

கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த நாயக்கன்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கவுரம்மா (வயது 66). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று பாத்தகோட்ட பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்றார். அப்போது அவர் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பரிதாபமாக கவுரம்மா உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த உத்தனப்பள்ளி போலீசார் அங்கு விரைந்து வந்து கவுரம்மாவின் உடலை ஆற்றில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.