என் மலர்
உள்ளூர் செய்திகள்

நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் ஆய்வு செய்தபோது எடுத்த படம்.
நாகர்கோவிலில் இன்று ஆயுத படை மைதானத்தில் போலீஸ் டி.ஐ.ஜி திடீர் ஆய்வு
- போலீசாரின் குறைகளையும் கேட்டறிந்தார்
- ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
நாகர்கோவில்:
நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் இன்று நாகர்கோவிலுக்கு வந்தார்.
பின்னர் அவர் நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் வருடாந்திர ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது ஆயுதப்படை காவல் நிலையம் மற்றும் குடியிருப்பு பகுதிகள், ஓய்வறைகள், அலுவலகத்தில் உள்ள போலீசாரின் வருகை பதிவேடுகள், மோப்ப நாய் பிரிவு, ஆவணக்காப்பக அலுவலகம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் போலீசார் பயன்படுத்தும் துப்பாக்கிகள், பேரிடர் காலங்களில் பயன்படுத்தும் மீட்பு கருவிகள், போலீசாரின் வாகனங்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்கு பணியாற்றும் போலீசாரிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.
ஆய்வின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் உடன் இருந்தனர்.






