search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.ஐ.ஜி"

    • சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி மேட்டூர் துணை சுப்பிரண்டு அலுவ லகத்தில் ஆய்வு செய்தார்.
    • மேட்டூர் போலீஸ் பாய்ஸ் கிளப் உள்விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார்.

    மேட்டூர்:

    சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி மேட்டூர் துணை சுப்பிரண்டு அலுவ லகத்தில் ஆய்வு செய்தார்.

    மேட்டூர் துணை சுப்பி ரண்டு மரியமுத்து கட்டுப்பாட்டில் இருக்கும் மேச்சேரி போலீஸ் நிலையம், கருமலை கூடல் போலீஸ் நிலையம், மேட்டூர் போலீஸ் நிலையம், கொளத்தூர் போலீஸ் நிலையம், மற்றும் மேட்டூர் பெண்கள் போலீஸ் நிலை யம்,ஆகிய போலீஸ் நிலை யங்களில் உள்ள நிலுவை யில் உள்ள வழக்குகள், ஆவணங்கள் பற்றியும் ஆய்வு செய்தார்.மேட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள நிலவரங்களை பற்றி கேட்ட றிந்தார். மேலும் மேட்டூர் போலீஸ் பாய்ஸ் கிளப் உள்விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார்.

    பள்ளி மாணவ, மாணவி கள் சிலம்பம் சுற்றி சிறப்பாக வர வேற்றனர். பின்னர் பள்ளி குழந்தைகளுடன் கேரம்போர்ட் விளையாடி மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் மாணவ, மாணவி களுக்கு பரிசு வழங்கி னார். இந்த நிகழ்ச்சியில் மேட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    • போலீசாரின் குறைகளையும் கேட்டறிந்தார்
    • ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    நாகர்கோவில்:

    நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் இன்று நாகர்கோவிலுக்கு வந்தார்.

    பின்னர் அவர் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வருடாந்திர ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது ஆயுதப்படை காவல் நிலையம் மற்றும் குடியிருப்பு பகுதிகள், ஓய்வறைகள், அலுவலகத்தில் உள்ள போலீசாரின் வருகை பதிவேடுகள், மோப்ப நாய் பிரிவு, ஆவணக்காப்பக அலுவலகம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மேலும் போலீசார் பயன்படுத்தும் துப்பாக்கிகள், பேரிடர் காலங்களில் பயன்படுத்தும் மீட்பு கருவிகள், போலீசாரின் வாகனங்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு பணியாற்றும் போலீசாரிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

    ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    கைதி ரகசியமாக வெளியில் சென்ற விவகாரம்: சேலம் மத்திய சிறையில் டி.ஐ.ஜி. அதிரடி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    சேலம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் பெரிய காஞ்சி பகுதியை சேர்ந்தவர் வசந்த்(வயது 24).இவர் மீது 2 கொலை வழக்குகள் உள்பட 19 வழக்குகள் நிலுவையில் உள்ளன . சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு சிறையிலிருந்து ஜாமீனில் வெளியில் சென்றார்.

    அப்போது சிறை வாசலில் காஞ்சிபுரம் போலீசார் வேறு ஒரு வழக்கில் கைது செய்ய காத்து இருந்தனர் .ஆனால் சேலம் மத்திய சிறையில் இருந்து கேண்டீன் கதவை திறந்து அவர் வெளியில் அனுப்பப் பட்டதால் காஞ்சிபுரம் போலீசார் கைது செய்ய முடியாமல் ஏமாற்றமடைந்தனர்.

    இதுகுறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி அவர் வேறு வழியில் செல்வதற்கு உதவியதாக சிறை வார்டன்கள் ரமேஷ்குமார், பூபதி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் .மேலும் உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் ஜெயில் அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் பணம் கைமாறியதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் டி.ஜி.பி. உத்தரவின்பேரில் சேலம் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் இன்று சேலம் மத்திய சிறையில் விசாரணை நடத்தினார். 4 மணி நேரத்திற்கும் மேலாக அதிரடி விசாரணை நடந்தது.

    கைதி வசந்த் ரகசியமாக வெளியே அனுப்பப்பட்ட தில் மேலும் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது? இதில் எவ்வளவு பணம் கைமாறியது? மேலும் அங்குள்ள கேமரா பதிவுகள் குறித்தும் கைதியை வெளியில் அழைத்துச் சென்றவர்கள் விவரம் குறித்தும் பணியில் இருந்தவர்கள் குறித்தும் விரிவாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    விசாரணை முடிவில் அதிகாரிகள் சிலர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் சேலம் சிறை அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

    ×