search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலிண்டர் விலை உயர்வு"

    • நவம்பர் 1-ந்தேதி 101.50 ரூபாய் உயர்த்தப்பட்டு, 16-ந்தேதி 57 ரூபாய் குறைக்கப்பட்டது.
    • 1942 ரூபாயில் இருந்து தற்போது 1968.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.

    எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் சர்வசே சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, குறைவுக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர் விலைகளை மாறியமைக்கும். அந்த வகையில் டிசம்பர் 1-ந்தேதியான இன்று விலைகளை மாற்றியமைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையிலும் மாற்றம் செய்யப்படவில்லை. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட 918 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    ஆனால் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலையை உயர்த்தியுள்ளது. முன்னதாக 1942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது 26.50 ரூபாய் உயர்த்தப்பட்டு 1968.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் நிலையில் டெல்லி, மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் விலையில் சற்று ஏற்றம் இறக்கம் காணப்படும்.

    முன்னதாக, நவம்பர் 1-ந்தேதி விலை மாற்றியமைக்கப்பட்டு, சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 101.50 ரூபாய் உயர்த்தப்பட்டு, இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் 1999.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பின்னர் 16-ந்தேதி 57 ரூபாய் குறைக்கப்பட்டு 1942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

    • பெண்கள் அமைச்சரை பார்த்து, சார்... சிலிண்டர் விலை 1,200 ரூபாவாக உயர்ந்துவிட்டது. எப்போது விலையை குறைக்க போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.
    • பூஜையை முடித்த அமைச்சரிடம் பெண்கள், சிலிண்டர் விலையை எப்போது குறைப்பீங்க என்று மீண்டும் கேள்வியை எழுப்பினர்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பாகூர் தொகுதிக்குட்பட்ட மணப்பட்டு புதிய தாங்கல் ஏரி தூர்வாரி ஆழப்படுத்தப்படுகிறது.

    இதற்கான தொடக்க விழா நடைபெற்றது. இதில் பா.ஜ.க. அமைச்சர் சாய்.ஜெ. சரவணகுமார், செந்தில்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் கலந்து கொள்ள வந்த அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் அங்கிருந்த பெண்களிடம் 100 நாள் வேலைவாய்ப்பு 200 நாட்களாகவும் அதற்கான கூலியையும் பிரதமர் மோடி உயர்த்திருக்கிறார்.

    மேலும் மக்களுக்கு வருகின்ற நிதியை உயர்த்தி கொடுக்க சொல்லியும் கூறி இருக்கிறார் என்றார். அப்போது பெண்கள் இதனை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தனர். இதற்கு ஏன் அமைதியாக இருக்கிறீர்கள் நீங்கள் கைதட்டுங்கள் என்று அமைச்சர் கூறினார். அங்கிருந்த பெண்கள் சிரித்துக்கொண்டே கைதட்டினர்.

    இதையடுத்து அங்கிருந்து பெண்கள் அமைச்சரை பார்த்து, சார்... சிலிண்டர் விலை 1,200 ரூபாவாக உயர்ந்துவிட்டது. எப்போது விலையை குறைக்க போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர்.

    இதையடுத்து அமைச்சர் அங்கிருந்த பூஜை தட்டை எடுத்து வானத்தில் காட்டி மந்திரம் ஓதினார். இதை பார்த்த பெண்கள் சிரித்தனர். பூஜையை முடித்த அமைச்சரிடம் பெண்கள், சிலிண்டர் விலையை எப்போது குறைப்பீங்க என்று மீண்டும் கேள்வியை எழுப்பினர்.

    இதற்கு அவர் பதில் அளிக்காமல் அங்கிருந்து சென்று விட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • மணமகன் நயீமின் நண்பர்கள் மணமக்களுக்கு அளித்த பரிசு பொருட்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
    • கியாஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டும் வகையில் மணமக்களுக்கு மண் அடுப்பு, சாணி வறட்டி, விறகு ஆகியவற்றை அலங்கரித்து அன்பளிப்பாக நண்பர்கள் அளித்தனர்.

    கடலூர்:

    கடலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியை சேர்ந்த என்ஜினீயரிங் பட்டதாரி நயீம் என்ற மணமகனுக்கும், சென்னை ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த முஸ்கான் என்ற எம்.பி.ஏ. பட்டதாரி மணமகளுக்கும் நேற்று திருமண வரவேற்பு விழா நடைபெற்றது.

    இதில் உறவினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழச்சியில் மணமக்களுக்கு பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

    இதில் மணமகன் நயீமின் நண்பர்கள் மணமக்களுக்கு அளித்த பரிசு பொருட்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

    தற்போது கியாஸ் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டும் வகையில் மணமக்களுக்கு மண் அடுப்பு, சாணி வறட்டி, விறகு ஆகியவற்றை அலங்கரித்து அன்பளிப்பாக நண்பர்கள் அளித்தனர்.

    நண்பர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க மேடையிலே அன்பளிப்பை திறந்து பார்த்த மணமக்கள் இந்த பாரம்பரிய பழமையான பொருட்களை கண்டு வியப்படைந்தனர்.

    • மத்திய அரசு கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தியிருக்கிறது.
    • மத்திய அரசு உயர்த்தப்பட்டு இருக்கும் கேஸ் சிலிண்டரின் விலையை திரும்ப பெற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தற்பொழுது மத்திய அரசு கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தியிருக்கிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் கேஸ் சிலிண்டர் என்பது அத்தியாவசிய தேவையாக இருக்கிறது. ஏற்கனவே தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் கேஸ் சிலிண்டரின் விலையை குறைக்கும் வகையில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ. 100 மானியம் அளிப்போம் என்று கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாமல் இருக்கிறது.

    இச்சூழலில் மத்திய அரசு வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தியதால் ஏழை, எளிய நடுத்தர மக்களின் பொருளாதார சுமை கூடும். எனவே மத்திய அரசு உயர்த்தப்பட்டு இருக்கும் கேஸ் சிலிண்டரின் விலையை திரும்ப பெற உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×