search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஏஎஸ் அதிகாரிகள்"

    • மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெயஷ்ரீ முரளிதரன் சமூக நலத்துறை செயலாளராக மாற்றம்.
    • சமூக நலத்துறை செயலாளராக இருந்த ஜடக் சிரு, மீன்வளத்துறை ஆணையராக மாற்றம்.

    தமிழகத்தில் முக்கிய துறைகளை சேர்ந்த ஐ.ஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதகிாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். 

    இதுதொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    வேளாண்துறை ஆணையராக இருந்த எஸ்.சுப்பிரமணியன், தமிழ்வளர்ச்சி மற்றும் தகவல்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக இருந்த ஜெயஷ்ரீ முரளிதரன் சமூக நலத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    நில நிர்வாகத்துறை ஆணையராக இருந்த எஸ்.நாகராஜன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    மீன்வளத்துறை ஆணையராக இருந்த கே.எஸ்.பழனிசாமி, நில நிர்வாகத்துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    சமூக நலத்துறை செயலாளராக இருந்த ஜடக் சிரு, மீன்வளத்துறை ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சிறப்பு செயலாளர் ஜெயகாந்தன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனராக மாற்றப்பட்டார்.
    • வேளாண்மை கூடுதல் இயக்குனர் ஷ்ரேயா சிங், தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு கழகத்தின் செயல் இயக்குனராக மாற்றப்பட்டார்.

    சென்னை:

    தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் இணை மேலாண் இயக்குனர் பிரதாப், சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறையின் துணை செயலாளராக மாற்றப்பட்டார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சிறப்பு செயலாளர் ஜெயகாந்தன், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனராக மாற்றப்பட்டார்.

    மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை இயக்குனர் ரத்னா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இணை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

    வணிக வரிகள் மற்றும் மாநில வரிகள் (கோவை) இணை கமிஷனர் காயத்ரி கிருஷ்ணன், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக மாற்றப்பட்டார்.

    மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளர் விஜயகார்த்திகேயன், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குனராகவும், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியின் திட்ட இயக்குனராகவும் மாற்றப்பட்டார். அவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராகவும் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

    வேளாண்மை கூடுதல் இயக்குனர் ஷ்ரேயா சிங், தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு கழகத்தின் செயல் இயக்குனராக மாற்றப்பட்டார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • தொழில்துறை ஆணையராக நிர்மல்ராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    உத்தரவின்படி, சிறு குறு, நடுத்தர தொழில் துறை செயலாளராக அர்ச்சனா பட்நாய்க் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தொழில்துறை ஆணையராக நிர்மல்ராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையராக பூஜா குல்கர்னி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையராக ஹர் சகாய் மீனா ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    • திட்டங்களை செயல்படுத்த 3 மாவட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    • ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சென்னை:

    அரசின் திட்டங்களை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது.

    அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், சாலை மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ், திருப்பத்தூர் மாவட்டத்திற்கு நந்தகோபால், திருப்பூருக்கு ரீட்டா ஹரிஷ் தாக்கர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    • அருங்காட்சியக கமிஷனர் சுகந்தி உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்படுகிறார்.
    • ஒழுங்கு நடவடிக்கை கமிஷனர் உமாசங்கர், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய முயற்சிகள் நிறுவன இயக்குனராக மாற்றப்பட்டார்.

    சென்னை:

    தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கமிஷனராக இருந்த தாரேஸ் அகமது சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவர் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கமிஷனராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார். சமூக பாதுகாப்பு திட்ட கமிஷனர் வெங்கடாச்சலம் நில சீர்திருத்த கமிஷனராக மாற்றப்படுகிறார். அவர் நில சீர்திருத்த இயக்குனர் மற்றும் நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி அலுவல் சாரா இயக்குனராகவும் முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

    தமிழ்நாடு பண்டகசாலை கழக மேலாண் இயக்குனர் சிவஞானம் பொது மற்றும் மறுவாழ்வு துறையின் கூடுதல் செயலாளராக மாற்றப்படுகிறார். பொது மற்றும் மறுவாழ்வு துறை சிறப்பு செயலாளர் கலையரசி வருவாய் நிர்வாக கூடுதல் கமிஷனராக நியமிக்கப்படுகிறார். அறிவியல் நகர தலைவர் மலர்விழி நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்படுகிறார். அருங்காட்சியக கமிஷனர் சுகந்தி உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சிறப்பு செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

    தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய முயற்சிகள் நிறுவன இயக்குனர் சந்திரகலா ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட இயக்குனராக நியமிக்கப்படுகிறார். ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட இயக்குனரும், சமூக நல கமிஷனராக முழு கூடுதல் பொறுப்பு வகித்த அமுதவள்ளி சமூக நல கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். சமூக நலன் மற்றும் பெண்கள் அதிகாரம் அளித்தல் துறையின் கமிஷனராக ஜெயகாந்தன் மாற்றப்பட்டதாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படுகிறது.

    ஒழுங்கு நடவடிக்கை கமிஷனர் உமாசங்கர், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய முயற்சிகள் நிறுவன இயக்குனராக மாற்றப்பட்டார். நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக இருந்த மகேஸ்வரி ரவிக்குமார் விடுமுறை நிறைவடைந்ததைத்தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

    சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் செயல் இயக்குனர் சிம்ரஞ்சித் சிங் கஹ்லோன் நகராட்சி நிர்வாக துணை இயக்குனராக மாற்றப்பட்டு இருக்கிறார். புவியியல் மற்றும் சுரங்கத்துறை கமிஷனர் ஜெயகாந்தன் ஊரக மேம்பாடு மற்றும் ஊராட்சித்துறை சிறப்பு செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டார். வாழ்ந்து காட்டுவோம் திட்ட தலைமை செயல் அதிகாரி பத்மஜா பொதுத்துறை துணை செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதல் செயலாளர் கஜலட்சுமி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்படுகிறார். உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிச்சாமி தமிழ்நாடு பண்டகசாலை கழகத்தின் மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் லலிதா சென்னை மாநகராட்சியின் கூடுதல் கமிஷனராக (வருவாய் மற்றும் நிதி) மாற்றப்பட்டு உள்ளார்.

    சென்னை மாநகராட்சியின் துணை கமிஷனராக (வருவாய் மற்றும் நிதி) ஆனந்த் மோகனை நியமித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. அவர் நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனராக தொடர்ந்து செயல்படுவார். திருவள்ளூர் கூடுதல் கலெக்டர் ரிஷப் திருவண்ணாமலை கூடுதல் கலெக்டராக மாற்றப்பட்டார். தஞ்சை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வருவாய்) சுகபுத்ரா திருவள்ளூர் மாவட்ட கூடுதல் கலெக்டராக மாற்றப்பட்டார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நகராட்சி துறை நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளராக கார்த்திகேயன் நியமனம்.
    • மின்சார வாரியத்தின் இணை ஆணையராக விஷ்ணு மகாராஜன் நியமனம்.

    சென்னை:

    தமிழகத்தில் முக்கிய துறைகளின் செயலாளர்களை பணியிடம் மாற்றி தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.

    தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    * நகராட்சி துறை நிர்வாக மற்றும் குடிநீர் வழங்கல்துறை செயலாளராக கார்த்திகேயன் நியமனம்.

    * உயர்கல்வித்துறை செயலாளராக கார்த்திக் நியமனம்.

    * மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை செயலாளராக மங்கத் ராம் சர்மா நியமனம்.

    * பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக ரீட்டா ஹரிஷ் தாக்கர் நியமனம்.

    * மின்சார வாரியத்தின் இணை ஆணையராக விஷ்ணு மகாராஜன் நியமனம்.

    * உணவு வழங்கல் துறை இயக்குனராக அண்ணாதுரை நியமனம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நீரஜ் மிட்டல் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகிறார்.
    • குமார் ஜெயந்த் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகிறார்.

    சென்னை:

    தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழக அரசுப் பணியில் 1992-ம் ஆண்டில் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேரின் பதவி நிலையை உயர்த்தி அரசு ஆணையிடுகிறது. அவர்கள் ஏற்கனவே முதன்மைச் செயலாளராக வகிக்கும் அதே துறைகளின் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி நிலை உயர்த்தப்படுகிறார்கள்.

    அதன்படி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளராக இருக்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன், அதே துறைகளின் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு பெறுகிறார்.

    அதுபோலவே நீரஜ் மிட்டல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகிறார்.

    மங்கத்ராம் சர்மா, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகிறார். பிரதீப் யாதவ், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு பெறுகிறார்.

    குமார் ஜெயந்த், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராகிறார். கே.கோபால், போக்குவரத்துத் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர்வு பெறுகிறார்.

    தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் டான்ஜெட்கோ நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநரும், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைவருமான ராஜேஷ் லக்கானி, கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி நிலை உயர்வு பெறுகிறார்.

    அதுபோல, மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கூடுதல் செயலாளராக பணியாற்றும் ராஜேந்திரகுமாருக்கும் கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி நிலை உயர்வு அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வி.ஆர்.சுப்புலட்சுமி, பி.ரத்னசாமி, ஆர்.அழகுமீனா ஆகியோருக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கி, தமிழக அரசுப் பணியில் நியமிக்க ஆணை பிறப்பிக்கப்படுகிறது.
    • வி.ஆர்.சுப்புலட்சுமி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர். 10.1.1980 அன்று பிறந்த அவர் தமிழக அரசுப் பணியில் 2009-ம் ஆண்டு சேர்ந்தார்.

    சென்னை:

    மத்திய பணியாளர், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    1.1.2021 முதல் 31.12.2021 வரை தமிழக அரசுப் பணியில் ஏற்பட்ட ஐ.ஏ.எஸ். பதவிக்கான காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் 3 பேருக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்தை வழங்கி ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    அந்த வகையில் வி.ஆர்.சுப்புலட்சுமி, பி.ரத்னசாமி, ஆர்.அழகுமீனா ஆகியோருக்கு ஐ.ஏ.எஸ். அந்தஸ்து வழங்கி, தமிழக அரசுப் பணியில் நியமிக்க ஆணை பிறப்பிக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வி.ஆர்.சுப்புலட்சுமி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர். 10.1.1980 அன்று பிறந்த அவர் தமிழக அரசுப் பணியில் 2009-ம் ஆண்டு சேர்ந்தார். வருவாய்த் துறையில் பணியாற்றியுள்ளார்.

    7.1.1973 அன்று பிறந்த பி.ரத்னசாமி சிப்காட் நிறுவனத்தின் பொது மேலாளராகவும்; ஆர்.அழகுமீனா, தேசிய சுகாதார இயக்க மாநில திட்ட மேலாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

    முக்கிய துறைகளில் பணியாற்றும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் என 24 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. #IASOfficers #TNGovernment
    சென்னை:

    தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உயரதிகாரிகளாக உள்ள ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் உள்பட 24 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

    ஈரோடு கலெக்டராக இருந்த பிரபாகர் கிருஷ்ணகிரிக்கும், மதுரை கலெக்டராக இருந்த வீர ராகவ ராவ் ராமநாதபுரத்திற்கும், சென்னை கலெக்டராக இருந்த அன்புசெல்வன் கடலூருக்கும், கிருஷ்ணகிரி கலெக்டராக இருந்த கதிரவன் ஈரோட்டுக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    ராமநாதபுரம் கலெக்டராக இருந்த நடராஜன் மதுரைக்கும், அண்ணா தொழிலக நிறுவனத்தின் இணை இயக்குநராக இருந்த சண்முக சுந்தரம் சென்னை கலெக்டராகவும் மாற்றப்பட்டுள்ளனர். 

    பள்ளிகல்வித்துறை செயலாளர் உதய சந்திரன் தொல்லியல் துறைக்கும், உயர்கல்வித்துறை செயலாளர் சுனில் பாலிவால் தொழிலாளர், வேலைவாய்ப்பு துறைக்கும் மாற்றப்பட்டுள்ளனர். இதுதவிர, பல முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 
    தமிழகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாநிலத்துக்கு உள்ளேயும், வெளிமாநிலத்துக்கும் அரசு முறை பயணம் மேற்கொள்ளும்போது சில கட்டுப்பாடுகள் விதித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், மாநிலத்துக்கு உள்ளேயும், வெளிமாநிலத்துக்கும் அரசு முறை பயணம் மேற்கொள்ளும்போது சில கட்டுப்பாடுகள் விதித்து தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் ஆகியோர் தலைமையகத்தை விட்டு வெளியே தமிழகத்துக்குள் அரசு முறை பயணம் செய்ய வேண்டும் என்றால் தலைமைச் செயலாளரின் அனுமதி உத்தரவைப் பெறவேண்டும்.

    வெளிமாநிலங்களுக்கு அரசுத் துறை செயலாளர்கள் அரசு முறைப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால், தலைமைச் செயலாளர் மூலமாக முதல்-அமைச்சரின் அனுமதியை பெற்றிருக்க வேண்டும்.

    அரசு துறைத் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் ஆகியோர் வெளிமாநிலங்களுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால், துறை செயலாளர்கள் அல்லது தலைமைச் செயலாளர் அல்லது முதல்-அமைச்சர் மூலம் அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும்.

    அரசுத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள் தவிர மற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், தலைமையகத்தை விட்டு வெளியே தமிழகத்துக்குள் அரசு முறை பயணம் செய்ய வேண்டும் என்றால் அவர்களின் மேல் அதிகாரியிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். அவர்கள் தமிழகத்தை விட்டு வெளிமாநிலங்களுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால், சம்பந்தப்பட்ட துறை செயலாளரின் உத்தரவைப் பெறவேண்டும். #IAS ChiefSecretary #GirijaVaidyanathan
    ×