search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாற்காலிகள்"

    • சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பில், 35 செட் மேசை, நாற்காலிகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மேசை, நாற்காலிகளை பள்ளிக்கு வழங்கி பேசினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை அரசு மேல்நிலைப் பள்ளியில், 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் படிக்கிறார்கள்.

    இங்குள்ள பல வகுப்பறை களில் மாண வர்கள் தரையில் அமர்ந்து படிப்பதால், பள்ளிக்கு மேசை மற்றும் நாற்காலி களை வழங்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக் குமாரிடம் பள்ளியின் சார்பில் கோரிக்கை மனு ஒன்றை அளித்திருந்தனர்.

    அதன்படி, சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பில், 35 செட் மேசை, நாற்காலிகளை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் நிர்மலா வரவேற்றார். மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மேசை, நாற்காலிகளை பள்ளிக்கு வழங்கி பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, கவுன்சிலர்கள் மகேந்திரன், வேடியப்பன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நாராயணசாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராஜசேகர், கட்டிகானப்பள்ளி ஊராட்சி துணைத் தலைவர் நாராயணகுமார், முன்னாள் கவுன்சிலர் ரவி, வங்கித் தலைவர் சின்னசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிதம்பரம், கிளை செயலாளர்கள் மாரி, ராமமூர்த்தி, மோகன், பாசறை செயலாளர் கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
    • வெளியூர் பஸ்கள் நிற்கும் இடங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் பயணிகள் அமரும் நாற்காலிகள் அமைக்கப்பட்டது.

    பல்லடம்:

    பல்லடம் பஸ் நிலையத்தில் உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, கோவை, திருச்சி போன்ற ஊர்களுக்கு செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில் உள்ளூர் பஸ்கள், வெளியூர் பஸ்கள் நிற்கும் இடங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் பயணிகள் அமரும் நாற்காலிகள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் அதில் சில நாற்காலிகள் உடைந்து, சாய்ந்து கிடக்கின்றன. இதனால் கூட்ட நேரங்களில் பயணிகள் அமர்வதற்கு சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நாற்காலிகளை சீரமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • சாய்வு நாற்காலிகள், எவர்சில்வர் கைப்பிடிகள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது.
    • கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு வசதியாக கழிவறை அமைத்து தர வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் அருகே கரந்தையில் கருணாசாமி கோவில் உள்ளது. இக்கோயிலின் கிழக்கு பகுதியில் 1400 ஆண்டுகள் பழமையான சூரிய புஷ்கரணி என்கிற திருக்குளம் சுமார் ஐந்தரை ஏக்கர் பரப்பளவில் உள்ளது.

    பல ஆண்டுகளாக இக்கோயில் குளத்துக்கு வரும் நீர்வழிப் பாதை பல்வேறு ஆக்கிரமிப்புகளால் தடைபட்டதால் குளம் குட்டை போல் வரண்டு காணப்பட்டது. மேலும் குளத்தை சுற்றி பல இடங்களில் குடியிருப்புவாசிகள் குளக்கரையை ஆக்கிரமித்துக் கொண்டனர்.

    இந்நிலையில் இக்குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தை பராமரிக்க இப்குதி மக்கள் கடந்த 2019-ம் ஆண்டு  தங்களுடைய சொந்த செலவில் குளத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து, அப்போது வடவாற்றிலிருந்து தண்ணீர் வரும் நீர் வழிப்பாதையை கண்டுபிடித்து அதனை சீரமைத்து தண்ணீர் கொண்டு வந்தனர்.

    இதைதொடர்ந்து, தஞ்சாவூர் மாநகராட்சி மூலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.2.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.

    பின்னர், குளம் முழுமையாக தூர்வாரப்பட்டு குளத்தை சுற்றி நான்கு கரையிலும் நடைபாதை, குளம் முழுவதும் சாய்வுத்தளம், சுற்றுச்சுவர், படித்துறை, அலங்கார மின் விளக்குகள், சாய்வு நாற்காலிகள், எவர்சில்வர் கைப்பிடிகள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது.

    மேலும் குளத்தின் தூர்வாரும் பணியின் போது கண்டுபிடிக்கப்பட்ட 9 சுடுமண் உறைகிணறுகளையும் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த பணிகளை நேற்று மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    அப்போது அப்பகுதி பொதுமக்கள் குளத்தில் புனித நீரை நிரப்பி அதை பராமரிக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு வசதியாக கழிவறை அமைத்து தர வேண்டும் என மேயரிடம் கோரிக்கை விடுத்தனர்.

    பின்னர் செய்தியாளர்களிடம் மேயர் சண்.ராமநாதன் கூறியதாவது:

    தஞ்சாவூரில் 40 குளங்கள் உள்ளது. இதில் இதுவரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அய்யன்குளம், சாமந்தான் குளம், அழகி குளம் ஆகியவை புனரமைக்கப்பட்டுள்ளது. தற்போது கருணாசுவாமி கோயில் குளம் புனரமைக்கும் பணி 90 சதவீதம் முடிவடைந்துள்ளது.மேலும், கரந்தையில் ஜைன குளம், குஜிலியன் குளம் ஆகியவை புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.

    ஆய்வின் போது மாநகரா ட்சி செயற்பொறியாளர் ஜெகதீசன், பொறியாளர் கார்த்தி, மாநகராட்சி மண்டலத் தலைவர் புண்ணியமூர்த்தி, மாமன்ற உறுப்பினர் சுகந்தி துரைசிங்கம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • தற்காலிகமாக செயல்பட உள்ள கல்லூரி கட்டிடம் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது.
    • மாணவர்கள் அமர 80 எண்ணிக்கை டெஸ்க், 16 நாற்காலிகள் கல்லூரிக்கு வந்து சேர்ந்தன.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி அரசு கலை அறிவியல் கல்லூரி தற்காலிகமாக பூதலூர் ஊராட்சி ஒன்றிய பழைய கட்டிடத்தில் செயல்படும் என அறிவிக்கப்பட்டு கடந்த 7-ம் தேதி முதல்-அமைச்சா மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வழியாக தொடங்கி வைத்தார்.

    பூதலூரில் செயல்பட உள்ள கலை அறிவியல் கல்லூரி முதல்வராக பேராசிரியர் ராஜாவ ரதராஜா நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார். தற்காலிகமாக செயல்பட உள்ள கல்லூரி கட்டிடம் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளது.

    கல்லூரி மாணவர்கள் சேர்க்கை முடிந்து வகுப்புகள் தொடங்கு வதற்கு முன்பாக வகுப்பறைகள் தயார் நிலையில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாணவர்கள் மற்றும் கல்லூரிக்கு தேவையான தளவாட பொருட்கள் வந்த வண்ணம் உள்ளன.

    துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ. தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கல்லூரிக்கு தேவையான தளவாட சாமான்கள் வாங்கி நிதி ஒதுக்கீடு செய்து இருந்தார்.

    எம்.எல்.ஏ-வின் பரிந்துரையின் பேரில் கல்லூரிக்கு ரூ.15.80 லட்சம் மதிப்பீட்டில் மாணவர்கள் அமர 80 எண்ணிக்கை டெஸ்க், 16 நாற்காலிகள், 16 மேஜைகள், புத்தகங்கள் வைக்க 5 அலமாரிகள், 5 பீரோக்கள் உள்ளிட்ட பொருள்கள் கல்லூரிக்கு வந்து சேர்ந்தன. கல்லூரிக்கு வந்த பொருள்களை கல்லூரி முதல்வர் ராஜாவரதராஜா சரிபார்த்து பெற்று கல்லூரி வகுப்பறைக்குள் வைத்தார்.

    ×