search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண தகராறு"

    • காரில் செல்லும் போது, விமல் யார் நீங்கள்? எதற்காக என்னை கடத்துகிறீர்கள் என கேட்டார்.
    • கும்பலிடம் இருந்து தப்பி வந்த விமல் நேராக கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார்.

    கோவை:

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள கணியூர் ஸ்ரீ குமரன் நகரை சேர்ந்தவர் விமல்(வயது36). தொழில் அதிபர்.

    இவரது வீட்டில் மயிலாடுதுறையை சேர்ந்த சரவணன் (45) என்பவர் குடியிருந்தார். அப்போது இவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் அடிக்கடி சண்டையிட்டு வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி விமல் தனது காரில் உஞ்சப்பாளையம் மின்வாரிய அலுவலகம் அருகே சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அவரை பின்தொடர்ந்து 2 கார்கள் வேகமாக வந்தன. தொடர்ந்து விமலின் காரை முந்தி வந்த 2 கார்களும், விமலின் காரை வழிமறித்து நின்றது.

    இதனால் விமலும் தனது காரை நிறுத்தி விட்டார். அப்போது எதிரே நின்ற 2 கார்களில் இருந்து 5 பேர் கும்பல் திபுதிபுவென இறங்கினர். இறங்கிய வேகத்தில், விமலின் காரை நோக்கி அந்த கும்பல் சென்றது.

    பின்னர், அவர்கள், விமலை தங்களுடன் வா, உன்னிடம் பேச வேண்டும் என அழைத்தனர். அவர் வரமறுக்கவே, வலுக்கட்டாயமாக விமலை மிரட்டி, அவரது காரிலேயே ஏற்றி கடத்தி சென்றனர்.

    காரில் செல்லும் போது, விமல் யார் நீங்கள்? எதற்காக என்னை கடத்துகிறீர்கள் என கேட்டார். அதற்கு அவர்கள் சரவணன் தான் உன்னை கடத்த சொன்னார். நீ அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்து விடு என கூறி மிரட்டினர்.

    பணத்தை கொடுக்கவில்லை என்றால் கொன்று விடுவதாக மிரட்டியதுடன், சரமாரியாக தாக்கினர். இதனால் பயந்து போன விமல் தனது நண்பர்கள் மற்றும் மனைவியிடம் பேசி, ரூ.7 லட்சத்து 80 ஆயிரம் பணத்தை வாங்கி சரவணனின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.

    அதனை தொடர்ந்து, அந்த கும்பலை சேர்ந்தவர்கள், விமலிடம் ஒரு வெற்று பத்திரத்தை காண்பித்து, கையெழுத்து வாங்கி கொண்டனர். பின்னர் காரை அவினாசி அடுத்த விஜயமங்கலம் பகுதியில் நிறுத்தி விட்டு, அங்கிருந்து சென்று விட்டனர்.

    கும்பலிடம் இருந்து தப்பி வந்த விமல் நேராக கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், சரவணன் தான் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தொழில் அதிபர் விமலை ஆட்கள் வைத்து கடத்தி தாக்கியதுடன், பணத்தை பறித்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் சரவணன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாகி விட்ட 5 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ரியல் எஸ்டேட் தொழிலில் பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் நடந்து இருப்பது தெரிய வந்தது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த போளிவாக்கம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சத்யா(40). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் வீட்டில் இருந்த சத்யாவை சந்திக்க மேல்நல்லாத்தூரைச் சேர்ந்த நண்பர்களான லோகேஷ், திருவள்ளூர் ஐ.ஆர்.என். பின்புறம் பகுதியைச் சேர்ந்த ரவி ஆகியோர் வந்தனர்.

    அவர்கள் வீட்டின் பின்புறம் உள்ள கோழிப் பண்ணை அருகே பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்னர் இது மோதலாக மாறியது.

    ஆத்திரம் அடைந்த லோகேஷ் மற்றும் ரவி ஆகியோர் சத்யாவை தாக்கி மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தினர். மேலும் வலது கை கட்டை விரல், நடு விரலையும் கத்தியால் துண்டித்து தப்பி சென்று விட்டனர். அலறல் சத்தம்கேட்டு வந்த சத்யாவின் மனைவி புவனேஸ்வரி மற்றும் அக்கம் பக்கத்தினர் சத்யாவை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ரியல் எஸ்டேட் தொழிலில் பணத்தை பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த தாக்குதல் நடந்து இருப்பது தெரிய வந்தது.

    இதுகுறித்து மணவாளநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.

    • மருமகளை மாமனார், மைத்துனர் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இரணியல்:

    இரணியல் அருகே மணக்கரை அவரி விளக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் பிள்ளை (வயது 78). இவரது மகன் அய்யப்பன் கோபு (43) இவரது மனைவி துர்கா (38).

    இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ராணுவ வீரரான அய்யப்பன்கோபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதையடுத்து துர்கா கணவரின் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மாமனார் ஆறுமுகம் பிள்ளைக்கும், மருமகள் துர்காவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் பிள்ளை அவரது மகன் மது (43) இருவரும் சேர்ந்து துர்காவை சரமாரியாக தாக்கினார்கள். கல்லாலும், கம்பாலும் தாக்கியதில் துர்கா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தார்.

    இதையடுத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து துர்காவின் சகோதரர் பகவத்சிங் இரணியல் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் ஆறுமுகம் பிள்ளை, அவரது மகன் மது ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    எனது மகன் அய்யப்பன் கோபு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அதன் பிறகு அவருக்கு எல்லை பாதுகாப்பு படையிலிருந்து நிதி உதவி வழங்கப்பட்டது. அந்த பணம் எனது மருமகள் துர்காவிடம் வந்து சேர்ந்தது. இந்த பணம் பிரச்சினை தொடர்பாக எனக்கும் எனது மருமகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    நேற்றும் எங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. அப்போது எனது இன்னொரு மகன் மது அங்கு வந்தார். ஆத்திரமடைந்த நாங்கள் துர்காவை சரமாரியாக தாக்கினோம். இதில் அவர் இறந்து விட்டதாக கூறினார்கள்.

    போலீசார் கைது செய்யப்பட்ட இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மருமகளை மாமனார், மைத்துனர் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வரக்கால்பட்டு சேர்ந்த சங்கர் என்பவர் வைக்கோல் வாங்கி உள்ளார்.
    • சங்கர் மற்றும் மூன்று நபர்கள் செல்வத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    கடலூர்: 

    கடலூர் அருகே வெள்ளகேட் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 31). இவர் வைக்கோல் வியாபாரம் செய்து வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரக்கால்பட்டு சேர்ந்த சங்கர் என்பவர் வைக்கோல் வாங்கி உள்ளார். அப்போது முன்பணமாக 4000 கொடுத்துவிட்டு மீதி பணம் தருவதாக கூறியுள்ளார். மீதி பணம் தராததால் செல்வம் சம்பவத்தன்று சங்கரிடம் பணத்தை கேட்டார்.

    அப்பொழுது சங்கர் மற்றும் மூன்று நபர்கள் செல்வத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த செல்வம் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து செல்வம் கொடுத்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் சங்கர் பிரபு புண்ணியமூர்த்தி ஆகிய மூன்று பேரும் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏகாம்பரம் அதே பகுதியை சேர்ந்த முகுந்தன் என்பவரிடம் ரூ.10 லட்சம் வாங்கியுள்ளார்.
    • ஏகாம்பரம் கொடுத்த புகாரின் பேரில் முகுந்தன், புருஷோத்தமன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூரை அடுத்த முதுநகரை சேர்ந்தவர் ஏகாம்பரம் (வயது 48). இவர் அதே பகுதியை சேர்ந்த முகுந்தன் என்பவரிடம் ரூ.10 லட்சம் வாங்கியுள்ளார். இதில் ரூ.8 லட்சத்தை திருப்பி செலுத்திவிட்டார். மீதமுள்ள தொகையை ஏகாம்பரம் கொடுக்கவில்லை. இதையடுத்து ஏகாம்பதிடம் முகுந்தன் பணம் கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் முகுந்தன் மற்றும் அவர்களுடன் இருந்த 3 பேர் ஏகாம்பரத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஏகாம்பரம் கொடுத்த புகாரின் பேரில் முகுந்தன், புருஷோத்தமன் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×