என் மலர்
நீங்கள் தேடியது "கோகோ காப்"
- கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது.
- இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப் தோல்வி அடைந்தார்.
தோஹா:
கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் தோஹாவில் நடக்கிறது. இதில் முன்னணி வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், பெண்கள் பிரிவு 2வது சுற்றில் நேரடியாக களமிறங்கிய நம்பர் 4 வீராங்கனையும், அமெரிக்காவைச் சேர்ந்த கோகோ காப், இத்தாலி வீராங்கனை எலிசபெட்டா உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய இத்தாலி வீராங்கனை எலிசாபெட்டா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் கத்தார் ஓபன் தொடரில் இருந்து முன்னணி வீராங்கனையான கோகோ காப் வெளியேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
- அமெரிக்காவின் கோகோ காப் காலிறுதியில் தோல்வி அடைந்தார்.
மெல்போர்ன்:
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடன் மோதினார்.
இதில் ஆரம்பம் முதலே உக்ரைன் வீராங்கனை சிறப்பாக ஆடினார். இதனால் எலினா ஸ்விடோலினா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
இதன்மூலம் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள கோகோ காப் நடப்பு தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
- அமெரிக்காவின் கோகோ காப் நான்காவது சுற்றில் வென்றார்.
மெல்போர்ன்:
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, கனடாவின் விக்டோரியா எம்போகோ உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-1, 7-6 (1) என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் செக் நாட்டு வீராங்கனையான கரோலினா முச்சோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
நாளை மறுதினம் நடைபெற உள்ள காலிறுதியில் சபலென்கா, அமெரிக்காவின் இவா ஜோவிக் உடனும், கோகோ காப் உக்ரைனின் எலினா ஸ்விடோலினா உடனும் மோதுகின்றனர்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
- அமெரிக்காவின் கோகோ காப் மூன்றாவது சுற்றில் வென்றார்.
மெல்போர்ன்:
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டு வீராங்கனை ஹெய்லி பாப்டிஸ்ட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 3-6, 6-0, 6-3 என்ற செட் கணக்கில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ரொமேனியாவின் எலினா கேப்ரியலாவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்னில் நடக்கிறது.
- அமெரிக்காவின் கோகோ காப் இரண்டாவது சுற்றில் வென்றார்.
மெல்போர்ன்:
நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தத் தொடர் பிப்ரவரி 1-ம் தேதி வரை நடக்கிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், செர்பியாவின் ஒல்கா டேனிலோவிச் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 6-2, 6-3 என்ற செட் கணக்கில் போலந்தின் மக்டலேனாவை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- யுனைடெட் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்து வருகிறது.
- முதல் சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப் வெற்றி பெற்றார்.
சிட்னி:
யுனைடெட் கோப்பை டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காப், அர்ஜெண்டினாவின் சோலோனா சியாரா உடன் மோதினார்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-1, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்றார்.
- பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
- 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப் எளிதில் வெற்றி பெற்றார்.
ரியாத்:
54-வது பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடந்து வருகிறது.
ஸ்டெபிகிராப் பிரிவில் நம்பர் ஒன் நட்சத்திரமான பெலாரசின் அரினா சபலென்கா, நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் கோகோ காப், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.
இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்றார்.
- வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
- இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடைபெற்றது.
நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், சக நாட்டு வீராங்கனையான ஜெசிகா பெகுலா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய கோகோ காப் 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் அரையிறுதியில் வென்றார்.
பீஜிங்:
வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் கோகோ காப், இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய கோகோ காப் 6-4, 6-3 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் கோகோ காப், சக நாட்டு வீராங்கனையான ஜெசிகா பெகுலாவை சந்திக்கிறார்.
- வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் அரையிறுதிக்கு முன்னேறினார்.
பீஜிங்:
வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-3, 6-0 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் லாரா செக்மண்டை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா பெகுலாவுடனும், கோகோ காப், பவுலினியுடனும் மோதுகின்றனர்.
- வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
- இதில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப் காலிறுதிக்கு முன்னேறினார்.
பீஜிங்:
வூஹான் ஓபன் டென்னிஸ் தொடர் சீனாவில் நடந்து வருகிறது.
இந்த தொடரில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 4வது சுற்று ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் சம்சோனோவா உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப், சீனாவின் ஜாங் ஷுவாய் உடன் மோதினார். இதில் கோகோ காப் 6-3, 6-2 என வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- சீனா ஓபன் டென்னிஸ் தொடர் தலைநகர் பீஜிங்கில் நடந்து வருகிறது.
- காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
சீனா ஓபன் டென்னிஸ் தொடர் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், ஜெர்மனியின் எவா லிஸ் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய கோகோ காப் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் அரையிறுதியில் கோகோ காப், சக நாட்டு வீராங்கனை அனிசிமோவாவை எதிர்கொள்கிறார்.






