search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்துறை"

    தூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மத்திய படைகளை அனுப்ப தயாராக இருப்பதாக தமிழக தலைமை செயலாளரிடம் மத்திய உள்துறை செயலாளர் ராஜிவ் கவுபா கூறியுள்ளார். #SterliteProtest #Thoothukudi
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது நேற்று போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்திருந்தனர். அண்ணாநகர் பகுதியில் இன்று போலீசார் - போராட்டக்காரர்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து, அங்கு ரப்பர் குண்டு மூலம் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதில், காளியப்பன் என்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 5 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில், தமிழக தலைமை செயலாளரிடம் பேசிய மத்திய உள்துறை செயலாளர் ராஜிவ் கவுபா, தூத்துக்குடி நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.



    அங்கு சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவர மத்திய படைகளை அனுப்ப தயாராக உள்ளதாக கவுபா தெரிவித்துள்ளார். எனினும், தமிழக அரசு கேட்கும் பட்சத்தில் மட்டுமே மத்திய படைகள் அனுப்பப்படும் என அவர் கூறியுள்ளார்.
    ரமலான் மாதத்தை ஒட்டி ஜம்மு காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க பாதுகாப்பு படைகளுக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. #KashmirCeaseFire
    புதுடெல்லி:

    நாளை முதல் ரமலான் மாதம் தொடங்குவதை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகளை ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என அம்மாநில முதல்வர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், இதற்கு அம்மாநில பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்நிலையில், ஒரு மாதத்திற்கு ராணுவ நடவடிக்கைகள் (தேடுதல் வேட்டை, தீவிர சோதனை போன்றவை) எதுவும் மேற்கொள்ள வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பு படைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதேவேளையில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் நடந்தால் தக்க பதிலடி கொடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    ×