search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கூடுதல் வரதட்சணை"

    • 2-வது திருமணம் செய்து கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்திய திருப்பூர் வாலிபர்-உறவினர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • மாப்பிள்ளை வீட்டாருக்கு 6½ பவுன், ரூ.20 ஆயிரம் ரொக்கம் சீர் கொடுத்துள்ளனர்.

    விருதுநகர்

    திருத்தங்கல் திருவள்ளூர் காலனி பகுதியை சேர்ந்தவர் ரெஜினாமேரி. இவருக்கும், திருப்பூரை சேர்ந்த செல்வமணி என்பவருக்கும் கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டாருக்கு 6½ பவுன், ரூ.20 ஆயிரம் ரொக்கம் சீர் கொடுத்துள்ளனர்.

    திருமணத்திற்கு பின் கணவர் வீட்டில் ரெஜினா மேரி வசித்து வந்தார். இந்த நிலையில் பெற்றோர் வீட்டில் கூடுதலாக ரூ.1 லட்சம் வாங்கி தரவேண்டும் என கேட்டு ரெஜினா மேரியை, கணவர் துன்பு றுத்தி வந்ததாக கூறப்படு கிறது.

    அவருக்கு உடந்தை யாக தாய் பொன்னுத்தாய், சகோதரிகள் கலையரசி, சந்திராதேவி, உறவினர் திருத்தங்கல் லலிதா உள் ளிட்டோர் ரெஜினா மேரியிடம் கூடுதல் வரதட் சணை கேட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். மேலும் செல்வ மணிக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து ரெஜினா மேரி சிவகாசி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் தனக்கு நேர்ந்த துன்புறுத்தல் குறித்து மனு செய்தார். கோர்ட்டு உத்தர வின்பேரில் சிவகாசி அனைத்து மகளிர் போலீ சார் செல்வமணி மற்றும் உறவினர்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகரில் கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • இது தொடர்பாக கணவர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் அல்லம்பட்டி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த வர் சிவகுமார். இவரது மகள் சூர்யபிரியா (வயது22). இவருக்கும், ஆலம்பட்டியை சேர்ந்த சக்திவேல் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

    திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் 20 பவுன் நகை வரதட்சணையாக கேட்டனர். ஆனால் பெண் வீட்டார் முதற்கட்டமாக 12 பவுன் நகை, ரூ.4 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் ஆகியவை கொடுக்கப் பட்டது. ஆனால் சக்திவேல் மீதம் 8 பவுன் நகை வரதட்சணையாக கொடுத்த பின்புதான் சேர்ந்து வாழ முடியும் என சூர்யபிரியாவிடம் கூறியுள்ளார்.

    நிலம் வாங்க ரூ.2 லட்சத்தை வாங்கி வருமாறு மனைவியை துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதற்கு அவரது பெற்ேறார் ஆசைதம்பி-தங்கலட்சுமி, சகோதரி அருள்தேவி, பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.

    இதுகுறித்து சூர்யபிரியா விருதுநகர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் சக்திவேல் மற்றும் அவரது பெற்றோர் உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • திருமங்கலம் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் சித்ரவதை செய்யப்பட்டார்.
    • இது தொடர்பாக ராணுவ வீரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    திருமங்கலம்,

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள எட்டுநாழி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் சங்கீதா (வயது31). இவர் திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2009-ம் ஆண்டு எனக்கும், சோழவந்தானை சேர்ந்த சின்னதுரை மகன் கவியரசு என்பவருக்கும் திருமணம் நடந்தது. அப்போது 35 பவுன் நகை, ரூ.3 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் கொடுக்கப்பட்டன. எனது கணவர் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

    கடந்த சில மாதங்களாக கூடுதல் பணம், நகை கேட்டு கவியரசு துன்புறுத்தி வருகிறார். இதற்கு உடந்தை யாக அவரது தாயார் காளியம்மாள் உள்ளார். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த புகாரின் அடிப் படையில் ராணுவ வீரர், அவரது தாயார் மீது போலீ சார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.

    திருவெறும்பூர் அருகே மாப்பிள்ளை வீட்டினர் கூடுதல் வரதட்சணை கேட்டதால் நாளை நடைபெற இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது.
    மணப்பாறை:

    இதேபோல் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி ராவுத்தான்மேட்டை சோந்தவர் சரவணன். இவரது மகன் மகேந்திரன். திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆலையில் கொள்முதல் பிரிவு அதிகாரியாக வேலைப்பார்த்து வருகிறார். இவருக்கும் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு நாளை திருமணம் நடைபெற இருந்தது. மாப்பிள்ளை வீட்டினர் வரதட்சணையாக 50 பவுன் நகை மற்றும் காருக்கு பதில் ரூ. 5 லட்சம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு பெண் வீட்டாரும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    இந்தநிலையில் நாளை காட்டூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மகேந்திரன் குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திவிட்டனர்.

    இதனால் பாதிக்கப்பட்ட பெண் வீட்டார், திருவெறும்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர் . அதன் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதராணி இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் பேசினார்.

    ஆனால் மகேந்திரன் தரப்பினர் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் வரதட்சணை, பெண் வன்கொடுமை மற்றும் மிரட்டியது என 3 பிரிவின் கீழ் மகேந்திரன், அவரது தாய் பாப்பாத்தி, தந்தை சரவணன், தங்கை மகாலட்சுமி ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மகேந்திரனை கைது செய்தனர். மேலும் பாப்பாத்தி, சரவணன், மகாலட்சுமி ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

    ×