search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் கோப்பை"

    • ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.
    • இந்த தொடருடன் சென்னை அணியின் அம்பதி ராயுடு ஓய்வு முடிவை அறிவித்தார்.

    அமராவதி:

    சமீபத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.

    இந்த தொடருடன் சென்னை அணியின் அம்பதி ராயுடு ஓய்வு முடிவை அறிவித்தார்.

    இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பதி ராயுடு, ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியை இன்று சந்தித்தார். அப்போது சிஎஸ்கே வென்ற ஐ.பி.எல். கோப்பையை காண்பித்து மகிழ்ந்தார். ஐ.பி.எல். 2023 போட்டியில் வெற்றி பெற்றதற்காக சிஎஸ்கே அணிக்கு முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    அப்போது, ஆந்திராவில் விளையாட்டு மற்றும் வசதிகளை மேம்படுத்துவதில் ஆர்வமாக உள்லேன் என அம்பதி ராயுடு முதல் மந்திரியிடம் தெரிவித்தார், அதற்கேற்ப திட்டம் வகுக்கப்படும் என முதல் மந்திரி உறுதியளித்தார்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக கோப்பை வென்று சாதித்தது.
    • இந்த சந்திப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.

    ஐபிஎல் 2023 இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-வது முறையாக கோப்பை வென்று சாதித்தது.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சென்னை அணி வென்ற கோப்பையை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத்தலைவர் என்.சீனிவாசன் மற்றும் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ரூபா குருநாத் வாழ்த்து பெற்றனர்.

    இந்த சந்திப்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.

    • குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    • சென்னை திருப்பதி தேவஸ்தானத்தில் ஐபிஎல் கோப்பைக்கு பூஜை செய்யப்பட்டது.

    சென்னை:

    16-வது ஐ.பி.எல். சீசனின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது.

    சென்னை அணியின் வெற்றிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    இதையடுத்து வெற்றிக்கோப்பையுடன் சென்னை அணியின் வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் நேற்று மதியம் சென்னை வந்தடைந்தனர். சென்னை வந்த வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங், சிஇஓ காசி விஸ்வநாதன் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களோடு ஐ.பி.எல். வெற்றிக்கோப்பையும் எடுத்து வரப்பட்டது.

    இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலுக்கு சி.எஸ்.கே அணி வென்ற ஐ.பி.எல். கோப்பை எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

    ×