search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீரில் மூழ்கி சாவு"

    • கார்த்திக் ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார்.
    • மருத்துவர்கள் கார்த்திக் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் அவ ல்பூந்துறை காத்துப்பா ளையம் பகுதியைச் சேர்ந்த வர் சங்கர் (வயது 42). இவரது மகன் கார்த்தி (20). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று கார்த்தி அவரது நண்பர்களுடன் கொடிவேரி அணைக்கு குளிக்கச் சென்றுள்ளார். அணையில் நீர் அதிகமாக சென்று கொண்டிருந்தது.

    நண்பர்கள் அனைவரும் குளித்து கொண்டிருக்கும் போது கார்த்திக் ஆழமான பகுதிக்கு சென்றதால் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கினார். உடன் அவரது நண்பர்கள் சத்தம் போட்டனர்.

    அலரல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் நீரில் மூழ்கிய கார்த்திக்கை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சக்தி அரசு மருத்து வமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கார்த்தி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    பின்னர் இதுகுறித்து அவ ரது தந்தை சங்கர் பங்களா புதூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.

    • விளையாட சென்ற குழந்தை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சேந்தமங்கலம் பெரியபாளையத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சந்திரன். இவரது மனைவி கவுரி (32).

    சந்திரன் ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்ட நிலையில், கவுரி தனது 3 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று மாலை கடைசி குழந்தை யான கபிலேஷ் வீட்டை விட்டு வெளியே வந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் அருகே இருந்த கசக்கால்வாயில் குழந்தை எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டதாகத் தெரிகிறது.

    விளையாட சென்ற குழந்தை வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் தாய் கவுரி அக்கம் பக்கத்தில் தேடினார். அந்த நேரத்தில் கபிலேஷின் பாட்டி உமா மாடுகளுக்கு தண்ணீர் காண்பிக்க குட்டை பகுதிக்கு சென்றுள்ளார்.

    அந்த குட்டையில் கபிலேஷ் மிதந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார். உறவினர்கள் உதவியுடன் சிறுவனை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நீச்சல் தெரியாத கிஷோர் கிணற்றின் கரையோரம் நின்று குளித்து கொண்டிருந்தார்.
    • திடீரென்று அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலத்தை அடுத்த பிக்கனஅள்ளி பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவரது மகன் கிஷோர் (வயது17). இவர் சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் கிணற்றில் குளிக்க சென்றார். அப்போது நீச்சல் தெரியாத கிஷோர் கிணற்றின் கரையோரம் நின்று குளித்து கொண்டிருந்தார்.

    திடீரென்று அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடனே நண்பர்கள் இந்த சம்பவம் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து மகேஷ் மகேந்திரமங்கலம் போலீசாருக்கும், பாலக்கோடு தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து கிணற்றில் மூழ்கிய கிஷோரின் உடலை மீட்டனர். பின்னர் கிஷோரின் உடலை போலீசார் கைப்பற்றி தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குளிப்பதற்காக சென்றபோது பரிதாபம்
    • தேசிய பேரிடர் மீட்பு படையினர் போராடி பிணமாக மீட்டனர்

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த அனந்தலை, எடகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவரது மகன் கோகுல் பிரசாத் (வயது 14) சென்னையில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தற்போது பள்ளி விடுமுறை என்பதால் கோகுல் பிரசாத் சொந்த ஊரான எடக்குப்பம் கிராமத்திற்கு வந்தார். நேற்று மதியம் கோகுல் பிரசாத் அப்பகுதி நண்பர்களோடு சேர்ந்து கல்குவாரி குட்டையில் குளிப்பதற்காக சென்றார்.

    அப்போது ஆழமான பகுதிக்கு சென்றார். நீச்சல் தெரியாததால் தண்ணீருக்குள் மூழ்கினார். இதை பார்த்த நண்பர்கள் பயந்து போய் கிராம பொது மக்களிடம் தெரிவித்தனர்.

    வாலாஜா போலீஸ் நிலையத்திற்கும், ராணிப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் குட்டையில் மூழ்கிய சிறுவனை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    நீண்ட நேரமாகியும் மாணவன் கிடைக்காததால் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படையினர்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பின்னர் தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தண்ணீர் குட்டையில் இறங்கி தேடுதலில் ஈடுபட்டனர்.

    சில மணி நேர தேடுதலுக்கு பின்னர் நீரில் மூழ்கி கிடந்த மாணவனை பிணமாக மீட்டனர்.

    தொடர்ந்து மாணவன் உடலை கைப்பற்றிய வாலாஜா போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று பாத்தகோட்ட பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றார்.
    • அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக கவுரம்மா உயிரிழந்தார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த நாயக்கன்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கவுரம்மா (வயது 66). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பாத்தகோட்ட பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக கவுரம்மா உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த உத்தனப்பள்ளி போலீசார் அங்கு விரைந்து வந்து கவுரம்மாவின் உடலை ஆற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மதுகுமார் தனது நண்பர்களுடன் கிட்டுகாடு பகுதியில் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தார்.
    • ஆழமான பகுதிக்கு சென்றதால் அவரால் கரைக்கு வரமுடியாமல் நீரில் மூழ்கி பலியானார்.

    தருமபுரி,

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த பட்டாத்தூர் நாகப்பா கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் மதுகுமார் (வயது 23).

    இவர் தனது நண்பர்களுடன் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாவுக்காக வந்தார். நேற்று மதுகுமார் தனது நண்பர்களுடன் கிட்டுகாடு பகுதியில் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தார். அப்போது மதுகுமார் ஆழமான பகுதிக்கு சென்றதால் அவரால் கரைக்கு வரமுடியாமல் நீரில் மூழ்கி பலியானார். அவரது உடல் ஊட்டமலை பரிசல் துறை பகுதியில் கரை ஒதுக்கியது.

    இதுகுறித்து அவரது நண்பர்கள் ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து மதுகுமாரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மீன்பிடிக்க சென்றபோது பரிதாபம்
    • 7 மணி நேரம் போராடி உடலை மீட்டனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே குனச்சியூர் பகுதியைச்சேர்ந்தவர் சிங் காரவேலன் (வயது 35), கூலி தொழிலாளி. இவருக்கு திரு மணமாகி திலகவதி என்ற மனைவி உள்ளார்.

    சிங்காரவேலன் தனது மனைவியை நேற்று முன்தி னம் சேலம் மருத்துவமனை யில் சேர்த்துவிட்டு இரவு வீட்டுக்கு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் நாட்ட றம்பள்ளி அருகே செட்டேரி டேம் பகுதியில் 10-க்கும் மேற் பட்ட நண்பர்களுடன் மீன்பி டிக்க சிங்காரவேலன் சென் றார்.

    அப்போது சிங்காரவேலன் மீன்களை பிடிப்பதற்காக வலையை எடுத்துக்கொண்டு சென்றார்.

    வலையை விட்டு விட்டு கரைக்கு வரும்போது திடீரென நீரில் மூழ்கினார். உடன் வந்த நண்பர்கள் காப் பாற்ற முயன்றும் முடிய வில்லை. இதையடுத்து நாட்ட றம்பள்ளி தீயணைப்பு துறை யினருக்கு தகவல் தெரிவித்த னர்.

    அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) கலைமணி தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று பரிசல் படகு மூலம் சிங்கார வேலனை தேடினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தும் நாட்டறம்பள்ளி தாசில் தார் குமார் விரைந்து சென்று மீட்பு பணிகளை பார்வை யிட்டார். மேலும் நாட்டறம் பள்ளி போலீஸ் இன்ஸ்பெக் டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக் டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

    அதன் பின்னர் மாலை 5 மணியளவில் 7 மணி நேரம் போராடி சிங்காரவேலன் உடலை பிணமாக மீட்டனர்.

    இதையடுத்து போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத் தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி யில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குளிக்கச் சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி ராமையன்தோப்பு பகுதியில் உள்ள பாலாற் றின் கிளை ஆற்றில், நூருல்லா பேட்டை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி நூர் (வயது 30) என்பவர் நேற்று முன்தினம் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றவர் நீரில் மூழ்கி விட்டார். மீண்டும் வெளி யில் வரவில்லை.

    இதனை அப்பகுதியில் இருந்தவர்கள் பார்த்து தீயணைப்புதுறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேரம் இருட்டிவிட்டதால் தேடும் பணி கைவிடப்பட்டது.

    இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று காலையில் மீண்டும் தேடுதல் பணி நடந்தது. அப்போது அவர் பிணமாக மீட்கப் பட்டார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், சின்ன அணைக்கட்டு பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரின் மகன் பிரகாஷ் (வயது 48) இவர் சக நண்பர்களுடன் சேர்ந்து ஏரிபுதூர் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோவில் அருகில் இருக்கும் குளத்தில் மீன் பிடிக்க சென்றார்.

    பிரகாஷ் சக நண்பர்களுடன் சேர்ந்து குளத்தில் இறங்கி மீன் பிடித்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்ப்பட்டு பிரகாஷ் நீரில் மூழ்க்கி உள்ளே சென்றுள்ளார்.

    இதனைப்பார்த்த சக நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு பார்த்த போது அவர் இறந்து தெரியவந்தது. இதனையடுத்து அணைக்கட்டு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டனர்.

    தகவலறிந்து விறைந்து வந்த போலீசார் பிரகாஷ் பிணத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அடுக்கம்பரை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    • மீன் பிடிக்க சென்றபோது விபரீதம்
    • போலீசார் விசாரணை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அருகே உள்ள செலந்தம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சிவா (வயது 45). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். தொடர்மழை காரணமாக செலந்தம் பள்ளி ஏரி நிறைந்து உபரி நீர் வெளியேறி வருகிறது. ஏரியில் அதிகளவில் மீன்கள் வளர்க்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், நேற்று முன்தினம் ஏரியில் மீன் பிடிக்க சிவா சென்றுள்ளார். அப்போது, திடீரென அவர் ஏரியில் மூழ்கியதாக அங்கிருந்தவர்கள் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அதுபற்றி குடும்பத்தினர் திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் ஏரிக்கு வந்து சுமார் 2 மணி நேரம் தேடியும் சிவா கிடைக்கவில்லை. இந்த நிலையில் நேற்று அதிகாலை சிவாவின் உடல் ஏரியில் கரை ஒதுங்கியது.

    இதுகுறித்து அவரது மனைவி லதா கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மயக்கம் ஏற்பட்டதால் விபரீதம்
    • போலீசார் விசாரணை

    வாலாஜா:

    ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் சேர்ந்தவர் பாலாஜி (35) இவரது மனைவி சரஸ்வதி இவர்களுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றது.

    பாலாஜி வாலாஜா பேட்டையில் அணைக்கட்டு ரோட்டில் உள்ள சிவில் சப்ளை குடோனில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    நேற்று சக்கரை மூட்டைகளை இறக்கி வைத்துவிட்டு அருகில் இருக்கும் மேம்பாலம் பகுதிக்கு சென்றுள்ளார். அங்குள்ள குட்டை அருகே சென்ற போது திடீரென மயக்கம் ஏற்பட்டதில் அந்த குட்டையில் விழுந்து மூச்சு திணறி இறந்துள்ளார்.

    இது குறித்து தகவல் அறிந்த வாலாஜா போலீசார் அங்கு சென்று பார்வையிட்டு பாலாஜி உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விழுப்புரத்தை சேர்ந்தவர்
    • போலீசார் விசாரணை

    செங்கம்:

    விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த யாசின் என்பவரது மகன் ஹாரிப் (வயது 23).

    இவர் தனது உறவினர்களுடன் செங்கம் அடுத்த குட்டூர் பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராமல் நீரில் மூழ்கி உறவினர்களின் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.

    உறவினர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் செங்கம் போலீசார் மற்றும் வனத்துறையினருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தன். அங்கு வந்த தீயணைப்புத்துறையினர் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர்.நீண்ட நேரத்துக்கு பின்னர் வாலிபர் உடலை மீட்டனர் செங்கம் போலீசாரிடம் உடலை வனத்துறையினர் ஒப்படைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருக்ன்றனர்.

    ×