல்கின்றனர்.

    எனவே பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இங்குள்ள தடுப்பணையின் குறுக்கே தரைமட்ட பாலம் கட்ட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருச்சியில் சாலையை சீரமைக்ககோரி ஆர்ப்பா–ட்டம் நடை பெற்றது.
    • சாலைக்கு15 நாட்களுக்குள் உரிய‌ தீர்வு காணாவிட்டால் திண்டுக்கல் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

    திருச்சி

    திருச்சி திண்டுக்கல் மெயின் ரோடு ராம்ஜிநகரிலிருந்து மலைப்பட்டி புங்கனூர் வழியாக அல்லித்துறை செல்லும் பிரதான சாலை பழுதடைந்துள்ளது. அந்த சாலையை சீரமைக்க கோரி மணிகண்டம் ஒன்றிய தெற்கு மற்றும் வடக்கு மண்டலம் சார்பில் பாரதி ஜனதா கட்சியினர்‌ மாவட்டத் துணைத் தலைவர் கள்ளிக்குடி ராஜேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    இதில் சிறப்பு விருந்தினர்களாக‌ மாவட்டத் தலைவர் ராஜசேகரன், மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா, மாவட்ட பொதுச்செயலாளர் ஒண்டிமுத்து, சத்திரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் பேசிய மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா கூறியதாவது-

    இந்த ஆர்ப்பாட்டம் இத்துடன் முடியப்போவதில்லை. இந்த சாலைக்கு15 நாட்களுக்குள் உரிய‌ தீர்வு காணாவிட்டால் திண்டுக்கல் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

    • வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
    • இருசக்கர வாகனத்தில் வரும் வாலிபர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துகளும் ஏற்படுகிறது.

    கன்னியாகுமரி:

    குலசேகரம் - மார்த்தாண்டம் சாலை மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமானது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த சாலையைதான் பயன்படுத்துகிறார்கள். அந்த பகுதியில் தனியார் பள்ளிகூடங்கள், அரசு நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகின்றன.

    புத்தன்கடை அருகே தனியார் பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் கடந்த சில மாதங்களில் சாலையில் இரண்டு பகுதிகளிலும் மழைநீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமித்து தடுப்பு சுவர் கட்டியிருந்தார்கள். இதனால் தண்ணீர் வெளியே செல்லமுடியாமல் சாலையில் தேங்கியது. இதனால் அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்ல மிகவும் சிரமப்பட்டன.

    மழைகாலங்களில் தண்ணீர் வெளியேறாமல் சாலையில் தேங்கியது.இதை கண்டித்து அரசியல் கட்சியினர் மீன்பிடி, வாழை நடும் போராட்டங்கள் நடத்தினர். உடனே நெடுஞ்சாலைதுறையினர் ஒருவாகனத்தில் கொஞ்சம் மண்கொட்டி தற்காலிகமாக சரிசெய்தனர்.

    சாலையின் ஒரு பகுதி அருவிக்கரை ஊராட்சிக்கும், மறுபகுதி திருவட்டார் பேரூராட்சிக்கும் சொந்த மானது. உடனே அரசு அதிகா ரிகள் வந்து பார்வையிட்டு ஆக்கிரமித்து கட்டப்பட்ட தடுப்பு சுவர்களை இடித்து அகற்றினார்கள். அதன் பிறகு சாலையில் தேங்கிய தண்ணீர் வெளி யேற்றப்பட்டது.

    ஆனால் மழையில் சேதமடைந்த சாலையை சரிசெய்யாமல் நெடுஞ்சா லை துறையினர் இருந்தனர். இதனால் வாகனங்கள் செல்லமுடியாமல் சிரமப் பட்டன. தற்போது தினமும் மழை பெய்து வருவதால் அந்த பகுதியில் தண்ணீர் வெளியே செல்லாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. சாலை குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

    இரவு நேரங்களில் இந்த பகுதியில் இருசக்கர வாகனத்தில் வரும் வாலிபர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துகளும் ஏற்படுகிறது.நேற்று மாலையில் பெய்த கனமழை யால் அந்த பகுதி முழுவதும் தண்ணீர் சாலையில் தேங்கி யது . இதனால் பள்ளி, கல்லூரி வாகனங்கள் செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றன. இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் அந்த பகுதி வழியாக செல்லமுடியாமல் அவதிபட்டார்கள்.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு பெரும் விபத்துக்கள் நடைபெறும் முன் இந்த சாலையை போர்க்கால அடிப்படையில் சீர்செய்ய வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நகராட்சி ஆணையரிடம் விஜய்வசந்த் எம்.பி. வலியுறுத்தல்
    • மார்த்தாண்டம் காந்தி மைதானம் முதல் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் வரை உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது.

    நாகர்கோவில்:

    விஜய்வசந்த் எம்.பி. மார்த்தாண்டத்தில் உள்ள தனது அலுவலகத்தில் பொது மக்களைச் சந்தித்து குறை களைக் கேட்டு பொது மக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

    அப்போது எம்.பி. அலுவ லகம் வருகை தந்த குழித் துறை நகராட்சி ஆணையர் ராமதிலகத்திடம் குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட 21 வார்டுகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வசதி வாரியம் சாலையின் ஒரு பகுதியில் புதிய குடிநீர் குழாய்கள் பதித்து உள்ளன. பணிகள் முடிவடைந்த தும் சாலைகள் சரியாக மூடப்ப டாத காரணத்தினாலும் குண்டும் குழியுமாகப் போக்குவரத்துக்கும் மக்கள் நடந்து செல்லவும் மிகவும் சிரமப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி அதற்கான பணிகள் எப்போது முடியும் அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விஜய்வசந்த் எம்.பி. ஆணை யரிடம் கேட்டு அறிந்து விரைவாக பணிகள் முடிக்க வேண்டும் என வலி யுறுத்தினார்.

    மேலும் மார்த்தாண்டம் காந்தி மைதானம் முதல் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் வரை உள்ள சாலைகள் குண்டும் குழியு மாக உள்ளது. அதனைச் சீரமைக்க வேண்டியும், மார்த்தாண்டம் மேம்பாலம் கீழே செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளதை சீரமைக்க வேண்டியும், மற்றும் குழித்துறை நகராட்சி யிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் மார்த்தாண்டம் மீன் சந்தை அருகே சேகரித்து வைக்கப்பட்டுள்ளதால் துர் நாற்றம் வீசி வருகிறது.

    இதனால் அப்பகுதி பொதுமக்களுக்கு சுகாதாரக் கேடு விளைவிக்கும் வகை யில் உள்ளதால் அந்த கூடத்தை மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

    இந்த சந்திப்பின் போது தூய்மை அலுவலர் ஸ்டான்லி குமார், நகர காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ், வார்டு உறுப்பினர்கள் ரீகன், வட்டார தலைவர் சதீஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இச்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. விபத்துக்களை தடுக்கவும்,
    • முதல் கட்டமாக சத்தியாகிரக போராட்டம் நடத்துகிறோம். இதற்கு உடனே தீர்வு காணவில்லை என்றால் 10 நாட்களுக்குள் பொது மக்களுடன் சேர்ந்து அனைத்து கட்சி சார்பில் மறியல் போராட்டம்

    கன்னியாகுமரி :

    குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் ரூ. 36 கோடி செலவில் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த பணி குறிப்பிட்ட நாள் கடந்த பிறகும் நிறைவடையவில்லை. இதனால் அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இச்சாலையில் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது. விபத்துக்களை தடுக்கவும்,

    குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சாலைகளையும் உடனே சீரமைத்து தர கேட்டு வெட்டு மணி நகராட்சி அலுவலகம் முன் கவுன்சிலர்கள் சார்பில் நேற்று சத்யாகிரகம் போராட்டம் நடைபெற்றது.

    இதற்கு குழித்துறை நகராட்சி தலைவர் பொன்.ஆசைத்தம்பி தலைமை தாங்கி, பேசியதாவது:-

    குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் குடிநீர் திட்ட குழாய் பதிக்கும் பணி தொடங்கப்பட்டது. இதற்காக அனைத்து ரோடுகளும் குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் உடைக்கப்பட்டு குழாய் பதிக்கும் பணி நடந்தது.குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகும் பணியை நிறைவு செய்யவில்லை.இதனால் ஏற்கனவே உள்ள குடிநீர் குழாய்களும் சேதம் அடைந்து ரோடுகளும் குண்டும் குழியுமாக சிதைந்து காணப்படுகிறது.

    இது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினோம்.ஆனால் அதிகாரிகள் கண்டு கொள்ள வில்லை. செல்போனில் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டால் எடுப்ப தில்லை.இதனால் வேறு வழியில்லாமல் அனைத்து கவுன்சிலர்களும் சேர்ந்து கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்தோம்.

    உடனே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பேசுவதாகவும் கூறினார்.ஆனால் அதன் பிறகும் பணிகள் முறையாக நடைபெறவில்லை.குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழித்துறை நகராட்சி பகுதியில் அடிப்படை வசதி எதுவும் செய்யக்கூடாது என்று கருதுகிறார்கள்.

    இதனால் நாங்கள் முதல் கட்டமாக சத்தியாகிரக போராட்டம் நடத்துகிறோம். இதற்கு உடனே தீர்வு காணவில்லை என்றால் 10 நாட்களுக்குள் பொது மக்களுடன் சேர்ந்து அனைத்து கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்.

    அதன் பிறகும் நிறைவு செய்யவில்லை என்றால் நான் குழித்துறை நகராட்சி மக்களுக்காக தீக்குளிக்கவும் தயங்க மாட்டேன் என்று கூறினார். இந்த சத்தியாகிரக போராட்டத்தில் துணைத் தலைவர் பிரபின் ராஜா, கவுன்சிலர்கள் விஜூ, ரெத்தினமணி, ஜெயந்தி, லலிதா, சர்தார்ஷா, ரீகன், அருள்ராஜ், ரோஸ்லெட் உட்பட கவுன்சிலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சாலை முழுவதும் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது.
    • அவ்வழியாக செல்லும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள், வாகன ஓட்டிகள் என தினந்தோறும் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்துக்கு உட்பட்ட கரகதஹள்ளி ஊராட்சி பூர்காலன்கொட்டாய் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்.

    இக்கிராமத்திற்கு செல்லும் தார் சாலை குண்டும் குழியுமாக உள்ளதாக கூறி கடந்த 1 வருடத்திற்கு முன்பு கரகதஹள்ளி கிராமத்திலிருந்து பூர்காலன்கொட்டாய் கிராமம் வரை உள்ள சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு பழைய தார்சாலையை அகற்றிவிட்டு புதிய தார் சாலை அமைப்பதற்கான பணிகள் துவங்கின.

    ஆனால் ஓராண்டு கடந்தும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் தார் சாலை முழுவதும் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளதால் அவ்வழியாக செல்லும் பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள், வாகன ஓட்டிகள் என தினந்தோறும் பெரும் சிரமம் அடைந்து வருவதாகவும், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு படுகாயம் ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி வர்த்தக சங்கங்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நெடுஞ்சாலை துறைக்கு புகார் அளித்திருந்தனர்.
    • மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உடனடியாக மரைக்கான் சாவடி முதல் சியாத்தமங்கை வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க உத்தரவிட்டார்.

    நாகப்பட்டினம்:

    திட்டச்சேரி அருகே சாலை அமைக்கும் பணிக்கு பூஜை நடைபெற்றது. நாகூரில் இருந்து பனங்குடி, மரைக்கான்சாவடி, திட்டச்சேரி, நடுக்கடை சியாத்தமங்கை திருமருகல் வழியாக சன்னாநல்லூர் வரை பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி வர்த்தக சங்க ங்கள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் நெடுஞ்சாலை துறைக்கு புகார் அளித்திருந்தனர்,இதை விசாரித்த மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் உடனடியாக மரைக்கான் சாவடி முதல் சியாத்தமங்கை வரை சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் சாலை அமைக்கும் பணிக்கு பூஜை நடைபெற்றது. இதில் நெடுஞ்சாலைத் துறையின் உதவி இயக்குனர் அய்யாதுரை மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு இப்பணியை தொடங்கி வைத்தனர்.

    ×