என் மலர்
நீங்கள் தேடியது "நமீபியா"
- இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 20 பந்தில் அரை சதம் கடந்து அசத்தினார்.
- அவர் பவர் பிளே கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசினார்.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பைத் தொடரின் 18வது லீக் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. அதில் இந்தியா, நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற நமீபியா அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக ஆடியது. சஞ்சு சாம்சன் 8 பந்தில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 22 ரன் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து இஷான் கிஷனுடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். அதிரடியில் மிரட்டிய இஷான் கிஷன் பவர் பிளேவின் கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரி விளாசி அசத்தினார். அவர் 20 பந்தில் அரைசதம் விளாசி அசத்தினார். அதனால் இந்திய அணி 6.5 ஓவரில் 100 ரன்களைக் கடந்து சாதனை படைத்தது.
இதன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிவேகமாக 100 ரன்கள் குவித்த அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
கடந்த 2014-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 7 ஓவரில் 100 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 209 ரன்கள் குவித்தது.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பை தொடரின் 18-வது லீக் போட்டியில் இந்தியா, நமீபியா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் அதிரடியாக ஆடி 24 பந்தில் 61 ரன்கள் குவித்தார். பாண்ட்யா 28 பந்தில் 52 ரன்கள் குவித்தார்.
நமீபியாவின் ஜெர்ஹார்டு எராமஸ் 4 விக்கெட் வீழ்த்தினார்.
210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நமீபியா களமிறங்கியது. ஸ்டீன் கேம்ப் 29 ரன்னும், ஜேன் பிரிலிங்க் 22 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.
இறுதியில், நமீபியா 18.2 ஓவரில் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 93 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டும், பாண்ட்யா, அக்சர் படேல் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 24 பந்துகளில் 61 ரன்கள் அடித்து இஷான் கிஷன் ஆட்டமிழந்தார்.
- அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா அரைசதம் அடித்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்நிலையில், இன்று இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நமீபியாவுடன் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
உடல் தகுதி இல்லாமல் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனார். இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை. அதனால் இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் விளையாடினார்.
இப்போட்டியில் 3 சிக்ஸர்கள் 1 பவுண்டரி அடித்து 22 ரன்னில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். இதையடுத்து அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 20 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். 24 பந்துகளில் 61 ரன்கள் அடித்து இஷான் கிஷன் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய திலக் வர்மா 25 ரன்னிலும் சூர்யகுமார் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து ஹர்திக் பாண்ட்யா - துபே ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து. அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா அரைசதம் அடித்து 52 ரன்னில் ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் அடித்தது.
- 3 சிக்ஸர்கள் 1 பவுண்டரி அடித்து 22 ரன்னில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார்.
- அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 20 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்நிலையில், இன்று இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நமீபியாவுடன் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
உடல் தகுதி இல்லாமல் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனார். இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை. அதனால் இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் விளையாடினார்.
இப்போட்டியில் 3 சிக்ஸர்கள் 1 பவுண்டரி அடித்து 22 ரன்னில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். இதையடுத்து அதிரடியாக விளையாடிய இஷான் கிஷன் 20 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். 24 பந்துகளில் 61 ரன்கள் அடித்து இஷான் கிஷன் ஆட்டமிழந்தார். தற்போது வரை 7.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 104 ரன்கள் அடித்துள்ளது.
- அபிஷேக் சர்மா இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை
- 3 சிக்ஸர்கள் 1 பவுண்டரி அடித்து 22 ரன்னில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்நிலையில், இன்று இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நமீபியாவுடன் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
உடல் தகுதி இல்லாமல் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனார். இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை. அதனால் இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் விளையாடினார்.
இப்போட்டியில் 3 சிக்ஸர்கள் 1 பவுண்டரி அடித்து 22 ரன்னில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். அதிரடியாக தொடங்கிய சஞ்சு சாம்சன் உடனே அவுட்டானது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சரியாக விளையாடாத சஞ்சு சாம்சன் அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. தற்போது மீண்டும் தனக்கு கிடைத்த சஞ்சு சாம்சன் பயன்படுத்திக்கொள்ளவில்லை .
- அபிஷேக் சர்மா இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை.
- இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் ஆடுகிறார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்நிலையில், இன்று இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நமீபியாவுடன் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
உடல் தகுதி இல்லாமல் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனார். இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை. அதனால் இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் ஆடுகிறார்.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சரியாக விளையாடாத சஞ்சு சாம்சன் அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. தற்போது மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தி கொள்ளுவரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
- இன்று இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நமீபியாவுடன் மோதுகிறது.
- கடந்த போட்டியில் விளையாடாத வேகப்பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெற்றுள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்நிலையில், இன்று இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நமீபியாவுடன் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
உடல் தகுதி இல்லாமல் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனார். இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை. அதனால் இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் ஆடுகிறார்.
காய்ச்சல் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத வேகப்பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெற்றுள்ளார். முகமது சிராஜ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மற்றபடி இந்திய அணியில் மாற்றம் இல்லை.
- கடந்த ஆட்டத்தில் கேப்டன் சூர்யகுமார் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
- நமீபியாவுக்கு எதிராக அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடினால் மட்டுமே சாதிக்கலாம்.
புதுடெல்லி:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்நிலையில், இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நமீபியாவை இன்று (12-ம் தேதி) எதிர் கொள்கிறது. டெல்லியில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது. நமீபியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.
நமீபியாவுக்கு எதிராக இந்திய அணி அதிரடியாக ஆடி ரன்குவிப்பில் புதிய சாதனை படைக்குமா எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக 297 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். இதைத் தாண்டி புதிய சரித்திரம் படைக்க காத்திருக்கிறது.
கடந்த ஆட்டத்தில் கேப்டன் சூர்யகுமார் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நமீபியாவுக்கு எதிராக அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடினால் மட்டுமே சாதிக்க முடியும்.
உடல் தகுதி இல்லாமல் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனார். இன்றைய போட்டியில் அவர் விளையாட வாய்ப்பில்லை . அவர் இடம் பெறவில்லை என்றால் இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் ஆடுவார்.
காய்ச்சல் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத வேகப்பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுகிறார். முகமது சிராஜ் அல்லது அர்ஷ்தீப் நீக்கப்படலாம். மற்றபடி இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது.
டி 20 போட்டியில் இந்திய அணி நமீபியாவுடன் மோதுவது 2-வது முறையாகும். இதற்கு முன் 2021 உலகக் கோப்பையில் துபாயில் நடந்த ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.
நமீபியா அணி முதல் போட்டியில் நெதர்லாந்திடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
முன்னதாக நாளை காலை 11 மணிக்கு பல்லேகலேவில் நடக்கும் போட்டியில் பி பிரிவில் உள்ள இலங்கை-ஓமன் அணிகள் மோதுகின்றன. மாலை 3 மணிக்கு மும்பையில் நடக்கும் போட்டியில் சி பிரிவில் உள்ள இத்தாலி- நேபாளம் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளில் முதல் வெற்றியை பெறப்போவது யார் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்திய அணி வங்க தேசத்துக்கு எதிராக 297 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும்.
- நமீபியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.
புதுடெல்லி:
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.
சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்க டித்தது.
இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நமீபியாவை நாளை ( 12-ந் தேதி) எதிர் கொள்கிறது. டெல்லியில் இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
நமீபியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்திய அணி இருக்கிறது.
அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு இந்தியா அதிரடியை வெளிப்படுத்தவில்லை. இதற்கு ஆடுகள தன்மை தான் காரணம் என்று கூறப்பட்டது. நமீபியாவுக்கு எதிராக இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் புதிய சாதனை படைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக 297 ரன் குவித்ததே அதிகபட்ச ஸ்கோராகும். இதைத் தாண்டி புதிய சரித்திரம் படைக்க காத்திருக்கிறது.
கடந்த ஆட்டத்தில் கேப்டன் சூர்ய குமார் யாதவ் ஒருவர் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நமீபியாவுக்கு எதிராக அனைத்து பேட்ஸ்மேன்களும் சிறப்பாக ஆடினால் மட்டுமே சாதிக்க முடியும்.
உடல் தகுதி இல்லாமல் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா டக்அவுட் ஆனார். நாளைய போட்டியில் அவர் விளையாட வாய்ப்பு இல்லை . அவர் இடம் பெறவில்லை என்றால் இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் ஆடுவார்.
காய்ச்சல் காரணமாக கடந்த போட்டியில் விளையாடாத வேகப்பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா இடம் பெறுகிறார். முகமது சிராஜ் அல்லது அர்ஷ்தீப் நீக்கப்படலாம். மற்றபடி இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது. வாஷிங்டன் சுந்தர் முழு உடல் தகுதி பெற்றாலும் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு குறைவே.
20 ஓவர் போட்டியில் இந்திய அணி நமீபியாவுடன் மோதுவது 2-வது முறையாகும். இதற்கு முன்பு 2021 உலக கோப்பையில் துபாயில் நடந்த ஆட்டத்தில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது.
நமீபியா அணி முதல் போட்டியில் நெதர்லாந்திடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.
முன்னதாக நாளை காலை 11 மணிக்கு பல்லேகலேவில் நடைபெறும் போட்டியில் பி பிரிவில் உள்ள இலங்கை-ஓமன் அணிகள் மோதுகின்றன.
இலங்கை 2-வது வெற்றி வேட்கையில் உள்ளது. அந்த அணி முதல் ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது. ஓமன் அணி தொடக்க போட்டியில் ஜிம்பாப்வேயிடம் தோல்வி அடைந்தது.
மாலை 3 மணிக்கு மும்பையில் நடைபெறும் போட்டியில் சி பிரிவில் உள்ள இத்தாலி- நேபாளம் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தொடக்க ஆட்டங்களில் தோற்றன. இதனால் முதல் வெற்றியை பெறப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
- முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 134 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
- நமீபியா கடைசி பந்தில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
தென்ஆப்பிரிக்கா- நமீபியா அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டி20 போட்டி இன்று வின்ட்கோயக்கில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா அணியால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.
டி காக் (1), ஹென்றிக்ஸ் (7), ஜேசன் ஸ்மித் (31), போன்ற நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருந்தும் 150 ரன்களை கடக்க முடியவில்லை. நமீபியா அணியில் ரூபன் ட்ரம்பெல்மான் 3 விக்கெட்டும், மேக் ஹெய்ங்கோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நமீபியா களம் இறங்கியது. முதல் மூன்று வீர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் எராமஸ் 21 ந்தில் 21 ரன்களும், ஸ்மித் 14 பந்தில் 13 ரன்களும், மாலன் குருகர் 21 பந்தில் 18 ரன்களும் சேர்த்தனர்.
இதனால் அணி வெற்றி நோக்கி சென்று கொண்டிருந்தது. விக்கெட் கீப்பர் ஜனே க்ரீன் சிறப்பாக விளையாடினார். கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தை க்ரீன் சிக்சருக்கு தூக்கினார். அதன்பின் 4 பந்தில் 4 ரன்கள் எடுத்தனர். கடைசி பந்தில் 1 ரன் தேவைப்பட்டது. க்ரீன் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்ட நமீபியா கடைசி பந்தில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
- பிரதமர் மோடிக்கு நமீபியா நாட்டின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.
- அங்கு பிரதமர் மோடி உற்சாகமாக மேளம் கொட்டி மகிழ்ந்தார்.
விண்ட்ஹோக்:
கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் ஆகிய நாடுகளுக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த கட்டமாக ஆப்பிரிக்க நாடான நமீபியாவுக்கு சென்றுள்ளார்.
நமீபியாவின் விண்ட்ஹோக்கில் தரையிறங்கிய பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் நெட்டம்போ நந்தி எண்டைட்வா நேரில் வந்து வரவேற்றார். பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு பிரதமர் மோடி உற்சாகமாக மேளம் கொட்டி மகிழ்ந்தார்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இது பிரதமர் மோடிக்கு அளிக்கப்படும் 27-வது வெளிநாட்டு விருது ஆகும். தற்போதைய சுற்றுப்பயணத்தில் பெறும் 4வது விருது ஆகும்.
அதைத் தொடர்ந்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய வைர உற்பத்தியாளர்களில் நமீபியாவும் ஒன்று. இந்தியாவில் மிகப்பெரிய வைர மெருகூட்டல் தொழில் உள்ளது. அதுவும் எனது சொந்த மாநிலமான குஜராத்தில். வரும் காலங்களில் இரு நாடுகளிடையே உள்ள நட்பு இந்த வைரங்களைப் போலவே பிரகாசிக்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.
- மோடிக்கு பிரேசிலின் உயரிய விருது வழங்கி அந்நாட்டு அதிபர் லூலா டி சில்வா கவுரவித்தார்
- விமான நிலையத்தில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
அரசு முறை பயணமாக பிரேசில் சென்றிருந்த பிரதமர் மோடிக்கு பிரேசிலின் உயரிய விருதான "Grand Collar of the National Order of the Southern Cross விருது வழங்கி அந்நாட்டு அதிபர் லூலா டி சில்வா கவுரவித்தார்
பிரேசில் அளித்த விருது தனக்கு மட்டுமில்லாமல் 140 கோடி இந்தியர்களுக்கும் கிடைத்த பெருமை என பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நமீபியா சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் இசைக் கலைஞர்களுடன் சேர்ந்து தாளம் இசைத்து பிரதமர் மோடி மகிழ்ந்தார்.