search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவர்னர் ஆர் என் ரவி"

    • தி.மு.க. அரசுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்துக்குக் கிடைத்த வெற்றியும் ஆகும்.
    • இதற்குப் பிறகும் ஆளுநர் பதவியில் அவர் தொடர்வது நாட்டுக்கு உகந்ததல்ல. எனவே அவர் தாமே முன் வந்து பதவி விலக வேண்டும்.

    சென்னை:

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு கவர்னர் விதித்தத் தடைகளையெல்லாம் மீறி சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் காரணமாக பொன்முடி மீண்டும் உயர் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது தி.மு.க. அரசுக்குக் கிடைத்த வெற்றி மட்டுமல்ல, அரசமைப்புச் சட்டத்துக்குக் கிடைத்த வெற்றியும் ஆகும்.

    உச்சநீதிமன்றத்துக்குத் தவறான தகவல்களை அளிப்பது, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் புறக்கணிப்பது, அரசமைப்புச் சட்டத்துக்கு மாறாக நடந்து கொள்வது, கவர்னருக்கான மரபுகளை மீறி அரசியல் ரீதியாகத் தலையிடுவது என்று தமிழ்நாடு கவர்னர் தொடர்ந்து சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

    'ஆளுநருக்கு சட்டம் தெரியுமா? தெரியாதா? என்று கேட்ட உச்ச நீதிமன்றம், "ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்ததன் மூலம் உச்ச நீதிமன்றத்தை அவமதித்துள்ளார். முதல்-அமைச்சரின் தனிப்பட்ட அதிகாரத்தில் தலையிட்டு உள்ளார்.

    அரசியல் சாசனத்தை ஆளுநர் முறையாகப் பின் பற்றவில்லை" என்றெல்லாம் கடுமையாக கண்டனங்களைத் தெரிவித்து இருக்கிறது. இதற்குப் பிறகும் ஆளுநர் பதவியில் அவர் தொடர்வது நாட்டுக்கு உகந்ததல்ல. எனவே அவர் தாமே முன் வந்து பதவி விலக வேண்டும்.

    ஆளுநர் பதவி விலகாவிட்டால் அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைப் பாதுகாப்பதற்காக ஜனாதிபதி அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கலாசார ஒருமைப்பாடு மற்றும் பாரதத்தை ஒரே தேசமாக இவை வரையறுக்கின்றன.
    • பண்டிகைகள் நமக்கு வளத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.

    சென்னை:

    நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையானது கோலாகலமாக கொண்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் தங்களது வாழ்த்து செய்தியை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

    பொங்கல், மகரசங்கராந்தி, உத்தராயன், பௌஷ்பர்வ, லோரி ஆகிய விசேஷமான தினங்களில் உலகெங்கிலும் உள்ள நமது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாடு முழுவதும் ஒற்றுமையாக கொண்டாடப்படும் இந்த அறுவடை திருவிழா, நமது வளமான ஆன்மிக மற்றும் பெருமைக்குரிய பாரம்பரியத்தின் வாழும் சாட்சியாகும். மேலும், கலாசார ஒருமைப்பாடு மற்றும் பாரதத்தை ஒரே தேசமாக இவை வரையறுக்கின்றன.

    இந்த பண்டிகைகள் நமக்கு வளத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்து அமைதி, நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தை வளர்க்கட்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • உலகளாவிய பெருந்தொற்றின் அச்சுறுத்தல் இன்னும் முடிவடையவில்லை.
    • முன்னெச்சரிக்கை, வழிகாட்டுதல்களைப் பின்பற்ற கேட்டுக் கொள்கிறேன்.

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:

    சென்னையில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும் அனைத்து சதுரங்க விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களது குழு உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வசுதைவ குடும்பம் (உலகம் ஒரு பெரிய குடும்பம்) என்ற உண்மையான உணர்வோடு நாம் போட்டியில் பங்கேற்று வென்று புதிய வரையறைகளை வகுப்போம்.

    இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், உலகின் பிற பகுதிகளிலிருந்தும் வந்திருக்கும் சதுரங்க விளையாட்டு வீரர்களான உங்களை வரவேற்று மகிழ்ந்து, வரலாற்று மற்றும் கலாச்சார தளங்களை பார்வையிடவும், தமிழ்நாட்டின் காலவரம்பற்ற, தெளிவான மற்றும் துடிப்பான ஆன்மீக செழுமையின் ஒரு பகுதியாக இருக்க அன்புடன் அழைக்கிறேன்.

    உலகளாவிய பெருந்தொற்றின் அச்சுறுத்தல் இன்னும் முடிவடையவில்லை, அவை புதிய வகையில் எண்ணிறந்த அறை கூவல்களை முன்வைக்கின்றன. எனவே, தனிப்பட்ட மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், வழிகாட்டுதல்களைப் பின்பற்றவும் அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

    மீண்டும் ஒருமுறை, உங்கள் அனைவரையும் இந்த மாபெரும் சதுரங்க திருவிழாவிற்கு அழைக்கிறேன், நீங்கள் அனைவரும் வசதியாகவும், பாதுகாப்பாகவும் தங்கிச்செல்லவும் அவற்றின் நினைவு நீங்காது நின்றிலங்கவும் வாழ்த்துகிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ×